Jeyamohan's Blog, page 1694

January 2, 2017

வண்ணதாசன் ஆவணப்படம்

வண்ணதாசனைப்பற்றி செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம். வண்ணதாசனைப்பற்றி முழுமைப்படுத்தப்பட்ட முதல் ஆவணப்படம் இது

 வண்ணதாசன் விழா அனைத்து இணைப்புக்களும்

ஆ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2017 10:37

கிள்ளை

index

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் பிறந்த என் ஆண் பிள்ளையின் பெயர் சூட்டு விழாவின் ஒரு பகுதியாக தொட்டிலிடும் நிகழ்வும் இருந்தது. அப்போது பாடலாக அன்னமாசார்யாவின் கீர்த்தனையான “ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ முகுந்தா…” பாடப்பட்டது.

பெண் பிள்ளை பிறந்திருந்தால் என்ன பாடியிருப்பார்கள் என என் சிந்தனை சென்றது. பெண் தெய்வங்களுக்கான தாலாட்டு பாடல்கள் உள்ளனவா என இணையத்தில் தேட ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவேளை பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடியிருப்பார்களோ என்று எண்ண, ஏனோ ‘சின்னஞ்சிறு கிளி’ என்ற வரி பள்ளி நாட்களில் என் நண்பன் எடுத்து வளர்த்த கிளிக்குஞ்சை ஞாபகப்படுத்தியது. நீங்கள் கிளியை அதன் மழலை பிராயத்தில் பார்த்திருக்கிறீர்களா?.

பாரதி என்ன பதத்தில் இந்த ‘சின்னஞ்சிறு கிளி’யை பயன்படுத்தியிருப்பாரோ தெரியாது. எனக்குள் அது பாரதி காலத்து பெண்ணின் வாழ்க்கை குறித்த மினிமலிச ஓவியமாக இப்படி விரிந்து கொண்டே செல்கிறது.

“பிறப்பில் அருவருக்கப்பட்டு, பின் வண்ணமேறி சிறகு முளைத்தவுடன் சிறகு முறிக்கப்பட்டு, யாராலோ கூண்டிலைடைக்கப்பட்டு, உடையவனின் சொல்லையே வழிமொழிந்து….”

மகள்களுக்கான பாடல்களை ஆண்கள் யாரும் எழுதத் தேவையில்லை. அதை அவர்களே இயற்ற வல்லவர்கள் என்று புரிந்து கொண்டாலே போதும் என நினைக்கிறேன்.

ஜெ. விஜய்.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்.

*

அன்புள்ள விஜய்

கிள்ளை என்பது மழலைக்கு நிகரான ஒரு சொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. கிளியின் பல்வேறு இயல்புகள் கவிதையில் கையாளப்பட்டிருந்தாலும் அது மானுடமொழியை பயின்றுபேசுவதில் உள்ள குதலையின் பேரழகுதான் கொண்டாடப்பட்டிருக்கிறது. பெண்குழந்தைக்கு கிள்ளை என்று ஒப்பு சொல்லப்பட்டது அதனால்தான்

அதிலும் பெரும்பாலும் அது இளங்கிளிதான். மழலையிலும் மழலை கோருகிறது கவிதையுள்ளம். கிளியை தூதுவிடுதல் நம் மரபில் இருக்கும் முக்கியமான கவிதை வடிவம். சுகசந்தேசம் என பெயர்கொண்ட சம்ஸ்கிருதகாவியங்கள் பல உண்டு

சரியாகச் சொல்லத்தெரியாத ஒன்றைத் தூதுவிடுவதிலுள்ள அழகு எண்ணுகையில் உவகை அளிக்கிறது. மழலையால் மட்டுமே சொல்லத்தக்க சில உண்டு அல்லவா

அழகர் கிள்ளைவிடுதூதில் பலபட்டடை சொக்கநாதப்புலவர் சொல்லும் வரி இது

அளிப்பிள்ளை வாய்குழறும் ஆம்பரத்தில் ஏறிக்

களிப்பிள்ளைப் பூங்குயிலும் கத்தும் – கிளிப்பிள்ளை

சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர் கொண்டாய்

பின் அத்தைப் போலும் ஒரு பேறுண்டோ?

அணில்பிள்ளை சொல்லெடுக்காது வாய் குழறும். குயில்குஞ்சு வான்தொடும் மரக்கிளையில் ஏறிக்கொள்ளும் கிளிப்பிள்ளைதான் சொன்னதைச் சொல்லும். அதைவிட பெரிய பேறு ஏது?

கிளிப்பாட்டு ஒரு தனிக்கவிதைவடிவமாகவே தென்மொழிகளில் உள்ளது. பாரதி சின்னஞ்சிறு கிளியிடம் மட்டும் பேசவில்லை. நெஞ்சில் உரமும் இல்லாத நேர்மைத்திறமும் இல்லாத மானுடரைப்பற்றியும் கிளியிடம்தான் சொல்கிறார்

மலையாளத்தின் முதற்கவிஞர் துஞ்சத்து எழுத்தச்சன் அத்யாத்மராமாயணம் என்னும் முதற்காவியம் கிளிப்பாட்டு வடிவில்தான். ’சாரிகப்பைதலே கேள்குக” என்றுதான் அது தொடங்குகிறது. கிளிக்குஞ்சே கேள் என. ஆம், கிளிமதலைதான். சின்னஞ்சிறு கிளி.

