Jeyamohan's Blog, page 1696

December 30, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 19- பேசபட்டவை… கிருஷ்ணன்

IMG_8242

இது போன்ற கூடுகைகளின் நோக்கமே முக்கிய அல்லது சில மாறுபட்ட சிந்தனைகளை கவனப்படுத்த அல்லது உருவாக்க முடியுமா என்பது தான். கடந்த காலங்களில் மலையாளக் கவி டி.பி.ராஜீவன் கவிதைகளில் இருந்து படிமத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டியதன் அரசியல் அவசியம் பற்றி பேசினார், அது ஊட்டி முகாம் வரை நீடித்தது. சென்ற ஆண்டு கே.என்.செந்தில் தற்காலத்திய நெருக்கடி என்பது ‘கருணையின்மை’ தான் என்றார், அது அப்போதே சிந்திக்க வைத்தது, இப்படி விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு சில தவிர்க்க இயலா சிந்தனை முக்கியத்துவம் உண்டு. சில சமயம் அது திறம்படக் கூறல் மற்றும் சிலாகித்தல் ஆக இருக்கக் கூடும், சிலசமயம் ஆச்சர்ய தகவல்களாக இருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக சிலசமயம் புது சிந்தனைகள் மற்றும் அதுகுறித்த அறிமுகங்கள்.

இந்த 2016 லும் அப்படி பலவாறாக நிகழ்ந்தது. ஒப்புநோக்க இது ஊட்டி கூடுகைகளுக்கு நிகராகவே இருந்தது. கடந்த எல்லா ஆண்டு விஷ்ணுபுர டிசம்பர் கூடுகைகளின் கிரீடம் இது தான். அடுத்த ஆண்டு கூட இந்த உயரத்தை எட்டிப் பிடிப்பது சற்று சிரமம் தான். இம்முறை சரஸ்வதி தேவியின் கூடவே அதிருஷ்ட தேவியின் ஆசியும் இருந்தது. கோவைக்கு வந்து இறங்கியபோதே “மோட்டார்” ஸ்ரீனிவசன் என சற்று மேம்பட்ட பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொள்ளும் “மென்டலின்” ஸ்ரீனிவசனுடன் எனது விவாதம் துவங்கிவிட்டது. ஒரு கால கட்டத்தின் குரல் என ஒரு எழுத்தாளனையோ, கவியையோ அல்லது அக்காலகட்ட எழுத்தாளர்கள் சிலரையோ சொல்லலாகுமா, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு வலிந்து வட்டம் ஒன்றை போட்டு அதற்குள் அவர்களை புகுத்திக்கொள்ளல் ஆகாதா என்பதே அவ்விவாதம். இன்றில் நின்று கடந்த காலத்தை நாம் வரையறுக்கிறோம், பின்னர் எழுத்துலக சிந்தனையை வரையறுக்கிறோம், தர்க்கப் பொருத்தம் காரணமாக நாம் ஒப்புக்கொள்கிறோம். இந்த வரையறை பொருத்தப்பாடு இரண்டுமே தவறாகவும் இருக்கலாம். வரலாறு தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.

நாஞ்சில் அமர்வில் அவர் கூறிய பேசாமல் செய்பவர்கள் -பலா பூக்காது ஆனால் காய்க்கும், பிரகடனப் படுத்திவிட்டு செய்பவர்கள் -மா கொத்து கொத்தாக பூக்கும் கூடவே மிகுதியாக காய்க்கும், வாய்ச்சொல் வீரர்களுக்கு – பாதிரி, பூத்துத் தள்ளும் காய்ப்பது அபூர்வம் என மேற்கோள் காட்டியது புருவத்தை உயர்த்த வைத்தது, அராத்து பாரதியின் மொழி மாஜிக் ஏன் பின்னர் நிகழவில்லை என்னும் கேள்வியை எழுப்பினார், நாஞ்சிலும் அதை ஒப்புக்கொண்டு ‘சூதர் அவையினிலே தொண்டு மகளிர் உண்டு …….” கவிதையை அக்கணம் பாடினார், கவிதைக்கு சொற்தேர்வும், சொல் இணைவும் முக்கியம், பாரதி ஒரு யுக புருஷன் அவர்போல அரிதாகத் தான் தோன்றுவார் என்றார். ஏனோ “பாரதி மகாகவியா” என்கிற சிற்றிதழ் விவாதம் இங்கு சுட்டிக் காட்டப்படவில்லை. இதைக் குறித்து வைத்துக் கொண்ட தேவதேவன் கடைசி அமர்வில் அதை மறுத்துப் பேசினார். கவிஞனுக்கு மனத்தால் எட்டிப் பிடிக்கும் இடம்தான் முக்கியம் அதை வெளிப்படுத்த மொழி ஒரு கருவி மட்டுமே என்கிற அவரது வாதத்தை நாஞ்சில் மீண்டும் மறுத்து அப்படி என்றால் மௌனத்தாலேயே கவிதை எழுதி வாசித்துக்கொண்டிருக்க வேண்டியதுதானே என்றார், இவ்விவாதம் இனியும் தொடரும். தேவதேவன் இதை விடமாட்டார் என எண்ணுகிறேன், அல்லது இதை அவர் மறந்து போக நாம் அனுமதிக்க கூடாது. கள்ள மௌனம் என்னும் சொல்லாட்சி, யானையின் பல்வகைப் பெயர்கள், குறித்தும் அவரது உரையாடல் நீண்டது.

பாரதி மணி கலைக்கு சேவை செய்ய யாரும் நாடகத்திற்கு வருவதில்லை எனவும், காவியத் தலைவன் படம் அறியாமையால் எடுக்கப்பட்டது எனவும் கூறினார். 50 ஆண்டுகளுக்கு முன் பெண் வேடம் இடும் சிறுவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்தரவு சொல்லி மாளாது என்றார். ஒருபால் உறவு அப்போது சாதாரணம், இப்போது ஒப்பு நோக்க மிக அரிது என எண்ணை வைத்தது. ஒரு பெண் வேடமிட்ட நடிகரை, சில ஜமீன்தார்கள் நாடகம் முடிந்து அதே பெண் உடையில் தமது பங்களாவுக்கு வந்து தங்களுக்கு மது பரிமாறினால் மட்டும் போதும் என ரூ.5000/- வழங்கினார்கள் எனவும் அது இன்றைய தேதியில் 10 லட்சம் பெரும் எனக் கூறினார். நமது நாடகங்கள் சற்று பின்தங்கித் தான் உள்ளது என்றார், மைக்கில் இருந்து விடுபடவே பல வருடமானதாக சொன்னார், நவீன நாடக முயற்சி தமக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், அதில் கோணலான பரிசோதனைகள் உள்ளன, கலை இல்லை எனவும் கூறினார். என்றாலும் நாடக இயக்கங்கள் குறித்தோ, வெவ்வேறு மொழி நாடகங்கள் குறித்தோ, நாடக முன்னோடிகள் குறித்தோ, நாடக சரித்திர மாற்றம் குறித்தோ அவரால் எதுவும் சொல்ல இயலவில்லை. மசால் வடை இடும் பக்குவம், அமிதாப் பச்சனை சந்தித்தபோது அவர் தந்தை கவிஞர் ஹன்ஸ்ராஜ் பச்சனிடம் பையன் என்ன செய்கிறான் எனக் கேட்டது, பின்னர் அமிதாப் அவர் என்னை உண்மையிலேயே தெரியாமல் இருந்தால் ஒரு முட்டாள் எனவும், அதைத் தெரிந்தே கேட்டிருந்தார் என்றால் என்னைவிட பெரிய நடிகர் எனவும் ஒரு பேட்டியில் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.

இரா முருகன் வருவதற்கு சற்று தாமதம் ஆன இடைவெளியில் ஜெயமோகன் மேடை ஏற்றப்பட்டார், பொதுவாக ஊட்டி விஷ்ணுபுரம் அமர்வுகளிலும்,கோவை கூடுகைகளிலும் ஜெயமோகனை பற்றியோ அவரின் படைப்புகள் பற்றியோ ஏதும் பேசுவதில்லை என்கிற எழுதப்படாத விதியை நாம் கடை பிடிக்கிறோம். வேண்டுமென்றால் அரங்கிற்கு வெளியேயோ, காலை மாலை நடையிலோ அவரிடம் அவர் படைப்புகள் குறித்து உரையாடலாம். ஆனால் நேரமின்மை காரணமாக மாலை நடையே இல்லை, எனவே சில வாசக வாசகிகள் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு திடீர் உப்புமா அமர்வாக ஜெயமோகன் அமர்வு ஒரு 20 நிமிடம். ஏன் கண்ட கண்ட அவசியமற்ற எழுத்தாளர்களை எல்லாம் படித்து எழுதி எங்களையும் சுற்றலில் விடுகிறீர்கள் என்பது போன்ற நகைக்காக சில பேசப்பட்டதே ஒழிய, வெண்முரசில் புதிய சொல்லாக்கம் என்பது தவிர்த்து பெரிதாக எதுவும் நிகழவில்லை. வேண்டுமானால் விஷ்ணுபுரம் சார்பில் தனியாக ஜெயமோகன் வாசக சந்திப்பை நாம் நடத்தலாம்.

இரா.முருகன் சமீபத்தில் நமது நண்பர்களால் மிகுந்த ஸ்வாரஸ்யமான எழுத்தாளர் என சிலாகிக்கப் பட்டவர். jump cut எனும் வெவ்வேறு காலத்தை எழுத்தில் உறுத்தலில்லாமல் இணைக்கும் யுக்தி பற்றி பேசியது புதிது. புகை இலை விற்கும் பிராமணர்கள் பற்றி அரசூர் வம்சத்தில் வருவது, சிவகங்கையில் மலையாளம் கலந்த தமிழில் சில பாத்திரங்கள் உரையாடுவது தம்மை மீறியது எனக் கூறினார். மார்குவிஸ் தான் தமது ஆதர்ச எழுத்தாளர் எனவும், மாய எதார்த்தம் தனக்கு பிடித்தமானது எனவும் கூறினார். இவர் மறுநாள் மேடையில் எழுதி வைத்து படித்தது பின்பற்ற கடினமாக இருந்தது.

பவாவின் அமர்வு தான் அன்றைய நாளின் ஹிட். சக்காரியாவின் தேன் என்னும் சிறுகதை, அதை கரடி எனக்கூறியிருக்க வேண்டும் என துவங்கி, ஒட்டர்களின் கதை, தாம் பாம்பு பிடிக்கும் இருளர்களுடன் சென்றது, ஜப்பான் கிழவன் கதை, அதே போல ஒரு படம் பார்த்தது, திருவண்ணாமலையில் யோகிராம் சுரத்குமாரின் இருப்பு, அவருடனான நட்பு, அவர் மகனை இழந்தபின் மனைவியுடன் சென்றது, பின் எந்த மாறுதலும் இல்லாமல் திரும்பியது, பல்வேறு வெகுஜனக் கூட்டங்களை நடத்தியது போன்றவை வியக்க வைத்தது. தனது தெருவில் குடியிருக்கும் ஒருவன் தன்னை ஒரு கதை சொல்லி என உணரவேண்டும், அதே எனது சாதனை என்பதே அவரது key note.

இலக்கிய குவிஸ் பலரை வசீகரித்தாலும் அது அவ்வளவு தகுந்ததாக இல்லை. தகவலை தெரிந்து வைத்திருக்கும் சோதனையே மிகுதியாக இருந்தது. gestalt theory, catharsis போன்ற இலக்கிய கோட்பாடுகள், மாய எதார்த்தம், மீ எதார்த்தம் போன்ற இலக்கிய யுக்திகள், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கிய போக்குகள் குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஆக இது ஒரு இலக்கியத் தகவல் களஞ்சிய வினாடி வினா. இதற்கு பெரும் வரவேற்பு இருந்தது, இளம் வாசகர் பாரதி பலரின் தூக்கத்தை கெடுத்தார்.

கு சிவராமனின் அமர்வும் எதிர்பாரா தீவிரம். முடிக்க இரவு 10.30 ஆனது. ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம், மேலை நாடுகளில் எல்லாம் ஜப்பானிய, சீன பாரம்பரிய மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது அவ்வாறு இந்தியாவில் இருப்பதில்லை எனக் கூறினார். ஒரு மிட்டாயில் 45 உள்ளீடுகள் இருப்பதாகவும் அனைத்தும் ரசாயனம் எனவும் கூறினார். ‘ரெட் மீட்’ புற்று நோய்க்கு காரணமாவது பற்றியும் கூறினார். பேலியோ டயட் பற்றி கேட்டபோது ஒரு ஆய்வு முடிவு வந்து ருசுப்படுத்த 20, 30 ஆண்டுகள் பிடிக்கும், இதன் எதிர் விளைவுகள் பின்னரே தெரியும் என்றார். புற்றுநோய்க்கும் புகையிலைக்கும் ஆன தொடர்பை நிரூபிக்க 30,40 ஆண்டுகள் ஆனதாகவும், இங்கிலாந்தில் முதல் புற்றுநோய் காரணி அலசல் அமர்வில் அனைவரும் புகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மிகப் பிரபலம் எனக்கூறினார். மருந்து அரசியல் குறித்தும் விளக்கினார். மிகுந்த சமநிலையுடன் கூடிய உரையாடல் அவருடையது, கண் கொட்டாமல் அனைவரும் பங்கேற்றனர்

.

