சிங்கப்பூரில்…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சிங்கப்பூர் தங்கமீன் இணைய இதழில் நவீன தமிழ் எழுத்தாளர்கள் குறித்த சிறு அறிமுகக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா மற்றும் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களைப் பற்றிய கட்டுரைகளின் சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன். நேரம் இருக்கையில் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். நன்றி.
http://thangameen.com/home/details/775
http://thangameen.com/home/details/754
மிக்க அன்புடன்,
கணேஷ் பாபு
சிங்கப்பூர்
அன்புள்ள கணேஷ்,
வந்து பதின்நான்கு நாட்கள் சாதாரணமாகத் தாண்டிச்சென்றுவிட்டன. நண்பர்கள் சந்திக்கவேண்டும் என விரும்புகிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை[ 14 – 8 -2016] அன்று சிங்கை உமறுப்புலவர் நிலையத்தில் வைத்து பொதுவாசகர்களுக்கான ஒரு பயிலரங்கு உள்ளது. தேசிய கல்விக் கழகம் [NIE] இணையதளம் சென்று முன்பதிவுசெய்யவேண்டும். அதில் எவரும் பங்குகொள்ளலாம் [பதிவுத்தொடர்புக்கு Dr Seetha- 9451 0735 ]
21- 8-2016 அன்று அம்மோக்கியா நூலக அறையில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தலாம் என சித்ரா சொன்னார். அதை அறிவிப்பதாக இருக்கிறேன். [chitra.kjramesh@gmail.com ]
அதற்கு முன் முடிந்தால் 13-8-2016 அன்று ஆர்வமுள்ள நண்பர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் எங்காவது சந்திக்கலாமென தோன்றுகிறது. என் மின்னஞ்சலுக்குச் சந்திக்கவிரும்புபவர்கள் தொடர்புகொண்டால் அவர்களுக்கு என் விலாசம் மற்றும் எண்ணை அனுப்புவேன் [jeyamohan.writer@gmail.com]
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