அந்த மழலையை உருவகமாக எடுத்துக்கொள்வது ஒரு வாசிப்பு. கூண்டை உருவகமாக எடுத்துக்கொள்வது இன்னொரு வாசிப்பு. சரிதான், லா.ச.ரா சொல்வதுபோல அவரவர் பூத்தபடி

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2017 10:35

விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20

15673028_1325672277456186_1614750268106035554_n

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரத்தின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவமான பயனுண்டு. அவர்களது, ஓராண்டு பசியும் ஒரே விழாவில் தீர்க்கப்படுவதோடு, அடுத்த ஓராண்டிற்கான பசியும் அழகாய், அர்த்த புஷ்டியுடன் தூண்டிவிடப்படுவதுமே அது. விஷ்ணுபுரம் விருது விழா 2017 முடிந்து சொந்த ஊருக்கு மீள்வதற்கு, கோவை பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது – ஆப்பிள் கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், பேருந்திற்காக காத்திருக்கும் யாரோ ஒரு அக்கா, குடித்துவிட்டு மல்லாந்திருக்கும் ஒருவர் என – எந்த ஒரு முகத்தைப் பார்த்தாலும், அவர்களை இலக்கிய வாசகர்களாகவே நினைத்துக் கொள்ளும் மனத்தின் விசித்திரத்திலிருந்து, இவ்விழா ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரத்தை குறிப்பிட விழைகிறேன்.

ஜெ பல இடங்களில் திருவிழாக்கள் பற்றிச் சொல்லும் போது, ஒரு பெரும் மக்கள் திரள் ஒற்றை முகம் கொள்ளும் விந்தையைச் சொல்வார். அதை, இவ்விழா நிகழ்வுகள் நடந்த இரண்டு நாட்களிலும், நாமும் நண்பர்களும் துல்லியமாய் அனுபவித்தோம் என்று பின்னர் தோன்றியது. குறிப்பாக, விருது விழாவில், வெளிவந்த கைதட்டல்களும், கண்ணீர் ததும்பல்களும் அப்படியே ஒற்றை முகமாய், ஒற்றை மனமாய் ஒரு திரளோர் வடித்தது.

விழாவிற்கு வருகையில், என் மனதில் இருந்த எண்ணம், அல்லது ஒழுங்குணர்வு என்பது ‘ஜெயமோகன் அவர்களிடமும் பிற ஆளுமைகளிடமும் நாம் ஒவ்வோர் அசைவையும் கற்றுக் கொள்ளவும், மெளனமாய் ரசித்து மகிழ்ந்து கொள்ளவும் மட்டுமே இவ்விழாவிற்குச் செல்கிறோம்; காரணமின்றி, அதிக பிரசங்கித் தனமாக, ஜெவை அணுகி, பேசி தொந்தரவு செய்யும் விதமாக எதுவும் செய்துவிடக்கூடாது’ என்று இருந்தது. காரணம், இது தனிப்பட்ட ‘ புதியவர்கள் சந்திப்பு’ போன்ற விழா அன்று; மாறாக ஆண்டுதோறும், பெருகிவரும், தீவிர வாசகர்களையும் அவர்களது ‘ஆர்வ மற்றும் ஆர்வகோளாறுகளை’யும் கொண்ட விழா என நினைத்ததே.

மாறாக, நான் விழாவில் நுழைந்து, பின்னால் சென்று நின்று, ‘நாஞ்சில் நாடன்’ அவர்களைக் கவனித்து ரசித்துக் கொண்டிருக்கையில், எதார்த்தமாக ஜெவே என்னருகே வந்து, சில நிமிடங்கள் என்னைத் தழுவி விசாரித்தது பெரும் பேறு. அப்பேறு பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்தது என்னை, இரு நாட்களில். ஜெ அவர்கள் மீது எல்லோரும் – குறிப்பாக புது வாசகர்கள் – தனது, வியப்பை தன் மீதான தனிப்பட்ட நல்லூழாகவே குறிப்பிடுகிறார்கள். அனைத்து உண்மையான வாசகர்களுக்கும், ’ஜெயமோகன் தன்னுடன் வெகு சிறப்பாக இம்முறை உரையாடினார்; தன்னை வெகு நெருக்கமாக உணர்ந்து வைத்துள்ளார்’ என்ற மகிழ்வும், வியப்புமே எஞ்சியிருக்கிறது.

எப்படி இத்தனை செறிவுடைய விழாவினிடையே, ஒவ்வொருவரையும், ஒரே அளவிற்கு சென்று சேர ஜெயமோகனால் முடிகிறது என்று யோசித்து வியக்கும் நேரத்தில், ‘இன்றைய காந்தி’ யை அறிந்தவருக்கு இது இயல்பே என்பதும் உடன் தோன்றுகிறது. Positive Gossip – அவர் இல்லாத போது அவரைப் பற்றிய நேர்மறையான பேச்சு – என்ற ஒன்று ஜெயமோகனுக்கு, கிடைத்த அளவிற்கு மனப்பூர்வமாக யாருக்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.

