நன்னு தோச்சு கொந்துவதே – கடிதங்கள்

என்ன இந்த உறவு, எதன் தொடர்வு?

அன்புநிறை ஜெ,

“நன்னு தோச்சு கொந்துவதே’ பாடல் மனதுக்கு அத்தனை அணுக்கமாகிவிட்டிருக்கிறது. முதல் முறை கேட்ட பிறகு, கடந்த ஒரு மாதத்தில் பல முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள், கண்டசாலா சுசீலா இருவரின் குரல், கருப்பு வெள்ளைப் படங்களின் அந்த மென்மையான நிலவில் நனையும் இரவு அனைத்தும் இப்பாடலை இனிதாக்குகிறது.

ஏனாதிதோ மனபந்தத்தில் கண்டசாலா உணர்ச்சி போல நின்னே நா ஸ்வாமியில் ஒவ்வொரு முறையும் சுசீலா தோய்கிறார். குறைவான எளிய சொற்களிலேயே மிகச் சரியாக மனதை சொல்லிவிடக்கூடிய வரிகள், தெலுங்கில் மட்டுமே சாத்தியமோ எனத் தோன்றியது.

பதிவின் தலைப்பில் ‘எதன் தொடர்வு’ என்பதும் அழகு.  தொடர்ச்சி எனும்போது அச்சொல் பாடலின் இழையை சற்று அறுபடச் செய்கிறது.  தொடர்வு ஒரு தொடுகை போல மென்மையாய் தொடர்கிறது.

இன்றைய பதிவில் தரப்பட்டிருக்கும் வரிகளுக்கான பக்கத்தில்

(https://www.lyricspulp.com/2021/05/nannu-dochukunduvate-lyrics-gulebakavali-katha.html)

பாடலின் பொருளை கூகுள் மொழிபெயர்ப்பில் பெயர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது

நின்னே நா ஸ்வாமியில் நின்னே thyselfக்கு பதிலாக yesterday ஆகிவிடுகிறது

Kannulalo Dhaachukondhu Ninnee Naa Swamy

Ninne Naa Swamyy

Hiding in the eyes yesterday is my lord

Yesterday was my lord

கந்தம் சந்தனத்துக்கு பதிலாக sand ஆகிவிடுகிறது, அதுவும் non-flying sand

Enni Yugaalaina Idhi Igirii Poni Gandham,

Idhi Igiri Poni Gandham

How many ages has it been without sand

Non-flying sand

இது வேறு ஒரு பாடல் என எண்ணிக்கொண்டேன் .

மிக்க அன்புடன்,

சுபா

அன்புள்ள ஜெ

நீங்கள் குறிப்பிடுவதற்கு முன்ன்னரே அருண்மொழி அக்காவுக்கும் ஜமுனாவுக்குமான தோற்ற ஒற்றுமையை நான் கவனித்திருந்தேன். அதை தோழிகளுடன் சொல்லியும் இருக்கிறேன். நீங்களும் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

ராஜேஸ்வரி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.