IMG_8441

கிருஷ்ணன், ராஜகோபாலன்

மறுநாள் நாயகன் சிவப்பிரசாத். கடந்தமுறை ஜோடி குரூஸ், இம்முறை இவர். நவீன ஜனநாயக சிந்தனைகள் நமக்கு ஆங்கிலம் வழி வந்தது, அது நம்மை விடுவித்தது. அதே ஆங்கிலம் இன்று கான்வென்டுகளாக நின்று நம்மை அடிமைப்படுத்துகிறது என்றார். ஒரு கலைஞன் பிரச்சாரத்தை மீறி எழவேண்டும், கலை பிரச்சாரத்தை மீறி எழும் என்றார். மறுநாள் மேடையில் பேசும் போது தமிழகத்தில் அரசியல் மேடைகளில் உரத்து பேசுதலும், அடுக்கு மொழியும் அதிகம் இது பிற மொழிகளில் இல்லை, ஆனால் இதன் எதிர்வினையாக தமிழ் நவீன கவிதைகளில் இந்த உரத்து பேசுதல், அடுக்கு மொழிகள் இல்லை, அது அடங்கிய குரலில் நுட்பமாக பேசுகிறது என்றார். இது ஆந்திரம், கர்நாடகம், ஹிந்தியில் தலைகீழாக நிகழ்கிறது என்றார். மிக கூரிய அவதானிப்பு இது. மேலும் அமர்வில் ஒரு எழுத்தாளனின் சுதந்திரத்தை விட பொறுப்பை தான் நான் வலியுறுத்திக்கிறேன் என்றது அவரைப் போல தடாலடி கவிஞரின் வாயில் இருந்து சற்றும் எதிர்பாராதது. இவர் அசல் சிந்தனையாளராக அக்கணம் தோன்றினார்.

உணவு இடைவேளைக்கு பிறகு பஷீர் பற்றி சு வேணுகோபால் மற்றும் ஜெயமோகனின் விவாதம். பஷீருக்கு நேர்ந்த வாழ்வனுபவம் அரிது, பெரிது. ஒப்பு நோக்க அது குறைவாகவே அவர் படைப்பில் வெளிப்பட்டு இருக்கிறது என்றார். இன்றைய வாசகனுக்கு சு.வேணுகோபாலின் உக்கிரமே உவப்பானது, பஷீரின் ஆன்மிகம் சற்று தொலைவாகவே இருக்கும். என்றாலும் ஜெயமோகனின் வாதம் அசரவைத்தது, தத்துவமற்ற ஆன்மிகம் அவருடையது முழுமையாக உணர்ந்தபின் சிரிக்கும் சூபி பஷீர் என்றார். இந்தியாவின் சிறந்த 10 எழுத்தாளர்களில் பஷீரும் ஒருவர் என்றார். வக்கீலுக்கு படித்து பெயிலாகி இருக்க வேண்டும். ஒரு வாசகியும் ஜென்மதினம் கதை பற்றி கூறினார். சு.வேணுகோபாலுக்கு பதில் சொல்ல நேரம் வாய்க்காமல் வண்ணதாசன் வந்தார்.

தன்னை கல்யாண்ஜியாக வண்ணதாசனாக அணுகுவதைவிட கல்யாணியாக அணுகுவது பிடிக்கும் என்றார். தயக்கத்துடன் ஆரம்பித்து பின்பு தோழமையுடன் அனைவருடனும் உரையாடினார், விஜயா வேலாயுதம் போர்த்திய பொன்னாடை நழுவியது, இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் நழுவி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது என சாகித்ய அகாடமி பற்றி சொல்லாமல் சொன்னார். அவருக்கெனவே வந்திருந்த வாசகர்கள் நெகிழ்ந்தனர், தழுதழுத்தனர். அவரது கவிதைகள் கதைகளை அங்கேயே வாசித்துக் காட்டினர். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக அங்கு தோன்றினார். இறுதிக்கட்டத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டார், அவரின் குவைக்கோல் நிலத்தடி நீரை அறிந்துகொண்டது. விஜயா வேலாயுதம் இறுதியில் எதிர்பாராமல் மைக்கை கைப்பற்றி கடந்தகால ஏக்கத்தை நிரவச் செய்தார், அது வயசாளிகளின் உலகம், இளைஞர்களிடையே அதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை, நித்தமும் நிகழ்காலத்தில் வாழும் வாசகர்களிடையே அதற்கு எந்தப் பொருளும் இல்லை. இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து 3 நபர்கள் அவையறியாது பேசிவிட்டனர். இதை அடுத்த கூடுகைகளில் தவிர்த்துவிடவேண்டும் என நண்பர்கள் சொன்னார்கள், இதை எனக்கும் நானே சொல்லிக் கொள்கிறேன்.

இறுதியாக சுப்ரபாரதி மணியன், பாவண்ணன், நாஞ்சில், இரா.முருகன் மற்றும் தேவதேவனின் கூட்டு அமர்வு. நாடகம் பற்றி பேச்சு வந்தது. நாடகத்திற்கு தமிழகத்தில் இன்று வரவேற்பில் என்றால் அது தனது வடிவத்தை மாற்றிக் கொள்ளலாம் என ஒரு வாசகர் கேட்டார். அவரது சிபாரிசு குறும்படம் போல நவீன திரைக்கு மாறலாம் என்பது. தேவதேவன், இதை கடுமையாக மறுத்தார். நாடகம் ஒரு தூய காலை வடிவம் அது ஒருவரின் உடலில் இருந்து நேரிடையாக வெளிப்படுவது, நாம் நேரில் ஒருவரைக் காணும் அனுபவம் மகத்தானது என்றார். தான் வண்ணதாசனை சந்திக்க முயன்றதை கூறினார், அவரது கவிதைகளை படித்திருந்தாலும் அவரை சந்த்தித்தால் தான் அது முழுமை பெரும் என தனக்கு தோன்றியதாக கூறினார். நேரடி உடல் வெளிப்பாடு ஒரு தரிசனம்.

எப்படி என்று தெரியவில்லை சுப்ரபாரதி மணியன் தலைப்பை முன்னுணர்ந்தது போல ஒரு அச்சிட்ட தாளை கொண்டு வந்து அதை 15 நிமிடம் படித்து அயர்ச்சியை ஊட்டினார். பிறகு தான் தெரிந்தது “நவீன இலக்கியம் பெரிதும் வீழ்ச்சியைத் தான்பேசுகிறதா?” என்கிற அன்றைய தலைப்பிற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பெரும்பாலான கேள்விகளுக்கு தமது படைப்பையே முன்வைத்தார், இங்கு வாசிப்பில் ஒரு அரசியல் உள்ளது என்றார். நேரமின்மை காரணமாக இந்த இறுதி அமர்வு வலிந்து முடித்துவைக்கப்பட்டது, திகட்டத் திகட்ட புகட்டப் பட்ட தேனமுது இது, வாசகர்கள் 130 பேர் மேலும் மேலும் என்றனர் காலம் போதும் என திரையிட்டது நாம் விழாவிற்கு சென்றோம்.

இரண்டு நாளும் இமை சோராது, தளராது கவனித்து, கணமும் தவறவிடாது அணைத்து அமர்வுகளில் பார்வையாளராக பங்கேற்ற 60 ஐ தாண்டிய நாஞ்சில் ஒரு ஞான உபாசகனின் முன்மாதிரி. அவர் முன் பணிகிறேன்.

கிருஷ்ணன்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:33

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18

[image error]

அன்புள்ள ஜெ,

விழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே நீண்ட வரிசை உருவாகிவிட்டிருந்தது உரைத்தது. சென்ற ஆண்டு தேவதச்சன் உரையாடலின் போது ‘மிட்டாய் கரைந்துவிடுவதன்’ பதட்டத்தை பற்றி சொன்னார். சுவைக்கவும் வேண்டும் கரையவும் கூடாது. காலத்துக்கு எதிராக மல்லுக்கு நிற்கத்தான் வேண்டும்.

இவ்வாண்டு நிகழ்ந்த விழா எல்லாவகையிலும் மிக சிறப்பாக அமைந்துவிட்டது. மதிய உணவுக்கு நம் நண்பர்கள் குஜராத்தி சமாஜில் உண்ண முடியாத அளவிற்கு கூட்டம். எதிரே இருந்த ஹோட்டலில் எல்லோரும் சேர்ந்து உணவுண்டு பேசி கொண்டிருந்தோம். விழாவும் உங்கள் அண்மையும், நண்பர்களுடனான உரையாடலும் புதிய உத்வேகத்தை எப்போதும் அளிக்கும். நிறைவையும், நம் வாசிக்க / எழுத இவ்வளவு இருக்கிறதே எனும் மலைப்பையும் ஒரு சேர அளிக்கும்.

சிவப்பிரகாஷும், இரா.முருகனும் இந்தாண்டு நான் கண்டடைந்தவர்கள். அவருடைய மாத்ருகா நாடகமும் தமிழில் வர வேண்டும். அவருடைய கவிதைகள் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என தோன்றியது. கல்பற்றா நாராயணனின் அரங்கும், ராஜீவனின் அரங்கும் இதேயளவு பரவசத்தை அளித்தது ஆனால் அவை வேறு மாதிரியான அனுபவங்கள். காஷ்மீரி சைவத்தின் தனித்துவத்தை பற்றி அவர் சொன்னவை முக்கியமானவை. உணர்ச்சி பெருக்கில் மார்க்சிய இயக்கத்தில் சேர இருந்தவரை ஈ.எம்.எஸ். தடுத்து நிறுத்தியதை அவர் குரலிலேயே நன்றியுடன்J நினைவு கூர்ந்தார்.

பரீட்சைக்கு படிப்பது போல் விழாவிற்கு வரும் எழுத்தாளர்களை வாசித்து கொண்டிருந்தோம். இது என்னடா கஷ்ட காலம் என சோர்வாகவும் இருந்தது. எதுவுமே பேசவேண்டியதில்லை என்றாலும் கூட, எழுத்தாளனிடம் கைகொடுக்கும் மனதிடத்தை அந்த வாசிப்பே அளிக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இரா.முருகன் என் நிலத்தை சார்ந்தவர், சுவைமிக்க செம்மண் ஊரணிகளை எழுதியவர். குலக்கதைகளை இரண்டு விதமாக எழுதலாம். புலி நகக்கொன்றை ஒரு வகை என்றால் அரசூர் வரிசை மற்றோர் வகை. பிராமண வாழ்வியலை தான் இரண்டுமே பேசுகின்றன. கருப்பு நகைச்சுவை, பாலியல் எள்ளல்கள், மாய யதார்த்தவாதம் மட்டுமல்ல அவருடைய படைப்புகள், வேறு எவரும் காட்டியிராத சில வாழ்வுகளையும் அவை தாங்கி வந்திருக்கின்றன. வேதம் கற்றும் வெறும் ‘காரியங்களை’ மட்டும் செய்யும் சுந்தர கனபாடிகளின் பாத்திரமும், நித்ய சுமங்கலி சுப்பமாளின் பாத்திரமும் பிராமண வாழ்வியல் பதிவுகளில் வேறு எவரும் தொடாதவை. நானும், காளியும், சுந்தரவடிவேலனும் மீண்டும் மீண்டும் அரசூர் நாவலின் சில பகுதிகளை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். பாரதியின் சின்ன சங்கரனின் தாக்கத்தில் அரசூரின் ஜமீன்தார் ராஜா உருவானதாக முருகன் கூறினார்.

சமகால நிகழ்வுகளை தமிழ் எழுத்தாளர்கள் எழுத தயங்குவதை பற்றிய ஒரு கேள்விக்கு “சைக்கிள் டயர ஏத்தியே தமிழ் எழுத்தாளன கொன்னுறலாம்..அவ்ளோ தான் சார் அவன்” என்றார் நாஞ்சில். உண்மை. சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 52 நூல்கள் எழுதியிருப்பதாக சொன்னார். திருப்பூரை மையமாக கொண்டு எத்தனையோ சமகால விஷயங்களை எழுதிருக்கிறேன் என்றார். மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் அவரை வாசித்ததில்லை. இத்தனை நூல்கள் எழுதியவர் தான் கவனிக்கப்படவில்லை எனும் அங்கலாய்ப்பை அங்கே கூறியபோது உண்மையிலேயே வெட்கமாக இருந்தது. அடுத்தாண்டு அவருக்கு ஒரு தனி அமர்வு வைக்க வேண்டும். வாசித்து விட்டு வருவோம்.

பவாவின் கதை கூறல், வண்ணதாசனின் உரை, உங்கள் உரை, மருத்துவர். சிவராமனுடனான உரையாடல் (அவரை எனது ஆசிரியருள் ஒருவராகவே எப்போதும் கருதி வருகிறேன்), ஆவணப்படம், வினாடி வினா, உணவு, தங்குமிடம் பற்றியெல்லாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள். வெகு சிறப்பாக இருந்தது என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை. மற்றுமோர் விழா, மற்றுமோர் ஆண்டு காத்திருக்கிறது.

அன்புடன்

சுனில்

[image error]

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

நாளொரு வண்ணமுமாக விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய வாசகர்களின் தொகுப்புகள் தங்கள் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் படிக்க படிக்கத் திகட்டாததாகவுள்ளது. இன்று உங்கள் கைவண்ணத்தில் மேலும் மெருகூட்டுகிறது! நீங்கள் குறிப்பிட்டது போல் அரசு நடத்தும் இலக்கிய விழாக்களில் ஒரு வழக்கமான சம்பிரதாயத்தன்மை நிறைந்து காணப்படும் இதைப்போன்று ஒரு ‘உயிர்ப்பு’ இருக்காது.

விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய விவரங்களை வண்ணப்படத்துடன் பிரதானமாக வெளியிட்ட “ஹிந்து தமிழ்’ நாளிதழும் போற்றுதலுக்குரியது. அடுத்து வரும் வருடங்களில் அகில இந்திய அளவிலும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய கருத்து.விழா சம்பந்தமான புகைப்படங்கள் பலவும் அருமையாக இருந்தது

இனிமேல்தான் காணொளிக் காட்சிகளை பார்க்க வேண்டும். இறுதியாக இந்தமாதிரி விழாக்களில் நேரில் கலந்துகொள்ள ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும் அது எனக்கு இல்லை! வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்,

அ .சேஷகிரி.

[image error]

காளிப்பிரசாத்

அன்புள்ள சார்,

விழா முடிந்த மறுநாள் நானும் சுந்தரவடிவேலனும் சிமோகா ரவி குடும்பத்தினருடன் மருதமலை சென்றோம். அப்படியே பேரூர். இரண்டுமேகாண்பது இதுவே முதல்முறை. மருதமலையை தெரியும். போனதில்லை. பேரூர் கேள்விப்படுவதே இப்போதுதான். இரண்டில் எது சிறப்பு என்றால், அழகில், எளிமையில் முருகன். அமைதியில், அகங்காரத்தில் சிவன்.

