Jeyamohan's Blog, page 677

November 21, 2022

தண்ணீரின்மை – உஷாதீபன்

அசோகமித்திரன் தமிழ் விக்கி தண்ணீர் தமிழ் விக்கி

வாழ்க்கையில் உன்னதமெல்லாம் இலவசம் – என்று அன்று ஒரு பழமொழி உண்டு. தெரிவிப்பவர் திரு அசோகமித்திரன்.  அந்த உன்னதத்தை நாம் மதித்து நடந்திருக்கிறோமா…? இலவசமாகக் கிடைப்பது எதுவுமே மதிப்பற்றதாகிப் போகுமோ? இயற்கையின் கொடையாக இருந்த அது அன்று இலவசம். கொடையாக இருந்து கொட்டித் தீர்த்ததைப் பாதுகாத்தோமா? வணங்கினோமா?  பாதுகாப்பாய் இருந்ததை மதிப்பாய்ப் பயன்படுத்தினோமோ? தேவை அறிந்து, பயந்து, பொறுப்பாய்ச்  சிக்கனமாய் உபயோகித்தோமா? எதுவுமில்லை நம்மிடம். இன்று லபோ…திபோ என்று அடித்துக் கொண்டு அதற்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தின் மாதாந்திரச் செலவுகளில் அதுவும் ஒரு முக்கிய அங்கம் வகிப்பதாகி விட்டது. அப்படியே செலவு மேற்கொண்டாலும் தடையின்றிக் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.  வெளியூர்களுக்குச் செல்கையில் கூஜாவில் எடுத்துக் கொண்டு போய் பொறுப்பாயும், சிக்கனமாயும், பாதுகாப்பாயும் பயன்படுத்திய அதை இன்று எவ்வளவு ஆனால் என்ன என்று கைவீசிப் பணம் கொடுத்து வாங்கி உபயோகிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். எல்லாம் காலத்தின் கோலம்.

எதிர்காலச் சந்ததி இதற்காக அடித்துக் கொண்டு சாகப் போகிறது என்கிற நிலை கண்டிப்பாக ஏற்பட்டே தீரும் என்று ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது சொல்லிச் சொல்லி நம்மை எச்சரிக்கைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எதையும் நாம் காதில் வாங்கிக் கொள்வதேயில்லை. அப்படிக் காதில் வாங்கியிருந்தால் இப்போது கிடைப்பதை சிக்கனமாய் உபயோகிக்கக் கற்றுக் கொண்டிருப்போமே? அப்படியா கவனத்தோடு இருக்கிறோம் நம் வீட்டில்? இல்லையே? சொல்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும்…வரும்போது பார்த்துக் கொள்வோம். என்றுதானே மெத்தனாய் இருக்கிறோம்….? தண்ணீர் எப்படியெல்லாம் நம்மைக் கவலைப்படுத்துகிறது? அன்றாடச் சிந்தனையில் அதன் தேவை கவலையுடன் நினைக்கப்படவில்லை என்று எவரேனும் இன்று சொல்ல முடியுமா?

ஊர் பேர் தெரியாத ஒரு பெண் குடத்தை வைத்துக் கொண்டு அலைவதைத் திரும்பத் திரும்பப் பார்த்ததன் விளைவாகத்தான் இந்தக் கதை எழுதப்பட்டது என்று மிகுந்த வருத்தத்தோடு கூறுகிறார் பெரியவர் அசோகமித்திரன். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதும் அந்த மனம் எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா? ம்ம்…பாவம்…சனம் தண்ணிக்காக எப்டி அலையுது….? என்று வாய் வார்த்தையாக வருத்தப்பட்டுக் கொண்டு தன் சொந்த வாழ்க்கையில் கரைந்து போகும் மனங்கள்தான் எத்தனையெத்தனை?

தான் காணும் எளிய மக்களை, அவர்கள் படும் துயரங்களை, சின்னச் சின்னக் காரியங்களிலெல்லாம் விட்டுக் கொடுத்து, பொறுமை காத்து, நஷ்டப்பட்டு, தன் கஷ்டங்களைப் பொருட்படுத்தாது சமன் செய்து, எப்படியெல்லாம் இந்த ஆத்மாக்கள் தங்கள் அன்றாடங்களைத் துயரத்தோடு  கடந்து செல்கிறார்கள்?  ஐயோ…இந்த மனிதர்களின் தீராத சோகங்களுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா? என்று மனம் வருந்தி, புழுங்கி, எதுவும் செய்வதற்கியலாது பேதலித்து நின்று, மனம் குமைந்து…தனக்குத்தானே அழுது, இறைவா…இவர்களின் துயரைத் துடைத்தெறி…அனுதினமுமான இந்த ஆதரவற்ற, சக்தியற்ற, வசதி வாய்ப்புக்கள் அற்ற எளிய மனிதர்களின் கஷ்டங்களைப் போக்கு…..என்பதான  வேண்டுதல் மனநிலையில்-     மனித மனத்தின் அடியாழங்களிலிருந்து  அசோகமித்திரன் வெளிக்கொண்டு வருகிற கனிவும், ஈரமும், நேயமும், கருணையும் வற்றாத பெரு நதியாய்க் காலம் கடந்தும் பெருகி நிற்கும் விதமாய் இப்படி ஒரு படைப்பை நமக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியவர் அசோகமித்திரனை நாம் வெறும் எழுத்தாளனாய்க் கொள்ளாமல் மனித தெய்வமாய்க் கொண்டாட   வேண்டாமா?

வெறும் தண்ணீர்ப் பஞ்சத்தை, கஷ்டத்தை சொல்லிச் செல்லும் கதையா இது? அந்தக் கஷ்டங்களின் ஊடாகப் பயணம் செய்யும் ஜமுனாவும், சாயாவும் அவர்களின் தேய்ந்த வாழ்க்கை நிகழ்வுகளில் உற்றாரும், உறவினரும் இன்றி, இருப்போரின் துணையினை எதிர்பார்த்து நிற்காமல், தன் கையே தனக்கு  உதவி, நம் முயற்சியே நம் வாழ்க்கை என்று இருப்பதை ஈடுகட்டிக் கொண்டு செல்லும் பயணம் எத்தனை துயரம் நிறைந்தது? எத்தனை சமரசங்களைக் கொண்டது? எத்தனை வேதனைகளை உள்ளடக்கியது?

[image error]

வாழ்க்கை என்னதான் பிரச்னைகள் உடையதாய் இருந்தாலும், பற்றாக்குறையாய் விடிந்தாலும், அந்தப் பிரச்னைகளை அதன் போக்கிலேயே பொறுமையாய்க் கையாண்டால், நாளும் பொழுதும் தானாய்க் கடந்து போகும் என்கிற அரிய தத்துவத்தை, அனுபவத்தை ஜமுனாவின் வாழ்க்கை நமக்கு எவ்வளவு தெளிவாய்க் கற்றுக் கொடுக்கிறது?

அந்த பாஸ்கர் ராவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை அக்கா…அவனைப் பார்த்தாலே அடிச்சு விரட்டணும்போல இருக்கு…ஒரு அசிங்கமான மனுஷனை எப்படி இத்தனை  சாதாரணமா நீ எதிர்கொள்றே? அவனோட எப்படி இவ்வளவு சகஜமா உன்னால பேச முடியுது? நடு வீட்டுக்குள்ள சர்வ சாதாரணமா வந்து குந்திக்கிறான். வெட்கங்கெட்ட எவனும் செய்யக் கூடிய காரியமா பட்டவர்த்தனமா அது தெரியுது. ஆனா அவனை நீ உனக்கு ரொம்ப வேண்டியவன் போல வரவேற்கிற…உடகார்த்தி வச்சுப் பேசறே…டீ வரவழைச்சிக் கொடுக்கிறே… உன்னை சீரழிச்சவன்ட்ட உன்னால எப்படி இத்தனை சமாதானமா நடந்துக்க முடியுது…? நா உறாஸ்டலுக்குப் போறேன்…உன்னோட இனிமே இந்த வீட்ல இருக்க விரும்பல…. – இது சாயாவின் சகிக்க முடியாத மனநிலை.

சாயா…அடியே சாயா…நீயும் என்னை விட்டுப் போயிட்டேன்னா…அப்புறம் எனக்குன்னு யார்டி இருக்கா? தெனம் காலைல எந்திரிச்சு உன் முகத்தைப் பார்த்துத்தானேடி நானே என் நாளை ஆறுதலா, சமாதானமா ஆரம்பிக்கிறேன்…நீதானேடி என் நெஞ்சுக்கு  ஆறுதல்…என் ஒரே ரத்த உறவு நீ மட்டும்தான்னு நினைச்சிண்டிருக்கேன்…நீயும் போறேங்கிறியே…?

அந்த பாஸ்கர்ராவ் இனிமே இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது….அப்டீன்னா சொல்லு….நான் இருப்பேன்…அந்தப் பொறுக்கியக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை…… – ஜமுனா மௌனம் காக்கிறாள்.

எனக்கு வேறே வழி? அவனை விட்டா….நான் யாரைத் தேடிப் போவேன்…என்னிக்காவது ஒரு நாள் எனக்கு விடியாதா?

உனக்கு விடியாதுக்கா…விடியாது…அவன் உன்னைப் பயன்படுத்திக்கிறான் தன் லாபத்துக்காக…உன்னை சீரழிச்சிட்டுக் காணாமப் போயிடுவான்…. – சொல்லிவிட்டு சாயா போயே விடுகிறாள்.

ஜமுனா தனியளாக்கப்படுகிறாள். கிடந்து குமைகிறாள். எத்தனை நாட்கள் எத்தனை இரவுகள்? யார் யாரோ வந்து வந்து…எவரெவர் திருப்திக்கோ அலைந்து, சீரழிந்து…..இந்தப் பெண் ஜென்மம் என்பது எனக்கு மட்டும் ஏனிப்படி? சாயா சொன்னது நிஜமாகி விட்டதோ?

