அன்புள்ள ஜெ,
சென்ற வாரம் மீண்டும் “நீர்க்கோலம்” வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி :
“அப்போதும் தாவித்தாவி பூச்சிகளை வேட்டையாடின எய்பறவைகள்.”
எய்பறவைகள் என்று எப்படிப்பட்ட பறவைகளை கூறுகிறீர்கள்?
சில (சிறு) பறவைகள் காற்றில் துள்ளித் துள்ளி பறக்கும். காற்றில் கண்ணுக்கு தெரியாமல் அமைந்திருக்கும் துள்ளு பலகைகள் மேல் தாவித் தாவி பறப்பது போல் தோன்றும். அப்படிப்பட்ட பறவைகளை கூறுகிறீர்களா?
டி.கார்த்திகேயன்
***
அன்புள்ள கார்த்திகேயன்,
கன்யாகுமரி மாவட்டத்தில் பனந்தத்தை என்று அதைச் சொல்வார்கள். பனைகளை சுற்றி அதிகம் பறக்கும் என்பதனால் அப்பெயர். ஆங்கிலத்தில் Common swift என்று சொல்வார்கள். தமிழில் உழவாரன். அவற்றில் பனைமேல் பறப்பது Asian palm swift. தமிழில் ஆசிய பனை உழவாரன். அம்பு வடிவில் அமைந்த பறவை. மிக வேகமாக வானில் தாவி பூச்சிகளைப் பிடிக்கும். பனையில் இனிப்பு ஊறல் இருப்பதனால் அங்கே சிறு பூச்சிகள் மிகுதியாக வானில் பறக்கும். அவற்றை பிடிப்பதனால் இப்பெயர்.
ஜெ
Published on June 13, 2022 11:31