இன்று என் நண்பர் பா. வெங்கடேசனின் புத்தகமான கதையும் புனைவும் தபாலில் வந்தது. புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல். வெங்கடேசனோடு த. ராஜன் உரையாடியிருக்கிறார். இப்படிப்பட்ட உரையாடல்கள் நூல்கள் தமிழில் வெகு அபூர்வம். சுந்தர ராமசாமியோடு சிலர் உரையாடியிருக்கிறார்கள். நூலாக வந்துள்ளன. மௌனியோடு பலரும் உரையாடியிருக்கிறார்கள். நூல் வந்ததா எனத் தெரியவில்லை. படிகள், நிறப்பிரிகை போன்ற பத்திரிகைகள் வந்த காலகட்டத்தில் அப்பத்திரிகைகள் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன. புத்தகங்கள் உண்டா எனத் தெரியவில்லை. வெங்கடேசன் ஒரு புனைவிலக்கியவாதி என்பது ...
Read more
Published on July 25, 2021 00:24