ஔரங்கசீப் நாவலுக்கு நான் எதிர்பாராத அளவுக்கு ஆதரவு குவிகிறது. நிச்சயமாக இந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், இந்த வகைமையில் நான் இதுவரை எழுதியதில்லை. தன்னம்பிக்கை இல்லாமலேயேதான் எழுதினேன். எல்லோருக்கும் பிடித்தது மகிழ்ச்சி. அதை விட ஆச்சரியம், எல்லோரும் தினம் ஒரு அத்தியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எழுதலாம்தான். தினம் 1000 வார்த்தைகள் எழுத முடியாதா என்ன? ஆனால் பயமாக இருக்கிறது. சமயங்களில் ஆய்வுக்காக நாள் கணக்கில் படிக்க வேண்டியிருக்கிறது. இப்போது பாரதத்தில் ...
Read more
Published on August 03, 2021 23:03