நற்றுணை கலந்துரையாடல்
அன்புள்ள ஜெ,
சென்னை வெண்முரசு கலந்துரையாடல் ஐந்து ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அது வெண்முரசு என்னும் ஒரு தனிப்பட்ட நாவலுக்காக மட்டுமே நிகழ்ந்து வருவது. ஆகையால் அதில் பத்மவியுகம், அதர்வம், களம் போன்ற உங்களின் மகாபாரத சிறுகதைகளைக் கூட விவாதிப்பதில்லை.
ஆகவே, வெண்முரசு சாராத பிற படைப்புகளுக்காக இன்னொரு கலந்துரையாடல் அமர்வை இந்த ஆண்டு முதல் முன்னெடுக்கிறோம். உங்களது தனிமைக்கால கதைகளில் ஒன்றான “நற்றுணை” சிறுகதையின் தலைப்பையே இந்த கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு எழுத்தாளர் ரமேஷ் சுப்ரமணியம் ஒரு லோகோ உருவாக்கித் தந்துள்ளார். இனி மாதந்தோறும் வெண்முரசு கலந்துரையாடல் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் என இரு உரையாடல்கள் நிகழும்.
அனைத்திற்கும் வாசக நண்பர்களின் ஆர்வம் மட்டுமே முக்கிய காரணம். தனிமைக் காலத்தில் சென்னை வெண்முரசு கலந்துரையாடல் இணையவழியாக நிகழத் துவங்கியது. தமிழகத்தின் உட் பகுதிகள் முதல் உலகின் பிற நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் வரை பல புதிய வாசகர்கள் இணைந்தனர். அவர்களின் ஆர்வமும் இதை முன்னெடுக்க ஒரு முக்கியக் காரணம். ஆகவே இனி வரும் அமர்வுகளும் இணைய வழியாகவே நிகழ வாய்ப்புகள் அதிகம்.
‘நற்றுணை’ கலந்துரையாடலின் முதல் அமர்வு வரும் ஜனவரி 26 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் குறித்து நண்பரும் இலக்கிய விமர்சகருமான முத்துகுமார் பேசுவார்.
இது வழக்கம் போலவே ஒரு கலத்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்
நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -1
நாவல் – பின் தொடரும் நிழலின் குரல்
நாள் 26-01-21
நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை
Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )
நாவல் குறித்து உரையாடுபவர்:- முத்துகுமார்
(நண்பர் முத்துகுமார், கலை இலக்கியம் தத்துவம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். அவரது சிறுகதைகள் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவரது வலைதள முகவரி:-https://muthusitharal.com/)
நன்றி
R.காளிப்ரஸாத்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

