கி.ரா.முழுத்தொகுதிகளும், முன்விலைத்திட்டம்

ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

கி. ரா நூற்றாண்டு விழா நாளில் அவரது எழுத்துக்களை ஒன்பது தொகுதிகளாக கொண்டு வர இருப்பதன் முன் பதிவு திட்டம் குறித்து வாசர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

இது “அன்னம் – அகரம்” பதிப்புகத்தின் முன்னெடுப்பு.

நன்றி.

அன்புடன்,

துரை. அறிவழகன்,

காரைக்குடி.

15-09-2022.

அலைபேசி : 7339279026

கி.ரா. நூற்றாண்டு விழாவும் ஒன்பது தொகுதிகளும்

 

நம் கால எழுத்து நாயகனான கி.ராவின் நூற்றாண்டு விழா நாளில் தமிழ் வாசகர்களுக்கும் கி.ராவுக்கும் நன்றியறிதலை வெளிப்படுத்தும் வகையில்
அன்னம் – அகரம் அவருடைய முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரையான அனைத்தையும் ஒன்பது தொகுதிகளாகக் கொண்டுவரும் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.

கி.ராவுடன் அன்னம் – அகரம் கொண்டிருக்கும் நீண்ட நெடிய உறவுக்கான நன்றியுணர்வின் அடையாளமாக இத்தொகுதிகளை அடக்க விலைக்குத்
தர உத்தேசித்திருக்கிறது.

கி.ராவின் முதல் நூலான ‘வேட்டி’ 1975ஆம் ஆண்டிலும் கடைசி நூலான
‘மிச்சக் கதைகள்’ 2021ஆம் ஆண்டிலும் அன்னம் வெளியீடாக வந்தன. இடைப்பட்ட 46 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட கி.ரா. நூல்களை
அன்னம் – அகரம் வெளியிட்டிருக்கிறது. இப்போது இவை அனைத்தும்
9 பிரிவுகளில் தொகுதிகளாகின்றன.. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சி.மோகன், மாரீஸ், துரை.அறிவழகன், கதிர் மீரா ஆகியோர் பதிப்புக் குழுவினராக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதிகள் விபரம்:

தொகுதி ஒன்று:     நாவல்கள்

கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் – முதல் பாகம்,
கோபல்லபுரத்து மக்கள் – இரண்டாம் பாகம், பிஞ்சுகள், அந்தமான் நாயக்கர், வேதபுரத்தார்க்கு ஆகிய ஆறு நாவல்கள் கொண்டது.

தொகுதி இரண்டு:        சிறுகதைகள், குறுநாவல்கள்

தொகுதி மூன்று:   கட்டுரைத் தொடர்கள்

இதழ்களிலும் பத்திரிகைகளிலும் எழுதிய தொடர்களான
கரிசல் காட்டுக் கடுதாசி, மக்கள் தமிழ் வாழ்க,
கி.ரா. பக்கங்கள், மனுசங்க…, பெண் கதை எனும் பெருங்கதை, கதை சொல்லி – பதிவுகள் ஆகியவை அடங்கியது.

தொகுதி நான்கு:   தொகுப்புக் கட்டுரைகள்

அன்னப்பறவை, நண்பர்களோடு நான்,
சங்கீத நினைவலைகள், நேர்காணல்கள் ஆகிய
தொகுப்புக் கட்டுரைகள் கொண்டது.

தொகுதி ஐந்து:       தனிக் கட்டுரைகள்

தொகுதி ஆறு:        நாட்டுப்புறக் கதைகள் – I

தொகுதி ஏழு: நாட்டுப்புறக் கதைகள் – II

தொகுதி எட்டு:        கடிதங்கள்

தொகுதி ஒன்பது:         வழக்குச் சொல்லகராதி

இந்த ஒன்பது தொகுதிகளும் சேர்ந்து சுமார் 6500 பக்கங்கள் வரும்.

வெளியீடு பற்றிய சில குறிப்புகள்:

ஒன்பது தொகுதிகளுக்குமான தொகுப்பு மற்றும் வடிவமைப்புப் பணிகள்
அக்டோபர் இறுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு, நவம்பரில் புத்தகங்களின் அச்சுப் பணிகள் தொடங்கும்.புத்தகங்களின் அச்சுப் பணி தொடங்கும்போது, மொத்த விலை மற்றும் முன்வெளியீட்டுத் திட்ட விலை அறிவிக்கப்படும்.டிசம்பர் மாத இறுதிக்குள், சென்னையில் கி.ரா, எழுத்துகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டு, அந்நிகழ்வில் தொகுதிகள் வெளியிடப்படும்.உயர்தரத் தயாரிப்புடன் புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அழகிய அட்டைப் பையில் அவை வழங்கப்படும்.ஆர்வமுள்ள வாசகர்கள் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளலாம். பிரதிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க இது உதவும்.

நன்றி.

தொடர்புக்கு:

அன்னம் – அகரம்
மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007
கைபேசி: 75983 06030, 73392 79026
email
annamakaram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 12:02
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.