நீதாண்டா எங்கக்காவச் சீரழிச்சே…இப்போ அவ வயித்துல சுமந்து நிக்கிறாளே…நீதான் அவளைக் கட்டிக்கணும்….கையில் குடையை எடுத்துக் கொண்டு அடிக்கப் போகும் சாயா…அவளைத் தடுக்கும் ஜமுனா…நீங்க கிளம்புங்க… என்று பாஸ்கர் ராவை கிளப்பும் நிதானம்…..அந்த நிலையிலும் தனக்கு ஒரு நல்ல நாள் தேடி வராதா என்று அலையும் அவள் மனது.

ஜமுனாவின் வாழ்க்கை அவலங்கள் நம் மனதை உலுக்கி எறிந்து விடுகின்றன. ஆனாலும், இதுதான் தன் வாழ்வு என்று  சுற்றியிருக்கும் சுற்றங்களைத் தன் நட்பாய், உறவாய் நினைத்துக் கொண்டு, டீச்சரம்மாவோடு அவள் தண்ணீருக்கு அலைவதும், அதற்காக அதிகாலை அதிசீக்கிரமாய் எழுந்து, ஊரும் உலகும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரை மைல் நடந்து ஒரு வீடடைந்து, அடி பம்ப்பை பட்டுப் பட்டென்று அடித்து குடத்தில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு திரும்புவதும், வாயேன்…ஒரு வாய் காபி சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று  ஆதரவாய் அழைக்கும் அந்த டீச்சரம்மாவின் நேசத்தை மறுக்க முடியாமல் அவள் வீட்டில் போய் நிற்பதும், அந்த வீட்டில் உள்ள இரண்டு கிழங்கள் அவளை விரட்டியடிப்பதும், கண்ட நாயெல்லாம் எதுக்கு இங்க வருது? என்று கேவலமாய்ப் பேசுவதும்… எதுவும் பதில் சொல்லாமல், கோபப்படாமல், டீச்சரின் அன்பிற்காக, அவளின் ஆதரவிற்காக, வயதில் பெரியவர்கள் ரெண்டு வார்த்தை தூஷணையாய்ச் சொல்லிவிட்டால்தான் என்ன? என்று பொறுமை காப்பதும் அடேயப்பா…இந்த வாழ்க்கையின் சின்னச் சின்ன அசைவுகள்…எவ்வளவெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறது இந்தக் கதாபாத்திரத்தின் மூலமாய்….எப்படியெல்லாம் மனிதர்கள் துயர்ப்படுகிறார்கள்? எப்படி, எங்கெங்கெல்லாம் வசை வாங்குகிறார்கள்? எவ்வெவற்றையெல்லாம் பொறுத்துப் போகிறார்கள்? எவ்வளவு சகிப்புத் தன்மையைத்தான் உள்ளடக்கி நீந்துகிறார்கள்?

மனிதன் வறுமையில் உழல்வதும், இல்லாமையில் சீரழிவதும், ஒழுங்கில்லாத வாழ்க்கையில் கிடந்து அவதியுறுதலும், மீண்டு வெளி வர இயலாமல் தவித்தலும்…அத்தனையும் இருந்தாலும்…மூழ்கி முக்குளித்து அதில் சலிப்பில்லாமல் விரக்தியில்லாமல் பொறுமையோடும் நிதானத்தோடும் பயணித்தல் என்கிற அனுபவம் ஒருவனை எத்தனை செழுமையானவனாக ஆக்கி உலவ விடுகிறது?

ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட  வாழ்க்கையை எத்தனை சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்கிறார்கள்? டீச்சரம்மாவை ஏன் ஜமுனாவுக்குப் பிடித்துப் போகிறது? தனக்கு ஆதரவாக இருக்கிறாள் என்பதற்காக மட்டுமா?

ஸ்கூல்லர்ந்து வந்து இன்னும் ஒண்ணுக்கு ரெண்டுக்குக் கூடப் போகலை…உடனே பாத்திரத்தை தூக்கிண்டு பாலுக்கு ஓட வேண்டிர்க்கு…அதுக்கப்புறம் தண்ணி…அதுக்கப்புறம் கறிகாய்…பிறகு மளிகைச் சாமான், அதுக்கப்புறம் அம்பத்திரண்டு காம்போசிஷன் நோட்டுத் திருத்தணும்…அதுக்குள்ளே மருந்து ஏதாச்சும் தீர்ந்து போயிருந்தா அதை ஓடிப்போய் வாங்கி வச்சாகணும். அதுக்கப்புறம் இந்தக் கிழக் கோட்டான்களுக்கு பலகாரம் பண்ணிப் போட்டாகணும்…லாண்டரிக்குப் போய் துணியை வாங்கி வரணும்…பெட்பானை ஃபினாயில் போட்டுக் கழுவி வைக்கணும்…நாளைக்கு இன்ஸ்பெக் ஷனுக்கு நோட்ஸ் ஆப் லெசன்ஸ் சரிபார்த்து வைக்கணும்…..- ஜமுனா….அவளையே நோக்குகிறாள்…அக்கா…அக்கா…என்கிறாள். பிறகு அழுது விடுகிறாள். டீச்சர் மார்பில் சாய்கிறாள்….- இவளுக்குமுன் தன் துயரமட் ஒன்றுமில்லை என்ற எண்ணம் வந்து விடுகிறது. அல்லது இவள் சுமக்கும் சுமைக்கு முன்னால் நான் எம்மாத்திரம்? என்கிற எண்ணம் மேலெழுகிறது. எத்தனை உருக்கமான காட்சி…

தன் துயருக்குச் சமாதானம் தேடி நிற்கும் இடத்தில் இருக்கும் துயரைக் கண்டு மனம் நெகிழ்ந்து, டீச்சரம்மாவை ஜமுனா அரவணைக்கும் இந்தக் காட்சி மனித மனத்தை ஆட்டிப் பிழிந்து விடுகிறதே…!

வெறும் தண்ணீர்க் கஷ்டத்தைச் சொல்லவா இந்த நாவலை எழுதினார் பெருந்தகை அசோகமித்திரன். வாழ்க்கையின் அனுபவங்களை, அவலங்களை, முதிர்ச்சியை, பக்குவங்களை சாதாரண மக்களின் வாழ்வோட்டத்தின் ஊடாக எப்படிக் கண் முன் கொண்டு வந்து மனது உருக உருக நிறுத்துகிறார்…?

ஆதரவில்லாத இரண்டு பெண்கள்…உறவுகள் நெருங்க விடாத விலகலான வாழ்க்கை அமைவில், ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து கொண்டு, மனச் சடவுகளை விலக்கிக் கொண்டு, பொருந்தாத சூழலை அனுதினமும் சமாளித்துக் கொண்டு வாழ்ந்து கழித்தலே வாழ்க்கை என்று சின்னச் சின்ன அடியாக எடுத்து வைத்து, நாட்களைக் கழிக்கும் அவலம் ஜமுனா-சாயா வாழ்வில் எத்தனை நுணுக்கமாய்ப் பகிரப்பட்டிருக்கிறது?

அவளை உறீரோயின் ஆக்குகிறேன் என்றும், பிறகு  இரண்டாவது கதாநாயகியாகவாவது ஆக்கி விடுவேன் என்றும் விடாது சொல்லிக் கொண்டு அவளைத் தன் வசமாக்கி இழுத்துச் சென்று சீரழிக்கும் பாஸ்கர்ராவும், என்றாவது தனக்கு விடியாமலா போகும் என்று அவன் பின்னாலேயே நம்பிக்கையை விடாது அலையும் ஜமுனாவும், இனி வேறு எங்கென்று செல்வது என அவனே சதம் என்று நம்புவதும், அதனை, அவனை முற்றிலும் நம்பாது அவளை எச்சரிக்கும் சாயாவும்…அந்தப் பகுதியின் தண்ணீருக்காக அலைந்து அல்லல்படும் மக்கள் பலரின் கவனிக்கப்படாத வாழ்க்கையின் ஊடான நெகிழ்வான பயணமாக அவர்களின் வாழ்க்கைப் பாடுகள் எத்தனை உருக்கம் நிறைந்தவை?   நாவல் நம் மனதை பிழிந்து எடுத்து விடுகிறது. அங்கங்கே சிலவற்றைச் சுட்டிக் காட்டியதே இப்படி இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. முழு நாவலையும் வரி வரியாய் விவரிப்பதென்றால்? ஒரு புத்தகமே எழுதலாம்….உலகின் மிகச் சிறந்த பத்து நாவல்களுள் ஒன்றாய் பேசப்படும் இந்தத் தண்ணீர் நாவல்…ஒரு வாழ்க்கைப் பாடம்.

சென்ற நூற்றாண்டில் தமிழில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று என மதிப்பிற்கும்  மரியாதைக்குமுரிய அசோகமித்திரனின் இந்தத் தண்ணீர் நாவல் நிறுவப்படுகிறது.

