கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு மாணவரிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி வந்தது. கையெழுத்திட்ட நான்தான் ஔரங்ஸேப் கிடைத்தது என்ற சந்தோஷ செய்தியைப் பகிர்ந்து கொண்டார். வீட்டில்தான் கொஞ்சம் திட்டு விழுந்தது, ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கியதற்காக என்று எழுதியிருந்தார். அவர் சேமித்து வைத்திருந்த அறுநூறு ரூபாயுடன் பெற்றோரிடமிருந்து வாங்கிய நானூறையும் சேர்த்து முன்பதிவுத் திட்டத்தில் புத்தகத்தை வாங்கினாராம். நீங்கள் ஜீபேயில் இருக்கிறீர்களா, ஐநூறு ரூபாய் அனுப்பி விடுகிறேன், அதை உங்கள் பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள் ...
Read more
Published on September 11, 2022 08:52