தருமபுரி, 12..03..21 சற்றே நீண்ட கடிதம். பொறுத்துக் கொள்ளுங்கள். அன்புள்ள சாரு, இக்கடிதம் பல நாட்களுக்கு முன்பாகவே தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது. என்னுடைய 59 வயதில் நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தினை எழுதுகிறேன். தங்களது வலைப்பக்கத்தில்தான் எனது நாள் துவங்குகிறது. இது எனது வழக்கம். சில நாட்களுக்கு முன்பாக வளனது கடிதத்தினைப் படித்தேன். அது அளித்த உந்துதலே இக்கடிதம். தங்களது எழுத்து யாருக்கு வாழ்வின் எப்பக்கத்தையெல்லாம் திறக்க வைக்கிறது என்பதற்கு வளனின் கடிதம் ஒரு சிறந்த உதாரணம். ...
Read more
Published on March 12, 2021 22:10