உஷா தீபன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2022 10:31

தேவர்களின் நடனம் – கடிதம்

தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க

எழுகதிர் வாங்க 

அன்புள்ள ஜெ,

‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்‘ படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ‘உயிரின் மூலவிசை‘ கட்டுரையில் மாயாண்டிச்சாமி பற்றி இப்படி எழுதியிருந்தீர்கள்

“மாயாண்டிச்சாமி தன் வாழ்நாள் முழுக்க நல்லவை எவற்றையும் செய்யவில்லை. இளமையிலேயே மாயாண்டி எப்படி இறப்பார் என அருள்வாக்கு வந்துவிடுகிறது. அவர் எவருக்கும் அடங்காதவராக வளர்கிறார். தனக்கு முதல்மரியாதை தராத பூசாரியின் தாம்பாளத்தை எட்டி உதைக்கிறார். தன்னை பிடிக்கவந்த அரசரின் படைகளை ஒளிந்திருந்து அடித்து துரத்துகிறார். விரும்பிய பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்து அனுபவிக்கிறார். நூற்றெட்டு பெண்களை அப்படி அவர் அடைகிறார். கடைசியில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வஞ்சகமாகக் கொல்கிறார்கள். அவர் ஆன்மா அடங்காமல் வந்து ‘எனக்கு கோழி கொடு! கொடை கொடு! இல்லாவிட்டால் உன் குலத்தை அழிப்பேன்‘ என்கிறது. மக்கள் அஞ்சி அவரை வழிபடுகிறார்கள்.

மாயாண்டிசாமி பிறந்த நாள் முதல் கொல்லப்படுவதுவரை செய்தவை அனைத்தும் காமத்தாலும் ஆணவத்தாலும் சுயநலத்தாலும் செய்யப்பட்ட வீரசாகசங்கள்தான். அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டபோது தெய்வமானார். சந்தன வீரப்பனை அவரது சாதியினர் தெய்வமாக வழிபடுவதன் பண்பாட்டுகூறு இதுவே“.

இந்த கட்டுரையை படித்தபின் நீங்கள் எழுதிய ‘கரவு‘ சிறுகதை நினைவுக்கு வந்தது. அச்சிறுகதையில் தங்கனை கண்டதும் நின்று துள்ளி குதித்து சுழன்று எழுந்த மாயாண்டி சாமி “டேய், எவண்டா என் தோழனை கட்டியது? அறுத்துவிடுடா அவனை!”  என்று கூறியதையும், சுடலை மாடனாக மாறிய தங்கனும் மாயாண்டிசாமியும் சேர்ந்து  வெறியாட்டம் ஆடியதையும் இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இனி அந்த ஆட்டத்தை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்.

– மணிமாறன்

 *

அன்புள்ள மணிமாறன்,

தொல்குடித் தெய்வங்கள் பெரும்பாலும் அப்படித்தான் உள்ளன. மனிதர்கள் போடும் எல்லா ஒழுக்க, அற கணக்குகளுக்கும் அப்பாற்பட்ட ஆற்றல்கள் அவை. இந்தியன், சீயஸ் எல்லாமே அப்படித்தான். அவற்றை புரிந்துகொள்ள நவீனத்துவம் (மார்க்ஸியம்) மற்றும் அதற்கு முந்தைய நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய மனநிலைகளை கடந்துசெல்லவேண்டும். அதைத்தான் பின்நவீனத்துவ உளநிலை என்கிறோம்.

ஜெ

—————————————————

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் மின்னூல் வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 21, 2022 10:31

November 20, 2022

இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்-2

ஏ.ஜே.அயர்

பின்நவீனத்துவச் சூழல் நமக்கு நவீனத்துவத்தின் தர்க்கம் சார்ந்த, உலகியல் சார்ந்த தளைகளில் இருந்து மேலெழும் வாய்ப்பை அளித்தது. பல தர்க்கங்களால் ஆனது நம் அறிவுக்கட்டுமானம். உதாரணமாக, வரலாறென்பது ஒரு வகை தர்க்கபூர்வக் கட்டமைப்பாக நம் மூளைக்குள் உள்ளது. மாற்றுவரலாறுகளை புனைவதன் வழியாக நாம் அந்த கட்டமைப்பின் சிறையில் இருந்து வெளியேறலாம் என்று பின்நவீனத்துவச் சூழல் நமக்குக் காட்டியது. நம் தொன்மங்களை அவ்வண்ணம் மறுபுனைவு செய்யலாம். நம்மையே நாம் மறுபுனைவு செய்துகொள்ளலாம். வரலாறு, மரபு, தனிமனிதன் எல்லாமே புனைவுகள் எனும்போது அது அளிக்கும் வாய்ப்புகள் முடிவற்றவை. பின்நவீனத்துவம் அந்த வாய்ப்பை அளித்தது உன்னதம் என அது சொல்லும் அதீதநிலையை எட்டும்பொருட்டே.

ஆனால், இந்தியாவுக்கு பின்நவீனத்துவம் வந்தபோது அது திருப்பி போடப்பட்ட நவீனத்துவமாக இருந்தது. நவீனத்துவம் மேலோட்டமாக எதையெல்லாம் முன்வைத்ததோ  அதையெல்லாம் மறுப்பது மட்டுமே பின்நவீனத்துவம் என்று இங்கே புரிந்துகொள்ளப்படுகிறது. நவீனத்துவம் வடிவ ஒருமை, மையம், இலக்கு ஆகியவற்றை கொண்டிருந்தது. ஆகவே  வடிவமின்மை, மையமின்மை, நோக்கமின்மை ஆகியவை மட்டுமே பின்நவீனத்துவம் என்றும்; நவீனத்துவம் தனக்கென வைத்துக்கொண்ட தற்கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறிச் செல்வதே பின்நவீனத்துவம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆபாசம், பாலியல்மீறல், கொடூரச்சித்தரிப்புகள் மட்டுமே பின் நவீனத்துவம் என்று நம்பும் ஒரு சூழல் இங்கு உருவாகியது.

அதேசமயம், இந்தியாவின் பின்நவீனத்துவரிடையே ஒரு குறிப்பிட்ட இயல்பைக் காணலாம். அவர்கள் என்னதான் மீறல், கலகம் என்று பேசினாலும் முன்னர் நவீனத்துவர் பேசிய அதே அரசியலையே தாங்களும் பேசுவார்கள். அந்த அரசியல் சரிநிலைகளை மீறவே அவர்களால் இயலாது. இங்கே ஆச்சரியங்கள் ஏராளம். தங்களை பின்நவீனத்துவர் என அறிவித்துக் கொண்ட பலர் பல இலக்கியப்  படைப்புகளை விமர்சித்ததும் நிராகரித்ததும் அவை ’முற்போக்கான’  ‘அரசியல் சரிநிலைகொண்ட’ நிலைபாடுகளை வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்ற கோணத்திலேயே. இந்தியச் சூழலில் பின்நவீனத்துவம் என்பது முந்தைய நவீனத்துவகால அரசியலை, இன்னும் சொல்லப்போனால் எளிமையான கட்சியரசியலை,  கொஞ்சம்  ‘ஆபாசமான’ மொழியில் சொல்வது மட்டுமே என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டது.

தர்க்கபூர்வமாக, புறவயமாக எண்ணி எடுக்கப்படும் அரசியல்நிலைபாடுகள் கொண்ட எழுத்து எப்படி பின்நவீனத்துவச் சூழலுக்கு உரியதாக இருக்கமுடியும்? எப்படி அதில் அதீதங்களும், மயக்கநிலைகளும், பிறழ்வுகளும், உச்சங்களும் வெளிப்பட முடியும்? முப்பதாண்டுகளுக்கு முன் தமிழின் நவீனத்துவச் சூழலில் பேசப்பட்ட அளவுக்குக்கூட உளம்கடந்த, அதர்க்கநிலை எழுத்துவெளிப்பாடுகள் இன்று பேசப்படுவதில்லை. வெங்கட் சாமிநாதன் முன்வைத்த டிரான்ஸ் போன்ற கருத்துக்களுக்குக்கூட இன்று இடமில்லை. இன்று இலக்கியத்தில் புகுந்து கருத்துக்களை முன்வைக்கும் பல விமர்சகர்களின் பேச்சும், உளநிலையும் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் தரத்திலானவை.

நவீனத்துவ காலகட்டத்திற்குப் பின்பு ஒரு விசித்திரச் சூழலும் உருவாகியது. நவீனத்துவ காலகட்டத்தில் இலக்கியத்தின்மேல் கவனம் இருந்தது. இலக்கியவாதிகள் முதன்மை ஆளுமைகளாக கருதப்பட்டனர். அப்போது உலகமெங்கும் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாடும் தெளிவாக இருந்தது. அந்த வேறுபாட்டை நவீனத்துவர்கள் சார்த்ர் முதல் சுந்தர ராமசாமி வரை வலியுறுத்திக்கொண்டும் இருந்தனர். தமிழ்ச்சூழலில் நவீனத்துவர்களுக்கு புகழ் இருக்கவில்லையாயினும் கவனமும் முக்கியத்துவமும் இருந்தது. ஆனால் பின்நவீனத்துவச் சூழலில் இலக்கியவாதிக்கும் இலக்கியத்திற்கும் இருந்த அந்த முக்கியத்துவம் இல்லாமலாகிவிட்டிருக்கிறது.

அதற்குப் பல காரணங்கள். முதன்மையாக , ஊடகப்பெருக்கம். இங்கே மின்னூடகம், சமூகஊடகம் ஆகியவை எல்லாரையும் எப்படியோ முன்னிறுத்த ஆரம்பித்தன. சாமானியர் தங்களை தாங்களே பார்த்து, கேட்டு மகிழ ஆரம்பித்தனர். சட்டென்று வணிகக்கேளிக்கை எழுத்து இல்லாமலாகியது. பின்நவீனத்துவர்கள் அவர்களே இலக்கியத்துக்கும் கேளிக்கைக்குமான வேறுபாட்டை மறுத்து, அழித்தனர்.  அத்துடன் நூல்வெளியீடும் வாசிப்பும் வணிகமயமாகி, இலக்கியமானாலும் தத்துவமானாலும் விற்பனையே முதன்மை அளவுகோல் என்னும் நிலை உருவானது.