தாமஸ் மண் பற்றிய அறிமுகத்தை நான் கோரியபோது, ஜெ வழங்கிய அறிமுகமென்பது மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. Death in Venice ஐ இப்புத்தாண்டில் தொடங்கப் போகிறேன். தொடர்ந்து, தாமஸ் மண்ணை வாசிக்கும் திட்டம் உள்ளது. மேலும், இலக்கிய வினாடி வினாவைச் சுட்டி குறிப்பிடாதவர்கள் யாருமில்லை என்பதே அதன் வீச்சினைப் பேசுகிறது. நான் பாரதிநாதன் அவர்களது ‘தறியுடன்’ நாவலை பெற்றேன் அந்நிகழ்வில். அதற்கும் ஒரு சிறு அறிமுகம் ஜெவிடமிருந்து கிடைத்தது கூடுதல் மகிழ்வு.

ஒரு பேரதிர்ச்சி என்னவென்றால், இன்னும் ஓராண்டில் வெண்முரசு நிறைவு பெறும் என்று ஜெ தெரிவித்ததே. உடனேயே அந்நிறைவால் வரப்போகும் வெறுமை மனதில் வெட்டிச் சென்றது. இருந்தாலும், எங்களை ‘அசோகவனம்’ வழிதெரியாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் என்று நினைக்கையில் அவ்வெறுமை விலகுகிறது. வெண்முரசு நாவல்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

சென்ற முறை 2016ல் விஷ்ணுபுரம் விழாவின் நிறைவு தந்த கிளர்ச்சி என்னை ஒரு வாசகனாக்கியது. இந்த முறை, என் வாசிப்பிற்க்கான, வெகு சவால்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு, புதிய நாளையும் ஒரு புத்தாண்டிற்குச் சமமான மனக்கிளர்ச்சியுடன் அணுகிடும் மனப்பண்பை உருவாக்கிய வாசிப்பு என்பது விஷ்ணுபுரத்தின் தாக்கமே. விஷ்ணுபுரத்தின் விரல்கள் இன்னும் ஓராண்டிற்கு என்னைத் தழுவிக்கொண்டே இருக்கப்போகிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,

நன்றி.

கோ.கமலக்கண்ணன்

[image error]

அன்புள்ள கமலக்கண்ணன்

என்னைப்பொறுத்தவரை திரும்பிப்பார்க்கையில் நண்பர்களுடன் பேசிய, பயணம்செய்த நாட்களே இலக்கிய வாழ்க்கையை அர்த்தப்படுத்துபவையாக உள்ளன. ஆகவே இலக்கியம் என்பதை ஒரு பெரிய நட்புக்கூடலாகவே எப்போதும் பார்க்கிறேன்.  இதற்குள் விழுமியங்கள் உண்டு. இலக்கியம் என்னும் பொதுவட்டம் முக்கியமானது. அதற்குள் அனைவரும் நண்பர்களே. ஆகவேதான் நட்பில் கசப்புகளைச் சேர்க்கும் எதையும் எதன்பொருட்டும் ஒப்புக்கொள்வதுமில்லை

விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பொறுத்தவரை வந்தவர்களை இனிய வரவாக எடுத்துக்கொண்டேன். வராத சிலரை எண்ணிக்கொண்டும் இருந்தேன். நண்பர் பெங்களூர் ‘சர்வர்’ கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன், அருணாச்சலம் மகராஜன்  விஜயகிருஷ்ணன் ,ரகு , மொரப்பூர் தங்கமணி என அவர்களின் பட்டியலே அடிக்கடி மனதுக்குள் வந்துசென்றது.வெ.அலெக்ஸ் உடல்நலமின்றி இருப்பதனால் வரமுடியவில்லை. இது ஒருவகையான வருடாந்தர நட்புக்கூடல்தான் . இதே இனிமையுடன் தொடரவேண்டும்

ஜெ

[image error]

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். ஒருவாரமாகியும் இன்னும் ” விஷ்ணுபுரம்” விழா நினைவுகளிலிருந்து நான்  மீண்டு வரவில்லை.

உங்களுள் ” வண்ணதாசன்” புகுந்து விட்டது போல் இருந்தீர்கள் .இல்லை நீங்கள் சுபாவமாகவே இப்படித்தானா எனக்குத்தெரியவில்லை.” வைக்கம் முகம்மது பஷீரின்” கதையை சொல்லும் போது ஈஸிசேரில் அமர்ந்து ஓரக்கண்ணால் பஷீரைப்பார்க்கிற அந்த “சேவல்”உங்கள் விவரிப்பில் என் கண்முன்.

எதெதற்காகவோ ஒன்றுமே சாதிக்காமல், தான் தான் பெரிய ஆள் என்று புழங்குகிற மனிதர்கள் இருக்குமிடத்திலிருந்து வந்த நான், சுவற்றோரமாக சாய்ந்து கூட்டத்தின் கடைசியில் நின்றுகைகட்டி மற்றவர்கள் பேசுகிறதை பொறுமையாக்க்கேட்கிற ” ஜெயமோகனை” பார்த்த போது அத்தனை இஷ்டமாக இருந்தது.

சலூன் வைத்திருக்கிற ” காசர்கோடு மலையப்பனை” நினைவுபடுத்தி பேசினபோதும்,” வண்ணதாசன்” என்கிற ஸ்க்ரூ ட்ரைவர் அன்பை மட்டுமே திறப்பது .அது ஏன் ஒரு சமூகத்தின் பிரச்சனையை பேசவில்லை எனக்கேட்பது சரியல்ல” என்றபோதும் உங்களின் இக்கருத்திற்காக ஒலித்திட்ட கைத்தட்டலில் என் கை ஓசை அதிகமாக இருந்திருக்கும்.

