தனது வாசிப்பு எல்லைக்குள் சாரு நிவேதிதாவின் எழுத்துகளுக்கு இடமில்லை என்று சொல்வது இலக்கிய நேர்மை . ஆனால், தமிழ் இலக்கியப் பரப்பிலேயே அவருக்கும் அவரது எழுத்து முறைமைக்கும் இடமில்லை எனச் சொல்வது எந்தவிதத்திலும் நேர்மை சார்ந்ததல்ல. தான் நம்பும் கருத்தியலும் வெளிப்பாட்டு முறைமையும் மட்டுமே சரியானது; மற்றவையெல்லாம் விலக்கப்பட வேண்டியன என நினைக்கும் ஒதுக்கல் மனோபாவம். எதை எழுதுவது எனத் தெரிவுசெய்து முன்வைப்பதிலும், உலகக் கலை இலக்கியப்பரப்பில் – சினிமா, நாடகம், இலக்கியம் – அவருக்குக் கிடைத்த ...
Read more
Published on August 03, 2021 05:53