பின்நவீனத்துவ எழுத்து தன் அறம் சார்ந்த பொறுப்புகளை துறந்தது. அது எவருக்கும் வழிகாட்டுவதாகவோ, எந்த கனவையும் முன்வைப்பதாகவோ இல்லாமலாகியது. தன் பணி ஏற்கனவே எழுதப்பட்டவற்றை உடைப்பதும் விளையாடுவதுமே என அதுவே சொல்லிக்கொண்டது. எனில் நான் ஏன் அதை கவனிக்கவேண்டும், எனக்கென்ன பயன் அதனால் என வாசகன் கேட்கலானான். நவீனத்துவ காலம் வரை இலக்கியத்தை தன் சொந்த வாழ்க்கையை விளக்கிக்கொள்ள, அதில் தன் தேடல்களை துலக்கிக்கொள்ள மக்கள் தேடிப் படித்தனர். பின்நவீனத்துவ எழுத்துக்கு அத்தகைய வாழ்க்கை சார்ந்த வாசிப்பே இல்லை. அது எவருக்கும் எதையும் அளிப்பதில்லை. அது ஏற்கனவே இலக்கியத்தை ஒரு களமாக எடுத்துக்கொண்டு அதில் விளையாடிக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே வாசிக்கப்படுகிறது.

அறுதியாகச் சொல்லவேண்டியது, பின்நவீனத்துவ யுகம் என்பது இலக்கிய விமர்சனத்தின் அழிவின் காலகட்டம் என்பதே. இலக்கிய விமர்சனம் உருவாகி நிலைபெற்ற இருநூறாண்டுகளில் அது தனக்கென உருவாக்கிக்கொண்ட பணிகள் மூன்று. இலக்கியத்தை வாசிக்கப் பயிற்சி அளித்தல், இலக்கியத்தின் மீதான கூட்டுவாசிப்பை உருவாக்குதல், இலக்கியமதிப்பீடுகளை நிலைநிறுத்துதல். பின்நவீனத்துவமே விமர்சகர்களால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் கழுவிய நீரில் பிள்ளையையும் தூக்கி வீசியதற்கு மிகமிகச் சரியான உதாரணம் பின்நவீனத்துவ விமர்சனம்தான்.

இது புதியது அல்ல. ஏற்கனவே தத்துவத்தில் இது நிகழ்ந்தது. மேலைக்கல்விச்சூழலில் உருவான புறவயத்தர்க்கவாதம் (Logical Positivism) தத்துவத்தையே கிட்டத்தட்ட அழித்துவிட்டிருக்கிறது. தத்துவவிமர்சனமே தத்துவம் என ஆனதே புறவயத் தர்க்கவாதம். ஏ.ஜே.அயர் போன்றவர்கள் முன்வைத்த புறவயவாத அலை முதலில் மீபொருண்மை (Metaphisics) யை  அடித்துக் காலிசெய்தது. எல்லாவகையான இலட்சியவாதத்தையும், அறவிவாதத்தையும் மறுத்து தத்துவத்தில் இடமில்லாததாக ஆக்கியது. எது அன்றாட உண்மையோ அதுவே தத்துவம் உசாவவேண்டியது என வாதிட்டது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு தானும் அழிந்தது. பெருங்கனவுகளை உருவாக்குவதே தத்துவத்தின் பணி. முகிலில் ஏணி வைத்து ஏறுவது போல. அது இல்லையென்றானால் அதன்பின் எளிமையான செயல்முறைத் தர்க்கமே தத்துவமென எஞ்சியிருக்கும்.

இலக்கியத்திற்கு பிரெஞ்சு பின்நவீனத்துவ விமர்சனம் செய்ததும் அதையே. எந்த எழுத்தையும் உடைத்து விளையாடுவதே வாசிப்பு என அது கூறியது. அதற்கான பயிற்சியை அளிக்கும் விமர்சகன் படைப்பாளியைவிட ஒரு படி மேல் என வாதிட்டது.  ‘Author is dead! Longlive the critic!’ என்பதே அதன் நடைமுறைக் கோஷம். ‘No text, only context’ என்னும் பின்நவீனத்துவ கோட்பாட்டின் மெய்யானபொருள் கூடவே இணையும் ‘…and we are the context makers’ என்ற விமர்சகனின் உள்ளக்குரல்தான். பின்நவீனத்துவ விமர்சனம் முதலில் இலக்கியப்படைப்பை செயற்கையான மிகைத்தர்க்கங்களால் ஊடுருவி சிதைத்து அழித்தது. வாசிப்பை பொருளற்றதாக ஆக்கியது. பின்னர் தானும் அழிந்தது. (அல்லது அலன் சோக்கல் அதை கொன்றார்)  சரியானபடிச் சொல்லவேண்டும் என்றால் அது ஒரு பிரெஞ்சு இலக்கியத் தற்கொலைத் தாக்குதல்.  இன்று உலகமே அதை உணர்ந்திருக்கிறது. உலகம் முழுக்க மீளும் முயற்சிகள் நிகழ்கின்றன.

சோக்கல்

இந்த கோணலான அறிவுத்தாக்குதலின் விளைவாக உலகம் முழுக்கவே இலக்கியத்தில் அன்றாடத்தன்மை மட்டுமே எழுத்து என ஆகியது. கனவுகளில்லாத, இலட்சியங்கள் இல்லாத, ஆன்மிகமோ கவித்துவமோ இல்லாத அன்றாடம். அதற்கு இயல்பாக எந்த ஆழமும் இல்லை. ஆகவே ஆழ்பிரதி (subtext) ஐ உருவாக்கும் பொருட்டு அதை சிக்கலாக ஆக்கினார்கள். ஒரே கதைக்குள் ஒன்பது கதை சொல்வது, கொண்டுகூட்டிப் பொருள்கொள்ள வைப்பது, ஒரு எழுத்தை விட்டுவிட்டு எழுதுவது, கதையை புதிராக ஆக்குவது போன்ற அபத்தமான புனைவு விளையாட்டுக்கள் உருவாயின. பத்தாண்டுகளுக்குள்ளாகவே அவையும் சலிப்பூட்டி,இன்று  மறைந்துவிட்டிருக்கின்றன.

இந்தியச் சூழலில் புனைவின் புதிர்விளையாட்டு பெரிதாக எடுபடவில்லை. பதிலுக்கு இங்கே ஒரு குறிப்பிட்ட வகை எழுத்து உருவானது. ஐரோப்பா நம்மிடம் சொல்கிறது ‘நீ பிற்பட்ட தேசத்தைச் சேர்ந்தவன், உன்னைச் சுற்றி ஏராளமான இருளும் அழுக்கும் இருக்குமே? அதை எழுது. அது விளிம்புநிலை எழுத்து’. அந்த வாய்ப்பைப் பிடித்துக்கொண்டோம். இன்று இந்திய மொழிகளில் வெளிவரும் எழுத்துக்களில் கணிசமானவை எழுதுபவர்களால் எந்த வகையிலும் நேரடியாக அறியப்படாத செயற்கையான கொடூர நிகழ்வுகள் கொண்ட அதீத உலகங்களின் சித்தரிப்புகள். கொலைகள், பாலியல் பிறழ்வுகள் ஆகியவற்றை இந்த ’லேபில்’ கொடுத்து எழுதினால் அவற்றை கிளுகிளுப்புக்காக படிக்கும் பொதுவாசகனும் நூலை வாங்குவான். இன்று இலக்கியம், வணிக இலக்கியம் என்னும் வேறுபாடு அழிந்துள்ள சூழலில் விற்பனையே அந்த செயற்கைக்கொடூர எழுத்திற்கு இலக்கிய அங்கீகாரமும் ஆக கருதப்படும்.

(மேலும்)

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 10:35

அம்புலிமாமா ஏன் நின்றது?

ஏறத்தாழ எழுபது ஆண்டுக்காலம், இந்தியக்குழந்தைகளின் கனவை சமைத்த சிறுவர் இதழ் அம்புலி மாமா. மூன்று தலைமுறைகள் அதை வாசித்து வளர்ந்துள்ளனர். அதைச்சார்ந்த இனிய நினைவுகள் இந்தியாவில் எங்கும் உண்டு. அத்தகைய ஓர் இதழ் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வந்திருந்தால் அது இப்போது மிகப்பெரிய ’கருத்துமுதலீடு’ ஆகி காப்புரிமைகள், திரைவடிவங்கள் வழியாக கோடிகளை அறுவடை செய்துகொண்டிருக்கும். ஆனால் அம்புலிமாமா ஆதரவில்லாமல் நின்றுவிட்டது.

ஏன்? அம்புலிமாமா முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டது. இந்தியாவின் காவியப்பின்னணி, நாட்டார்பின்னணியை முன்வைப்பது. இலட்சியவாதமும் அறவுணர்வும் அதன் பேசுபொருள்.

நாம் சொல்லும் இந்தியத் தன்மை கொண்ட எதையும் உதாசீனம் செய்யவும், அமெரிக்கா உருவாக்குவனவற்றை பாய்ந்து கொள்முதல் செய்யவும் நாம் பழகிவிட்டிருக்கிறோம். நமது கனவுகள் மேற்குநோக்கியவை. நாம் ஒரு சமூகமாகவே அமெரிக்கா நோக்கி நகர்பவர்கள், நம் இனவெறி, சாதிவெறி, மொழிவெறி, மதவெறி ஆகியவற்றைச் சுமந்தபடி அங்கே செல்கிறோம்.

அம்புலிமாமாவைவும் அதைப்போன்ற இந்திய சிறுவர் இதழ்களையும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ‘ஆய்வு’ என்ற பேரில் தாக்கிவந்தனர். அதில் சாதியம் மதவாதம் எல்லாவற்றையும் கண்டடைந்தனர். நம் கல்வியமைப்புகள் அதற்கு நிதியுதவி செய்தன. வெளிநாட்டுப் பல்கலைகள் ஆதரவளித்தன. அம்புலிமாமாவின் செல்வாக்கு 1990 களிலேயே இல்லாமலாகிவிட்டது. அதற்கு முன்பு அணில், கோகுலம் போன்ற சிறுவர் இதழ்கள் நின்றுவிட்டன.