மூன்றாவது நாட்களாக அதே காரில் சுற்றுகிறோம். சனிக்கிழமை இரா. முருகனை அழைத்து வரவேண்டி விமானநிலையம் சென்றபோது சுனிலும் உடனிருந்தார். அனைவரும் அரசூர் வம்சம் படித்திருந்தோம். ஆனால், அவர் ஆளுமை பற்றி தெரியாது. இப்படி கொண்டாட்டமாக எழுதுபவர்களுக்கேயான ஒரு முசுடுத்தன்மை இருக்கலாம். மனிதவளத்துறை தலைவராக இருந்தாராம். ஐயையோ அகம்பாவியா இருப்பார். அஜீத்துக்கும் கமலுக்கும் பஞ்ச் டயலாக் வேற எழுதிருக்கார். நல்லா கோத்து விட்டார் கி்விஸ் செந்தில். இந்த தருணத்தில் பரீக்ஷா ஞாநி அவர்களை நினைக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்களின் ஆளுமைகளையும், எளிய வாசகர்களுக்கு டீ, மேரி பிஸ்கெட் கொடுத்து புரியவைத்தவர். இல்லாவிடில் நான் கன்யாகுமரியில் இருந்த உங்களையோ கனடாவில் இருந்த ஷோபாவையோ எப்போது பார்த்திருக்க முடியும்.

விமானமும் ஒருமணி நேரம் தாமதமாம். அரங்கில் பாரதிமணி அவர்கள் விவாதம்.. பட்டையை கிளப்புகிறார் பாட்டா என ரிலையன்ஸ் தகவல். நாம் மட்டும் ஏன் சும்மா நிற்கவேண்டும் என் யோசிக்கிறோம். வெறித்த பார்வையும் தூக்கிப்பிடித்த பெயரட்டைகளுமாய் நிற்கும் மனிதர்களுக்கிடையே ஒரு மணிநேரமாய் விலா நோக சிரித்துக் கொண்டிருக்கும் நால்வரை பொதுமக்கள் கனிவோடும், கடுப்போடும் கடந்து செல்கிறார்கள்.

நாங்கள் இரா.முருகன் அவர்களைப் பார்த்தது இல்லை. ஆகவே ஒரு மானசீகமான விளையாட்டில் இருக்கிறோம். தோராயமாக ஒருவரை பிடித்து நீங்கள் இரா.முருகனா எனக்கேட்டு ஷிமோகர் அழைத்து வர வேண்டும். அவரை போட்டோவை பார்த்து சுந்து உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான தரவுகளை நானும் சுனிலும் தருவோம். இது விமானம் வரும் வரைக்குமான விளையாட்டு.

முதலில் ஒருவர் வருகிறார் அவரை மானசீகமாக ரவி அழைத்து வருகிறார்.

”அண்ணா பொட்டிய வைங்கோ..ஆரு தூக்டிட்டு போகப்போறாங்கோ?” லேய் சுந்து.. ..இவரா பாரு…

இவரு இல்லண்ணா கும்பகோணம் அண்டா மாதிரி இருக்காரு..

”நீங்க இல்லீங்கலாம்ணா.. போங்கோ…”

அவர் முனகியபடி செல்கிறார்.. சும்மா போறவன கூட்டிவச்சி அண்டா கிண்டாங்கிறாங்க..

இப்படியாக ஒவ்வொருவராக வந்து புண்பட்டு / மகிழ்ந்து செல்கிறார்கள். இப்படி அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்த அந்த ஒருமணிநேர குதூகலத்தை பேலியோக்காரர்கள் கூட தன் வாழ்நாளில் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

ஒன்று முப்பதுக்கு இரா.முருகன் அவர்கள் வருகிறார். நாங்கள் எண்ணியதற்கு நேர்மாராக இருக்கிறார். அமைதியாக, சொல்லெண்ணிப் பேசுபவராக, முந்தையநாள் கச்சேரியில் கேட்ட ஆலாபனைக்கு இன்னும் உருகி போனில் சொல்லிக்கொண்டுருப்பவராக..

சுப்பம்மா பாட்டி, எழுத்ததிகாரம், ஐயணை என அவர் புனைவுலகம் பற்றி பேசுகிறோம். அன்னபூர்ணாவில் மதிய உணவு முடித்து அரங்கிற்கு வருகிறோம். உரை முடித்து வாசகர்கள் உரையாடலாம் என்ற போது, “நடையிலும், புனைவுலக சாத்தியங்களிலும் சுஜாதாவைத் தாண்டிச் செல்கிறீர்கள். ஆனால், சுஜாதாவைப் பின்பற்றி எழுதுபவராக அறியப்படுகிறீகள். இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்ற அற்புதமான கேள்வியை முதல்வரி இல்லாமல் கேட்கிறேன். கேட்டவுடனே அந்த அபத்தம் உரைக்கிறது. நீங்கள் அரங்கில் இருக்கிறீர்களா என பதட்டமாக பார்க்கிறேன். இல்லை.. ஜாஜா மட்டும் இரு மிஸ்ஸுகிட்டயே சொல்றேன் என்பது போன்ற பாவனையில் முறைக்கிறார். ஆனால், இரா.முருகன் இந்த கேள்வியை ஷார்ட்பிட்ச் பந்தை எதிர்கொள்வது போல அனயாசமாக தட்டுகிறார். “ அது எனக்கு ஒரு இசையாகவும், வசையாகவும் இருக்கிறது..”

அடுத்து கேள்வி கேட்பதில் என் தம்பியாக இருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் தன் கேள்வியை கேட்கிறார்..”அதெப்படி சார், சாமிநாதன் முன்னோர்கள் ஆவிகூடல்லாம் பழகறான்?” இதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமானது. அதை நான் இங்கு எழுதப்போவதில்லை.. கிட்டத்தட்ட நாவலின் மையமாக இருக்கும், அதை தாங்கிப் பிடிக்கும் சாமிநாதன் மரண நிகழ்வு உண்மையில் என்ன அது மாய யதார்த்த வாதத்தில் எப்படி மாறுகிறது என உரைக்கிறார்..அதன்பின் இப்படி முடிக்கிறார்.. “அவ்ளோதாங்க.. மத்தபடி ஆவி சம்போகம்லாம் வாய்ப்பு இல்லீங்க..” தம்பி மிக்க ஏமாற்றத்தோடு அமர்கிறார்..

பிறகு, சிறப்பு விருந்தினரிடம் கேள்வி கேட்பதில் என் அண்ணனாக ஏற்கனவே நிரூபித்து இருக்கும் கடலூர் சீனு ஒரு கேள்வி கேட்கிறார். ஆனால் அது நோபாலாக அதுவும் பவுண்டரிக்கு செல்கிறது. மகன் லெக் ஸ்பின்னர் என்றால் இவர் சச்சின் போல் இருக்கிறார். அடுத்த நாள் நாஞ்சில் அவர்கள், என் அருகில் இருப்பவன் நல்லவனா இல்லை அயோக்கியனா என தெரியும் என்ற போது, ஒரு திடுக்கிடு உடல்மொழியைக் காட்டி தொண்ணூற்று ஒன்பது வரை அடித்த சச்சின், விழா உரையில் சதமடிப்பார் என் எண்ணிக்காத்திருந்தேன்…

ஞாயிறு காலை கல்யாண்ஜி பேசுகையில் அரங்கிற்கு வந்தார் சிவபிரகாஷ் அவர்கள். தமிழ் கவிதை பற்றி அவருக்கு என்ன தெரியும்?. ஆனால், தேநீர் இடைவேளை போது “இந்தப்பக்கம் போகணூமா“ என என்னிடம் கேட்டபோதுதான் அவருக்கு தமிழ் ஒரளவு பேசவும் தெரியும் என உணர்ந்தேன். காரைக்கால் அம்மையார் முதல் கவிஞர் சுகுமாரன் வரை தமிழின் அத்துணை முக்கியமான ஆளூமைகளைப்பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தனிப்பேச்சிலும் அரங்கிலும் உணரமுடிந்தது. கிராதம் எழுதும்போது இயல்பாக அவர் ஞாபகம் வந்தது என நீங்கள் சொன்னீர்கள். அதன்பின் அவர் பேச்சுக்களை செய்கைகளை சார்வகன், பைராகி யாகவே கண்டுவந்தேன். :-) விழா அரங்கில் “ மன்னிக்கவும், நான் உங்கள் தாய்மொழியில் பேசப்போவதில்லை.. என் தாய்மொழியிலும்” எனத்துவங்கி ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அவன் ஆணையிடுவதில் குழந்தை போல என்ற கண்ணன் குறித்த வெண்முரசு வரி ஞாபகம் வருகிறது. இனி ஒரு இந்திய எழுத்தாளருக்கும் விருது வழங்கவேண்டும் என சொல்லி உடனே நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.

முந்தைய விழாவில் கவிஞர் தேவதச்சன் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டேன். கல்யாண்ஜி படைப்புகளை ஏற்கனவே படித்திருந்தாலும், அவரை இன்னும் நெருக்கமாக உங்களின் மற்றும் பவா அவர்களின் உரை மூலமாக அறிந்தேன். இரா.முருகன் மற்றும் ஹெச்.எஸ்.எஸ் ஆகியோரின் படைப்புகள் இந்த விழா மூலமாக நான் கண்டறிந்தவை. அதற்கு(ம்) உங்களுக்கு நன்றிகள்

அன்புடன்,

R.காளி ப்ரஸாத்

[image error]

சௌந்தர் ,அரங்கசாமி

இனிய ஜெயன்,

வணக்கம்.

விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். தங்களைச் சந்தித்ததும், இவ்விழாவில் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை. நிரம்பி வழியும் ஒரு குளத்தினைப் போன்று தளும்பிக் கொண்டிருந்த மனநிலையிலிருந்து இன்றுதான் வெளிவர முடிந்தது.

மிகவும் தேர்ந்த இசைக்கலஞரின் இசைநிகழ்வு போல் மிகக் கச்சிதமாய் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. இத்தனை படைப்பாளிகளை, இத்தனை வாசகர்களை ஓரிடத்தில் பார்த்தது புது அனுபவம்.

வண்ணதாசனைக் கேட்டபோதும், பார்த்தபோதும் மனசுக்குள் நாகலிங்கப்பூவின் வாசம் திரண்டெழுந்தது. அதேமாதிரி உங்களைக் கண்டதும், பேசியதும் கன்னியாக்குமரிக் கடல் பார்த்த அனுபவம் போன்றது. நாஞ்சில் நாடனின் ஒவ்வொரு சொல்லும் அம்பறாத் தூணியிலிருந்து புறப்பட்டு வந்து மனதைத் தைத்தது. சிவப்பிரகாஷ் தன் உரையில் சிந்தனையின் தடத்தை நீட்டிக் கொண்டே சென்றது கொஞ்சம் புதிதாக இருந்தது.

சூத்ரதாரி, லக்‌ஷ்மிமணிவண்ணன், சுகா பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விவேகானந்தருக்குக் கிடைக்காத நூறு இளைஞர்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் ஜெயன். வாழ்த்துக்கள்.

நன்றி.

தஞ்சையிலிருந்து,

சந்தானகிருஷ்ணன்.

[image error]

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

விழா பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். மிக பெரிய மன எழுச்சி அடைந்ததை போல் உணர்கிறேன். இலக்கியம் அதன் வாசகர்களை பெருக்கி கொண்டே இருக்கிறது, இந்த ஆண்டு பெரும் இளைஞர் கூட்டம் கலந்து கொண்டிருப்பதாக அனைத்து பதிவுகளிலும் தெரிகிறது. கலந்து கொள்ள இயலாமல் எங்கோ இருந்து கொண்டு மானசீகமாக அந்த 2 நாட்களையும் நினைத்து கொண்டு, நம் விழாவின் பதிவுகளையும் ,காணொளிகளையும் பார்த்து கொண்டு இருக்கும் மிக பெரிய வாசகர் உலகம் இந்த விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது.

வர முடியாமல் போன வருத்தங்கள் இருந்தாலும், விருது விழா நிகழ்ச்சியை சிறந்த காணொளி வடிவத்தில் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. விழாவில் கலந்து கொண்டதை போன்ற உணர்வு தந்தது. ஸ்ருதி டிவி க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களில் முந்தைய நாள் விவாத அரங்கையும் காணொளி மூலம் காண முடியும் எனில் என்னை போன்ற வாசகர்கள் முழுவதுமாக அந்த விழாவில் பங்குபெற்றதை போல் உணர்வார்கள். நம் விழா இனி வரும் காலங்களில் இன்னும் பிராம்மாண்டமாய், அதன் வீச்சை நாடு முழுவதும் செலுத்தும் என்பதை இப்போதே உணர முடிகிறது.

டிசம்பர் மாதம் இலக்கிய வாசகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமான நாட்களாக ஆகி இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

என்றும் வாசிப்புடன்

சரவணன்

image

வணக்கம் ஜெ

நல்லா இருக்கீங்களா? மின்மினிப் பூச்சிகள் ஒன்று சேர்ந்து பறந்து தீயாக மாறினால், கண் கலங்கத்தானே செய்யும்? இத்தனை இயல்பான ஒரு படைப்பாளி கரடியின் ஏக்கத்தின் தேனைப் பரவச நிலையில் சொல்லும் போது கண் கலங்கத்தானே செய்யும்? உங்களோடு இரயிலில் பயணிக்கும் நாடாச்சி நான் தானே என்று தளுதளுத்து அன்பின் கவிஞன் கேட்கின்றபோது கண் கலங்கத்தானே செய்யும்? முழுக்க முழுக்க அன்பு செய்தலையே இயல்பாகக் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அதனால்தான் இந்த உலகம் மழையோடு இருக்கிறது என்று இன்னொரு பாணன் ஆணித்தரமாக சொல்லும்போதும் கண் கலங்கத்தானே செய்யும்?

பக்கத்து இருக்கைப் பையன் பாதி வடையைப் பங்கிட்டுக் கொடுக்கும் காலத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்று என்னூர் எழுத்துக்காரன் சொல்லும்போது கண் கலங்கத்தானே செய்யும்? இன்னும் போய், தங்கள் உணவைப் பொருட்படுத்தாது, நிகழ்வுகளைத் தியாகம் செய்து உழைத்து சிவந்துபோய் சுற்றித்திரிந்த ரசிகர்களையும் புதியவர்களையும் பார்க்கும்போது கண் கலங்கத்தானே செய்யும்?

