விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ் – விக்கி

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் ஜெய்ராம் ரமேஷ் முன்னாள் மத்திய அமைச்சர், சூழியல் ஆர்வலர், பாராளுமன்ற உறுப்பினர், இந்திய தேசியக் காங்கிரஸ் பேச்சாளர் ஆகிய நிலைகளில் பரவலாக அறியப்பட்டவர். இந்திய அரசியலில் சிறப்புக்கல்வித் தகுதி படைத்த பொருளியல் -நிர்வாகவியல் நிபுணராக நுழைந்தவர். இந்திய பொருளியல் தாராளமயமாக்கத்தில் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர்.

ஜெய்ராம் ரமேஷ் இந்திராகாந்தியின் சூழியல் ஆர்வம் பற்றி எழுதிய நூல் தமிழில் வெளிவந்துள்ளது. இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு. அந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோதே விஷ்ணுபுரம் நண்பரான பாலசுப்ரமணியம் முத்துசாமி அருண் மதுரா என்ற பெயரில் அந்நூலை அறிமுகம் செய்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.  இந்தியப் பொருளியல் சீர்திருத்தங்கள் பற்றி அவர் எழுதிய To the Brink and Backஎன்னும் நூலும் குறிப்பிடத்தக்கது. பாலசுப்ரமணியம் முத்துசாமி அந்நூல் பற்றியும் எழுதியிருக்கிறார்

ஜெய்ராம் ரமேஷ் ஓர் இலக்கிய ஆய்வாளரும் கூட. இந்தியாவின் இலக்கிய இயக்கத்தை நன்கறிந்தவர். எட்வின் ஆர்னால்டின் லைட் ஆஃப் ஆசியா என்ற நூலின் வரலாற்றை The Light of Asia; The Poem That Defined Buddha என்ற பேரில் நூலாக்கியிருக்கிறார்.அண்மையில் அதிகம் பேசப்படும் நூல் இது.

ஏற்கனவே பதஞ்சலி யோகம் போன்ற நூல்களுக்கு வரலாற்றுநூல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் ஒரு அண்மைக்கால நூலுக்கு வரலாறு வெளிவருவது அரிதான நிகழ்வு. புத்தர் என்னும் அடையாளத்தை மேலைநாடுகளிலும், மேலைக்கல்விப்புலம் வழியாக உலகம் முழுக்கவும் ஆசிய ஜோதி என்னும் நூல் எப்படி கட்டமைத்தது, அதன் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என ஆராயும் ஒரு நூல் இது.

இந்திரா காந்தி – இயற்கையோடு இயைந்த வாழ்வு வாங்க

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – தமிழ் ஹிந்து கட்டுரை

இந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்க்கை – அருண் மதுரா அறிமுகம்

அந்த மூன்று மாதங்கள் ஜெய்ராம் ரமேஷ். அறிமுகம் அருண்மதுரா

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மதிப்புரை

கரண்ட் அஃபயர்ஸ் மதிப்புரை

ஸ்க்ரோல் மதிப்புரை

தி பிரிண்ட் மதிப்புரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2021 10:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.