அந்த ‘வெற்றிடத்தில்’ இங்கே அமெரிக்க சிறுவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், வரைபடக் காணொளிகள் நுழைந்தன. இந்தியக் குழந்தைகளின் உள்ளம் திட்டமிட்டு திருடப்பட்டது. ஐரோப்பியத் தொன்மங்களிலுள்ள ஆக்ரமிப்புத்தனம், நுண்ணிய இனமேட்டிமைத்தனம் பற்றி எந்த ‘ஆய்வும்’ நிகழ்வதில்லை. நிதி கிடைப்பதில்லை என்பதே காரணம். தனிப்பட்ட முறையில் செய்தாலும் அந்த ஆய்வுகள் நம் ஆங்கில ஊடகங்களில் முன்னிலைப்படுவதுமில்லை.

இப்போது பாகுபலி முதல் பொன்னியின் செல்வன் வரை ஒரு இந்திய சுவை குழந்தைகளிடம் அறிமுகமாகிறது. ஆகவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் படங்கள் எவ்வளவு ‘ஆபத்தானவை’ என நிறுவும் ஆய்வுகள் கல்வித்துறையில் நிகழும், ஆங்கில ஊடக் அறிவுஜீவிகள் முதலில் எழுத உள்ளூர்மொழி அறிவுஜீவிகள் வழிமொழிந்து எழுதுவார்கள். இப்போதே அது தொடங்கிவிட்டது என தெரியவந்தது.

இன்று இந்திய சிறுவர் காட்சியூடகம் எவ்வளவு பெரிய தொழில் என நான் அறிவேன். தமிழ்நாட்டில் அது இங்குள்ள மொத்த சினிமா தொழில் அளவுக்கே பெரியது. இது தவிர பொம்மைகள், ஆடைகள் என மிகப்பெரிய வணிகம் வெளியே உள்ளது.

நம் குழந்தைகளுக்கு விக்ரம் வேதாளம் கதை இன்று தெரியாது. நாம் அந்த இதழ்களையோ பொம்மைகளையோ வாங்கிக் கொடுப்பதில்லை. இன்று தமிழில் ஒரு நல்ல குழந்தைகள் இணைய இதழ் இல்லை. இணையம் எவ்வளவு பெரிய வாய்ப்பு. வாசிப்பதற்கும் பார்ப்பதற்கும் கதைசொல்வதற்கும். ஆனால் நாம் பெரியவர்களுக்காகக் கதைசொல்லிக் கொண்டிருக்கிறோம். சிறுவர்கள் தமிழில் எதையும் கவனிப்பதில்லை என ஆகிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மர்கள், தோர் என இன்னொரு உலகில் வாழ்கிறார்கள்.

இதற்காகத்தான் இந்திய சிறுவர் ஊடகங்கள் அழிக்கப்பட்டன என்று சொன்னால் ஒரு சதிக்கோட்பாடு எனத் தோன்றும். ஆனால் காணொளி வணிகத்தின் உள்ளே சென்றுள்ளவன் என்னும் நிலையில் முதல்நிலைத் தகவலாகவே அந்த வகை வணிகச்சூழ்ச்சிகள் மிக எளிதாக நிகழ்கின்றன என்பதை என்னால் சொல்லமுடியும்.

அம்புலி மாமா
2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 10:34

வெள்ளையானை,சர்வதேசப்பரிசு, பிரியம்வதா

வெள்ளை யானை, உலகளாவிய இலக்கியப்போட்டியில் வெற்றி

ஜெ,

உங்கள் ஐரோப்பா பயணம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். புகைப்படங்களைக் கண்டேன். குளிரில் ஒரு எஸ்கிமொ குடும்பமாக மாறிவிட்டீர்கள் போல!

நேற்றும் முன்தினமும் அலுவலக பயணத்தில் இருந்ததனால் PEN/Heim மொழியாக்க நிதி பற்றி எழுத முடியவில்லை. அதனால் வாட்சாப் மூலம் செய்தியை மட்டும் பகிர்ந்திருந்தேன். அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகக் கூறலாம் என்று தோன்றியது. PEN நிறுவனம் பற்றி: PEN, Poets, Essayists, Novelists என்பதன் சுருக்கம். 1921இல் லண்டனில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளையும் அதைப் பேணும் கருத்து சுதந்திரத்தையும் தனது மையமாகக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போர் காலங்களில் PEN அமைப்பு வலுப்பெற்று பல நாடுகளில் கிளைகள் உருவாயின. இப்போது PEN International என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இதன் பகுதியாக PEN America 1992-வில் நியுயார்கில் துவங்கப்பட்டது. PEN International அமைப்பின் நூற்றுக்கணக்கான மையங்களில், இதுவே பெரியது.  7500+ உறுப்பினர்கள் கொண்டது. PEN America இலக்கியக் கூட்டங்கள், விழாக்கள் நடத்தியும், புனைவு, அபுனைவு, மொழியாக்கம் போன்ற பல தளங்களில் இலக்கிய விருதுகள் அளித்தும் வருகிறது. தவிர, வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முறையில் எட்டு grants/fellowships மூலம் நிதி உதவியும் அளித்து வருகிறது. இதில் ஒன்று மொழியாக்கங்களுக்காக அளிக்கப்படும் PEN/Heim Translation Fund Grants. இந்திய அளவில் நான் அறிந்தவரை புனைவு மொழியாக்கத்துக்கு எந்த அமைப்பும் நிதியுதவி அளிப்பதில்லை (அபுனைவுக்கு New India Foundation Fellowship குறிப்பிடத்தக்கது).

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இம்மாதிரியான பல வாய்ப்புகள் உள்ளன. அதில் சிலரே, சர்வதேச அளவில் விண்ணப்பங்களை வரவேற்கின்றன. பெரும்பாலான திட்டங்கள் அந்நாட்டவருக்கு மற்றுமே உரியவை. எனவே PEN/Heim போன்ற வாய்ப்புகள் மிக அரிதானவையாகவும் அதனாலேயே கடும்போட்டிக்குரியவையாகவும் உள்ளன.

PEN/Heim தொடக்கம் மற்றும் நோக்கம் பற்றி அவர்கள் தளத்தில் உள்ள குறிப்பு: The PEN/Heim Translation Fund was established in the summer of 2003 by an endowed gift of $730,000 from Michael Henry Heim and Pricilla Heim, in response to the dismayingly low number of literary translations currently appearing in English. Its purpose is to promote the publication and reception of translated international literature in English. Thanks to the generosity of Michael Henry Heim and Pricilla Heim’s endowment, PEN America has awarded grants to almost 200 winning projects. The Fund has been uniquely successful in finding publishers for major international works, encouraging younger translators to enter the field, and introducing English-speaking readers to new and exciting voices. All other criteria being equal, preference is given to translators at the beginning of their career, and to works by underrepresented writers working in underrepresented languages.

இந்த வாய்ப்பைப் பற்றி அறிந்ததும் என் ALTA வழிகாட்டி கரீம் ஜேம்ஸ் அபு-செய்திடம் கேட்டேன். அவர் கடந்த சில வருடங்கள் PEN/Heim நடுவர் குழுவில் பணியாற்றியிருந்ததாகவும் இம்முறை பங்கேற்கவில்லை என்றும் கூறினார். ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகிறது, மிகவும் போட்டிக்குரியது, ஆனால் கண்டிப்பாக விண்ணப்பிக்கவும் என்றார். அதுவரை வெள்ளை யானையின் சில அத்தியாயங்களை என் மொழியாக்கத்தில் வாசித்திருந்தவர், இப்படைப்பு தேர்வு செய்யப்பட நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் ஊக்குவித்தார். எனவே என் விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். அதற்காக, அவர்கள் கேட்டிருந்தவாறு நூலைப் பற்றிய ஒரு கட்டுரை, ஆசிரியரைப் பற்றிய விரிவான குறிப்பு, மொழிபெயர்ப்பாளருடைய தற்குறிப்பு, தவிர 5000 வார்த்தைகளுக்குட்பட்ட மொழிபெயர்ப்பு மாதிரி, வகையராக்களை இணைத்து விண்ணப்பித்தேன்.

10 தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் கொண்ட சர்வதேச நடுவர் குழுவால் 2023-க்கான நிதியுதவிக்காக 11 நூல்கள் (பிலிப்பினோ, போலிஷ், உருது, ஸ்பானிஷ், பல்கேரியன், அரபிக், கொரியன், சுவாகிலி, தமிழ், ஜெர்மன், இத்தாலியன் ஆகிய மொழிகளிலிருந்து) தேர்வு செய்யப்பட்டுள்ளன. 20 வருடங்களாக நடத்தப்படும் இத்திட்டத்தில் இதுவரை 5 தெற்காசிய மொழிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன (ஹிந்தி, உருது, போஜ்புரி, நேபாளி மற்றும் வங்காள மொழி). தென்னிந்திய மொழிகளிலிருந்து முதல் முறையாக வெள்ளை யானை தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு பேருவகை அளித்தது.