உங்கள் மகன் ” அஜிதனை” பற்றி,” சவுக்கு” எழுதின நாட்களில் நீங்கள் தருமபுரியிலிருந்தது பற்றி எனக்கு பதில் தர  நீங்கள் பேசினபோது  இத்தனை எளிமையான மனிதரா என  வியக்க வைத்தீர்கள்.விழாமேடையில் நீங்கள் வண்ணதாசனை கூட்ட மாகப்பறந்த மின்மினி பூச்சிகளுக்கு ஈடாக , சுடாத,எரிக்காத காட்டுத்தீயாகஇருள் பிரியாத நேரத்தில் மொத்த காட்டையுமே வெளிச்சம் போட்டுக்காட்டின மின்மினி பூச்சிகளாக சொன்னது சிலிர்த்தது. அபாரம் ஜெயமோகன்.

விஷ்ணுபுரம் விழா அறிவித்ததிலிருந்தது உங்கள் வலைப்பக்கத்தை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அதில் இடம்பெற்ற வண்ணதாசன்விருது  தொடர்பான கடிதங்களில்” செல்வராஜின்” கடிதத்தை முன் வைத்து வண்ணதாசன் பேசின ஏற்புரையில் கூட்டம் கரைந்ததற்கு நீங்கள் அல்லாமல் வேறு யாரும் காரணமில்லை.

உங்களின் மொத்த கதைகளையும் படித்தும் ,மற்றெல்லோரின் புத்தகங்களையும் படித்தும்,வரிக்கு வரி நினைவில் வைத்துக்கொண்டு நடைபெற்ற போட்டிகளில் வென்று உங்களோடு விவாதித்த பல அறிவுஜீவி வாசகர்களின் பார்வையில் படும்போது அத்தனை விவரமில்லாதவர்களாக ,ஒரு சாதரண மேலெழுந்தவாரியாக படிக்கிற வாசகர்களாக வண்ணதாசனின் வாசகர்களாகிய நாங்கள் தெரிந்திருப்போம். அதைபற்றி எந்த புகாருமில்லை. ” செல்வராஜ்” எழுதினது போல அறிவாளியாக மாற எல்லாம் எனக்கு விருப்பமில்லை.

ஆனால் ” தேவதேவனையும்,நாஞ்சில் டனையும்,பாட்டையாவையும்,கலாப்ரியாவையும ,சுகாவையும்,பாவண்ணனையும், பவா செல்லதுரையையும் இன்னும் தன் எளிமையான ஆங்கிலத்தால் அனைவரையும் கவரும்படி உரை நிகழ்த்தின  கன்னட எழுத்தாளர் ” சிவப்ரகாஷ் ” அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் ,அவர்கள் பேசுவதை கேட்கும் அருமையான நேரமும் உங்களால் ,உங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் ” விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தால்” சாத்தியமானது.

உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகளும்,பேரன்பும்,நன்றியும்.

காயத்ரி சந்திரசேகர்

[image error]

அன்புள்ள காயத்ரி,

உண்மைதான். பின்மயக்கம் மிஞ்சிப்போய்விடக்கூடாது, புத்தாண்டில் வேறு விஷயங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். இருந்தாலும் நீடிக்கிறது.

நான் எப்போதும் சொல்வதுபோல விஷ்ணுபுரம் விழா ஒரு நட்புக்கூடலாகவே இருக்கவேண்டும். நட்பார்ந்த சந்திப்புகள் வழியாக, அரட்டைகள் வழியாக நாம் கற்றுக்கொள்வது மிக அதிகம். அதில் மேல் கீழ் என எவருமில்லை. விவாதங்கள் நிகழலாம், ஆனால் அவை மிகச்சிறிய வட்டத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குள் மட்டுமே நிகழவேண்டும். அங்கே அகங்காரம் இருக்கக்கூடாது

விஷ்ணுபுரம் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதில் அபாரமான மகிழ்ச்சி ஒன்று உண்டு. நான் அவ்வப்போது சந்திக்கும், பெரும்பாலும் கடிதங்கள் மூலம் மட்டுமே உரையாடும் பலரை அங்கே சந்திக்கிறேன். விவாதங்களில் ஈடுபட்டு அதை இழக்க விரும்பவில்லை

ஜெ

முந்தைய பதிவுகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 2

விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 5

விஷ்ணுபுரம் விழாப்பதிவு6

விஷ்ணுபுரம் விழாப்பதிவு7

விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 10

விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 குறைகள்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12 சசிகுமார்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 13 ராஜீவ்

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 14

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 15

விஷ்ணுபுரம் விழாப்பதிவு 16 தூயன்

விஷ்ணுபுரம் விருதுவிழா 17

ஒருங்கிணைதலின் கொண்டாட்டம் ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவு 18

