சிங்கப்பூர் கடிதங்கள்

IMG_20160904_205249


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


கடந்த 4/செப்டம்பர் /2016 ஞாயிறு வாசகர் சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வொன்றாக ஆகிப்போகக்கூடும் அல்லது அது போன்ற தருணங்களின் தொடக்க நிகழ்வாக என்றும் மனதில் பதிந்துபோகும். எப்படியாகினும் அஜீரணத்தினால் அல்லல் பட்ட ஒருவனுக்கு கிடைத்த ஜீரண மருந்தின் முதல் உதவி அது.


எனது வாசிப்பு பெரும்பாலானவர்களைப்போல சிறுவர் இதழ்களை தொடங்கி, உணவு கூட மறக்கும்படி மிகத்தீவிரமாக இருந்தது பின்பு அது வார இதழ்களிலும் அவ்வப்போது நூலகத்தின் சிறுகதைகளிலும் பின் கல்லூரிப்பருவத்தில் கவிதை, மனோதத்துவங்களிலும் வந்து நின்றது. இணையம் அறிமுகம் ஆன பின்பு 2008ல் தமிழிஷ் மூலமாகவே எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின பின்பு அத்துணையும் ஒரு கட்டத்தில் சலிப்பையே தந்தன காரணம் அங்கு அறிவார்ந்த பதிவுகளோ, இலக்கியங்களோ சொல்லிக்கொள்ளும்படி காணக்கிடைக்கவில்லை, தலைப்புகள் மட்டும் விபச்சாரப்பெண்ணின் அழைப்பை போன்றிருக்கும் உள்ளே சென்றால் வெறும் சண்டைகள், சொந்த பிதற்றல்கள் அரை வேக்காட்டு விமரிசனங்கள் அதில் கவனிக்கத்தக்கவையாக இருந்தவற்றில் உங்களை பற்றிய விமரிசனங்கள், விவாதங்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தை சென்றடைய, உங்களைப்பற்றி அறிந்துகொள்ள காரணமாக இருந்தது.


தங்களின் வலைதளம் அமைப்பையே என்னை சிந்திக்க வைத்தது, எந்தவித அலங்காரமும் இன்றி எளிமையாக படிக்கும் எழுத்து வடிவங்களுடன் இருந்தது. நான் முதலில் படிக்க நேர்ந்தது தங்களின் ‘இரவு’ குறுநாவல்தான். அது என்னை என்னை நான் இதுவரை அறிந்திடாத வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்றது.


பின்பு ‘அறம்’ சிறுகதைகள். வணங்காணும் கெத்தேல் சாகிப்பும் என்னை உலுக்கி எடுத்தன. அதிலிருந்து தெடர்ந்து வாசித்து வருகிறேன். பின்பு நாஞ்சில் நாடன், சு ரா, போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகள் அறிமுகமாயின. நிற்க.


எனக்கிருக்கும் மிகப்பெரிய குறை என்பது வாசித்தவற்றை அசை போடும் அல்லது விவாதிக்கும் நட்பு வட்டம் அமையப்பெறாததே. இதுவே என்னால் வாசித்தானவற்றை நினைவில் கொள்ள முடியாமல் அல்லது நினைவு அடுக்கில் இருந்து மீளப்பெற தவிக்கும் நிலை. அந்தவகையில் இந்த வாசகர் கூட்டம் எனக்கு மிகப்பெரிய விடுதலை பெற்றுத்தந்தது எனக்கூறலாம்.


ஒன்று செய்திருக்கலாம் அது வந்த வாசகர்களை ஒருங்கிணைத்து ஒரு நடப்பு வட்டம் அமைத்திருக்குமேயானால் அது என் போன்றோருக்கு மிகப்பெரிய நன்மையாக இருந்திருக்கும், கிட்டத்தட்ட 7 மணிநேரம் சிறு சுவாரசியம் கூட குன்றாமல் நிகழ்ந்த அந்த சந்திப்பில் இவை அமையாமல் போனதில் வியப்பேதுமில்லை தான்.


சந்திப்பில் அறிந்து கொண்டவை பல, குறிப்பாக பயணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும், வரலாற்றினை எவ்வாறு அணுக வேண்டும், தமிழகத்தின் வாசிப்பு பற்றிய விவாதங்கள், மொழி அரசியல், காரிய அரசியலின் பின்புலங்கள், வேதங்கள், சமஸ்கிருதம் பற்றியன குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாக தமிழகத்தின் வரலாறு எவ்வாறாக இருந்திருக்கும் என்ற தங்களின் பார்வை எனக்கு ஒரு புதிய கதவினை திறந்து விட்டது.


மொத்தத்தில் இந்த சந்திப்பு எனக்கு வழி தவறிய ஆட்டுக்குட்டி தன் மந்தையை கண்டடைந்ததைப்போல, இருட்டில் வலி தவறிவனுக்கு கிடைத்த கைவிளக்கைபோல அமைந்தது என்று சொல்லலாம்.


இவையனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு அது நான் என் மானசீக குருவினை கண்டடைந்த நாள் அது!


தங்களின்


 


இராமநாதன்


***


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம்.


தங்களை 4-9-2016 சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். மதியம் 2 மணி ஆரம்பித்த சந்திப்பு இரவு 9 மணி அளவில் முடிவடைந்தது. 7 மணி நேர Non-stop Marathon session.


ஒரு சின்ன இடைவெளி/ஒய்வு கூட எடுக்காமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கள் அளித்த பதில்கள் நல்ல தெளிவை தந்தன.


உதாரணமாக வரலாற்றை அணுகும் விதம்.


தமிழ் மன்னனின் அரசு கங்கை வரை நீடித்தது என்று செய்யுள்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அது நடந்திருக்குமா என்று கேள்வி கேட்டு, அது முடியாது என்று நீங்கள் அளித்த விளக்கங்கள் முற்றிலும் உண்மையே.


It is just common-sense. How can a small population win over such a huge population in the Godavari/Krishna belt and Ganges belt?


நிறைய சொல்லி கொண்டே போகலாம்.


தங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2016 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.