Jeyamohan's Blog, page 674

November 26, 2022

நித்யா ஒரு கடிதம்

வணக்கம்.நான் சென்னையிலிருந்து நடராஜன்.

எனது நண்பர் திரு.செந்தாமரை (தற்பொழுது உயிருடன் இல்லை) கோவையில் வசித்தவர். A C C மதுக்கரையில் பணிபுரிந்தவர்.

குரு நித்யாவின் நண்பர்களில்(!) ஒருவர். தங்களுக்கு அறிமுகம் உண்டா?

தங்களுடைய- குரு.நித்யாவினுடைய நேர்காணல் (சொல் புதிதில் வந்ததாக ஞாபகம்) -படிக்க கிடைக்குமா? இணையத்தில் இருக்கிறதா?

தங்கள் பணிமென்மேலும்சிறக்க பிரார்த்தனைகளுடன்

நடராஜன்

*

அன்புள்ள நடராஜன்

அவரை நான் அறிந்திருக்கவில்லை. நான் 1992 முதல் மறைவு வரை நித்யாவுக்கு அணுக்கமாக இருந்தேன். ஆனால் பொதுவாக குருகுலமரபு ஒருவரை இன்னொருவருடன் அறிமுகம் செய்வதில்லை. அவர்களே அறிமுகமானால்தான் உண்டு.

நான் நித்ய சைதன்ய யதியை எடுத்த பேட்டி காலச்சுவடு இதழில் வெளிவந்தது. காலச்சுவடு நேர்காணல்கள் என்னும் நூலிலும் ஜெயமோகன் நேர்காணல்கள் என்னும் நூலிலும் உள்ளது

ஜெயமோகன் நேர்காணல்கள் எனி இண்டியன் வெளியீடாக வந்தபின் மறு பிரசுரம் ஆகவில்லை. விரைவில் மறுபிரசுரம் ஆகலாம்

ஜெ

அனுபவங்கள் அறிதல்கள் நூலில் நேர்காணல் உள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2022 10:30

November 25, 2022

இலக்கியமும் சினிமாவும்

Filmmaker Vasanth S Sai hopes ‘Ponniyin Selvan I’ success will spur more literary adaptations in Tamil cinema

அன்புள்ள ஜெ,

தி ஹிந்து வெளியிட்டிருக்கும் இச்செய்தியில்  ‘The positive reception of Vendhu Thanindhathu Kaadu (VTK) and Ponniyin Selvan I (PS I) has put two writers in the spotlight: the late Kalki Krishnamurthy, who wrote the Ponniyin Selvan novel, and Jeyamohan, who wrote the story for VTK and the dialogues for PS I. This is an unusual scenario for Tamil cinema’ என்னும் விஷயம் பற்றி கேட்க விரும்புகிறேன்.

இப்போது பல இலக்கியப்படைப்புகள் சினிமாவாக ஆகவிருக்கின்றன. உங்கள் கதையை ஒட்டி வெற்றிமாறன் இயக்கும் விடுதலை உடனடியாக வெளிவரவுள்ளது. இலக்கியப்படைப்புகள் சினிமாவாக ஆகும் வாய்ப்பு பெருகியிருப்பதாக நினைக்கிறீர்களா?

ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஆனந்த்ராஜ்,

இல்லை. எப்போதுமுள்ள ஒரு பொது ஆர்வம் மட்டுமே இப்போதும் உள்ளது. இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட அசுரன் ஏற்கனவே பெருவெற்றி அடைந்துள்ளது. அப்படிப்பட்ட வெற்றிப்படங்கள் இனிமேலும் வரும். அவை தனியாகவே நிகழும். மைய அலைக்கு வராது.

என்னுடைய அறம் கதைகளில் பெரும்பாலும் எல்லாமே வலுவான சினிமாவாக ஆக்கத்தக்கவை. இன்னொரு மொழியில் என்றால் எல்லாமே இதற்குள் படமாகியிருக்கும். தமிழில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. அவற்றை சினிமாவாக ஆக்க சிலர் முயலும்போது இங்கே சூழலில் ஏற்பு இருக்கவில்லை.

