Jeyamohan's Blog, page 40
September 4, 2025
மானசீகன்
மானசீகன் தமிழில் விமர்சனக் கட்டுரைகளையும் கவிதைகளையும் கதைகளையும் எழுதிவருகிறார். தமிழில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றுகிறார். அவருடைய முதல் நாவல் மூன்றாம் பிறை குறிப்பிடத்தக்கப் படைப்பாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.
மானசீகன்
நாவல்கள்மூன்றாம் பிறைசிறுகதை தொகுப்புகள்சுடர்தொடி கேளாய்கட்டுரை நூல்கள்எங்கே இருக்கிறாய் கேத்தரின்வாக்காளனாகிய நான்இளம்பிறைக்குள் ஒரு பூர்ணிமாஇசை சூஃபிதமிழ்ச்சிறுகதையின் திருமூலர்- கு.அழகிரிசாமிமாதவையா முதல் கிருபா வரைகவிதை தொகுப்புகள்ஏழாம் வானத்து மழைமதநீராய்ப் பூத்த வனம்ஏவாளைத் துரத்தும் நிழல்புராதன நகரிலிருந்து வந்த ரத்தம்
தமிழ்விக்கி நிகழ்வு, கடிதங்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
தமிழ் விக்கி பெரிய சாமி தூரன் விருது விழாவில் முதல் முறையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. விழாவுக்கு ஐந்து நாள் முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்து சேர்ந்தேன்.விருது பெறும் தொல்லியல் ஆய்வாளர் வேதாசலத்தை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த விருது வழங்கப்பட்டமையால் தான் கிடைத்தது.
நாணயவியல்,தொல்லியல்,வானியல் என அமைதியாக பணியாற்றி வரும் ஆளுமைகள் பலரையும் அறிந்தது உங்கள் வாசகனாக இருப்பதால் மட்டுமே.விழாவுக்கு வந்திருந்த லண்டன் ராஜேஷ் மற்றும் கோவை சகோதரி பத்மாவதியுடன் பேசிக்கொண்டிருக்கையில் இன்னும் அறியாத விசயங்கள் எவ்வளவு இருக்கிறது. இனி மீதமிருக்கும் வாழ்வு போதாது ,அறியாமையிலேயே மடிந்து விடுவோம். இந்த ஒரு வாழ்வு போதாது என.ஆம் எங்களுக்கு இவை மிக தாமதமாக கிடைத்திருக்கிறது.சமகாலத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், அறிவுதளத்தில் பயணிக்க விரும்புவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.அவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
இலக்கிய வாசகன் ஏன் இவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என உங்கள் உரையில் சொன்னீர்கள். இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்த உங்களுக்கும்.இரு தினங்கள் விரிவான ஏற்பாடுகளை செய்த ஈரோடு விஷ்ணுபுரம் வட்டத்தை சார்ந்த நண்பர்கள் கிருஷ்ணன்,பிரபு, பாரி மற்றும் அறம் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் நன்றிகள்.
நாதஸ்வர,தவில் இசை கச்சேரி.இதற்கு முன்பு எப்போதும் இது போல ஒரு இசையை கேட்டதே இல்லை கோவில் திருவிழாக்கள்,திருமண மண்டபத்தில் பெரும் கூச்சலுக்கு இடையில் எழும் ஒரு பி பீ ஊதுதல் ஆக மட்டுமே எனக்கு தெரியும்.தமிழகத்தின் மிகச் சிறந்த கலைஞரின் இசையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது நல்லூழ் என்பேன்.மைக் இல்லாமல் இரு மணி நேரம் அமர்ந்து இசையை ரசிக்கும் ஆர்வம் கொண்ட கூட்டத்தில் நானும் அமர்ந்திருந்தேன். கச்சேரி துவங்கி முதல் பாடலுக்கு பின் கண்களை மூடி இருந்தபோது முழு உடலும் இசையை உள் வாங்க துவங்கியது. அது ஒரு தியான போல பேரனுபவம்.
தமிழ் சூழலில் எங்கும் நிகழாத அரிய நிகழ்வுகளை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் செயல்படுத்தி வருகிறது.
எல்லாவற்றிற்கும் நன்றி ஸார்.
ஷாகுல் ஹமீது, (கப்பல்காரன்)
நாகர்கோவில்.
சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மண்டபத்திற்கு வந்தேன். இரவு 9. 20 க்கு வெளியேறினேன். விருப்பமானவைகளைப் படம் எடுத்து கொண்டேன். 4 புத்தக விற்பனையக ங்களை ஒரு சுற்று பார்த்தேன்,, நற்றிணையின் லாப நோக்கு இல்லா மக்கள் பதிப்பில் ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை, கிழவனும், கட லும் இரு நூல்களையும் 200 ரூபாவிற்கு வாங்கினேன்.