நேற்று நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அதை ஒட்டி ஒரு விளக்கம். PEN/Heim இவ்வாக்கங்களை முடிக்க மொழிபெயர்ப்பாளருக்கான நிதி உதவி மட்டுமே அளிக்கின்றது. PEN America பதிப்புப்பணியில் ஈடுபடுவதில்லை. ஆனால் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் பெரும்பாலும் தரமான பதிப்பாளர்களின் கவனத்தைப் பெற்று வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட நூல்களில் இருபது சதவிகிதம் முக்கியமான இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு, 2020-இல் PEN/Heim நிதியுதவி பெற்ற ஆன்டன் ஹுர் (Anton Hur) மொழியாக்கம் செய்த போரா சுங்கின் (Bora Chung) சிறுகதைத் தொகுப்பு Cursed Bunny இவ்வருடம் International Booker குறும் பட்டியலில் இடம்பெற்றது. 2015-இல் ஜெனிபர் கிராஃப்ட் (Jennifer Croft) மொழியாக்கத்தில் The Book of Jacob என்ற ஓல்கா தோக்கர்சுக்கின் (Olga Tokarczuk) நாவல் தேர்வுசெய்யப்பட்டது. 2018-இல் ஓல்கா நோபல் விருது பெற்றார். இந்த வரிசையில் உங்கள் படைப்பு PEN/Heim ஆதரவு பெறும் முதல் தமிழ் நாவல் என்பதில் மனநிறைவடைந்தேன்.

வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன, நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும். இத்தேர்வு வளர்ந்துவரும் மற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஊக்கம் அளிக்குமேயானால் மேலும் மகிழ்ச்சி. உங்கள் எழுத்து பல வகையில் என் வாழ்க்கையைப் பொலிவடையச் செய்துள்ளது. மொழியாக்கம் என்பது அடிப்படையில் மூலத்தை ஆழ்ந்து வாசிக்கும் கலை. உங்கள் படைப்புகளை அவ்வாறு வாசிப்பது பேரின்பம் தரும் ஈடுபாடு. அவ்வாய்ப்பை அளித்தமைக்கு என் உளமார்ந்த நன்றி.

அன்புடன்,

ப்ரியம்வதா.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 10:31

அதிமானுடரின் தூக்கம், கடிதங்கள்

அதிமானுடரின் தூக்கம்

அன்புள்ள ஜெ

அதிமானுடரின் தூக்கம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். எனக்கு உங்களிடம் பிடித்த அம்சமே இதுதான். ஒருபக்கம் கடுமையான யதார்த்தவாதப் பார்வை கொண்டவர். அறிவியல், நடைமுறை இரண்டையும் முன்வைப்பவர். அவற்றின்மேல் நின்றபடி ஒரு பெரிய இலட்சியவாதத்தையும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த இலட்சியவாதத்தை ஒரு வெற்றுப்பேச்சாக இல்லாமல் நடைமுறையாகவே சொல்கிறீர்கள்.

கரு. சிதம்பரம்

***

அன்பு ஜெ

இத்தலைப்பை அதிமானுடரின் துக்கம் என்று முதலில் வாசித்தேன். அதுவும் சரிதானே. டெஸ்லா நீட்ச்சே வின் வாழ்க்கை எத்தனை துயர் மிக்கது என நாம் அறிவோம். குறிப்பாக இவ்விருவரின் இறுதி காலங்கள்.

இன்றைய மருத்துவ கூறுகள் மூலம் பார்த்தால் இருவரும் நரம்பியல் பிரச்சனை கொண்டவர்களே. டெஸ்லாவின் சுயசரிதையில் தன் சிறுவயது முதலே பல காட்சிகள் அவர் கண் முன் தன்னிச்சையாக விரியும் என குறிப்பிட்டுள்ளார். அவர் வளர வளர அக்காட்சிகளும் வளர்ந்தன. ஒரு கட்டத்தில் அவரால் ஒரு முழு நகரத்தையும் கண் முன்னாள் விரித்தெடுக்க முடிந்திருக்கிறது என எழுதுகிறார். அவரின் பல கண்டுபிடிப்புகளுக்கான வடிவமைப்பை பேப்பரில் செய்யவில்லை கண் முன்னே கண்டிருக்கிறார். நவீன மருத்துவம் இதை அதிமானுடம் என சொல்லாது மூளையின் அசாதாரண ரசாயன மாற்றத்தால் ஏற்படும் உருவெளித்தோற்றம் என்றே கூறும்.

இவர்களின் வாழ்க்கை என இன்று எஞ்சியிருப்பது இவர்களின் வெற்றிகள் மற்றும் ‘tortured artist’ என்ற என்றும் ஈர்ப்பு கொண்ட படிமத்தினால். இரவு வானை வெட்டி செல்லும் மின்னலென இன்று அவர்கள் வரலாற்றில் ஒரு கணமென இருக்கிறார்கள். மின்னலின் அக்கணத்திற்கு முன்னும் பின்னும் இருளே.

எனினும் காலம் தோறும் மானுடன் அடைந்து விரித்து விரித்து வாழ நினைப்பது அந்த ஒரு கணத்தில் தானே. ஒரு கணமேனும் அதிமானுடன் என உணரத்தானே மானுடனின் விழைவு. அவ்விழைவு இல்லையேல் மானுட வாழ்வின் அர்த்தம்தான் என்ன.

அருவ ஓவியக்கலையின் முன்னோடிகளில் ஒருவரான கண்டின்ஸ்க்கி தன் ஓவியங்களில் கையொப்பமாகயிட்டது மேல்நோக்கிய ஒரு முக்கோணம். அது குறிப்பது என்றென்றும் மேலே மேலே என விழையும் மானிட அறிவை. சுடரென ஒளிரும் அவ்வறிவு ப்ரோமீத்தியஸ் நமக்களித்த தீ அல்லவா. அத்தீ சுடர்விட்டு மேல்நோக்கியே பரந்தெழும். ஒரு கணத்தில் எம்பி காலமின்மையை தொட்டுவிடப்பார்க்கும்.

பலஇரவுகள் கடந்து மறையும். ஒரு கணத்தில் வெட்டி சென்ற மின்னல் ஒளி நினைவில் என்றும் இருக்கும்.

ஸ்ரீராம்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 10:31

ஆயிரம் ஊற்றுக்களின் அழகியல்-கடிதம்

ஆயிரம் ஊற்றுகள், வாங்க

தாங்கள் எழுதிய ஆயிரம் ஊற்றுகள் என்ற திருவிதாங்கூர் ஸம்ஸ்தான சரித்திரத்தை அடியொற்றிய வரலாற்றைப் புனைவுக்கதை தொகுப்பை சமீபத்தில் படித்தேன்; உண்மையில் இதுவரை சிந்தித்து அறியாத ஓர் பார்வையை அதில் கூறியிருந்தீர்கள்.

இதுகாலம் வரை நமது காலனிய வரலாற்றில் வெள்ளையரை துணிந்து எதிர்த்த வீரபௌருஷத்தை கொண்டாடவே கற்றுத்தரப்பட்டிருக்கிறது; ஆனால் வெள்ளையரை தந்திரமாக கையாள வேண்டிய விதத்தில் கையாண்டு முடிந்தளவு தனது சுய அதிகாரத்தை செலுத்தி அதன் வழி மக்களுக்கு இயன்றதை மக்களுக்கு செய்திருக்கிற அரச/அரசிகளை இது போன்ற வரலாற்று புதினங்கள் வழியே தான் அறிந்த கொள்ள முடிகிறது.

பரந்து விரிந்த இந்நாவலந்தீவின் வரலாற்றில் இன்னும் எத்தனை பார்வதி பாய்கள் இருந்திருக்கிறார்களோ தெரியாது ; அவர்களுள் எத்தனை பேரை நான் கண்டடைவேனென்பதும் தெரியாது ஆனால் தற்சமயம் கௌரீபார்வதீ பாய் அரசியைப்பற்றியும் அவரைத்தொடர்ந்து நல்லாட்சி புரிந்த திருவிதாங்கூர் அரசர்களை பற்றியும் அறிய Travancore State Manualஐ புரட்டத்தொடங்கியுள்ளேன்;

இத்தொடக்கத்திற்கு வித்திட்ட ஆயிரம் ஊற்றுகளுக்கும் அதை எழுதிய உங்களுக்கு நன்றியும் – வணக்கமும்.

அன்புடன்,

ஜயந்த்

*

அன்புள்ள ஜெ

ஆயிரம் ஊற்றுக்கள் கதைகளை தனித்தனியாக வாசித்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் முற்றிலும் பெரியஒரு பார்வை கிடைத்தது. அதில் வரும் வேலுத்தம்பி போன்ற கதைநாயக பிம்பங்கள் சுயநலவாதிகள். ஆணவத்தாலும் புகழாசையாலும் அதிகார மோகத்தாலும் போரையும் அழிவையும் உருவாக்குகிறார்கள். பார்வதிபாய் போன்ற அரசிகள் மக்கள்நலம் நாடும் அன்னையராக இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் அரசிகள் அனைவருமே மாபெரும் ஆட்சியாளர்களாக இருந்தனர் என்று நீங்கள் சொன்னது ஞாபகம் வந்தது

சிவா அருண்

 

குமரித்துறைவி மின்னூல் வாங்க 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2022 10:31

November 19, 2022

இன்றைய எழுத்தில் அடிப்படைக்கேள்விகள்

அடிப்படைத் தத்துவக்கேள்விகளில் உழல்தல் என்பது பெரும்பாலும் தமிழ் சூழலில் மிக அரிதான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இங்கே நமக்கு அன்றாட வாழ்க்கையே பெரும்போராட்டமாக உள்ளது. ஒரு சராசரித் தமிழ் வாழ்க்கை என்பது இருபது அல்லது இருபத்தைந்துவயது வரை கல்வி தவிர பிறிதொன்றும் முக்கியம் அல்ல என்னும் நோக்கில் கட்டமைக்கப்பட்டது. எல்லாத்தரப்பிலிருந்தும் நம்மிடம் முறைசார் கல்வியில் நமது முயற்சி மற்றும் தகுதி குறித்த கேள்விகளே எழுகின்றன. நம் பெற்றோருக்கு சமூகச் சூழலில் இருந்து மிகப்பெரிய அழுத்தம் உள்ளது. நம்மை அவர்கள் இந்த போட்டி ஓட்டத்தில் ஓர் இடத்தில் நிறுதியாகவேண்டும். ஆகவே அவர்களின் கனவும் நனவும் அதுதான். அது அவர்கள் வழியாக நம்மீது செலுத்தப்படுகிறது. அதற்குப் பல படிகள்.  பல அடிகள். அதில் உழன்று நீந்தி கரையேறி ஒருவாறாக நிம்மதி மூச்சுவிட நாற்பது கடந்துவிடுகிறது. அதன்பின்னர் நாம் எதையும் எளிதாகத் தொடங்கிவிடமுடியாது.