ஏனென்றால் நம் சினிமா அன்றுமின்றும் கதைநாயக மையம் கொண்டது. இலக்கியத்தில் இருந்தே எடுக்கப்பட்ட படங்களானாலும் அவை கதைநாயகத்தன்மை கொண்டவையாகவே இருப்பதைக் காணலாம். விடுதலை, வாடிவாசல் எல்லாமே…ஒரு வலுவான இளமையான கதைநாயகன், அவனுடைய பிரச்சினை – இதுதான் ‘டெம்ப்ளேட்’. வணிகப்படமோ புரட்சிப்படமோ. அதை மீறவே முடியாது. 

அந்த அம்சம் நவீன இலக்கியத்தில் பெரும்பாலும் இல்லை. அங்கே கதைமாந்தர், கதைமுடிச்சு இருக்குமே ஒழிய கதைநாயகர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். அதீதத்தன்மை கொண்ட கதைமாந்தர் உள்ள கதைகள் மட்டுமே சினிமாவுக்குள் வரமுடியும். இன்றைய தமிழ் சினிமாவின் மனநிலை அது. 

இன்னொன்று, வணிகசினிமாவுக்கு உள்ள  நிகழ்வேகம் (டெம்போ) என்பது ஏறத்தாழ இங்கே நிலைபெற்றுவிட்ட ஒன்று. அதை மாற்றமுடியாது. இலக்கியப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டெம்போ கொண்டவை. பெரும்பாலும் நிதானமாக நகர்பவை. வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் சினிமாவாக ஆனபோது நாவலின் டெம்போ சினிமாவுக்காக உருமாறியிருப்பதை காணலாம். அந்நாவல் நிதானமாகச் சுருளவிழ்வது. அச்சினிமா அசுரப்பாய்ச்சல் கொண்டது. அசுரன் பார்த்துவிட்டு வெக்கையை வாங்கிய பலரும் வாசிக்கவே முடியவில்லை என சலிப்படைந்தனர். பாருங்கள், அத்தனை பெரிய வெற்றிப்படம் வெளிவந்தபின்னரும் இணையத்தில் வெக்கைக்கு எத்தனை மதிப்புரைகளோ ரசனையுரைகளோ கிடைக்கின்றன?

இன்றைய ரசிகர்கள் கூட இலக்கியப் படங்களை ஏற்கக்கூடும். நமக்கு இன்றுள்ள சில நூறு திரைவிமர்சகர்கள் கொஞ்சம்கூட ஏற்கமாட்டார்கள். அவர்கள் எளிய டெம்ப்ளேட் சினிமாக்களையே விரும்புவார்கள். வழக்கமான கதாநாயகன் – வில்லன், பரபரவென்ற ஓட்டம் எல்லாம் அவர்களுக்கு தேவை. Lag என்று கத்தியே படத்தை பார்க்கவிடாமலாக்கி விடுவார்கள். எல்லா விமர்சனங்களிலும் அவர்கள் தவறாமல் அந்த டெம்ப்ளேட்டை முன்வைப்பதைக் காணலாம். அவ்வாறன்றி அவர்கள் ஏற்கக்கூடியவை நேரடியான அரசியல்பிரச்சாரம் கொண்ட படங்கள். அரசியல்சரிநிலைகளுக்காக அவற்றை பாராட்டுகிறார்கள். சினிமா விமர்சகர்களை விட ஒரு படி குறைவான ரசனையே இங்கே சினிமா பற்றி எழுதும் எழுத்தாளர்களிடமும் உள்ளது.

