ஜா.தீபா கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெ

ஜா தீபாவின் ஒற்றைச்சம்பவம் கதை வாசித்தேன். இன்றைய சூழலில் தொடர்ச்சியாக எழுதப்படும் இத்தகைய கதைகளை வாசிக்கிறேன். இவை எழுதப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றிலுள்ள ஒற்றைப்படைத்தன்மை என்னை கொஞ்சம் சலிப்படையச் செய்கிறது.

அதாவது இவை பெண்களின் தரப்பை மட்டுமே பேசுகின்றன. வாதாடுகின்றன. [நானும் பெண் என்பதனால் இதைச் சொல்லாமலிருக்க முடியாது] அந்தப்பெண்களை பல்வேறுவகையில் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கின்றன. கலை என்பது எல்லாவற்றையும் சொல்வது. எலியின் உயிர்வதையையும் பூனையின் பசியையும் சேர்த்தே சொல்வது என்பார்கள். அப்படி வேண்டாம். ஆனால் இன்னொரு எலியின் தரப்பையாவது சொல்லலாம் அல்லவா?

எனக்கு இந்தக்கதையை வாசிக்கையில் ஒருவகை ஒவ்வாமைதான் உருவாகியது. மனித இயல்பு என்பது என்ன? அது எம்பதியும் ஈகோவும் பிரிக்கமுடியாதபடிக் கலந்தது. எல்லா உறவுகளும் அப்படித்தான். நம் பிள்ளைகளுக்காக உயிர் வாழ்கிறோம். கடைசிப்பைசா வரைச் சேர்க்கிறோம். ஆனால் அவர்கள் வெற்றிபெற்று நம்மை கௌரவப்படுத்தவேண்டும் என்றும் நினைக்கிறோம். அவர்கள் நம் பெயரைச் சொல்லவேண்டும் என நினைக்கிறோம். எங்கே எம்பதி முடிகிறது, எங்கே அது தொடங்குகிறது? அந்த எட்ஜ் சொல்லப்படும்போதுதான் அது கலை. இது பிரச்சாரம். அரசியல்பிரச்சாரம் கலையாகாது என்கிறீர்கள். பெண்ணியப்பிரச்சாரம் மட்டும் கலையாக ஆகுமா என்ன?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இன்னொருவரின் கொடை இருக்கும். கொடையே இல்லாமல் சுயம்புவாக எவரும் உருவாகிவிட முடியாது. அந்தக் கொடையை அளிப்பவர்களுக்கு கிளெயிமும் இருக்கும். அதுவும் மனித இயல்பு. அப்படி ஒரு சிக்கலை எப்படி நூலிழைபிரித்துச் சொல்வது என்பதுதான் கலை. இந்தக்கதையில் உயிரைவிடும் அளவுக்கு அந்தக் கணவனுக்கு எம்பதியும் கிளெயுமும் இருக்கிறது என்பதே அந்தப்பெண்ணின் தரப்பை குரூரமான ஈகோவாக காட்டிவிடுகிறது. இன்னொருத்தரின் எம்பதியை பெற்றுக்கொண்டு அவர்களின் கிளெயிமை மறுப்பது இவளுடைய ஈகோ மட்டும்தான்.

இப்படித்தான் டீனேஜ் பெண்கள் இருப்பார்கள். அவர்களின் பார்வை அப்படி. ஆனால் அதை முதிர்ந்த பார்வையில்தான் கலை பார்க்கவேண்டும். டீனேஜ் பார்வை ஆசிரியருக்கு இருக்கக்கூடாது.அதற்கு பெண்ணியமுலாம் பூசி வைத்தால் அது புரட்சிப்பார்வையோ அல்லது புதியபார்வையோ ஆகிவிடாது. அல்லது அந்த எம்பதியும் கிளெயுமும் ஓர் ஆணிடமிருந்து வந்தால் அது அடக்குமுறையும் ஆகிவிடாது. ஒரு தொழிலில் நுழைந்தால் அந்த தொழில்கற்றுத்தருபவரிடமே அந்த எம்பதி – கிளெயிம் இரண்டும் இருப்பதைக் காணலாம். ஆணானாலும் பெண்ணானாலும். நான் உருவாக்கினேன் என்று சொல்லாத ஆசிரியரே இல்லை. அது அடக்குமுறையா? அது மனித உறவின் ஒரு முகம். அப்படித்தான் உலகம் இயங்கமுடியும்.

அதில் ஒரு மூச்சுத்திணறல் இருக்கலாம். அதை எழுதுவது வேறு. ஆனால் இந்தக்கதை அதை வெறுப்போடு சொல்கிறது. பெரிய அடக்குமுறை, சுரண்டல் என்கிறது. அது முதிர்ச்சி இல்லாத பார்வை. அதோடு இந்தக்கதை கதையில் உள்ளுறைந்த ஒரு நுட்பமாக இதையெல்லாம் சொல்லவில்லை. கதையில் கதாபாத்திரமே இதையெல்லாம் பேசுவதுபோல எழுதுகிறார் ஆசிரியர். அங்கேதான் அது பிரச்சாரமாகிறது. கதையின் கட்டமைப்பில் இருந்து வாசகர்களே இதையெல்லாம் ஊகிக்கவிட்டிருந்தால் வேறுவகை வாசிப்புகளுக்கும் இடமிருந்திருக்கும்.

எஸ்

அன்புள்ள ஜெ

ஜா தீபாவின் மறைமுகம். ஒரு முக்கியமான கதை. ஒவ்வொரு வரலாறும் சொல்லப்படாத இன்னொரு வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது. ஒரு வரலாறு நமக்கு ஏற்புடையது. இன்னொன்று நம்மை சங்கடப்படுத்துவது. 1920களில் இந்தியா அடிமைப்பட்டிருந்தது. ஆனால் அதில் பாதி பெண்கள் மிச்ச பாதி ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தனர். அடிமைகளுக்கு அடிமைகள். அவர்களுக்கு வெள்ளையர்களின் அடிமைத்தனம் என்னவென்றே தெரிந்திருக்காது. ஏன் வாழ்கிஓம் என்றே தெரியாமல் வாழ்ந்தே அழிந்தவர்கள் பலகோடிப் பெண்கள். அவர்களின் கதையைச் சொல்லியிருக்கிறார். ஆனால் பிரசங்கம் இல்லாமல், நுட்மபாக நிகழ்வாக சொல்லியிருக்கிறார். கலையமைதி கூடிய அழகான கதை.

எம்.பிரபாகர்

 

மறைமுகம்  ஜா தீபா

ஒற்றை சம்பவம்- ஜா தீபா சிறுகதை

 

 

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2021 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.