அடித்தள வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு படிப்பு என்பது அவர்களின் அல்லல்நிறைந்த வாழ்நிலையிலிருந்து தொற்றி மேலேறுவதற்கான நூலேணி. அதில் ஒவ்வொரு படியிலும் அவர்கள் உயிர்மூச்சைக் கொண்டு உந்தி தன்னை மேலேற்றிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இளமை என்பது இருபதாண்டுகள் நீடிக்கும் தொடர் போராட்டங்கள் மட்டுமே .அவமதிப்புகள், பின்னடைவுகள், சோர்வுகள் மற்றும் தோல்விகள் ஆகியவற்றை அவர்கள் தங்கள் நம்பிக்கையாலும் ஊக்கத்தாலும் அனைத்தையும் விட வாழ்வு அளிக்கும் கட்டாயத்தாலும் வென்று முன் சென்றாகவேண்டும். அச்சூழலில் அவர்களுக்கு அடிப்படைக் கேள்வி என்பது ஒன்றே, தங்கிவாழ்தல் மற்றும் அதற்கு எதிரான விசைகளாக அமைந்திருக்கும் சமூகசூழல்.

ஆகவே இங்கே நமக்கெல்லாம் படிப்பு என்பது வாழ்க்கையில் குடும்பச்சூழலும் சமூகச்சூழலும் அளிக்கும் ஒரே இலக்கு. அதைத் தவிர வேறொரு வினாவும், தேடும் வாய்ப்பும் எவருக்கும் வாழ்க்கையில் அளிக்கப்படுவதில்லை. படிப்பில்லாத ஒருவன் தன் இளமையில் வேறெந்த தகுதி பெற்றிருந்தாலும் மதிக்கப்படுவதில்லை. அதன்பின் பணி. திரும்பத் திரும்ப படிப்பு முடிந்த ஒருவனிடம் அவன் பணி என்ன என்பதே கேட்கப்படுகிறது. அப்பணியில் அவனுடைய தகுதி பொருளாதாரத்தால் அளக்கப்படுகிறது. வேறெந்த பங்களிப்பும் சாதனையும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மீண்டும் மீண்டும் அடிப்படைச் சம்பளம் என்ன, பஞ்சப்படி என்ன, ஆண்டுதோறும் உயர்வது எத்தனை சதவீதம் என்ற கேள்வி அவனிடம் கேட்கப்படுகிறது. ஒருவர் எந்தப்பணியில் இருந்தாலும் சூழலில் இருந்து வரும் வினா அதைவிட அடுத்தபடிக்கு அவர் செல்வது எப்படி என்பதாகவே இருக்கும். அதற்கு அடுத்தபடியில் இருக்கும் ஒருவர் அதைச் சுட்டிக்காட்டி அவரைப்போல் ஆகவேண்டும் என்ற கட்டாயம் சூழலிலிருந்து வரும்.

இங்கு பணி என்பது வாழ்வதற்கான ஓர் அடிப்படை மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் மேலேறிக்கொண்டிருக்கும் ஓர் ஏணி. ஒவ்வொரு கணமும் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு களம். வென்றபடியே இருந்தாக வேண்டும். முன்சென்றபடியே இருந்தாகவேண்டும். இல்லையென்றால் அது தோல்வி என்றே கருதப்படும். தொடர் வெற்றிகள் அமையாத பணிகள் அரசுத்துறையில் உள்ளவை. அத்துறையில் உள்ள ஒருவருக்கு அவருடைய மேலதிக வெற்றி என்பது தன் துறையில் அவர் செய்யும் ஊழல், அதிலிருந்து அவர் சம்பாதிக்கும் செல்வம் ஆகியவை சார்ந்தது. உன்னைவிட இவர் இதே பணியில் அதிகம் சம்பாதிக்கிறார் என்பதுதான் ஒவ்வொரு அரசுப்பணியாளருக்கும் நம் சூழல் விடுக்கும் குரலாக உள்ளது. அதை சந்தித்துக்கொண்டே இருந்தாக வேண்டும்.

அதன்பின் திருமணம். சமூகம் வகுத்து வைத்திருக்கும் ஓர் அகவைக்குள் திருமணம் செய்யாவிட்டால் அது ஒரு குறையாக சுட்டிக்காட்டப்படும். பின்னர் பெரும் பிழையாக மாற்றப்படும். ஒரு கட்டத்தில் குறைபாடாகவோ இழிவாகவோ கட்டமைக்கப்படும். அதன்பிறகு குழந்தைகள். அதுவும் அப்படியே செல்லும் வகுக்கப்பட்ட பாதைதான். குழந்தைகள் அற்றவர்கள் படிப்படியாக சமூகப்புறனடையாளர்கள் என்றே மாற்றப்படுவார்கள். அனைத்து வகையான இழிவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் பழி சூழ்ந்தவர்களாக, பிறர் பார்வைக்குமுன் நின்றிருக்க வேண்டியிருக்கும்.

பெற்றோர் என்பதும் பெரும் பொறுப்பு. குழந்தைகளைப் பெற்றவர்கள் அவற்றின் படிப்பைத்தவிர வேறெதைப் பற்றியும் சிந்திக்காதவர்களாக வேண்டும். அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க சேர்த்து செல்வத்தை கொடுக்கவேண்டும். பிள்ளைகளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்றால் தந்தை பழி சுமக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்கு முதல்தர கல்வி நிறுவனங்களில் கல்வி அமைத்துக்கொடுக்க வேண்டும். அப்பிள்ளைகளின் மிகச்சிறிய குறைபாடுகளுக்குக் கூட பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும். இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் தன் பிள்ளை இன்னும் ஒரு பெரிய பதவியில் இருந்திருக்கும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நம்ப வைக்கப்படுகிறார்கள்.

அதன்பின் பிள்ளைகளின் திருமணம். அவற்றை உரிய வகையில் நடத்தி வைப்பது பெற்றோரின் கடமை அதன்பின் பேரப்பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம்…. அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. இதைச் செய்து சாகிறவன் அவன் மைந்தர்களால் தெய்வமாக எண்ணப்பட்டு, புகைப்படமாக சுவரில் தொங்கி, ஊதுவத்தி புகை பெறுவான். செய்யாதவன் வாழ்நாள் முழுக்க குற்றவுணர்வு கொள்ளும்படிச் செய்யப்படுவான். ஒரு கணமும் அவன் தன் விருப்பப்படி வாழமுடியாது. வாழமுற்பட்டால் மொத்தச் சமூகமே அவன்மேல் ஏறி அமர்ந்திருக்கும். ஆலோசனை சொல்லும், இடித்துரைக்கும்.   (ஆனால் நாள் முழுக்க சமூகவலைத்தளத்தில் உழன்றால் அது ‘நார்மல்’ ஆகவே கருதப்படும்)

இந்த அளவுக்கு பேரழுத்தம் கொண்ட ஒரு புறச்சூழலில் உலகில் வேறெந்த சமூகமும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஐரோப்பிய சமூகங்கள் இத்தகைய சூழலின் அழுத்தங்களில் இருந்து வெளியேறி நெடுங்காலமாகிறது. நம்மைப்போன்ற கீழை சமுதாயங்களான சீனா, ஜப்பான் போன்றவையும் இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட்டுவிட்டன. நாம் இன்னமும் இதற்குள் இருக்கிறோம். ஆகவே எந்த ஒரு அடிப்படை வினாவுக்கும் இந்தியச்சூழலில் சாமான்யமாக இடமில்லை. அவை எழக்கூடிய அளவுக்கு ஒரு ஓய்ந்த வேளை இங்கே உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவதே இல்லை. அவற்றை எளிய முறையிலேனும் எதிர்கொள்பவர்கள் நம் சூழலில் உடனடியாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். சிலசமயம் உளச்சிக்கல் கொண்டவர்களாகவே கட்டமைக்கப்பட்டுவிடுகிறார்கள். கையாலாகாதவர்களாக பகற்கனவு காண்பவர்களாக வீண்வாழ்வு வாழ்பவர்களாக அவர்கள் நம் பொது சமூகத்தில் தோற்றமளிக்கிறார்கள்.

உலகின் தத்துவ ஞானத்தின் பெரும்பகுதியை உருவாக்கிய ஒரு தேசம் எந்த வகையிலும் தத்துவார்த்தமான சிந்தனைக்கு இடமற்ற ஒன்றாக, சொல்லப்போனால் மொத்தமாகவே தத்துவ சிந்தனைக்கு எதிரான உளம் கொண்டதாக இன்று மாறிவிட்டிருக்கிறது. ஆகவே இன்று அடிப்படை சிந்தனைகள் என்பவை இந்திய சமூகத்திற்கு ஒரு வகையான நோய்க்கூறான வீக்கங்களேயாகும்.