பாத்துமாவின் ஆட்டோடும் சிறைச்சாலை மதில்களோடும் அரசூர் வம்சத்துக்காரர்கள் ஏறி மிதித்து சப்தித்து வெண்முரசு முழக்கித் தணியவில்லை தாகம், தூக்கம் தாண்டி எத்தனை நாட்கள் நீடிக்கும் இந்த நினைவுகள்? எட்டுத்திக்கும் மத யானை ஏறி சமவெளி தாண்டி ஒரு சிறு இசை தேடிச் சென்று மணல் உள்ள ஆற்றில் இறங்கிக் குளித்து இறுதியாக நட்சத்திரங்கள் ஒளிந்திருந்த கருவறையில் சாந்தமடையட்டும் வாசகனின் தவிப்பு.

இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒவ்வொரு வாசகனையும் தன் வாழ்க்கையில் ஒரு சிறு படி மேலே ஏற்றி விட்டிருக்கிறது. அவன் தூக்கம் இனி தொலைந்து வாசித்து வாசித்து தினசரி பிறப்பானாக.

கல்யாண்ஜியின் கையைப் பிடித்துக் கொள்ளவா என்று கேட்டேன் ஜெ. உங்கள் எல்லோர் கையையும் பிடிக்கத்தானே நான் இன்னும் இருக்கிறேன் என்று அரவணைத்துக் கொண்டார்.

உங்களருகில் எப்போது வந்தாலும் தோள் மேல் கை போட்டுத்தான் பேசுகிறீர்கள் ஜெ. எதற்காக எங்களுக்கு இந்தவொரு வாய்ப்பு? பவாவும் கூட பேசுகின்ற போதெல்லாம் தழுவிக் கொண்டு கண் பார்த்து விசாரிக்கிறார். வந்திருந்த ஒவ்வொரு படைப்பாளியும் நெஞ்சில் பதிந்து சென்றிருக்கிறார்கள் ஜெ.

வலைப்பக்கத்தில் வந்திருக்கும் நிகழ்ச்சி குறித்த பதிவுகளைப் பாருங்கள். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு வித எழுத்து நடை. எப்படிச் சாத்தியம் இது? சம காலத்தில் எழுதிப் படைத்து எப்படி வாசிக்கவென்றும் சொல்லி, கூடவேயிருந்து சிந்தனைகளை மாற்றிச் செல்லும் படைப்பாளிகளால் தான் இது சாத்தியம். சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் ஜெ. விஷ்ணுபுரம் அமைப்பு நண்பர்களுக்கு பாராட்டுக்கள் ஜெ. இன்னும் இருக்கிறது உலகம், அதில் நாம் இருப்போம் வாசித்து, படைத்து, கண் கலங்கி….

சுஷில்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:32

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 18

[image error]

அன்புள்ள ஜெ,

விழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே நீண்ட வரிசை உருவாகிவிட்டிருந்தது உரைத்தது. சென்ற ஆண்டு தேவதச்சன் உரையாடலின் போது ‘மிட்டாய் கரைந்துவிடுவதன்’ பதட்டத்தை பற்றி சொன்னார். சுவைக்கவும் வேண்டும் கரையவும் கூடாது. காலத்துக்கு எதிராக மல்லுக்கு நிற்கத்தான் வேண்டும்.

இவ்வாண்டு நிகழ்ந்த விழா எல்லாவகையிலும் மிக சிறப்பாக அமைந்துவிட்டது. மதிய உணவுக்கு நம் நண்பர்கள் குஜராத்தி சமாஜில் உண்ண முடியாத அளவிற்கு கூட்டம். எதிரே இருந்த ஹோட்டலில் எல்லோரும் சேர்ந்து உணவுண்டு பேசி கொண்டிருந்தோம். விழாவும் உங்கள் அண்மையும், நண்பர்களுடனான உரையாடலும் புதிய உத்வேகத்தை எப்போதும் அளிக்கும். நிறைவையும், நம் வாசிக்க / எழுத இவ்வளவு இருக்கிறதே எனும் மலைப்பையும் ஒரு சேர அளிக்கும்.

சிவப்பிரகாஷும், இரா.முருகனும் இந்தாண்டு நான் கண்டடைந்தவர்கள். அவருடைய மாத்ருகா நாடகமும் தமிழில் வர வேண்டும். அவருடைய கவிதைகள் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என தோன்றியது. கல்பற்றா நாராயணனின் அரங்கும், ராஜீவனின் அரங்கும் இதேயளவு பரவசத்தை அளித்தது ஆனால் அவை வேறு மாதிரியான அனுபவங்கள். காஷ்மீரி சைவத்தின் தனித்துவத்தை பற்றி அவர் சொன்னவை முக்கியமானவை. உணர்ச்சி பெருக்கில் மார்க்சிய இயக்கத்தில் சேர இருந்தவரை ஈ.எம்.எஸ். தடுத்து நிறுத்தியதை அவர் குரலிலேயே நன்றியுடன்J நினைவு கூர்ந்தார்.

பரீட்சைக்கு படிப்பது போல் விழாவிற்கு வரும் எழுத்தாளர்களை வாசித்து கொண்டிருந்தோம். இது என்னடா கஷ்ட காலம் என சோர்வாகவும் இருந்தது. எதுவுமே பேசவேண்டியதில்லை என்றாலும் கூட, எழுத்தாளனிடம் கைகொடுக்கும் மனதிடத்தை அந்த வாசிப்பே அளிக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இரா.முருகன் என் நிலத்தை சார்ந்தவர், சுவைமிக்க செம்மண் ஊரணிகளை எழுதியவர். குலக்கதைகளை இரண்டு விதமாக எழுதலாம். புலி நகக்கொன்றை ஒரு வகை என்றால் அரசூர் வரிசை மற்றோர் வகை. பிராமண வாழ்வியலை தான் இரண்டுமே பேசுகின்றன. கருப்பு நகைச்சுவை, பாலியல் எள்ளல்கள், மாய யதார்த்தவாதம் மட்டுமல்ல அவருடைய படைப்புகள், வேறு எவரும் காட்டியிராத சில வாழ்வுகளையும் அவை தாங்கி வந்திருக்கின்றன. வேதம் கற்றும் வெறும் ‘காரியங்களை’ மட்டும் செய்யும் சுந்தர கனபாடிகளின் பாத்திரமும், நித்ய சுமங்கலி சுப்பமாளின் பாத்திரமும் பிராமண வாழ்வியல் பதிவுகளில் வேறு எவரும் தொடாதவை. நானும், காளியும், சுந்தரவடிவேலனும் மீண்டும் மீண்டும் அரசூர் நாவலின் சில பகுதிகளை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். பாரதியின் சின்ன சங்கரனின் தாக்கத்தில் அரசூரின் ஜமீன்தார் ராஜா உருவானதாக முருகன் கூறினார்.

சமகால நிகழ்வுகளை தமிழ் எழுத்தாளர்கள் எழுத தயங்குவதை பற்றிய ஒரு கேள்விக்கு “சைக்கிள் டயர ஏத்தியே தமிழ் எழுத்தாளன கொன்னுறலாம்..அவ்ளோ தான் சார் அவன்” என்றார் நாஞ்சில். உண்மை. சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 52 நூல்கள் எழுதியிருப்பதாக சொன்னார். திருப்பூரை மையமாக கொண்டு எத்தனையோ சமகால விஷயங்களை எழுதிருக்கிறேன் என்றார். மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் அவரை வாசித்ததில்லை. இத்தனை நூல்கள் எழுதியவர் தான் கவனிக்கப்படவில்லை எனும் அங்கலாய்ப்பை அங்கே கூறியபோது உண்மையிலேயே வெட்கமாக இருந்தது. அடுத்தாண்டு அவருக்கு ஒரு தனி அமர்வு வைக்க வேண்டும். வாசித்து விட்டு வருவோம்.

பவாவின் கதை கூறல், வண்ணதாசனின் உரை, உங்கள் உரை, மருத்துவர். சிவராமனுடனான உரையாடல் (அவரை எனது ஆசிரியருள் ஒருவராகவே எப்போதும் கருதி வருகிறேன்), ஆவணப்படம், வினாடி வினா, உணவு, தங்குமிடம் பற்றியெல்லாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள். வெகு சிறப்பாக இருந்தது என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை. மற்றுமோர் விழா, மற்றுமோர் ஆண்டு காத்திருக்கிறது.

அன்புடன்

சுனில்

[image error]

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

நாளொரு வண்ணமுமாக விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய வாசகர்களின் தொகுப்புகள் தங்கள் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் படிக்க படிக்கத் திகட்டாததாகவுள்ளது. இன்று உங்கள் கைவண்ணத்தில் மேலும் மெருகூட்டுகிறது! நீங்கள் குறிப்பிட்டது போல் அரசு நடத்தும் இலக்கிய விழாக்களில் ஒரு வழக்கமான சம்பிரதாயத்தன்மை நிறைந்து காணப்படும் இதைப்போன்று ஒரு ‘உயிர்ப்பு’ இருக்காது.

விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய விவரங்களை வண்ணப்படத்துடன் பிரதானமாக வெளியிட்ட “ஹிந்து தமிழ்’ நாளிதழும் போற்றுதலுக்குரியது. அடுத்து வரும் வருடங்களில் அகில இந்திய அளவிலும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய கருத்து.விழா சம்பந்தமான புகைப்படங்கள் பலவும் அருமையாக இருந்தது

இனிமேல்தான் காணொளிக் காட்சிகளை பார்க்க வேண்டும். இறுதியாக இந்தமாதிரி விழாக்களில் நேரில் கலந்துகொள்ள ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும் அது எனக்கு இல்லை! வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்,

அ .சேஷகிரி.

[image error]

காளிப்பிரசாத்

அன்புள்ள சார்,

விழா முடிந்த மறுநாள் நானும் சுந்தரவடிவேலனும் சிமோகா ரவி குடும்பத்தினருடன் மருதமலை சென்றோம். அப்படியே பேரூர். இரண்டுமேகாண்பது இதுவே முதல்முறை. மருதமலையை தெரியும். போனதில்லை. பேரூர் கேள்விப்படுவதே இப்போதுதான். இரண்டில் எது சிறப்பு என்றால், அழகில், எளிமையில் முருகன். அமைதியில், அகங்காரத்தில் சிவன்.

மூன்றாவது நாட்களாக அதே காரில் சுற்றுகிறோம். சனிக்கிழமை இரா. முருகனை அழைத்து வரவேண்டி விமானநிலையம் சென்றபோது சுனிலும் உடனிருந்தார். அனைவரும் அரசூர் வம்சம் படித்திருந்தோம். ஆனால், அவர் ஆளுமை பற்றி தெரியாது. இப்படி கொண்டாட்டமாக எழுதுபவர்களுக்கேயான ஒரு முசுடுத்தன்மை இருக்கலாம். மனிதவளத்துறை தலைவராக இருந்தாராம். ஐயையோ அகம்பாவியா இருப்பார். அஜீத்துக்கும் கமலுக்கும் பஞ்ச் டயலாக் வேற எழுதிருக்கார். நல்லா கோத்து விட்டார் கி்விஸ் செந்தில். இந்த தருணத்தில் பரீக்ஷா ஞாநி அவர்களை நினைக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்களின் ஆளுமைகளையும், எளிய வாசகர்களுக்கு டீ, மேரி பிஸ்கெட் கொடுத்து புரியவைத்தவர். இல்லாவிடில் நான் கன்யாகுமரியில் இருந்த உங்களையோ கனடாவில் இருந்த ஷோபாவையோ எப்போது பார்த்திருக்க முடியும்.

விமானமும் ஒருமணி நேரம் தாமதமாம். அரங்கில் பாரதிமணி அவர்கள் விவாதம்.. பட்டையை கிளப்புகிறார் பாட்டா என ரிலையன்ஸ் தகவல். நாம் மட்டும் ஏன் சும்மா நிற்கவேண்டும் என் யோசிக்கிறோம். வெறித்த பார்வையும் தூக்கிப்பிடித்த பெயரட்டைகளுமாய் நிற்கும் மனிதர்களுக்கிடையே ஒரு மணிநேரமாய் விலா நோக சிரித்துக் கொண்டிருக்கும் நால்வரை பொதுமக்கள் கனிவோடும், கடுப்போடும் கடந்து செல்கிறார்கள்.

நாங்கள் இரா.முருகன் அவர்களைப் பார்த்தது இல்லை. ஆகவே ஒரு மானசீகமான விளையாட்டில் இருக்கிறோம். தோராயமாக ஒருவரை பிடித்து நீங்கள் இரா.முருகனா எனக்கேட்டு ஷிமோகர் அழைத்து வர வேண்டும். அவரை போட்டோவை பார்த்து சுந்து உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான தரவுகளை நானும் சுனிலும் தருவோம். இது விமானம் வரும் வரைக்குமான விளையாட்டு.

முதலில் ஒருவர் வருகிறார் அவரை மானசீகமாக ரவி அழைத்து வருகிறார்.

”அண்ணா பொட்டிய வைங்கோ..ஆரு தூக்டிட்டு போகப்போறாங்கோ?” லேய் சுந்து.. ..இவரா பாரு…

இவரு இல்லண்ணா கும்பகோணம் அண்டா மாதிரி இருக்காரு..

”நீங்க இல்லீங்கலாம்ணா.. போங்கோ…”

அவர் முனகியபடி செல்கிறார்.. சும்மா போறவன கூட்டிவச்சி அண்டா கிண்டாங்கிறாங்க..

இப்படியாக ஒவ்வொருவராக வந்து புண்பட்டு / மகிழ்ந்து செல்கிறார்கள். இப்படி அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்த அந்த ஒருமணிநேர குதூகலத்தை பேலியோக்காரர்கள் கூட தன் வாழ்நாளில் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

ஒன்று முப்பதுக்கு இரா.முருகன் அவர்கள் வருகிறார். நாங்கள் எண்ணியதற்கு நேர்மாராக இருக்கிறார். அமைதியாக, சொல்லெண்ணிப் பேசுபவராக, முந்தையநாள் கச்சேரியில் கேட்ட ஆலாபனைக்கு இன்னும் உருகி போனில் சொல்லிக்கொண்டுருப்பவராக..

