என்னிடம் ஒரு பூச்சி இருந்தது. அழகான கவர்ச்சியான பூச்சி. அதை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தேன். நடைப் பயிற்சிக்கெல்லாம் அழைத்துப் போவேன். பலரும் பாராட்டினார்கள். பாராட்டப் பாராட்ட சீராட்டல் மிகுந்தது. ஒரே ஒரு யதி சொன்னார், பூச்சிதான் உன் சத்ரு என. கேட்கவில்லை நான். ஒரு கட்டத்தில் என் இதயத்தில் பாதியைத் தின்று போட்டது பூச்சி. பதிலுக்கு நானும் கொன்று போட்டேன் பூச்சியை. பாதி இதயத்தோடே வாழவும் பழகிக் கொண்டேன். இப்போது என் நண்பன் அதே பூச்சியை ...
Read more
Published on February 21, 2021 16:49