உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் தினந்தோறும் நடக்கின்றன என்பேன். எனக்கே சரியாகத் தெரிவதில்லை. ஒரு சித்தர் மற்றவர்களைக் கட்டிப் பிடிக்கும்போது அவர்கள் மயக்கம் போட்டு விழுவதைப் பார்த்தேன். என்னையும் கட்டிப் பிடித்தார். சீ என்று அருவருப்பாகத்தான் இருந்ததே தவிர மயக்கமும் வரவில்லை, மண்ணாங்கட்டியும் வரவில்லை. ஆனாலும் அற்புதங்களை மறுக்க மாட்டேன். ஏனென்றால், தினமும் இல்லாவிட்டாலும் – தினமும் நடந்தால் அது அற்புதம் இல்லையே? – ...
Read more
Published on June 09, 2021 17:56