சுப்பம்மா பாட்டி, எழுத்ததிகாரம், ஐயணை என அவர் புனைவுலகம் பற்றி பேசுகிறோம். அன்னபூர்ணாவில் மதிய உணவு முடித்து அரங்கிற்கு வருகிறோம். உரை முடித்து வாசகர்கள் உரையாடலாம் என்ற போது, “நடையிலும், புனைவுலக சாத்தியங்களிலும் சுஜாதாவைத் தாண்டிச் செல்கிறீர்கள். ஆனால், சுஜாதாவைப் பின்பற்றி எழுதுபவராக அறியப்படுகிறீகள். இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்ற அற்புதமான கேள்வியை முதல்வரி இல்லாமல் கேட்கிறேன். கேட்டவுடனே அந்த அபத்தம் உரைக்கிறது. நீங்கள் அரங்கில் இருக்கிறீர்களா என பதட்டமாக பார்க்கிறேன். இல்லை.. ஜாஜா மட்டும் இரு மிஸ்ஸுகிட்டயே சொல்றேன் என்பது போன்ற பாவனையில் முறைக்கிறார். ஆனால், இரா.முருகன் இந்த கேள்வியை ஷார்ட்பிட்ச் பந்தை எதிர்கொள்வது போல அனயாசமாக தட்டுகிறார். “ அது எனக்கு ஒரு இசையாகவும், வசையாகவும் இருக்கிறது..”

அடுத்து கேள்வி கேட்பதில் என் தம்பியாக இருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் தன் கேள்வியை கேட்கிறார்..”அதெப்படி சார், சாமிநாதன் முன்னோர்கள் ஆவிகூடல்லாம் பழகறான்?” இதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமானது. அதை நான் இங்கு எழுதப்போவதில்லை.. கிட்டத்தட்ட நாவலின் மையமாக இருக்கும், அதை தாங்கிப் பிடிக்கும் சாமிநாதன் மரண நிகழ்வு உண்மையில் என்ன அது மாய யதார்த்த வாதத்தில் எப்படி மாறுகிறது என உரைக்கிறார்..அதன்பின் இப்படி முடிக்கிறார்.. “அவ்ளோதாங்க.. மத்தபடி ஆவி சம்போகம்லாம் வாய்ப்பு இல்லீங்க..” தம்பி மிக்க ஏமாற்றத்தோடு அமர்கிறார்..

பிறகு, சிறப்பு விருந்தினரிடம் கேள்வி கேட்பதில் என் அண்ணனாக ஏற்கனவே நிரூபித்து இருக்கும் கடலூர் சீனு ஒரு கேள்வி கேட்கிறார். ஆனால் அது நோபாலாக அதுவும் பவுண்டரிக்கு செல்கிறது. மகன் லெக் ஸ்பின்னர் என்றால் இவர் சச்சின் போல் இருக்கிறார். அடுத்த நாள் நாஞ்சில் அவர்கள், என் அருகில் இருப்பவன் நல்லவனா இல்லை அயோக்கியனா என தெரியும் என்ற போது, ஒரு திடுக்கிடு உடல்மொழியைக் காட்டி தொண்ணூற்று ஒன்பது வரை அடித்த சச்சின், விழா உரையில் சதமடிப்பார் என் எண்ணிக்காத்திருந்தேன்…

ஞாயிறு காலை கல்யாண்ஜி பேசுகையில் அரங்கிற்கு வந்தார் சிவபிரகாஷ் அவர்கள். தமிழ் கவிதை பற்றி அவருக்கு என்ன தெரியும்?. ஆனால், தேநீர் இடைவேளை போது “இந்தப்பக்கம் போகணூமா“ என என்னிடம் கேட்டபோதுதான் அவருக்கு தமிழ் ஒரளவு பேசவும் தெரியும் என உணர்ந்தேன். காரைக்கால் அம்மையார் முதல் கவிஞர் சுகுமாரன் வரை தமிழின் அத்துணை முக்கியமான ஆளூமைகளைப்பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தனிப்பேச்சிலும் அரங்கிலும் உணரமுடிந்தது. கிராதம் எழுதும்போது இயல்பாக அவர் ஞாபகம் வந்தது என நீங்கள் சொன்னீர்கள். அதன்பின் அவர் பேச்சுக்களை செய்கைகளை சார்வகன், பைராகி யாகவே கண்டுவந்தேன். :-) விழா அரங்கில் “ மன்னிக்கவும், நான் உங்கள் தாய்மொழியில் பேசப்போவதில்லை.. என் தாய்மொழியிலும்” எனத்துவங்கி ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அவன் ஆணையிடுவதில் குழந்தை போல என்ற கண்ணன் குறித்த வெண்முரசு வரி ஞாபகம் வருகிறது. இனி ஒரு இந்திய எழுத்தாளருக்கும் விருது வழங்கவேண்டும் என சொல்லி உடனே நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.

முந்தைய விழாவில் கவிஞர் தேவதச்சன் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டேன். கல்யாண்ஜி படைப்புகளை ஏற்கனவே படித்திருந்தாலும், அவரை இன்னும் நெருக்கமாக உங்களின் மற்றும் பவா அவர்களின் உரை மூலமாக அறிந்தேன். இரா.முருகன் மற்றும் ஹெச்.எஸ்.எஸ் ஆகியோரின் படைப்புகள் இந்த விழா மூலமாக நான் கண்டறிந்தவை. அதற்கு(ம்) உங்களுக்கு நன்றிகள்

அன்புடன்,

R.காளி ப்ரஸாத்

[image error]

சௌந்தர் ,அரங்கசாமி

இனிய ஜெயன்,

வணக்கம்.

விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். தங்களைச் சந்தித்ததும், இவ்விழாவில் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை. நிரம்பி வழியும் ஒரு குளத்தினைப் போன்று தளும்பிக் கொண்டிருந்த மனநிலையிலிருந்து இன்றுதான் வெளிவர முடிந்தது.

மிகவும் தேர்ந்த இசைக்கலஞரின் இசைநிகழ்வு போல் மிகக் கச்சிதமாய் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. இத்தனை படைப்பாளிகளை, இத்தனை வாசகர்களை ஓரிடத்தில் பார்த்தது புது அனுபவம்.

வண்ணதாசனைக் கேட்டபோதும், பார்த்தபோதும் மனசுக்குள் நாகலிங்கப்பூவின் வாசம் திரண்டெழுந்தது. அதேமாதிரி உங்களைக் கண்டதும், பேசியதும் கன்னியாக்குமரிக் கடல் பார்த்த அனுபவம் போன்றது. நாஞ்சில் நாடனின் ஒவ்வொரு சொல்லும் அம்பறாத் தூணியிலிருந்து புறப்பட்டு வந்து மனதைத் தைத்தது. சிவப்பிரகாஷ் தன் உரையில் சிந்தனையின் தடத்தை நீட்டிக் கொண்டே சென்றது கொஞ்சம் புதிதாக இருந்தது.

சூத்ரதாரி, லக்‌ஷ்மிமணிவண்ணன், சுகா பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விவேகானந்தருக்குக் கிடைக்காத நூறு இளைஞர்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் ஜெயன். வாழ்த்துக்கள்.

நன்றி.

தஞ்சையிலிருந்து,

சந்தானகிருஷ்ணன்.

[image error]

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

விழா பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். மிக பெரிய மன எழுச்சி அடைந்ததை போல் உணர்கிறேன். இலக்கியம் அதன் வாசகர்களை பெருக்கி கொண்டே இருக்கிறது, இந்த ஆண்டு பெரும் இளைஞர் கூட்டம் கலந்து கொண்டிருப்பதாக அனைத்து பதிவுகளிலும் தெரிகிறது. கலந்து கொள்ள இயலாமல் எங்கோ இருந்து கொண்டு மானசீகமாக அந்த 2 நாட்களையும் நினைத்து கொண்டு, நம் விழாவின் பதிவுகளையும் ,காணொளிகளையும் பார்த்து கொண்டு இருக்கும் மிக பெரிய வாசகர் உலகம் இந்த விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது.

வர முடியாமல் போன வருத்தங்கள் இருந்தாலும், விருது விழா நிகழ்ச்சியை சிறந்த காணொளி வடிவத்தில் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. விழாவில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:32

யோகி சந்திப்பு -கடிதங்கள்

1

அன்புள்ள ஜெ,

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது; யோகி (சந்திப்பு)பற்றி நீங்கள் நித்யாவுடன் விவாதித்ததை “வாழ்விலே ஒரு முறை- முடிவின்மையில் இருந்து ஒரு பறவை” யில் எழுதி இருந்தீர்கள்; அதில் ஒரு வரி வரும்;

நீங்கள் நித்யாவிடம் கேட்பதாக

“நான் அவரை எரிச்சல் ஊட்டியிருப்பேனோ ” என்று ,

அதற்கு நித்யாவின் பதில் ” அது உன்னால் முடியுமா”

இது என் நினைவில் என்றும் இருக்கிறது, இதில் இருந்து எனக்கு பல திறப்புகள் கிடைத்துள்ளன

நன்றி

ராமகிருஷ்ணன்

maxresdefault

அன்புள்ள ஜெ,

யோகியை நீங்கள் சந்தித்து உரையாடியதைப்பற்றி சமீபத்தில் பவா செல்லத்துரை எழுதியிருந்தார். அதற்கு முன்னர் நீங்கள் எழுதியிருந்தீர்கள். இப்போது மா தேவகியின் டைரியை வாசித்தேன். மூன்றும் வெவ்வேறு கோணங்களில் ஒரே நிகழ்ச்சி.

மா தேவகி உங்களுக்குள் என்ன நிகழ்ந்தது, எதனால் அந்நிலையில் இருந்தீர்கள் என உணரவில்லை. எழுத்தாளர்களின் தேடலும் கொந்தளிப்பும் பொதுவாக ஆன்மிகமான திசையில் செல்பவர்களுக்குப்புரிவதில்லை. அவர்களுக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் எல்லாமே சாமானியர்கள்தான்.

அமைதியும் அடங்குவதும் ஆன்மிகத்தின் வழி என்றால் கலை இன்னொரு ஆன்மிகப்பயணம் என்றும் அதன் வழி கொந்தளிப்பும் சுயமறுப்பும்தான் என அவர்கள் புரிந்திருப்பதில்லை. நானறிந்த பல துறவிகளுக்கு இலக்கியம் என்றால் கதைஎழுதிப்படித்தல் மட்டும்தான். கலை என்றால் கேளிக்கை மட்டும்தான்.

ஆகவே உங்களை ஒரு துடுக்கான பொறுமையில்லாத வருகையாளன் என்று மட்டும்தான் மா தேவகி பார்க்கிறார். உங்கள் தேடல் அதற்கு அடியில் இருந்தது என அவருக்குத்தெரியவில்லை

நீங்கள் உங்களுக்கு அந்தச்சந்திப்பு என்ன பாதிப்பை அளித்தது என இன்றுவரைக்கும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்

சண்முகம்

1

அன்புள்ள ஜெமோ

நீங்கள் யோகியைச் சந்தித்ததைப்பற்றிய மா தேவகியின் பதிவை வாசித்தேன். யோகி உங்களுக்கு அளித்த அந்த ஆழ்ந்த கவனமும் கனிவும் ஆச்சரியமளிக்கின்றன. நீங்கள் அவர் அருளுக்குப்பாத்திரமாகியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். அவர் உங்களைச் சாதாரணமாக அணுகவில்லை. உங்களுடன் ஆழமான உரையாடல் ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்

ஆர். லட்சுமணன்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2016 10:31

December 29, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17

[image error]

அன்புள்ள ஜெ வுக்கு ,

23 டிசம்பர் பொழுது கழியவேயில்லை. எப்போது 24 பகல் விடியும் ஆதர்ச எழுத்தாளர்களை எப்படி சந்திக்கப்போகிறோம் என்ற பரபரப்புடனேயே பொழுது விடிந்தது. காலையில் முதல் நிகழ்விலேயே நாஞ்சில் அய்யாவின் கம்பனின் தமிழாடல்களையும் பாரதியின் யுகத்தமிழையும் அவர்தம் சொல்லால் காது நிறைத்தேன். பாரதிமணி அய்யாவின் அனுபவங்கள் இயல்பான அவர்தம் உரையாடலால் அரங்கு களைகட்டியது. நான் மது உண்டவனில்லை. அவரின் ராயல் ஸ்காட்ச் டச்சில்! அது உண்ட மயக்கம் கொண்டேன்.

இனி விழா நாயகரின் கலந்துரையாடல் . அவரின் எழுத்தைப்போலவே உரையும் இவ்வளவு சுகமான வருடலாய் தென்றலாய் என்னை தீண்டும் என எதிர்பார்க்கவில்லை. விழாநாள் முடிந்தும் இன்றுவரை அந்த பேச்சிப்பாறையின் மின்மினிப்பூச்சி கண்ணில்! ஒளி விட்டுவிட்டுத் தெறித்துக் கொண்டேயிருக்கிறது. பவா அவர்களின் உரையை அன்றுதான் முதன்முதலாய் கேட்டேன். தேன்கிணற்றில் அவரே என்னை தள்ளிவிட்டுவிட்டார். கவிஞர் தேவதேவனின் எளிமை மனதை என்னவோ செய்தது சொல்லத் தெரியவில்லை. ஆக மொத்தம் எவ்விருது விழாவைத் தவற விட்டாலும் விடுவேன். விஷ்ணுபுரம் விருது விழாவைத் தவற விடேன். நன்றி இந்த ஒரு சொல் போதாது மீண்டும் நன்றி

கண்ணன்,

கோவை

[image error]

புகைப்படங்கள் எடுத்த கணேஷ் பெரியசாமி

ஜெ

செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம் சிறப்பு. எழுத்தாளர்களின் ஆவணப்படங்களைப் பொருத்தவரை அவற்றை நாம் ஒருமுறை பார்த்துவிட்டால் அதன் பின்னர் அவற்றை எப்போதும் நினைப்போம். அந்த எழுத்தாளர் அவருடைய எழுத்துக்கள் வழியாக நமக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிந்தவராக இருப்பார். அவர் உடல்மொழி நமக்குத்தெரிந்ததும் காலகாலமாகப்பழகியவராக ஆகிவிடுவார். வண்ணதாசனின் சிரிப்பும் கைகளின் அசைவும் மறக்கவே முடியாதது

செந்தில்

[image error]

அன்புள்ள ஜெமோ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழா தான் நிகழ்ச்சிகள் அமைப்பு எல்லாவற்றிலும் டாப். ஒருகணம் கூடத் தொய்வில்லை. நீங்கள் எதிலும் பெரிதாகக் கலந்து கொள்ளவில்லை என்பது மட்டும்தான் குறை. மற்றபடி அதிகமாகப் பெண்கள் இல்லை என்பதையும் குறையாகச் சொல்லலாம். கூட்டங்கள் எல்லாமே சுருக்கமாக அடர்த்தியாக இருந்தன. தேவையில்லாத மாலைமரியாதைகள் வளவளப்புப் பேச்சுக்கள் இல்லை என்பதை பெரிய சிறப்பாகச் சொல்லவேண்டும். எழுத்தாளர்களை அவர்களின் உணர்ச்சிகளையும் நேரடியாகப்பார்ப்பது அவர்களின் எழுத்தை மிகநெருக்கமாக அறிவதற்கான வாய்ப்பு. சென்னையிலும் இதேபோல நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும். சென்னையில் வெறும் கூட்டங்கள்தான் நடக்கின்றன

நாராயண்

[image error]

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் விழாவில் பங்குபெற்ற நண்பர்களின் பதிவுகளையும், விழா புகைப்படங்களையும் பின்தொடர்வதன் மூலம் மானசீகமாக நம் இலக்கிய விழாவில் பங்கெடுத்திருக்கும் திருப்தி கொண்டு மனஅமைதி கொள்கிறேன்.