படம் வந்த ஐந்தாம் நிமிடத்தில் விமர்சனம் வெளியாகவேண்டுமென்றால் அதே போன்ற மாறாத டெம்ப்ளேட்தான் உதவும். நம் விமர்சகர்கள் இலக்கிய சினிமாக்களை மூர்க்கமாக அடித்துக் காலிசெய்து விடுவார்கள். அதை வெல்ல ஒரே வழி வலுவான கதாநாயக நடிகர்களை சார்ந்து செல்வதுதான். கதைநாயகர்களின் ரசிகர்கள் அந்த திரைவிமர்சகர்களின் மூர்க்கத்தை எதிர்கொள்ளும் எதிர்வேகம் கொண்டவர்கள். எப்படியானாலும் முதலிரண்டு நாட்கள் அரங்கை நிறைப்பார்கள். படம் நன்றாக இருந்தால் அவர்களே படத்தை மேலெடுத்தும் செல்வார்கள். அவர்களை நம்பவில்லை என்றால் முதல்நாளிலேயே காலி அரங்குகளை காணவேண்டியிருக்கும். ஆகவே இலக்கியப்படைப்புகளை சினிமாவாக எடுக்கும்  முயற்சிகளை எவரும் எடுக்கத்துணிவதில்லை. கதைநாயகர்கதைகளே நமக்குத் தேவை. அவற்றை ‘உருவாக்க’வேண்டியதுதான்.

ரசிகர்களை நம்பி துணிந்து எடுக்கலாம்தான். ஆனால் அதை நாம் தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்த முடியாது. எவராவது ஆர்வத்துடன் முன்வந்தால் செய்யலாம். வாய்ப்பு மிகமிகக் குறைவு. எனக்கு சினிமா என்பது தொழில். ஆகவே நான் எவரிடமும் கேட்பதோ வற்புறுத்துவதோ இல்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:35

சோமலெ

அந்தக்கால ஜோக். தலைவர் மேடையேறும்முன் கேட்டார். “மேடையிலே இடதுபக்கம் உக்காந்திருக்கிறவர் யார்?” “சோமலே” ”சரி, அதுக்கு அந்தப்பக்கம்?” “தெரியலே”. தலைவர் பேசியே விட்டார் “மேடையில் அமர்ந்திருக்கும் தமிழறிஞர்கள் சோமலே மற்றும் தெரியலே அவர்களே…”

சோமலெ எழுதிய செட்டிநாட்டு வரலாறு இன்றும் சமூகவியலில் முக்கியமான ஆவணம்

சோமலெ சோமலெ சோமலெ – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:34

பெண்கள்!

பென் அமெரிக்கா போட்டியில் வெள்ளையானை விருது பெற்றதை ஒட்டி பல வாழ்த்துக்கள் வந்தன. பெரும்பாலும் மலையாள, கன்னட எழுத்தாளர்களிடமிருந்து. சுவாரசியமான ஒரு கடிதம் ஒரு பெண் எழுதியிருந்தது. அவர் அந்நாவலை பிரியம்வதா என்னும் பெண் மொழியாக்கம் செய்திருந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டிருந்தார்.

யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமான விஷயம்தான் அது. இன்று நான் முன்னெடுக்கும் எந்த அறிவுச்செயல்பாட்டிலும் முதற்பெரும் விசை பெண்கள்தான். எழுதுபவர்கள், மொழியாக்கம் செய்பவர்கள், இதழ் நடத்துபவர்கள், விழாக்களை ஒருங்கிணைப்பவர்கள். சுசித்ராவின் மொழியாக்கத்தில்தான் என் நாவல்கள் தொடர்ந்து வரவிருக்கின்றன.  

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெண்களை இழிவுசெய்துவிட்டதாகச் சொல்லி ஒரு மாபெரும் மனு தயாரிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் அதில் கையெழுத்திட்டிருந்தனர். அம்பை அதை ஒருங்கிணைத்தார். அதை அம்பை ஒருங்கிணைத்ததில் எனக்கு மனக்குறையும் இல்லை. அம்பையின் இயல்பு அது. போலியான ஓரு வேகம் அவரிடம் என்றும் உண்டு. அதை முன்பு இடதுசாரி– பெண்ணியமாக முன்வைத்தார்.  