அய்யா வேலுத ரன் அவர்களின் அமர்வு. பி பி டி வழி நிறைய நடுகற்கள் பற்றி விளக்கினார்கள்.தர்மபுரி நடுகற்கள் ப ற் றி தா ங்கள் பேசியுள்ள videos மூலம் natukarkal மேல் தனி வசீகரம் எனக்குண்டு. சோ.தர்மன் அவர்களின் ராஜஸ்தான் தேள் நடுக்கல் செய்தி உற்சாகம் தந்த புது செய்தி.
தொடர்ந்து நிகழ்ந்த ஷிண்டே நிகழ்வில் ஆங்கிலத்தில் மனம் அமைய வில்லை.ஷிண்டே அவர்களின் பேச்சின்சாராத்தை தங்கள் எழுதிய தூரன் விழா கட்டுரையில் வாசிதேன்.
அய்யா சுப்புராயான் அவர்களின் அமர்வு .வயது முதிர்வால் மெதுவாக நிதானமாக பேசினார்கள்.அறிந்த வரலாற்றில் பல வெளிச்சம். சோழர்கள் பள்ளிகள் கட்டவில்லை .மக்களுக்காக சாலைகள் போட வில்லை இப்படி பல.
மதியம் நாகஸ்வர நிகழ்வு.இந்த நிகழ்ச்சியின் அடிப்படை ஏ தும் எனக்கு தெரியாது. டி கே சி ஓரிடத்தில் நாகஸ்வர இசை இனிமையானது.அதை தொந்தரவு செய்வது போலவவே உள்ளது மேளத்தின் ஒலி என்பார். இப்படி ஆங்காங்கே படித்தது, கோவில் இல்ல நிகழ்வுகளில் கேட்டது , இவ்வளவே நாகஸ்வர தொடர்பு, சமீபகாலமாக சில ஆண்டுகள் நாகஸ்வர இசை கேட்டால் இனம் புரியாத இன்பம் .இரு மாதங்களுக்கு முன் வேதாரண்யம் பெரிய கோவிலில் ஒரு நிகழ்வு. ஐந்து நாதஸ்வரங்கள் கொண்ட நிகழ்வு,.அதற்காகவே அன்று ஆலயம் சென்றே. ந்நிகழ்வு மெய் சிலிர்க்கும் அனுபவம். தூர ன் விழா , நாகஸ்வர நிகழ்வில் இசை எழுந்து நின்று பேசுவதாகவே உணர்ந்தேன்.முதல் நாள் பயண களைப்பு , தூக்கம் சரி இன்மை எல்லாம் உடலில் இருந்தாலும் இயல், இசை என விழாவின் இரு தமிழ் களையும் அனுபவித் தேன்.
விருது நிக ழ்வு .வழக்கம் போல் தங்கள் பேச்சு நன்றாக இருந்தது.வேதாசலம் அய்யாவின் பேச்சு உருக்கமாக இருந்தது. இந்த ஒரு நாள் நிறைவாக, மகிழ்வாக அமைந்தது.
முத்தரசு
வேதாரண்யம்
எதிர்விமர்சனங்கள் பற்றி…
உங்கள் தளத்தில் ஏராளமான நூல் மதிப்புரைகளைக் காண்கிறேன். பல நூல்களை இந்த தளம் வழியாகவே அறிந்துள்ளேன். நான் இதுவரை ஏழு மதிப்புரைகளை அனுப்பியிருக்கிறேன்.எதுவுமே பிரசுரமாகவில்லை. என் மதிப்புரைகளில் என்ன பிழை? தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.
சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்,
உங்கள் மதிப்புரைகள் சரியானவையாக இருக்கலாம் – நீங்கள் குறிப்பிட்ட நூல்களை நான் வாசிக்கவில்லை. ஆனால் இந்த தளத்தில் பொதுவாக எதிர்மதிப்பீடுகளை வெளியிடுவதில்லை. இது இப்போதைய என் நிலைபாடு.
இன்றுகூட ஒரு நண்பர் அண்மையில் வெளிவந்துள்ள ஓர் உலக இலக்கிய மாடர்ன் கிளாஸிக்கின் மொழியாக்கம் பற்றிய கடுமையான எதிர்விமர்சனத்தை அனுப்பியிருந்தார். பற்பல ஐரோப்பியப் பண்பாட்டுக் குறிப்புகள் கொண்ட முக்கியமான ஆக்கம் அது. மொழியாக்கம் மொழியாக்கமாகவே இல்லை, மொழியாக்கம் செய்தவருக்கு தமிழ் மட்டுமல்ல ஆங்கிலமும் தெரியாது என தெரிந்தது. ஆனால் அதை வெளியிடமுடியாது என மறுத்துவிட்டேன்.