விஷ்ணுபுரம் விருதுவிழா பேசப்பட்டவை கிருஷ்ணன்

உரைகள்

இராமுருகன் உரை

சுப்ரபாரதிமணியன் உரை

காணொளிகள்

ஜெயமோகன் உரை

வண்ணதாசன் உரை

நாஸர் உரை

கு சிவராமன் உரை

பவா செல்லத்துரை உரை

இரா முருகன் உரை

எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை

புகைப்படங்கள்

புகைப்படங்கள் தங்கவேல் 1

புகைப்படங்கள் தங்கவேல் 2

புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி1

புகைப்படங்கள் கணேஷ்பெரியசாமி2

=============================================================

விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு

============================================================

விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்

விலகும் திரை – ஏ வி மணிகண்டன்

சுவையாகி வருவது ஜெயமோகன் 1

சுவையாகி வருவது ஜெயமோகன் 2

மனித முகங்கள் வளவதுரையன்

வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்

வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்

வண்ணதாசன்  குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா

வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்

வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு

==============================================================================

வண்ணதாசன் இணையதளம்

வண்ணதாசன் நூல்கள்

வண்ணதாசன் இணையப்பக்கம்

வண்ணதாசன் கதைகள்

வண்ணதாசன் கவிதைகள்

==============================================================================

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

வண்ணதாசன் கவிதைகள் பாடல்களாக

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3

வண்ணதாசன் கடிதங்கள் 4

வண்ணதாசன் கடிதங்கள் 5

வண்ணதாசன் கடிதங்கள் 6

வண்ணதாசன் கடிதங்கள் 7

வண்ணதாசன் கடிதங்கள் 8

வண்ணதாசன் கடிதங்கள் 9

வண்ணதாசன் கடிதங்கள் 10

வண்ணதாசன் கடிதங்கள் 11

 மென்மையில் விழும்கீறல்கள்

சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2017 10:31

விவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்

1

அன்புள்ள ஜெயமோகன்,

சரவணக்குமாரின் விவேக் ஷன்பேக் தமிழாக்க நூல் பற்றிய கடிதத்திற்கு உங்கள் பதிலைப் படித்தேன். என் இரு கன்னங்களிலும் அறை வாங்கியதாக உணர்ந்தேன். சில நாட்கள் கழிந்தும் கடக்கமுடியாததால் எழுதுகிறேன்.

நானும் அந்த நூலை விஷ்ணுபுரம் விருது விழாவின்போது வாங்கினேன். வாங்கும்போது மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களில் முதல் பக்கத்திற்கும் முன் அட்டைக்கும் இருந்த முரணை கவனித்தேன். அது ஒரு மோசமான வியாபாரத் தந்திரம், ஏமாற்று வேலை என்று எனக்குள்ளும்தான் ஒரு மெல்லிய கசப்பு எழுந்தது. சரவணகுமாரும் அவர் நண்பர் சொன்னது சரி எனப் பட்டதால்தானே உங்களுக்கு எழுதினார்? அப்போது நாங்கள் இருவரும் எங்களைப்போல நினைத்திருக்கக்கூடிய மற்றவர்களும் மிகமிக ஆபத்தானவர்கள், 500 ரூ மேல் நம்பவோ தனிப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவோ தகுதியற்றவர்களா? உங்கள் சொற்கள் பலித்துவிடுமோ என்று அறம் ஆச்சி போல பயந்துபோயுள்ளேன்.

நீங்கள் முன்னுரை மட்டுமே எழுதியிருந்து, “ஜெயமோகன் முன்னுரையுடன்” என வெளியிட்டிருந்தாலும் எனக்கு மறுப்பு இல்லை. (கதைகளுக்கு முன் பதிப்புரை தவிர முன்னுரை எதுவும் இல்லை. நீங்கள் எழுதிய முன்னுரை பின் அட்டையிலிருப்பதுதானா?) அத்தகைய வியாபார தந்திரங்கள் தவறு எனக் கருதவும் இல்லை. கசப்பு மற்ற மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள் அட்டையில் விடுபட்டதனால்தான். உங்கள் பெயரைவிட சிறிய எழுத்துக்களிலாவது அவர்கள் பெயர் அட்டையில் இடம் பெறவில்லை என்பதால்தான். மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு கவனிக்கப்படாதது குறித்து நீங்களும் எழுதியதாக நினைவு.

எச்செயலுக்கும் அவரவர் நியாயங்கள் உண்டு. உங்கள் விளக்கத்தை நூல் வாங்குபவன் எவ்வாறு அறியமுடியும் என்பது மட்டுமல்ல விளக்கம் முழு நிறைவைத் தரவில்லை. அட்டையில் குறிப்பிட்ட விலை ரூ 60. உள்ளே குறிப்பிட்ட விலை ரூ 100. ரூ 100 க்குத்தான் விற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ரூ 40 விலை உயர்ந்தபோது, மொழிபெயர்ப்பாளர்கள் பலராகியபோது, குறைந்தது மாறிய மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்களையும் விலையையும் ஸ்டிக்கராக அட்டையில் ஒட்டி இருக்கலாம்.

சரவணக்குமாரின் கடிதத்தில் ‘மோசமான வியாபாரத் தந்திரம்’, ‘ஏமாற்று வேலை’ என்று இருந்தது. ‘ஊழல்’, ‘வணிக மோசடி’, ‘வணிகச்சதி’ என்றெல்லாம் அதில் காணும் நுண்வாசிப்பு எனக்கு அமையவில்லை.

அச்சடித்த 300 பிரதிகள்கூட 5 ஆண்டுகள் ஆகியும் விற்றுத்தீரவில்லை. இதற்கு இத்தனை கூச்சல் குழப்பமா என்று இக்கணம் எனக்குத் தோன்றுகிறது. மிச்சமிருக்கும் பிரதிகளில் மேற்கூறியவாறு ஸ்டிக்கரை ஒட்ட ஆலோசனை கூறி வம்சி ஷைலஜாவிற்கும் இக்கடிதத்தின் நகல் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

அப்பாடா! எழுதி முடித்து வெளியே வந்துவிட்டேன். நிம்மதி.

