நேற்று என் நித்திரை மயக்கத்தில் ஒரு பிழை நேர்ந்து விட்டது. யூதாஸ் நாவலில் நான் மேற்கோள் காண்பிக்க நினைத்த பகுதியை விட்டு விட்டு வேறு ஒரு பகுதியைக் கொடுத்து விட்டேன். பாலத்துக்கு அடியில் தங்கியிருக்கும் ஜூட் என்பவனை கியரா மீண்டும் தற்செயலாக சந்திக்க நேரும் சந்தர்ப்பம் அது. கென்மோர் (பாஸ்டன்) ரயில் நிலையத்திலிருந்து போலீஸால் விரட்டப்பட்டு வெளியே வருகிறாள் கியாரா. கடுமையான குளிர். குளிருக்கு இதமாக கொஞ்சம் விஸ்கியோ பிராந்தியோ அருந்தினால் தேவலாம். துணிப்பைக்குள் கையை விட்டுத் ...
Read more
Published on July 26, 2022 22:30