மேலும் சிலர் அந்நூலை வாங்கி ஏமாறலாம், ஆகவே வெளியிடவேண்டும் என அந்நண்பர் சொன்னார். ஆனால் அது நம் வேலை அல்ல. வாங்குபவர் ஓரிரு பக்கம் வாசித்துவிட்டு வாங்குவதே நல்லது. ஒரு மாதகாலத்துக்குள் அது எப்படி என வாங்குபவர் அனைவருக்கும் தெரிந்துவிட்டிருக்கும். இலக்கியமதிப்பீட்டின் வேலை அது அல்ல என்று நான் சொல்லிவிட்டேன். (கடலூர் சீனு அதை வாசித்துக் கொந்தளித்துப்போய் வாட்ஸப் ஸ்டேடஸாகப் போட்டுக்கொண்டிருந்தார்)
நான் எதையும் எதிர்மறையாகச் சொல்லும் மனநிலையில் இப்போது இல்லை. என் தளத்தில் வருவது என் குரலாகவே கொள்ளப்படும்.இந்நிலைப்பாடு? இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் பற்றிய ஆக்கபூர்வமான விவாதங்களுக்குரிய மனநிலையில் இல்லை. உடனடியாக அவை முகநூல் வம்புகளாக ஆகிவிடுகின்றன. இரண்டு, இன்றைய வாசகர்கள் முன் நூல்கள் வந்து குவிகின்றன. அவர்கள் வாசிக்கவேண்டிய கட்டுரைகளும் குவிகின்றன. வாசிக்கத்தேவையானவற்றை மட்டும் சுட்டிக்காட்டினால் போதும். இலக்கிய மதிப்பீடுகளை அவற்றைக்கொண்டு மட்டுமே உருவாக்கினால் போதுமானது.
ஜெ
பெங்களூர் சொல்லாழி இலக்கியக் கூடுகை
நண்பர்களே,
வரும் 7 செப்டம்பர் 2025, ஞாயிறு அன்று ‘சொல்லாழி’ பதினைந்தாவது உரையாடல் அமர்வு, Atta Galatta அரங்கில், சிவராம காரந்த் அவர்களின் ‘மண்ணும் மனிதரும்’ நாவலுடன் நடைபெறும்.
நேரம்: 4:45PM – 7:30PM.
இடம்: https://maps.app.goo.gl/LNciLq3vCEngKwGo6
https://www.commonfolks.in/books/d/mannum-manitharum
நன்றி.
ஆர்.எம்.சதீஷ்குமார்
கீழடியும் எகிப்தும்
Forty years ago, when I entered the Tamil literary field as a young writer with a lot of dreams and enthusiasm, there was a particular belief that a writer should write about what he personally knew and felt. It was the belief of modernism; for them, the life and personality of the writer are more important than the text.
A thousand ways to go deep in…
நாம் இங்கே கீழடி கீழடி என்று கொப்பளித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு தொல்லியலோ வரலாறோ தெரியாது. உலக வரலாறே தெரியாது. நாமே உலகின் தொன்மையான மூத்த குடிமக்கள் நாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
கீழடியும் எகிப்தும்September 3, 2025
விஜய் அரசியல், மெய்யான அரசியல்
விஜய் தன் அரசியல்கட்சியைத் தொடங்குவதன் வழியாக உருவாகி வரும் அரசியல் பற்றிய என் எண்ணம் என்ன? நான் அரசியல் என நம்புவது உண்மையில் என்ன? அதில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இன்னொரு கோணத்தில் கட்சியரசியல், அதிகார அரசியல் ஆகியவற்றுக்கு அப்பால் உள்ள அரசியல் என்பது என்ன?
