அடையாற்றின் கரையில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அஞ்சு ஆலமரம் என்று அழைக்கப்படும் பகுதியை விட்டு சற்றுத் தள்ளி இருப்பது. இது ஆறாவது ஆலமரமாக இருக்கலாம். ஆனால் அஞ்சு பத்து என்று சொல்வதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. ஆகவே அது தனித்து விட்டது. முன்னொரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் அப்படி ஒரு தனித்த ஆலமரத்தின் கீழே அந்தவழியாக ஒருநாள் ஒரு பண்டிதர் நடந்து போய்க்கொண்டிருந்தாராம். அப்படிப் போகும்போது மரத்தின் மேலிருந்த பிரம்ம ராட்சசன் தொப் என அவர் அருகில் குதித்து பிடித்துக் கொண்டானாம்.
பற்று வரவு இருப்பு – காளிப்பிரசாத்
Published on July 24, 2022 11:34