கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசிப்பவர். தீவிரமான இலக்கிய வாசகர். எழுத்தாளர். இவரது முதற்சிறுகதை தொகுப்பு வெயிலின் கூட்டாளிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.
கணேஷ்பாபுவின் சிறுகதைகள் வடிவ ரீதியாக புதிய முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கவித்துவமான மொழியில் கதை சொல்கிறார்.

நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களை சித்தரிக்க முயலும் இக்கதைகள் மீபுனைவின் கூறுகளை இரண்டாம் இழையாக கொண்டு கதையை புதுமையாக்குகின்றன. வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் இவரது கதைகள் சிங்கப்பூர் வாழ்க்கையினை தனித்துவமான நோக்கில் பதிவு செய்திருக்கின்றன.

விடுதலை சிறுகதை மரணம் என்பது தண்டனையா அல்லது விடுதலையா என்ற கேள்வியை எழுப்புகிறது. துயரைப் பகிர்ந்து கொள்வதன் நெருக்கடியை விவரிக்கும் இக்கதை துயரை தனிநபர் சார்ந்த ஒன்றாக கருதவில்லை. மாறாக அதை தனிநபர் எதிர்கொள்ளும் விதம் எத்தகையது என்பதையே பேசுகிறது
கணேஷ்பாபுவிற்கு என் அன்பும் வாழ்த்துகளும்.
Published on December 26, 2021 20:17