எந்த பலனையும் துளியும் எதிர்பார்க்காமல் நாம் செய்ய விழைகின்ற செயல் மிகப்பெரும் வெற்றியை கட்டாயம் அடையும் என்பது தான் இவ்வுலக தர்மம். விவேகானந்தரின் வலிமையான எண்ணத்தில் உதித்த ராமகிருஷ்ணா மிஷனின் ஆன்மீக தொண்டு போல, ஜெயமோகனின் வலிமையான எண்ணத்தில் உதித்த “விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்” -ன் இலக்கிய தொண்டும் வருங்காலத்தில் பெரும்புகழ் பெற்று, தாங்கள் எண்ணியதை விடவும் இலக்கியத்திற்கு அதிகமாக தொண்டாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

விழாவில் வண்ணதாசன் வாசகர் எஸ். செல்வராஜ் அவர்களின் கடிதம் வாசிக்கப்பட்டதாகவும், வண்ணதாசன் செல்வராஜை காண விரும்புவதாக மேடையில் நெகிழ்ந்திருப்பதை கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

[image error]

நான் தமிழ் இலக்கிய உலகிற்கு ஜெயமோகன் மூலம் தான் அறிமுகம் ஆகி இருக்கிறேன். இவ்வாண்டிற்கான விஸ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு அளிக்க விருப்பதாக ஜெயமோகன் தளத்தில் வெளிவந்த பின்புதான், வண்ணதாசன் பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் வாசகர் கடிதங்களை படித்த பின்பு தான் எப்பேர்ப்பட்ட இலக்கிய ஆளுமை வண்ணதாசன் என்பதை உணர்ந்து கொண்டேன். அவ்வழியிலே எஸ்.செல்வராஜ் -ன் வாசகர் கடிதம் மிகவும் கூரியது. அதை படித்து சிறு கண்ணீர் துளி இல்லாமல் யாரும் கடந்து போயிருக்க முடியாது என்று படுகிறது. செல்வராஜின் கடிதத்தை படித்தவுடன் வண்ணதாசன் மேல் ஓர் சொல்லெண்ணா ஈர்ப்பு ஏற்பட்டது உண்மை, அதன் எழுச்சி யில் வண்ணதாசனின் பல புத்தகங்களை வாங்கி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எஸ்,செல்வராஜ் அவர் கடிதத்தில் குறிப்பிட்டது போல “நாங்களெல்லாம் வறண்ட நிலத்தில் இருந்து வந்தவர்கள்….” என்ற கருத்தையே மையமாக வைத்து “சுவையாகி வருவது” என்ற தலைப்பில் வண்ணதாசன் பற்றி எழுதிருந்தீர்கள். அதை படித்தவுடன் செல்வராஜின் கடிதம் உங்களையும் பாதித்திருக்கிறது என்று உணர்ந்தேன். அக்கட்டுரை செல்வராஜின் உணர்வுகளுக்கு நீங்கள் அளித்த மரியாதையாகவே எனக்கு பட்டது.

[image error]

இரண்டாவது, விழாவில் அவர் கடிதம் அவர் (தந்தை) வண்ணதாசன் முன்பாகவே படிக்கப்பட்டது.  இதன் மூலம் விஷ்ணுபுரம் வாசகர் வட்டமும், தாங்களும் வாசகர் செல்வராஜின் உணர்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள் என்று எண்ணி பேருவகை கொண்டேன். வண்ணதாசன் இதை எப்படி அழுகாமல் எதிர்கொண்டிருப்பார் என்று எண்ணும்போதே  அழுகை வருகிறது.

தங்களுடைய இணைய பக்கத்தில் “இலக்கியம் வாழ்க்கைக்கு பயன் படுமா?” என்ற தலைப்பில் நடந்த விவாதத்தை எண்ணி கொள்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் செல்வராஜ் மாதிரியான வாசகர்கள் கட்டாயம் இருப்பார்கள் என்று என் அகம் சொல்கிறது, அவர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு இந்த விவாதத்தை தாங்கள் மறுபடியும் தொடங்க வேண்டும். இலக்கியத்தின் பயன் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் வேரூன்றி நிற்கிறது என்பதை உணர்கிறேன்.

தன் கடிதத்தில் தனக்கு  வாழ கற்றுக்கொடுத்த தன் தந்தை வண்ணதாசனிடம் அறிமுகம் செய்து கொள்ளாமல், எஞ்சிய காலங்களிலும் அவர் நினைவுடனே வாழ்ந்து சாக விரும்புவதாக செல்வராஜ் எழுதி இருந்தார். தந்தையும் தன் மகனை பார்க்க விரும்புவதாக மேடையில் நெகிழ்திருக்கிறார். ஜெயமோகனின் வாசகர்களாகிய நாங்களும் அத்தந்தையும் மகனும் சந்திக்க போகும் அத்தருணத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். நன்மையே விழைக…

இப்படிக்கு தங்கள் நலம் விரும்பும்

பாண்டியன் சதீஸ்குமார்

===================================

முந்தைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 10 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 11 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு- 12

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

புகைப்படங்கள்

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

=============================================================

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

============================================================

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன்- சிவசக்தி நடனம், கடலூர் சீனு

==============================================================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 4

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 5

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 9

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2016 10:33

விஷ்ணுபுரம் விருதுவிழா உரை காணொளிகள்

பவா செல்லத்துரையின் உரை இணைப்பு

நாஸர் உரை

கு சிவராமன்

வண்ணதாசன் உரை

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் ஆவணப்படம் – சுருக்கப்பட்ட வடிவம்

வண்ணதாசன் ஆவணப்படம் – முழு வடிவம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2016 10:32

விஷ்ணுபுரம் விருது விழா – சுகா

7

// இன்றைய என்னை நான் வடிவமைத்துக் கொள்ள தானறியாமல் தன் எழுத்து மூலம் உதவிய மகத்தான படைப்பாளியுடன் மூன்று தினங்கள் இருந்த மனநிறைவுடன் கிளம்பினேன். அண்ணாச்சியை வணங்கி விடைபெற்றேன். விமான நிலையத்துக்கு தனது காரில் அனுப்பி வைத்தார் சகோதரர் முத்தையா. விமான நிலைய வாசலில் ஜான் சுந்தரிடம் விடைபெறும் போது இருவருமே ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. விமானம் கிளம்பும் போது வழக்கமாகச் சொல்லும் சண்முக கவசத்தைச் சொல்லவில்லை. மனம் அலைந்து கொண்டிருந்தது. கோல்டன் ரெட்ரைவர், பக் மற்றும் பீகிள் குட்டிகள், ‘முழுமதி அவளது முகமாகும்’ பாடிய ரோஜா பாப்பா, தகப்பனார் மரணப்படுக்கையில் இருக்கும் போது எங்களுடனே இருந்து உபசரித்த மரபின் மைந்தன், உங்களுக்குத்தாண்ணா நன்றி சொல்லணும் என்று ஃபோனில் ஒலித்த அரங்கசாமியின் குரல், ஏன்ணே அழுதீங்க? காபி சாப்பிடுங்க’ என்ற ஹெமிலா சாம்ஸன் என மனதுக்குள் குரல்களும், முகங்களுமாகச் சுழன்றன. கண்ணீர் பெருகியது.//

http://venuvanam.com/?p=348

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2016 01:58

December 28, 2016

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்

[image error]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

விஷ்ணுபுரம் விருது விழா இம்முறை இலக்கியத்தின் பெரும் கொண்டாட்டமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தமிழகத்தின்  அநேக முக்கிய எழுத்தாளர்களும் பிற மொழி எழுத்தாளர் என ஒட்டுமொத்த இலக்கிய ஆளுமைகளுடன் உரையாடலை நிகழ்த்துவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

இம்முறையும் முதல் நாளை தவற விட்டதை எண்ணி வருத்தமடைந்தேன். ஞாயிறு அன்று எழுத்தாளர் சு.வேணுகோபாலோடு தொடங்கிய அமர்வில் பஷீர், தி.ஜா, கி.ரா என்று ஒவ்வொன்றாகத் தொட்டுச் சென்றது நிறைவாக இருந்தது. வண்ணதாசன் வாசகர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் ஒருவித ரசனையான புன்னகையில் அதைத் தொட்டு ஆரம்பித்தார்.. அதன்பிறகான அமர்வில் சிங்கம் போல H.S சிவப்ராகஷ் வந்தமர்ந்தார். அவரைப் பற்றி நீங்கள் வராண்டாவில் நினைவுகூர்வதற்கு முன்னே அவரின் கடந்த கால ஆளுமை பிம்பத்தை என்னால் உணர முடிந்தது.

[image error]

நீங்கள் சொன்னதுபோல கருத்துத்தளத்தில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேர உரையாடல் நிகழ்ந்தது எங்களுக்கு புதிதுதான்.  படைப்புகளைப் பற்றியோ, இலக்கியத்தைப் பற்றியோ இல்லாமல் தனது கருத்துக்களால் மட்டுமே எங்களுடன் உரையாடினார். மார்க்ஸியத்தை அவரின் பார்வையில் தெரிந்துகொண்டதும் அத்வைதத்தையும் வைனவத்தையும் இப்படியும் புரிந்துகொள்ள முடியும் என்று அறியச் செய்தது எனக்கு புது அனுபவம். எளிமையான ஆங்கிலம், நிதானமான பதில், இதுபோன்ற பிற மொழி ஆளுமைகளுடன் பேசுவது புதிய தரிசனத்தை ஏற்படுத்துகிறது.

மதியம் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், பாவண்ணன், இரா.முருகன், தேவதேவன் என ஒவ்வொருவருடனும் தங்கள் அனுவங்கள் வழியே படைப்புகளைப் பார்க்கின்ற பார்வையைக் காடடினார்கள். நிபந்தனையற்ற அன்பு பற்றிய அனுபவத்துடன் தொடங்கிய பாவண்ணனை தமிழகத்தின் நாடகத்தின் போக்கைப் பற்றிய விவாதத்திற்கு திருப்பி விட்டதும் அரங்கம் சூடுபிடித்துவிட்டது.  எழுத்தாளர் பாவண்ணனுடனான உரையாடலில் நண்பர் அசோக்குமார் எழுப்பிய கேள்வியொன்று “கர்நாடகா மாநிலத்தில் நாடகக் கலைகளுக்கு இருக்கின்ற தீவிர ரசிகர்களோ பார்வையாளர்களோ இங்கு இல்லையே?” அதற்கு பாவண்ணன் இப்படி சொன்னார்: “இங்கு இப்போதே ஒரு நாடகம் போடப்படுகிறதென்றால் பார்ப்பதற்கு எத்தனை பேர் இருப்பார்கள்? ஐம்பது பேர் கூட தேறாது. காரணம் நம்மிடம் ரசனை சார்ந்த சிந்தனை குறைவு” இப்படித்தான் இந்த உரையாடல் தொடங்கி பின் விவாதமாகப் போய்க்கொண்டிருந்தது.

[image error]

உண்மையில் நம்மிடம் அப்படியொரு ரசனை உணர்வு என்பது இல்லையா? நம்முடைய தொன்மங்களின் மீதும் மரபின் மீதும் நமக்கேற்பட்ட அவநம்பிக்கை காரணமா? பெரியாரிஸத்தின் தாக்கமா? பாரதியும் புதுமைப்பித்தனும் தொடங்கிய வைத்த நவீன அலை நம்மை முன்னோக்கி தள்ளிவிட்டதா? வெஸ்டர்ன் கல்ச்சரை நோக்கி ஓடுகிறோமா? என்று பல எண்ணங்களை அக்கேள்வி தூண்டிவிட்டது….

இன்னும் அதிகம் பேசலாமென்றிருந்தபோது ஈரோடு கிருஷ்ணன் வந்து ‘கேட்’ போட்டு கிளப்பிவிட்டார். ஆனால் நானும் அசோக்குமாரும் விழா அரங்கம் வரை பாவண்ணனுடனும் நிர்மால்யாவுடனும் எம். கோபாலகிருஷ்ணனுடனும் அவ்விதாதத்தைத் தொடர்ந்தபடியே தான் வந்தோம்.

