மாணவனை நோக்கி பள்ளி வரவேண்டும்
"instead, the school should go to the student"என்று மார்த்தி சொன்னதாகப் படித்திருக்கிறேன்"the school should go to the student" என்பதற்கும்"instead, the school should go to the student" என்பதற்கும் வேறுபாடு உண்டுமுன்னது கட்டமைப்பதற்கான கோரிக்கைபின்னது இருக்கிற கட்டமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கைஇருக்கிற கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்றால் இருப்பதில் பிழை இருக்கிறது என்று பொருள்எனில்,முன்னதைவிடவும் பின்னதில் அதிக கவனம் கொள்ளப்பட வேண்டும் என்றும் பொருள்எந்தக் குழந்தையையும் எக்காரணத்தைக் கொண்டும் விடுபடாமல் பள்ளிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் தங்கள் தங்கள் மொழியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்ஆனால்மாணவனை நோக்கி பள்ளி வரவேண்டும் என்று மார்த்தி கூறுவது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்சில புத்திசாலிகள்”அது எப்படி பள்ளி நகரும்”என்றுகூட கிண்டல் செய்யக் கூடும்”கல்வி என்ன அவ்வளவு சல்லிசா போச்சா?”என்று சிலர் கொதிநிலையின் உச்சத்திற்கே போகக் கூடும்“”மலைவாழை அல்லவோ கல்வி -நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி”என்று பாரதிதாசனேகூட குழந்தையைத்தானே பள்ளிக்குப் போகச் சொன்னார் என்றுகூட கூறலாம்ஆமாம் உண்மைதான்மார்த்தி பள்ளிக்கூடம் என்ற கட்டிடத்தை நகரக் கோரவில்லைபள்ளி என்கிற கட்டுமானத்தை நகரச் சொல்கிறார்மார்த்தி சொன்ன ஆழத்தில்கூட இதை அணுக வேண்டாம். கொஞ்சம் கருணையோடு இப்படி அணுகவே கோருகிறோம்பள்ளிக்கு செல்லும் வயதுடைய குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்கு கொண்டு வரவேண்டும்தான்ஆனால்ஏதோ ஒரு காரணத்தால் பள்ளிக்கு வரவே முடியாதவனை என்ன செய்யலாம்?எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிடலாமா?அவனுக்கு ஏதோ ஒரு வகையில் கல்வியைக் கொண்டுபோக வேண்டாமா? என்பதைத்தான் மார்த்தி இப்படிக் கூறுகிறார்இளமதி சமீபத்தில் கூறிய ஒரு செய்தி என்னை அந்த இடத்திலேனும் குறைந்தபட்சம் மார்த்தியின் இந்த கோரிக்கையைப் பொறுத்திப் பார்க்கக் கூடாதா என்று ஆதங்கப்பட வைத்ததுதற்போது நடந்துவரும் மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு ஒரு பள்ளியில் ”சொல்வதை எழுதும்” பணிக்கு இளமதி அமர்த்தப் பட்டிருக்கிறார்தேர்வினை எழுத இயலாதபடிக்கு உடல் பாதிப்பு உள்ள குழந்தைகள் கூறுவதைக் கேட்டு இவர்கள் அந்தக் குழந்தைகளுக்காகத் தேர்வெழுத வேண்டும்ஒரு பார்வையற்ற குழந்தைக்கு தேர்வெழுதும் பணி மதிக்குஅந்த தேர்வு மையத்தில் ஏறத்தாழ 20 கும் மேற்பட்ட பார்க்கும் திறனற்ற குழந்தைகள் தேர்வெழுத வருகிறார்கள்அந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளி 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதுகுறைந்த பட்சம் இதுமாதிரிக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு தேர்வறைகளைக் கொண்டுபோகக் கூடாதா?#சாமங்கவிய ஒருமணி இருபத்தி ஐந்து நிமிடம்
09.03.2020

Published on March 15, 2020 13:57
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

![இரா. எட்வின் [R.Edwin]](https://s.gr-assets.com/assets/nophoto/user/u_111x148-9394ebedbb3c6c218f64be9549657029.png)