பா. ராஜேந்திரன்

திரு ராஜேந்திரன்

இப்போது இன்னும் உறுதியாகத் தெரிகிறது. உங்கள் மனநிலை உள்ள ஒருவரை 250 ரூபாய்க்குமேல் நம்பமுடியாது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2017 10:31

யாரோ சிலர்!

download

ஜெ,

துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியது இது..

வண்ணதாசன் பல விருதுகளைப் பெற்றவர்.. இவ்வாணடு கோவையை சேர்ந்த யாரோ சிலர் நடத்தும் விஷ்ணுபுரம் எனும் அமைப்பின் விருது கிடைத்தது

உங்களைப்பற்றி அவரிடம் எடுத்துச்சொல்ல நான் சென்னை செல்லலாம் என நினைக்கிறேன்

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்,

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு விமர்சனக்குறிப்பு எழுதினேன். வண்ணநிலவன் கதைகள் சுந்தர ராமசாமி உட்பட பிராமணர்களால் சில குறிப்பிட்ட பிராமணக் கதாபாத்திரச் சித்தரிப்பு காரணமாக கொண்டாடப்பட்டவையே ஒழிய கணிசமான கதைகள் உளவியல்நுட்பமோ பார்வை விரிவோ இல்லாத செண்டிமெண்ட்படைப்புகள்தான் . வார இதழ் கதைகளின் இன்னொரு வடிவங்கள் அவை. தளுக்கான ஆண்பெண்  உறவுகளை மட்டுமே வாசிப்பதில் ஆர்வம் கொண்டு எழுந்துவந்த ஒரு தலைமுறையை அவை கவர்ந்தன –  என்று .. அன்று ஆரம்பித்த மனச்சிக்கல் இது

பொதுவாகவே ‘நான்லாம் ஒண்ணுமே இல்லீங்க’ என்று ஆரம்பிக்கும் அதீதப்பணிவு , தன்னிரக்கம் ததும்பும்  எளிமை போன்றவற்றை நடிக்கும் இவ்வகை மனிதர்கள் வன்மங்களை ஆண்டுக்கணக்காக சுமந்துகொண்டு அலைவதைக் காணலாம். இன்றுவரை இந்த பிள்ளைப்பூச்சி படும் பாடை பார்க்கையில் அப்படி கறாராக எழுதியிருக்கவேண்டாமோ என்ற இரக்கமே ஏற்படுகிறது. அது எதையும் முடிந்தவரை கூர்மையாக சொல்லவேண்டும் என்ற வெறி இருந்த காலம். இவர்கள் எழுதும் பல்லிமிட்டாய்களையே சப்பிக்கொண்டிருந்த ஒரு வாசகச்சூழலை உடைக்கவேண்டியிருந்த கட்டாயம். சரிதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை..

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2017 07:36

January 1, 2017

ஆசிரியனின் பீடம்

1

ஜெயமோகன் சார்,

இந்தக் கடிதத்தை எழுத முக்கியக் காரணம் மிகுந்த மன உளைச்சல் தான் என்பதை முன்பே நான் சொல்லிவிடுகிறேன். கட்சிகள் மத்தியில் அரசியல் நடந்தால் அதை பொருட்படுத்தவே மாட்டேன். அது அவர்களுடைய இயல்பு. அரசியல் அவர்களுக்கு அவசியம். நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தேவையே இல்லை. நான் நம்பிக்கை வைத்திருக்கும் முக்கியமான தரப்பினர் படைப்பாளிகளும், பேராசிரியர்களும் தான். அதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது.

இவர்கள் சந்திக்காமல் இருந்தாலே போதும். அப்படித்தான் இதுவரை இருந்து வந்துள்ளனர். படைப்பாளிகளை பேராசிரியர்கள் மதிப்பதில்லை. படைப்பாளிகள் பேராசிரியர்களை மதிப்பதில்லை. இந்த முரண்பாடு பனிப்போர் போன்று இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த மாநாடு ஒன்றில் இரண்டு தரப்பினரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை இவர்கள் செய்யாமலே இருந்திருக்கலாம். Pandora பெட்டியை அந்தப் பேராசிரியர் திறந்து விட்டார். பெரும் சண்டை இரண்டு பேருக்கு மத்தியில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் என்னிடம் பேசும் போதெல்லாம் “நாங்க எழுதினா தானே உங்களுக்கு Project” என்று காரணமே இல்லாமல் என்மீது பாய ஆரம்பித்து விடுகிறார். பின்பு தான் தெரிந்தது: இது ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வெறுப்பு அல்ல என்றும் இது போன்று ஒரு சூழ்நிலை நம் மத்தியில் நிலவுகிறது என்பதையும் புரிந்துக் கொண்டேன். சரி, பேராசிரியர்களின் பதில் என்னவென்று இந்தப் பக்கம் வந்தால், அவர்களுடைய வெறுப்பு அதற்கும் அதிகம். “உன்னோட கதைய Syllabusல வைக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதே நான் தான்” என்று அவர்கள் பதிலளிக்கிறார்கள்.