[image error]

ஜெ, உண்மையில் முதல் முறையாக என்னுடைய அனுபவத்தில் ஒரு எழுத்தாளனுக்கு அரங்கம் நிறைந்த வாசகர்களை இங்குதான் பார்த்தேன். எத்தனையோ பேர் இடம் கிடைக்காமல் கீழே அமர்;ந்திருந்தார்கள். பெண்கள் உட்பட நிறைய பேர் இரண்டு மணி நேரம் நின்றுகொண்டே பார்த்தார்கள். வண்ணதாசனின் ஏற்புரை வாசகர்களின் கண்களை நழுங்கத்தான் செய்தது. ஒருவித உணர்வெழுச்சி தூண்டப்பட்டு மனம் கொந்தளித்தது. உள்ளம் அடங்க சில கணங்கள்  தேவைப்பட்டன. என் அருகிலிருந்த நண்பர் அழுதே விட்டார்.

அடுத்த வருடம் இந்திய அளவில் இவ்விருது விழா இருக்கப் போகின்றதை எண்ணி பெருமை கொள்கிறேன்.  வெவ்வேறு மாநிலத்தில் இவ்விழாவைப் பற்றி பேசுவதும் இதைப் போன்று நடத்த முயற்சிப்பதற்கும் இது தொடக்கமாக அமையும். இலக்கியத்தின உச்சம் இதுதானே.

[image error]

தூயன் வண்ணதாசனுடன்

விழா முடிந்ததும் வண்ணதாசனை நெருங்கவே சில நேரம் பிடித்தது. என்னைக் கண்டதும் நினைவுகூர்ந்தார். கைகளைப் பிடித்துக்கொண்டு ‘நிறைய எழுதனும்’ என்றவர் என் தொகுப்பைப் பற்றி கேட்டறிந்தார். விருது, விழா என இத்தனை வேலையிலும் அவரின் ஞாபகம் எனக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

ஜெ, இவ்விழாவில் எனக்கு மறக்கமுடியாத தருணம் என்றால் எழுத்தாளர் பாவண்ணனை சந்தித்தது.  கிட்டத்தட்ட ஒரு வருடமாக நட்பில் இருக்கிறேன். எத்தனையோ கேள்விகளையும் எண்ணங்களையும் அவரிடம் பரிமாறியிருக்கிறேன். எனக்கு ஒருவித மனசாட்சியாகவே மாறிவிட்டிருக்கிறார்.  கடிதங்களுடன் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த எங்களின் பேச்சு, இங்குதான் சந்திப்பைக் கொடுத்திருக்கிறது.     இந்நினைவுகளை ஏந்திக்கொண்டிருக்கிறேன்.

என்றும் அன்புடன்

  தூயன்

===================================

முந்தைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

புகைப்படங்கள்

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

=============================================================

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

============================================================

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

==============================================================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:37

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15

[image error]

இனிய ஜெயம்,

இந்த வருட விழாவை அதன் முழுமை நிலையில் நிறுத்தியவை  நான்கு.அலகுகள்.

முதல் அலகின் முதல்வர் பவா.   பாரத நிலம் எங்கும், தங்கள் வாழ்நாளை  வருவிருந்தோம்பி செல்விருந்துக்கு ஏங்கி நிற்கும் நிலைக்காக கரைத்துக் கொண்ட ஆளுமைகள் பலர். வள்ளலார் முதல் சோற்றுக் கணக்கு கெந்தேல் சாகிப் வரை.  அப் பண்பாட்டின் ஒரு துளியாக மேடையில் வீற்றிருந்த பவா.

அடுத்தவர் மருத்துவர் சிவராமன்.

வழிதவறச் செய்யாது சற்றே விலகி இரு வெளிச்சமே;

என்னை என் வீட்டில் சேர்க்க என் கால்களுக்குத் தெரியும்;

என்னை என் குழிக்குள் தள்ள ,என் விழிகளுக்குத் தெரியும்.

எனும்குஞ்சுண்ணியின் கவிதை ஒன்றுண்டு.இன்றைய பேலியோக்கர்கள்  பலர் இந்த நிலையில்தான் உள்ளனர்.   இரவு உரையாடலில் மருத்துவர் பேசிய அனைத்தும் முக்கியமானவை.

 பேலியோ அறிவியல் பூர்வமான முறை எனில்,  அது அந்தத் தளத்தில் எழுந்த முக்கியமான அறிவியல் கேள்விகள் பலவற்றுக்கு மௌனம் சாதிக்கிறது.   காரணம் மிக எளிது. மொபைலில் இயங்கும் சாதாரண அப்ளிகேஷன் கூட  அதற்கான கேச்சீஸ்  உடன் இணைத்தே பொருள்கொள்ளப் படுகிறது. நூறு டிகிரியில் நீர் ஆவியாகும் என்பதை போன்றதல்ல இது, இன்னும் செஞ்சு பாப்பம் எல்லையில்தான் இது நிற்கிறது. பேலியோ செயல்பாட்டால் எஞ்சப்போகும் எதிர் நிலை அம்சம் என்ன என்று இதுவரை தெரியாது. அப்படி எஞ்சும் ஒரு எதிர்மறை அம்சம் பேலியோவால்தான் விளைந்தது  என அறிவியல் கண்டுணர, ஒரு பத்து வருடமும், அதை அதுவே ஒப்புக்கொள்ள மேலும் பத்து வருடமும் பிடிக்கும்.  அந்த எதிர் மறை அம்சத்துக்கான மருந்துகளின் விலை,அதன் வணிகம் இவை ஒரு பக்கம்.  இவை போக யதார்த்தத்தில் பேலியோக்கர்கள் அந்த முறையின் முதல் தலைமுறை பரிசோதனை ஆப்ஜட்டுக்கள் என்பதே மெய் .  எல்லாம் சரியாக நடந்தால் நன்று. யாரேனும் ஆஸ்காரோ நோபெலோ வெல்லுவர் . பிழைத்தது எனில் யாரும் பொறுப்பெடுக்க இறுக்கப் போவதில்லை.

ஆக அறிவியல் பூர்வமானது என்பதை முற்றிலும் விலக்கிவிட்டு, ஒவ்வொரு பேலியோக்கரும் இதை தங்களது சொந்த ரிஸ்க்கின் பேரில் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் பொறுப்பு முற்றிலும் நம்மை சேர்ந்ததே.

[image error]

இயற்க்கை உணவு எனும் ஆவலில், ஜிம்னாஸ்டிக் தாடிவாலாக்கள் ”சேவையில்” கிடைக்கும் மலிவு விலை பண்டங்களை  வாங்கித் துவைக்கும் ஆத்மாக்கள் நோக்கிய  மட்டுறுத்தல் அடுத்தது. உண்மையில் இந்தியாவில் இயற்க்கையாக நிகழும் தேன்  உற்பத்தி எவ்வளவு, அதை கொண்டு வரும் உழைப்பின் செலவீனம் என்ன, அதன் ஏற்றுமதி போக, உள்நாட்டின் புழக்கம் என்ன, பிற தேன் நிறுவனங்களின் சந்தை நிலவரம் என்ன ? அனைத்துக்கும் மேல் இவற்றின் தரம் என்ன? இத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தே  அவற்றை நுகர வேண்டும். விற்பவர் தாடி அழகாக இருக்கிறது என்பது போதுமான காரணம் அல்ல.

உண்மையில் மிக எளிய பனை தொழில், தொழிலாளிகள் இன்றி தமிழகம் எங்கும் அப் பொருட்களின் விலை நிர்ணயம் தாறுமாறாகவே காணக்கிடைக்கிறது.

இவை எல்லாம் சிவராமன் பேசுகையில் அவருடன் மானசீகமாக நான் உரையாடி , மானசீகமாக யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தவை.

உணவுக்கு அடுத்த நிலை உடல் ஆரோக்கியம் அந்தப் புள்ளியில் நின்றார் சிவராமன். [ அமுல் பேபி போன்ற அவரது கன்னத்தை செல்லமாக கிள்ளத் தோன்றியது]

அடுத்தவர் ஷிவப் பிரகாஷ்.

சிவம் என்ற செயலாற்றலின் நெருப்பு. பெயர் கூட அவருக்கு அத்தனை பொருத்தம்.  சொல்முதல் , தத்துவம், மடங்கள், மதங்கள்  என, உயிர் கொண்டு இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மீக நெருப்பின் மீது கவியும், மூடக் கரும்புகை அனைத்தையும் , தனது கருத்துக்கள் கொண்டு ஊதி அகற்றினார்.

போதம் என்றால் விழிப்புணர்வு. அங்கு செல்ல நீ பயன்படுத்தி விட்டு தூக்கி எரிய வேண்டிய கருவியே தத்துவங்கள்.   மாறாக புத்தர் என்ன சொல்றாருன்னா என்றபடி அந்த தத்துவங்களை  உன் மீது சுமையாக எறிந்து  உன் உள்ளே இலங்கும் சுயம்பிரகாசத்தை நீ அடைய  மட்டுறுத்துனர்களாக இலங்கும் இந்த மடங்களுக்கும் மதங்களுக்கும் பயன்மதிப்பு ஏதும் இல்லை.

பாரதப் பண்பாட்டின் சிகரத்தில் இருப்பது வேதங்கள். அதன் பின் மெய்மைத் தேட்டம் கொண்டு பல ஞானிகள் பாரதம் வந்த வரலாறு இருக்கிறது.  வேதத்தில் இருந்தோ, ஞானப் பரிமாற்றம் நடந்த இந்த உயிர் சூழலில் இருந்தோ எழுந்து வந்த சொல் அல்ல இந்து எனும் சொல்.

எந்த பாஸ்டர்டோ  இங்கே வந்தான், இந்த ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்க கூட்டம் எல்லாம் இந்து அப்டின்னு பேர் போட்டான்.  ஆமாமா நாங்க எல்லாம் பாஸ்டட்டுங்கத்தான் என ஒப்புக் கொண்டு, அதிலிருந்து என்னென்ன குப்பைகளையோ உருவாக்கினோம்.

அவர் பேசப் பேச என்னுள் ஏதேதோ உடைந்து விழுந்தது, முற்றிலும் புதிதாக எதோ ஒன்றின் விதை விழுந்தது. என் மனம் இயல்பாக ரமணரை நினைத்துக் கொண்டது.  மடங்களும், மதங்களும், அரசியலும் கல்லறைகள். உள்ளே பிணம் பத்திரமாக இருக்கும். பல்லாண்டு கெடாத பிணங்கள் பல இங்குண்டு.   ஆனால் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ராமணத்துவம் இவற்றுக்கு வெளியே த்ராணியுள்ளோர் மட்டுமே வந்தடையும் சிகரமுனை ஒன்றினில் எரிந்துகொண்டு இருக்கிறது. அந்த மலைமேல் நெருப்பே என்றும் பாரத்தின் ஆன்மா.

இனிய ஜெயம்,  என் ஆசிரியர்களில் ஜெயகாந்தனை சந்த்தித்து உரையாடியதில்லை, உங்களை உரையாடி உரையாடி மிக மிகப் பிந்தியே சந்தித்தேன்.  ஷிவப் பிரகாஷ் அவர்களை அவரது மேடையில் அப்போதே அறிந்தேன். திராவிடம் கண்ட மகத்தான ஆசிரியர்களில் ஒருவர் அவர்.

மானசீகமாக அவரது கால்களில் விழுந்தேன் . [கேட் லாஸ்ட் யூ பாஸ்டர் என எட்டி உதைத்தார்].

சலவை உடை சார்வாகன்.

சிகரத்தில் நடிப்பு,கவிதை, எழுத்து  என கலைகளின் உச்ச ஆளுமைகள்.

அனைத்து எல்லைகளிலும் இணையற்ற மேடை.

[image error]

இந்த விழாவின் சுவாரஸ்யம் இரண்டு,  சார்வாகன் முன் எழுந்து நின்ற பெருச்சாளி. நல்லவேளை அதை உறித்து  அவர் கோவணமாகத் தரிப்பதற்கு முன் அதை உயிர் பிழைக்க வைத்து விட்டர்கள்.

அடுத்தது  இலக்கிய சாம்ராட், கோவை புகழ் கவிஞ்சர் பொன் சிங்கம்.  விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு அவரது நூலை வெளியிட விண்ணப்பம் வைத்தார். தலைப்பை கேட்டேன்.  கெவுக்கென விக்கியதில் விதைகள் உள்ளிழுத்துக் கொண்டு விட்டன. ”உண்மை உறங்காது” தலைப்பு . மெய்யாகவே அரங்கா அவரது கவிதைகளை வாசித்துக் கொண்டு இருக்கிறார்.  சமூகம் ஏதேனும் பார்த்து செய்யும் என நினைக்கிறேன்.

உண்மையில் சாகித்ய சங்கத்தில்  பொன்சிங்கம் போன்ற அப்பாவிகள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு இங்கே என்ன நிகழ்கிறது என்பதே பிடி கிடைக்கவில்லை.  ஆகவே பெருமக்கள் சாகித்யத்தை சாடினாலும் அதுவும் அவர்களுக்கு புரியாது. எந்த சிந்தனையாளனும் எதிர் கொள்ள இயலா, உரையாடி மாற்ற இயலா நிலை. சிக்கல்தான்.

கடந்த முறை லக்ஷ்மி  மணிவண்ணன் அவர்களுக்கு நூல் ஒன்று அளித்தேன், அவர் பதிலுக்கு எனக்கொரு நூல் அளித்தார். படிகம் எனும் நவீன கவிதைகளுக்கான இதழ்.

[image error]

அது குறித்து நிசப்தம் தளத்தில் இருந்து

//

இதழ் நாகர்கோவிலிருந்து வருகிறது. ரோஸ் ஆன்றா ஆசிரியர்.

கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், கவிஞர்களின் நேர்காணல், கவிதை விமர்சனங்கள் என்று முழுமையாக நவீன கவிதை பற்றி மட்டுமே பேசுகிறது. விரும்புபவர்கள் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு இதழ்களை வாங்கிக் கொள்ளலாம். வாசிக்க ஆரம்பிக்கும் வரைக்கும்தான் கவிதை என்பது புதிர். வாசிக்கத் தொடங்கிவிட்டால் அதுவொரு தனியின்பம். நவீன கவிதைகளுக்கென இதழ் என்பது போன்ற முயற்சிகள் மிக அவசியமானவை. அரிதானவையும் கூட. பொருளாதார அல்லது புகழ் உள்ளிட்ட எந்தவிதமான லெளகீக பிரதிபலன்களும் எதிர்பாராத இத்தகைய முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோஸ் மன்றோவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

கண்டராதித்தனின் ஒரு கவிதை –

நீண்டகாலம் நண்பனாக இருந்து

விரோதியானவனை வெளியூர்

வீதியில் சந்திக்க நேர்ந்தது

பதற்றத்தில் வணக்கம் என்றேன்

அவன் நடந்து கொண்டே

கால் மேல் காலைப்

போட்டுக் கொண்டே போனான்

தொடர்புக்கு:

படிகம்- கவிதைக்கான இதழ்

4/184 தெற்குத் தெரு

மாடத்தட்டுவிளை

வில்லுக்குறி – 629 180

அலைபேசி: 98408 48681

மின்னஞ்சல்: padigampublications@gmail.com //

விஷ்ணுபுரம் இலக்கிய விருது எனும் பண்பாட்டு அலையில், இந்தத் துளியும் கலந்திருக்கிறது என்பதில் எனக்கு கரையற்ற மகிழ்ச்சி.