(மாதவிக்குட்டி (கமலா தாஸ்) இஸ்மத் சுக்தாய் என பலரிடம் அது இருந்தது. அவர்களை கலைஞர்களாக ஆக்கியது அதுவே. அதே இயல்புதான் அம்பையை  தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக  ஆக்குகிறது.  சமநிலை கொண்ட இலக்கியக்கலைஞர் ஒருவர் இருக்க முடியாது)

அம்பையிடம் என் வருத்தம் என்னவென்றால், போகிற போக்கில் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையில் ஆண் எழுத்தாளர்கள் எல்லாரும் பெண் எழுத்தாளர்களிடம் வழிபவர்கள் என்று சொன்னவர் அதேமூச்சில் என் பெயரையும் சேர்த்துவிட்டார். எனக்கு அப்பழக்கம் இதுவரை இல்லை. அதனால் நான் அத்தகையவன் அல்ல என்று சொல்ல வரவில்லை. நான் எதைச்செய்வேன் என எனக்கே தெரியாது. இதுவரை இல்லை.

அம்பை ஒருங்கிணைத்த அந்த மனுவே அபத்தமானது. நான் பெண்களை பற்றி இழிவாக எதையும் சொல்லவில்லை. அதை பலமுறை விளக்கியும்விட்டேன். ஆனால் ஓர் அவதூறாக அதை முன்னெடுக்கிறார்கள் சிலர். பெண்கள், அவர்கள் பெண்கள் என்னும் நிலையை ஒரு சலுகையாக எடுத்துக்கொண்டு, அல்லது பெற்றுக்கொண்டு, தங்களை முன்னிறுத்தலாகாது என்று மட்டுமே சொன்னேன். இப்போதும் என் நிலைபாடு அதுவே.

அன்று என் தரப்பை விளக்கி எழுதும்போது இப்படிச் சொன்னேன்.   

இன்று எழுதவரும் பெண்கள்  இலக்கியத்தரம், மதிப்பீடு பற்றி எந்த வினா எழுந்தாலும் ‘நாங்கள்லாம் எவ்ளவு கஷ்டப்பட்டு எழுத வந்தோம் தெரியுமா?’ என்னும் குரலை பதிலாக வைக்கிறார்கள். ‘நீ ஆண், நீ அப்படித்தான் சொல்லுவாய், அது ஆணாதிக்கம். நாங்கள் எழுதுவதை நாங்கள்தான் மதிப்பிடுவோம்’ என்கிறார்கள். ஆண்களும் இங்கே பலவகையான வாழ்க்கைநெருக்கடிகள் நடுவே, போராட்டங்கள் நடுவேதான் எழுதுகிறார்கள். தூக்குமேடைக்குமுன் நின்றுகூட எழுதியிருக்கிறார்கள். அறிவுச்சூழலில் சலுகைகளே இல்லை.

பெண்கள் சொல்லும் சாக்குகள் எல்லாமே தோல்விமனநிலை சார்ந்த நிலைபாடுகள். எந்த அறிவியக்கத்தின் மதிப்பீட்டிலும் நிலைகொள்வேன் என்று சொல்லும் செருக்கே அறிவுச்செயல்பாட்டாளருக்கு உரியதாக இருக்கமுடியும். எந்த அவைக்கும் நம்பிக்கையுடன், பிரியத்துடன் சென்று அமர்பவனே அறிவுத்தளத்திற்கு மெய்யான பங்களிப்பாற்றுபவன். முன்ஜாமீன்கள் எடுத்துக்கொண்டு  எழுதவருபவன் அல்ல