முடிவிலா அலைகடல்
அன்புள்ள ஜெ
கடல் நாவலை வாசித்தேன். நாவலை கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கியபோது எனக்கு ஒரு மனப்பதிவு இருந்தது. சினிமாவாக வந்த நாவல், ஆகவே படுகளம் போல பரபரப்பாக இருக்கும் என நினைத்தேன். முதல் அத்தியாயமே முற்றிலும் வேறொன்றாக இருந்தது. நாவல் கதையாகச் சொல்லப்படாமல் மாபெரும் வாக்குமூலங்களாகவே சென்றது. அது வேறொரு அனுபவமாக அமைந்தது. மிகத்தீவிரமான நாவல் என்ற எண்ணம் உருவாகியது. அதை வாசித்து முடிக்க ஓரிரு மாதம் ஆகும் என நினைத்தேன். (நான் விஷ்ணுபுரம் முடிக்க ஒரு வருடம் ஆகியது) ஆனால் மிக மிக விரைவாக, ஒரே வாரத்தில் கடல் நாவலை வாசித்து முடித்தேன். அந்த உணர்ச்சிவேகம் அத்தனை ஈர்ப்பை அளித்தது.
முதல் வரி முதல் உச்சகட்டத்திலேயே நாவல் சென்றது. தாமஸும், சாமும் பேசிக்கொள்ளும் உரையாடல். அவர்களின் ஆன்மாக்கள்தான் பேசிக்கொள்கின்றன. அவர்கள் ஒரு வார்த்தையாவது பேசினார்களா என்பதே சந்தேகம்தான். ஆனால் பேச்சு நடந்தது. அது சிலசமயம் ஒருவருக்கொருவர் பாவமன்னிப்பு கோருவதுபோல் உள்ளது. சிலசமயம் வாள்களால் பொறிபறக்கச் சண்டை செய்வதுபோல இருந்தது. ஆன்மாவின் மாபெரும் வலி இந்த அளவுக்கு உக்கிரமாக வெளிப்பட்ட நாவல்களே தமிழில் குறைவுதான்.
ஆன்மாவின் வலி, மீட்புக்கான ஆன்மாவின் தவிப்பு, மீட்பின் கணம் ஆகியவற்றைச் சொல்ல மட்டுமே முயன்றிருப்பதனால் நிகழ்ச்சிகளை விளக்கவோ, காட்சிகளை விரிவாக்கவோ நீங்கள் முயலவே இல்லை. கதைகூட அவ்வளவு முக்கியம் அல்ல. சந்தர்ப்பங்கள் மட்டுமே நாவலை முன்னெடுத்துச் சென்றன. கதையில் புதுமை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நீங்களே அதைச் சொல்லியிருக்கிறீர்கள். சந்தர்ப்பங்களை அமைக்கும் விதத்தில் கதாபாத்திரத்தின் இருட்டோ வெளிச்சமோ வெளியாவதில்தான் நாவலின் தீவிரமான அழகு உள்ளது.
மீட்பின் கணம் என்பது அத்தனை அமைதியாக, காலையொளி வந்து விரிவதுபோல அத்தனை இயல்பாக நிகழ்கிறது. இந்நாவலை ஒரு பெரிய வெஸ்டர்ன் பெயிண்டிங் ஆக நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். கிறிஸ்தவ இறையியலில் இருந்து எழுந்த நாவல். ஆனால் மானுட மீட்பைப்பற்றிய ஒரு இதிகாசம் என்றுதான் சொல்வேன்.
எம்.ஆர்.ராஜேஸ்வரன்
அன்புள்ள ராஜேஸ்வரன்,
என் நாவல்களைப் பற்றி நான் சொல்லுவது ஒன்று உண்டு. அவை அறிவார்ந்த தர்க்கம் கொண்டவை, வடிவபோதத்துடன் உருவாக்கப்படுபவை. ஆனால் அவையிரண்டும் அடித்தளக் கட்டுமானங்களே. அவற்றுக்குமேல் நான் உருவாக்குவது எப்போதும் உணர்வுநாடகங்களையும், அவை உச்சம்கொள்ளும் கவித்துவ உச்சங்களையும்தான். தர்க்கவிளையாட்டு, மொழிவிளையாட்டு ஆகியவை கொண்ட படைப்புகளை உள்ளீடற்றவை என்றுதான் எப்போதும் நம்பிவந்துள்ளேன். ஓர் ஆர்வத்தின் பொருட்டு அவற்றில் முக்கியமானவற்றையெல்லாம் வாசித்துள்ளேன் என்றாலும்.
எனக்கு வரலாற்றார்வம் உண்டு. இந்திய, தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் தொடர்ச்சியாக வாசித்தறிபவன். தொல்லியல் இடங்களுக்கு நேரில் சென்றுகொண்டே இருப்பவன். அதேபோல ஐரோப்பிய வரலாற்றிலும், பண்பாட்டிலும் தீவிரமான ஆர்வம் உண்டு. ஆகவே ஐரோப்பியப் பண்பாட்டின் மீதான விமர்சனமாகவோ, மறுஆக்கமாகவோ வெளிவந்துகொண்டிருக்கும் (சொல்லப்போனால் வெளிவந்துகொண்டிருந்த, இப்போது அந்த அலை பின்னகர்ந்துவிட்டது) அறிவார்ந்த படைப்புகள் எனக்கு ஆர்வத்தையே உருவாக்கின. ஆனால் அவை என்னை எவ்வகையிலும் மேலெடுக்கவில்லை. ஏனென்றால் எனக்கு அவற்றுடன் உணர்ச்சித்தொடர்பு இல்லை.