இம்முறையும் லக்ஷ்மி மணிவண்ணன் விரும்பும் நண்பர்களுக்கு படிகம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

ஜெயமோகன் அகத்தின் களித்தோழன் அரங்கசாமிக்கு என்றென்றும் என் அன்பு முத்தம்.

கடலூர் சீனு

[image error]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். விழாவில் கலந்து கொண்டுவிட ஆசை. ஆனால் முடியாமல் போனது.

அதிகம் வாசிக்கவில்லை ரகத்தில் என்னை வண்ணதாசனில் சேர்க்க முடியாது. கொஞ்சம் வாசித்திருந்தாலும் அவர் என்னை முழுமையாக உள்ளிழுத்து கொண்டார். சென்ற புத்தக கண்காட்சியில்தான் அவருடைய இரண்டு புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஒளியிலே தெரிவது, மீன்களை போலொரு மீன். இப்படி வாழ்வை, இயற்கையை இடையறாது இரசித்துக்கொண்டேயிருப்பது சாத்தியமாயென முயன்று முயன்று தோற்றிருக்கிறேன். அவரும் முயன்று முயன்று தோற்றதின் விளைவே நாம் வியக்கும் அவர் எழுத்துக்களோ என்றும் எண்ணியதுண்டு.

3

நேற்றுதான் இணையத்தில் அவரது விழா உரையை கேட்டேன். அவர் குரல் கேட்டதுமே ஏனோ கண்ணீர் முட்டிக்கொண்டது. அவர் பேச பேச அது கொட்டித்தீர்க்க துடித்தது. அலுவலகத்தில் இருந்ததால் அழுதுதீர்க்க முடியவில்லை. அவரது குரல் அன்பின் குரல். அதனை எதிர்கொள்வது அத்தனை சுலபமல்ல. யாருடைய குரலை கேட்டும் இப்படி ஒரு நிலை எனக்கு நேர்ந்ததில்லை. அந்த குறளை கேட்டுக் கொண்டேயிருந்தால்

என் அழுக்குகள் அனைத்தும் அடித்து செல்லப்படும் உணர்வு. அவர் சொன்ன அமைதியில் நான் அமர்கிறேன். அவர் ஆன்மாவிலிருந்து அழைத்த செல்வராஜோடு என்னையும் பொருத்திக்கொள்கிறேன்.

நன்றி

உமாரமணன்

[image error]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது வழங்கும் விழாவில் முதன்முதலில் பங்கு பெற்ற மகிழ்வுச்சத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. மீன்கொத்தியின் அரை வட்டம், பசலைப்பழம், மின்மினிப்பூச்சிகள் இன்னும் பலப்பல காட்சி பிம்பங்கள் மனதில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் அமர்வில் இருக்க முடியவில்லை என்ற வெறுப்போடு இரண்டாம் நாளின் முதல் அமர்வில் நுழைந்தபோது என் வெறுப்பு எல்லாம் நீங்கியிருந்தது. வண்ணதாசன் உள்ளே இருந்தார். கண்கள் நாஞ்சில் நாடனையும், தேவதேவனையும் கண்டு கொண்டது. ராம்குமார் இரா.முருகனை அறிமுகப்படுத்தினார்.

வண்ணதாசன் மிகவும் ஜாலி மூடில் இருந்தது போல இருந்தது. மழையின் கவிதையை தன் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பேன் என்ற ஒரு ஆசிரியையிடம் மழையில் நனைய சொல்லி கொடுங்கள் என்ற பதிலும், மீன்கொத்தியின் பறந்த காலம் எது, இறந்த காலம் எது என்ற கேட்ட ஒரு வாசகரிடம், கடைசியாக எப்பொழுது மீன்கொத்தியை பார்த்தீர்கள் என்று கேட்டு, புத்தகத்தில் கவிதையை படித்து விட்டு புரியவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனம் என புரிய வைத்தார். தட்டடியில் குவிந்து கிடக்கும் காய்ந்த சருகும், காகிதப்பூக்களும் படைப்பாளிக்கு அவசியம், குப்பையும் அவனுக்கு தேவை என்று வண்ணதாசன் அழகுணர்வினை அமர்வில் நிரப்பிகொண்டிருந்தார்.

[image error]

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் அவர்களின் இரண்டாவது அமர்வு முதல் அமர்வுக்கு நேர் எதிராக வரலாறும், இலக்கியமும், சமகால அரசியலும் என பல திசைகளும் சென்று வாசகர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இடையில் தாய்மொழிக்க்லவி ஆங்கிலக்கல்வி என கொஞ்சம் சுரம் குறைந்தாலும், சிவப்பிரகாசம் அவர்களின் பேச்சு அருமை. சைவம் சிவப்பு சிவமாகி, ருத்திரன், ரெட் என சைவ வரலாறு ஆகட்டும், சிலம்பில் பிருந்தாவனக்காட்சி முதல் முதல் வந்தது என தகவல் நிறைந்த அமர்வு. வெளியே வந்ததும் என் மனைவி மதுரைக்காண்டம் நாடகம் கிடைக்குமா என்று தேடிப்பார்க்கும் அளவுக்கு சிலம்பின் தாக்கம் இந்த அமர்வில் இருந்தது.  அருமையான மதிய உணவு. ஒழுக்கமான ஒரு சைவ சாப்பாடு என்று நாஞ்சில் நாடன் மூன்றாவது அமர்விற்கு வரும்போது சொல்லிகொண்டு மகிழ்வோடு அமர்ந்தார். அவரிடம் கொஞ்ச நேரம் அமர்ந்து சாப்பாடு பற்றி பேசலாமா என்று மனம் துடித்தது.

மூன்றாவது அமர்வு  வந்திருந்த முக்கிய படைப்பாளிகளிடம் உரையாடும் விதமாக அமைந்தது. இது போன்ற தலைப்பு இல்லாத அமர்வு முதல் கேள்வி எப்படி இருக்கிறதோ அதன் போக்கிலேயே செல்லும். ஏன் இலகியம் வீழ்ச்சியையையே பதிவு செய்கிறது என்ற கேள்வியில் ஆரம்பித்து அதன் போக்கிலேயே சென்றது. நாஞ்சில் நாடன் தனது நகைச்சுவை உணர்வு மூலம் அமர்வினை கலகலப்பாக வைத்திருந்தார் . பாவண்ணன் எதிர்பாராமல் அன்பினை காட்டக்கூடிய மனிதர்களை தேடி பதிவு செய்ய வேன்டியது இலக்கியத்தின் அவசியம் என்றார். அம்மா சின்னம்மா பற்றி நாவல் எழுத யாருக்கும் தைரியம் இருக்கிறதா என்று நேரடியாகவே நாஞ்சில் கேட்டு விட்டார்.

மாலை விருது வழங்கும் விழா மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

[image error]

செல்வேந்திரனின் ஆவணப்படம் தாமிர பரணியின் நினைவுக்கு கூட்டிச்சென்றது. உங்களது பேச்சு ஒரு குறும்படம் போல இருந்தது. மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் ஒரு சுடாத நெருப்பு என்று காட்சியோடு முடித்தது எவ்வளவு அழகு? வண்ணதாசனை அறிமுகப்படுத்த மின்மினிப்பூச்சியின் ஒளிதானே உகந்ததாக இருக்கும். வண்ணதாசன் பேச ஆரம்பித்ததும் என்னை நெகிழ வைத்து விட்டார். நதியின் மீது கைவிரித்து பறக்கும் அவரது கனவு காணாமல் போய்விட்டது படைப்பாளிக்கு கனவு எவ்வளவு அவசியம் என்று நெகிழ்ந்தது கண்ணில் நிற்கிறது. ஈரம் என்ற சொல் இவ்வளவு ஈà

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:37

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14

[image error]

அன்புள்ள ஜெ

இந்தமுறை விழாவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நன்கொடை அளிப்பதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. ஆகவே நன்கொடை அளிக்காமல் வந்துவிட்டேன். நன்கொடைகளை எங்கே அளிப்பது என்றும் சொல்லப்படவில்லை. இதைப்பற்றி உங்களிடம் கேட்கலாமென நினைத்தோம். முடியவில்லை.

ரவீந்திரன்

[image error]

அன்புள்ள ரவீந்திரன்,

இம்முறை நிறைய இளைஞர்கள். நன்கொடை பற்றி வெளிப்படையாக அறிவிப்பது அவர்களிடம் கோருவதுபோல ஆகி சங்கடத்தை அளிக்குமோ என்பதனால் அறிவிக்கவில்லை

இம்முறை நோட்டுப்பற்றாக்குறை இருந்தமையால் பெரும்பாலும் எவரும் நன்கொடை அளிக்கவுமில்லை. அதைப்புரிந்துகொள்ளமுடிகிறது

ஜெ

[image error]

அன்புள்ள ஜெ

நீங்களே விஷ்ணுபுரம் விழாவில் பேசிக்கொண்டே இருப்பதாக இணையக்குசும்பன் எழுதிய பகடி வாசித்தேன். பகடி எல்லாம் சரி. ஆனால் இந்தவகையான ஒரு  விஷமப்பிரச்சாரத்தை தொடர்ந்து சிலர் இணையத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு நீங்களும் பெரும்பாலும் விஷ்ணுபுரம்நிகழ்வுகளில் பேசுவதே இல்லை. இந்த விழாவில் கடைசியாக மேடையில் அதுவும் சரியாக 9 நிமிடம் மட்டும் பேசினீர்கள். சந்திப்புமேடையில் யாரோ வரும் இடைவெளியில் 10 நிமிடம் பேசினீர்கள். அதோடு சரி. அரங்குகளிலும் மற்றவர்கள் பேச கேட்டுக்கொண்டிருந்திர்கள்

நான் உங்கள் வாசகன். திருச்சியிலிருந்து நான் வந்ததே உங்களை பார்க்கவும் பேச்சைக்கேட்கவும்தான். நான் ஒரே ஒருமுறை திருச்சியில் உங்கள் பேச்சைக்கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பேசவே இல்லை என்பது ஏமாற்றம். பலரும் அதை அங்கேயே சொல்லிக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாக முடிந்தபின் நீங்கள் பேசுவீர்கள் என்றார்கள் உங்கள் நண்பர்கள். அப்போதும் பேசவில்லை. இந்த பகடிகளைக் கண்டுதான் நீங்கள் அஞ்சுகிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால் வெற்றிகரமாக அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்

குமார் முருகேசன்

[image error]

அன்புள்ள குமார்

இந்த விழா வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உரியது. எழுத்தாளர்களை வாசகர்களுடன் விவாதிக்கச்செய்வதே இதன் இலக்கு. 2010 முதலே இப்படித்தான் நிகழ்ந்துவருகிறது

ஜெ

u

அன்புள்ள ஜெ

மிகச்சிறப்பான விழா. ஆவணப்படம் நூல் இரண்டுமே சிரத்தையான படைப்புக்களாக இருந்தான. விவாதங்களில் பவா செல்லத்துரை அசத்திவிட்டார். ஒரு அற்புதமான இலக்கிய நிகழ்வாக இதை அவரால் மாற்ற முடிந்தது. அவருக்குச் சமானமாகவே நாஞ்சிலும் நகைச்சுவையுடன் பேசினார்

வரும் காலங்களில் ஏதேனும் சிறிய கலைநிகழ்ச்சிகள், பாட்டு போன்றவற்றைச் சேர்க்கலாம்

நாகராஜ்

[image error]

அன்புள்ள நாகராஜ்

கலைநிகழ்ச்சிகள் போன்றவை இத்தகைய நிகழ்ச்சிகளின் ஒருமையைச் சிதைத்துவிடும் என நினைக்கிறேன். ஆனாலும் பாடல்கள் ஒரு நல்ல மனநிலையை உருவாக்கலம். பார்ப்போம்

ஜெ

[image error]

ஜெ

இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவின் ஹைலைட் இரண்டு. ஒன்று இலக்கிய வினாடிவிடை. இன்னொன்று பவா சொன்ன தேன் என்னும் கதை

இதை இரண்டையும் இரண்டு நிகழ்ச்சிகளாக ஆக்கலாமே. நல்ல சிறுகதைகளை நிகழ்த்திக்காட்ட சிலரைப் பயிற்சிகொடுக்கலாம். கேரளத்தில் கதைகளை சொல்ப்வர்கள் இருக்கிறார்கல். நல்ல நடிகர்களைக்கூட அழைத்து கதைநிகழ்வைச் செய்யலாம்

வினாடிவிடை இனிமேல் எல்லா நிகழ்ச்சிகளிலும் இருக்கலாம் என நினைக்கிறேன். சும்மா மாடல்களை நிப்பாட்டி உளறச்செய்வதற்கு இதெல்லாம் அருமையான மாற்றுக்கள்

ஜெகதீசன்

[image error]

அன்புள்ள ஜெகதீசன்

செய்யலாம். கதை நிகழ்வு நல்ல ஐடியா. கதையை நிகழ்வடிவமாக எழுதி கொஞ்சம் பயிற்சிசெய்து சொல்லும் நடிகர்களைப்பயன்படுத்தலாம். ஜானகிராமன் எழுதிய பரதேசி வந்தான் போன்ற கதைகள் அற்புதமாக மேடையை நிறைப்பவை

சுவாரசியமாக நிகழ்ச்சிகளை நடத்தி அதிகமான பேரை உள்ளே கொண்டுவந்தாகவேண்டும்

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2016 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.