அறிவுத்திமிரும், அதற்கான நிமிர்வும் கொண்ட  பெண்கள் எதிர்காலத்தில் வருவார்கள். எந்த சலுகையும் வேண்டாம் என்று சொல்லும் தன்னிமிர்வு கொண்டவர்கள். ஆண்களுக்கு எதிர்நிலையே பெண்ணியம் என புரிந்துகொள்ளும் அபத்தம் இல்லாதவர்கள். எதிர்ப்புச் சிந்தனை என்பது எதிர்க்கப்படுவதன் அடிமை என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். எந்த எதிர்நிலையும் இல்லாமல் தங்கள் ஆன்மிகத்தை, கலையை முன்வைப்பவர்கள். அவர்களின் எதிர்ப்புகூட அவர்கள் சென்றடைந்த நேர்நிலை வாழ்க்கைப்பார்வையின் விளைவாகவே இருக்கும்

இன்று அத்தகைய பெண்களின் ஒரு நிரையை விஷ்ணுபுரம் வட்டம் சார்ந்து உலகமெங்கும் கண்டடைய, திரட்ட  முடிந்திருக்கிறது என்பதை என் பெருமிதங்களில் ஒன்றாக நினைக்கிறேன். அவர்களின் புரவலர் அல்ல நான். அவர்களுக்காக எதையுமே செய்வதில்லை. அவர்களுடன் விவாதித்துக்கொண்டே இருக்கிறேன், எல்லா கருத்துநிலைச் செயல்பாட்டாளர்களிடமும் விவாதிப்பது போல.  இன்று இந்த பெண்கள் அறிவியக்கத்தில், சேவைத்தளத்தில் ஆற்றும் சாதனையை, இனி ஆற்றவிருப்பதை எளிதில் எவரும் செய்துவிட முடியாது. தமிழ் விக்கி தளமே அவர்களின் பங்களிப்பால் நிலைகொள்வதுதான்.

ஒரு பெண் என்னிடம் சொன்னது இது. திரும்பத் திரும்ப ‘நீ பெண்’ என நினைவுறுத்திக்கொண்டே இருக்கும் சூழல் இங்கில்லை. இங்கே எவரும் பெண்களிடம் வழிவதில்லை, கரிசனம் காட்டுவதுமில்லை. இங்கே எல்லாரும் சமம்தான். ஒவ்வொருவரும் கூடுமானவரை கறாராகவே மதிப்பிடப்படுகிறார்கள். அதுவே அறிவியக்கத்தின் இயல்பான செயல்பாடாக இருக்கமுடியும். கருத்துச்சூழலில் எப்போதுமே ஒரு ‘வனநியாயம்’ உண்டு. அதில் ஆணும் பெண்ணும் வேறுபாடு இல்லை. அந்த சூழலே தகுதியானவர்கள் அனைவரும் இங்கே வந்துசேர வழிவகுக்கிறது. இன்று அம்பை அந்தரங்கமாகவேனும் இங்குள்ள பெண்களின் சாதனையை உணர்வார் என நினைக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:33

தூசி

ரம்யா தமிழ்விக்கி கலைக்களஞ்சியத்தில் மிக அதிகமாக பதிவுகள் போடுபவர்களில் ஒருவர். சலிக்காத அறிவுச்செயல்பாடு அவருடையது. தமிழறிஞர் ஆண்டி சுப்ரமணியம்  அவரைக் கவர்ந்ததில் வியப்பில்லை. அறிவுச்சேகரங்கள்மேல் படியும் தூசி பற்றிய கதை இது.

தூசி – ரம்யா  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:32

கோவை சொல்முகம் -வெண்முரசு கூடுகை 23

நண்பர்களுக்கு வணக்கம்.  

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 23 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஏழாவது படைப்பான “இந்திரநீலம்” நாவலின் இறுதி அமர்வாக பின்வரும் நிறைவுப் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.  

பகுதிகள்:  

11. எண்முனைக் களம்

12. இமையாநீலம்

13. ஆழியின்விழி 

இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வில், மாதாந்திர நாவல் வாசிப்பு வரிசையில், கேசவ ரெட்டி அவர்களின் ‘அவன் காட்டை வென்றான்‘ நாவல் மீது கலந்துரையாடல் நிகழும். 

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

நாள் : 27-11-22, ஞாயிற்றுக்கிழமை. 

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை. 

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9  

தொடர்பிற்கு : 

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 25, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.