நாவல் bynge.in செயலியில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வெளிவந்தது. அடுத்த அத்தியாயம் இன்று காலை ஏழு மணிக்கு வரும். முதல் அத்தியாயம் வந்ததும் இரண்டாவது வருவதற்குள் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளப் பெரும் ஆவலாக இருந்தேன். நள்ளிரவுக்குள் – அதாவது வெளிவந்து ஐந்து மணி நேரத்தில் 884 பேர் வாசித்திருக்கிறார்கள். இப்போது மணி காலை ஆறு ஆகிறது. அந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. இது சந்தோஷத்துக்குரியதா வருத்தத்துக்குரியதா என்று தெரியவில்லை. மூவாயிரம் பேர் ...
Read more
Published on July 29, 2021 17:55