இச்சூழலில் தான் இங்கே இலக்கியம் எழுதப்படுகிறது. ஆகவே இந்தியா முழுமைக்கும் இலக்கியத்தில் அடிப்படை வினாக்கள் அவற்றுக்கான தரிசனங்கள் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். இந்திய இலக்கியத்தில் இந்திய மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களிடமே அடிப்படைச்சிந்தனைகள் உள்ளன. தாராசங்கர் பானர்ஜி, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, வைக்கம் முகம்மது பஷீர் எஸ்.எல்.பைரப்பா, கே எம் முன்ஷி, வி.ச.காண்டேகர், சிவராம காரந்த், குர் அதுல் ஐன் ஹைதர்என்று நமது விரல் நீளும் அனைவருமே அந்தக்கால கட்டத்தை சேர்ந்தவர்கள்.

அது இந்தத்தேசம் நிலப்பிரபுத்துவ இறந்த காலத்திலிருந்து சற்றே புரண்டு முதலாளித்துவம் நோக்கி வந்த காலம். தனி மனித உரிமை, அடிப்படை மனித சுதந்திரம் ஆகியவற்றைப்பற்றிய விழிப்புணர்வை நோக்கி வந்த தருணம். தனி மனிதனின் ஆன்மீக மீட்பு, தனி மனிதனின் அகச்சுதந்திரம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகள் உருவாகி வந்த காலம். அன்று நம் முன்னோடிகள் சிந்தித்தவற்றின் சிதறல்களை வைத்துக்கொண்டுதான் இதுவரைக்கும் இந்திய இலக்கியம் எழுதப்படுகிறது என்பது உண்மை.

ஐம்பதுகளுக்குப்பிறகு நவீனத்துவம் உருவாகி வந்தபோது அந்த அடிப்படை சிந்தனைகளை அகவயமான, அல்லது நடைமுறைசார்ந்த ஒருவகை மறுப்பு வழியாக எதிர்கொண்டனர். ஆனால் மறுப்பென்பதே கூட ஒருவகையில் அடிப்படை சிந்தனைகளை கையாள்வது தான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஓ.வி.விஜயன், யூ.ஆர்.அனந்தமூர்த்தி என நாம் கூறும் இந்திய நவீனத்துவத்தின் வெற்றிகரமான முகங்கள் அனைவருமே  அடிப்படை வினாக்களை மறுப்பினூடாக எதிர்கொண்டவர்கள். அதன்பின்னர் மேலும் பெரிய அடிப்படை வினாக்களை நோக்கிச் செல்ல பின்நவீனத்துவம் வழி அமைத்தது. அது கடந்த கால லட்சியவாதத்திலிருந்தும் அதற்குப்பிந்தைய எதிர்ப்பு நிலைபாடுகளிலிருந்தும் நம்மை விடுவித்தது. அது முழுச்சுதந்திரத்தை நமக்கு அளித்தது. எதற்கும் கட்டுப்படாமல் தன்னியல்பாக ஆன்மீகமான அடிப்படை கேள்விகளை நோக்கிச் செல்வதற்கு அது அறைகூவியது.

பின்நவீனத்துவத்தின் சாராம்சம் என்பது உன்னதமாக்கல் (Sublimation). இங்குள்ள புறவய யதார்த்தம் என்பதே ஒருவகை புனைவுதான் என காட்டி, அதனுள்  ஒவ்வொன்றிலும் உறையும் நுண்மையை நோக்கி அது செல்ல வழிகாட்டியது. ஒன்று திரும்ப திரும்ப நிகழ்வதெனில் திரும்ப திரும்ப அதை நிகழ்த்தும் நெறியொன்றையே இலக்கியம் பேச வேண்டுமென்பதே பின் நவீனத்துவம் சொல்லும் Sublimation. உச்சங்கள், பிறழ்வுகளினூடாக வாழ்க்கையைக் கோத்துப் பார்ப்பது. தர்க்கத்தின் இரும்புத்தளைகளில் இருந்து விடுதலைபெற்று மேலெழுவதற்கு அறைகூவுவது. சீரான அறிதல்முறைகளை தவிர்த்துவிட்டு தாவிப்பாயும் கற்பனையை மொழியினூடாக நிகழ்த்தி தரிசனங்களை அடைய வழிகாட்டுவது.

ஆனால் நவீனத்துவ யுகத்துக்குப்பிறகு இந்திய இலக்கியம் அந்த சுதந்திரத்தை அடையவில்லை. மாறாக, ஒட்டுமொத்தமாகவே அது அடிப்படை வினாக்கள் இல்லாத ஒருவகையான அன்றாட யதார்த்தத்தை நோக்கியே திரும்பியது. இன்று இந்தியாவெங்கும் எழுதப்பட்டு வாசிக்கப்படும் படைப்புகள் உறுதியான உலகியல்தன்மை கொண்டவை. எந்தவகையான ‘பைத்திய’ நிலைகளுக்கும் அங்கே இடமில்லை. வகுக்கப்பட்ட, அனைவராலும் புரிந்துகொள்ளப்படத்தக்க, தர்க்கநிலை அவற்றில் இருக்கவேண்டும். எல்லாவகையான மதிப்புரைகளும் தெளிவான சில கலைச்சொற்களை பிடிமானம் (handle) ஆக பயன்படுத்துவதைக் காணலாம். மூன்றாமுலக யதார்த்தம், பின்காலனியம், பெண்ணியம், முற்போக்கு, தாராளவாதம், வலதுசாரி, இடதுசாரி… நம் சமகாலப் புனைவுலகின் இந்த அன்றாடக்களம் இருவகை யதார்த்தங்களைச் சார்ந்தவை.

ஒன்று அரசியல் யதார்த்தம். இன்னொன்று உளவியல் யதார்த்தம். பெரும்பாலான இந்திய எழுத்துகள் எளிமையான முற்போக்குச் சமூகவியல், அரசியல் கருத்துகளின் தொகையாகவே உள்ளன. அவற்றின் வினாக்களும் சரி, அவை கண்டடையும் விடைகளும் சரி, ஏற்கனவே வெவ்வேறு அரசியல் தரப்பினரால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டவை. ஆகவே அவை எழுதப்படும்போது உடனடியாக அந்தந்த அரசியல் தரப்பினரின் ஏற்பையும், பாராட்டுகளையும் பெறுகின்றன.  பரிசுகளையும் வெல்கின்றன. இன்னொரு அரசியல் தரப்பினரின் எதிர்ப்பையும் ஈட்டி விவாதமாகிப் புகழ்பெறுகின்றன

இன்னொன்று உளவியல் யதார்த்தம். பெரும்பாலும் இது உறவுகள் சார்ந்தது. மரபான உறவுகளிலிருந்து விடுவித்துக்கொண்டு தனிநபர் சார்ந்த சார்ந்த உறவுகளை நோக்கிச் செல்லும் இன்றைய தலைமுறையின் ஆணவச்சிக்கல்கள். தொடர்புறுத்தல் பிரச்சனைகள், அவற்றின்  விளைவாக உருவாகும் தனிமை ஆகியவற்றை இன்றைய எழுத்து மீள மீளப் பேசுகிறது

உளவியல் யதார்த்தம் என்பது அரசியலால் அவநம்பிக்கை அடைந்து, இலட்சியங்களை இழந்து, வெறுமையைச் சென்றடையும் நிலையை மையமாக்கியது. திரும்ப திரும்ப இந்திய நவீன எழுத்து என்பது அரசியல் அல்லது உளவியல் சார்ந்ததாக உள்ளது. ஒருவகையில்  அதன் பொது வாசிப்புத்தள வெற்றிக்கு அதுவே காரணம். இன்று இந்திய அளவில் பெரிதும் பேசப்படும் படைப்புகள் எவையுமே தத்துவார்த்தமான ஆன்மீகமான அடிப்படை வினாக்களை எழுப்பி விடைகாண முயல்பவை அல்ல. அவை எழுப்பும் வினாக்கள் அரசியல் அல்லது உளவியல் சார்ந்தவை என்பதனாலேயே ஆழ்ந்த தேடலோ அதன் விளைவான கண்டடைதலோ இல்லாத பொது வாசகர்களில் பலரை அவை கவர்கின்றன. அவர்கள் அந்தப்பிரச்னையுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருவகையில் இந்திய சமுதாயத்தின் தத்துவ வெறுமை இந்திய இலக்கிய படைப்புகளில் வெளிப்படுகிறது என்றே சொல்லவேண்டும்

(மேலும்)

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2022 10:35

வீ.நடராஜன், சோழர் வரலாறு 

பொன்னியின் செல்வன் சினிமாவுக்குப் பின் எங்கு பார்த்தாலும் சோழர்வரலாறு பேசப்படும் இந்நாளில் தமிழர்களின் கவனத்துக்கு வந்தேயாகவேண்டியவர் வீ.நடராஜன். ராஜேந்திர சோழன் கைப்பற்றிய கடாரம் என்பது மலேசியாவிலுள்ள கெடா மாநிலம்தான் என்பதை அங்குள்ள பூசோங் சமவெளியின் தொல்லியல் சான்றுகள் மற்றும் அப்பகுதியின் மொழிச்சான்றுகளின் அடிப்படையில் நிறுவியவர். மலேசியாவில் தமிழர்களின் வேரை பண்பாட்டுத்தளத்தில் நிரூபித்தவரும்கூட.

வீ.நடராஜன் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2022 10:34

மத்துறு தயிர், ரமீஸ் பிலாலி

உமறுப் புலவரின் கற்பனையில், அரிமா போல் வீரம் செறிந்தவரும் நபிகள் நாயகம் அவர்களின் தளபதியும் ஆன காலித் பின் வலீத் அவர்களுக்கு மத்து உவமை ஆகிறது; அவர்களை எதிர்த்து நின்ற அபுசுபியானின் படையினருக்குத் தயிர் உவமை ஆகிறது:

மத்துறு தயிர், ரமீஸ் பிலாலி

அறம் – வாங்க 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 19, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.