எனக்கு இப்போது யார் பக்கம் நியாயம் இருக்கிறது இல்லை என்பது பொருட்டல்ல. பெரும்பாலான ஆசிரியர்களின் வெற்று வார்த்தைகளின் மூடத்தனத்தால் என்னைப் பல ஆண்டுகள் புத்தறிவு பெறாமல் இருளிலேயே வைத்திருந்ததைப் பல ஆண்டுகள் நான் அனுபவித்திருக்கிறேன். எதோ ஓரிரண்டு ஆசிரியர்கள் மாத்திரம் தான் அந்த சிறிய அறிவு தீபத்தை அணையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது படைப்பாளிகளின் தாக்குதல் அந்த ஓரிரண்டு பேர்கள் மீதுதான் தொடுக்கப்படுகிறது. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களை நான் சல்லிக் காசுக்கும் மதிப்பதில்லை. ஒரே அதிகாரம், அதட்டல்.

இப்போது என்னுடைய பிரச்சனையே இந்த இரண்டு சாராருக்கும் இடையே உள்ள போராட்டம் தான். இப்போது உங்களிடம் இருந்து எனக்கான பதில் யார் சரியானவர் என்பது கிடையாது. இதற்கான தீர்வை கொடுக்க உங்களால் மாத்திரமே முடியும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். காரணம் நான் உங்களில் ஒரு பேராசிரியருக்கான ஆளுமையைத்தான் முதலில் பார்த்திருக்கிறேன்/படித்திருக்கிறேன். அதற்குப் பின்புதான் என்னைப் பொருத்த வரையில் நீங்கள் ஒரு படைப்பாளி. ஒரு முறை ஆய்வின் மூன்றுத் தன்மைகளைப் பற்றி பேசியிருந்தீர்கள். ஒன்று கோட்பாட்டின்படியான ஆய்வு, இரண்டாவது தனிநபர் சொந்தக் கருத்துக்கள் சார்ந்த ஆய்வு. மூன்றாவது கல்விப்புலத்தின் ஆய்வு என்று. இவை மூன்றில் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வே நம்பகமானது என்பதையும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

இப்போது எதிர்காலத்தைப் பற்றிய என்னுடைய முடிவுகள் இரண்டு. ஒன்று மாதசம்பளத்திற்கு இனிமேல் வேலை செய்வது. தால்ஸ்தாயும் வேண்டாம், தாஸ்தாவஸ்கியும் வேண்டாம். இரண்டாவது, புரோமோஷனுக்காக பொறுப்பற்ற கட்டுரைகளை எழுதி என்னுடைய CVயை எப்படியாவது ஐம்பது பக்கங்களுக்கு நீட்டிப்பது. அதற்கு அநேக ஸ்காலர்ஷிப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான முன்மாதிரிகள் எனக்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் ரசனையைக் கொன்று வாசிப்பின் மகிழ்ச்சியைக் கொன்று நன்றாக வாழ்வேன். யார் கேட்கப்போகிறார்கள். ஒன்று பணம் பதவிக்காக வாழ்வது இல்லை என்றால் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள என் எதிர்காலத்தைத் தொடருவது. பக்தினை என்னுடைய எதிர்காலக் கனவாக வைத்திருந்தேன். நான் எந்த வழியை தெரிந்தெடுப்பது என்பதை உங்களுடைய பதில் தான் தீர்மானிக்கும். பதில் அளிக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை. குழப்பத்தில் என்னுடைய எஞ்சிய காலத்தைப் பயனற்ற விதத்தில் கழித்துவிடுவேன். நன்றி.

அன்புடன்

அ

*

அன்புள்ள அ

உங்கள் இக்கட்டும் சோர்வும் புரிகிறது. ஆனால் ஒன்று புரிந்துகொள்ளுங்கள், நம் சூழலில் உலகியல் வெற்றிகருதாது வேறெந்த விஷயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவருக்குமே இத்தகைய பெருஞ்சோர்வின் தருணங்கள் உண்டு. சொல்லப்போனால் அதுவே மிகுதி. இலக்கியமே கூட. நீங்கள் வெற்றிபெற்ற இலக்கியவாதிகள் என்பவர்களே கூட மிகமிகச்சிறிய வட்டத்திற்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே. இருட்டில் வழிதுழாவி நடப்பவர்கள் அனைவருமே

ஆனால் எந்தச்செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதற்கான நிகர்பலன் ஒன்றுண்டு என்று கூறவே நான் விழைகிறேன். ஏனென்றால் அதைநம்பியே நான் சென்றுகொண்டிருக்கிறேன். எனக்கும் சோர்வுக்காலங்கள் வரும். ஆனால் உடனே அந்த மூடுபனியை ஊதி அகற்றிவிடுவேன். ஏனென்றால் அது செயல்கொல்லி. அதில் கொஞ்சமேனும் மறைமுகமகிழ்ச்சி கொள்ள ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

கல்வித்துறை இன்றிருக்கும் நிலையில் எவ்வகையிலும் நம்பிக்கை கொள்ள இடமில்லை, எல்லா திசைகளிலும் சிறுமை என நான் அறிவேன். ஆயினும் முன்னால் வந்தமரும் மாணவர்களில் எங்கோ ஒரு கண்ணும் காதும் திறந்திருக்கிறது என நம்பவேண்டியதுதான். ஏனென்றால் நான் இன்றுவரை சந்தித்த நல்ல ஆசிரியர்கள் எவரும் வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் வெறுமையை உணர்ந்ததில்லை. வணிகர்கள், சினிமாப்பிரபலங்கள், உயரதிகாரிகள், அரசூழியர்கள் என பெரும்பாலும் அனைவருமே சென்றடையும் வெறுமை அது. ஆசிரியர்தொழில்  மட்டும் அதற்கு தன்னை அர்ப்பணித்தவரைக் கைவிடுவதே இல்லை ஆசிரியன் இறுதியில் அவனே சென்று அமரும் ஒரு பீடம் உண்டு.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2017 10:35

தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்

1

இனிய ஜேயெம் (சீனுவை சந்தித்தேன் அல்லவா :)

பாலாவின் அக்கறை கொண்ட நல்ல கட்டுரையை வாசித்தேன் , சில மாற்றுக்கள் மட்டும் ,

இந்திய அரசு ஆதார் வழி பணமில்லா பிளாஸ்டிக் கரன்சியை கொண்டுவந்துள்ளது , இறுதிப் பயனாளர்கள் பைசா செலவின்றி இணையம் இன்றி பணம் செலுத்த பெற அரசே வழி வகுத்துள்ளது ,

பக்கத்தில் உள்ள நாடார் கடைக்கு போகிறீர்கள் ,அவர் தன் சொல்போனில் 500-1000 ரூபாய் மதிப்புள்ள கைரேகை ஸ்கேனரை இணைத்துள்ளார் ,16 ரூபாய்க்கு அல்லது 50 ஆயிரம் ரூபாய்க்கு (10 ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை ஒருநாளைக்கு) பொருள் வாங்குகிறீர்கள் , உங்கள் ஆதார் கார்ட் அல்லது செல் எண்ணை உள்ளிடுகிறீர்கள் ,கைரேகை வைக்கிறீர்கள் , அதிகபட்சம் 5-8 வினாடிகளில் பணம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து நாடார் கணக்குக்கு மாறிவிடும் ,

உலகின் முதல் மின்னணு வாக்கு எந்திரம் உபயோகிக்கும் தேசம் உலகின் முதல் கைரேகை பாதுகாப்பு பண பறிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது ,மிகமிக பாதுகாப்பானது . முழுக்க இலவசம் -இருவருக்கும் , கடைக்காரர் மட்டும் இணையம் கொண்ட செல் வைத்திருந்தால் போதும் . வியாபாரம் தேவை என்கிறவர்கள் வைத்துக்கொள்வர் , பில் இல்லாமல் எல்லாம் எனக்கே என்பவர் ஏய்க்க முயல்வார்(இந்த செயலிக்கு பீம் என அம்பேத்கார் நினைவாக பெயர் வைத்துள்ளார்கள் , காகித நோட்டில் காந்தி ,நவீன இந்தியாவின் அடையாளத்திற்கு அம்பேத்கார் ,மகிழ்ச்சி)

பேடிஎம் போன்ற நிறுவனங்கள் முழுக்க உள்ளூர் மொழிகளில் இயங்குகின்றன ,ரேசன் கடைகள் தமிழில்தான் SMS அனுப்புகின்றன ,எனவே மொழிச்சிக்கல் கடக்க இயலாததல்ல , ( மேலும் உலகின் பீகாரான ஆப்ரிக்காவில் மொபைல் வழி பணப்பறிமாற்றம் மிக வெற்றிகரமாக நடந்துகொண்டுள்ளது ,நடத்துவது நம் ஏர்டெல்.

இரண்டாவதாக விவசாய வருவாய் குறித்து ,இரட்டை தொழில் செய்பவர்க்கு வரி என்றால் இன்று இருக்கும் விவசாய காதலை மக்கள் கைவிடுவர் ,விவசாய முதலீடு சுத்தமாக நின்றுவிடும் , விவசாய வருமான வரம்பு அல்லது எதாவது யோசிக்கலாம் .

அரங்கா

அன்புள்ள ஜெமோ

பாலா எழுதிய கடிதம் சிறப்பாக இருந்தது. அவரிடம் மோடியின் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பற்றிய ஆழமான அவநம்பிக்கை இருக்கிறது. அவர் முகநூலில் மிகவும் கடுமையாக எழுதியவற்றை நானும் வாசித்திருக்கிறேன். ஆனாலும் இந்தக்கட்டுரை முக்கியமானது என நினைக்கிறேன்

ஒன்றுதான் சொல்லவேண்டும். இந்தமாதிரியான முயற்சிகள் தோல்வியடையலாம். ஆனால் முயற்சிசெய்வதே பாவம் அதன் நோக்கமே ஏழைகளை அழிப்பதுதான் என லபோதிபோ கூப்பாடு போடும்போது போடுபவர்களின் கிரிடிபிலிடி தான் இல்லாமலாகும்

ஜெயராமன்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2017 10:31

என் சிறுகதைகள் ஒலிவடிவாக

என் சிறுகதைகளை ஒலிக்கோப்புகளாக வாசித்து யூடிய்யுபில் ஏற்றியிருக்கிறார் கிராமத்தான் என்னும் வாசகர். ஆர்வமுள்ள நண்பர்களுக்காக

சோற்றுக்கணக்கு

கோட்டி

ஓலைச்சிலுவை

ஊமைச்செந்நாய்

உலகம் யாவையும்

தாயார் பாதம்

யானைடாக்டர்

பெருவலி

மத்துறு தயிர்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2017 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.