ஆனால் என்னை ஆழமாக உள்ளிழுத்துக்கொண்ட மேலைப்படைப்புகள் பதினேழாம்நூற்றாண்டு முதலே உண்டு. அவற்றைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். பல நூல்களைப் பற்றி தமிழில் நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் கவனித்துள்ளேன். மேற்குச்சாளரம் என்னும் நூலை பரிந்துரைக்கிறேன். (எந்த வாசகனுக்கும் அப்படி அவனுக்கே உரிய படைப்புகள் இருக்கும். புகழ் சார்ந்து அவன் நூல்களைத் தெரிவுசெய்ய மாட்டான். அவன் தெரிவு தன் அகத்தேடல் சார்ந்தே அமையும்)
அவ்வாறு எனக்கு உகந்த செவ்வியல் படைப்பு டிவைன் காமெடி. அந்தச் சாயல்கொண்ட பல நாவல்கள் என்னை ஆட்கொண்டிருக்கின்றன. மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன் உட்பட. அவற்றிற்கு என் ‘டிரிபியூட்’ என்று கடல் நாவலைச் சொல்வேன். முழுக்கமுழுக்க இந்தியத்தன்மை கொண்ட, இந்திய உணர்ச்சி கொண்ட ஒரு நாவல் அது. அந்நாவலுக்கான கதைக்கட்டுமானம் மிகமிகத் தொன்மையானது. இருளில் உழலும் ஆத்மாவை இட்டுச்செல்லும் தேவதை. தெய்வமும் சாத்தானும் இருபக்கமும் நின்று பகடையாடும் அவன் நெஞ்சம்.
ஆனால் அதன் மொழியில், அதன் நிகழ்வுகளில் ஊடாடும் உணர்வுகளில், அதன் குறியீடுகளில் எழும் ஒளியில் என் அகம் நிகழ்ந்திருக்கிறது. ஆகவே எனக்கு மிக முக்கியமான படைப்பு.
ஜெ
வல்லினம் இதழ், செப்டெம்பர்
செப்டம்பர் மாத வல்லினம் பதிவேற்றம் கண்டது. சு. வேணுகோபால், பெருந்தேவி ஆகிய தமிழின் முதன்மை எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன் அரவின் குமார், ரோட்ரிக்ஸ், ஜி.எஸ்.தேவகுமார் கௌதம் நாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இம்மாத வல்லினத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் மலேசிய நாட்டுப்புற பாடல்களுக்கு ஒலிவடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள கோகுலராஜன் நேர்காணலும் நூல் விமர்சன கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. அதோடு இரண்டு மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் லதாவின் கவிதைகளையும் இம்மாத இதழில் வாசிக்கலாம். மிக முக்கியமாக, நவம்பர் மாதம் நடக்கும் ‘வல்லினம் விருது விழா‘ குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ம.நவீன் / M.Navin
வல்லினம் இதழ்புதுமைப்பித்தன் தழுவல் விவாதம்
புதுமைப்பித்தனின் பலகதைகள் தழுவல்களே என்று விமர்சகர்கள் உருவாக்கிய குற்றச்சாட்டும் அதையொட்டி புதுமைப்பித்தன் ஆய்வாளர்கள் அளித்த விளக்கமும் புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் எனப்படுகிறது.
புதுமைப்பித்தன் தழுவல் விவாதம் – தமிழ் விக்கி
வைரமுத்து விவகாரமும் சாதியும்
வைரமுத்துவும் ராமரும் முக்கியமான ஒரு பேச்சு. வைரமுத்துவை நம்மவர் சும்மா வசைபாடவில்லை. அந்த வசைபாடலை கூடுதலாக முன்வைப்பவர்கள் பிராமணர்கள். ராமனைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசிக்கொள்கிறோம் என்பதுதான் அவர்களின் குரல்.
வைரமுத்து விவகாரமும் சாதியும்
In this video, Meghana and Sahana look at how the topic of truth is explored in the short stories Shadow Crow and The Last Machine in the book A Fine Thread by Jeyamohan, translated to English by Jegadeesh Kumar.
A Fresh VoiceJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


