சாரு நிவேதிதா's Blog, page 52
December 19, 2024
அரிய வாய்ப்பு
என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டும், க்ராஸ்வேர்ட் புத்தக விருது நான் தான் ஔரங்ஸேபின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb நாவலுக்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாகவும் ஸீரோ டிகிரி பதிப்பகம் என் நூல்களுக்கு முப்பது சதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பொதுவாக தற்போது புத்தக விலை அதிகரித்திருக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அது உண்மையும்தான். இரண்டு காரணங்கள்: காகித விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பல தினசரிகள் குறைந்த பட்சம் நாலு பக்கம் குறைத்து விலையையும் அதிகரித்துள்ளன. ... Read more
Published on December 19, 2024 03:55
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரை
பொதுவாக என்னுடைய மேடைப் பேச்சு யாரையும் கவர்வதில்லை. சிறப்பாகப் பேசும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறுவதே இல்லை. அது பற்றி எனக்குப் புகாரும் இல்லை. ஏனென்றால், நான் என்னை ஒரு மிகச் சிறந்த பேச்சாளனாகவே கருதி வருகிறேன். மேடைப் பேச்சுக்குரிய அலங்காரங்கள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு யாரிடமும் காண இயலாத அற்புதங்களை ஒரு நுண்ணிய வாசகர் என் பேச்சில் கண்டு கொள்ள இயலும். உதாரணமாக, அராத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ... Read more
Published on December 19, 2024 03:21
December 18, 2024
அடியேனின் நூல்கள் தள்ளுபடி விலையில்…
சாரு crossword விருது வென்றதை கொண்டாடும் விதமாக அவர் பிறந்த நாளான இன்று அவர் புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்தச் சலுகை இம்மாதம் 23 வரை மட்டுமே.புத்தகங்களை வாங்குவதற்கான சுட்டி கீழே. https://www.zerodegreepublishing.com/...*
Published on December 18, 2024 06:56
ஒரு நாவலின் விலை ஒரு கோடி ரூபாய்
அராத்து எழுதிய புருஷன் நாவலின் ஒலி வடிவக் குறுந்தகடு என்னால் வெளியிடப்படுகிறது. நாவலை அராத்து வாசித்திருக்கிறார். அறுநூறு பக்க நாவல். குறுந்தகடு என்.எஃப்.டி. மூலம் விற்கப்படுகிறது. முதல் பிரதியின் விலை முப்பது எத்தெரியம். ஒரு எத்தெரியத்தின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேல். ஆக, முதல் பிரதியின் விலை ஒரு கோடி ரூபாய். மற்ற பிரதிகளின் விலை ஒரு லட்சம் ரூபாய். நான் எந்த விழாவாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ள ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் ... Read more
Published on December 18, 2024 04:33
December 12, 2024
பெங்களூர் இலக்கியத் திருவிழா
வரும் ஞாயிறு டிசம்பர் 15, காலை 10.15 மணிக்கு பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் Conversations with Aurangzeb நாவல் பற்றி நந்தினி கிருஷ்ணன் மற்றும் உதயன் மித்ரா ஆகியோருடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். நண்பர்கள் அனைவரும் வருக.
Published on December 12, 2024 00:35
December 10, 2024
மனம் கனிந்த நன்றி
க்ராஸ்வேர்ட் விருதுக்கு எனக்கு வாக்கு அளித்து என்னைத் தேர்ந்தெடுத்த அத்தனை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி. என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள், அமிர்தம் சூர்யா, கார்ல் மார்க்ஸ், நண்பர்கள் அராத்து, ஸ்ரீராம், காயத்ரி, ராம்ஜி, இன்னும் ஏகப்பட்ட நண்பர்கள் இதற்காக உழைத்தார்கள். விரிவாக நாளை கண்ணூரிலிருந்து எழுதுகிறேன். இப்போது கண்ணூர் பல்கலைக்கழக இலக்கிய விழாவுக்காகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மூன்று நாள் இலக்கிய விழாவை நான்தான் தொடங்கி வைக்கிறேன். ... Read more
Published on December 10, 2024 06:08
December 3, 2024
ஆன்லைன் கோஷ்டி
நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு என்னுடைய இன்னொரு நண்பர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். இத்தனைக்கும் வாழ்த்து அனுப்பிய நண்பர் மிக நெருக்கடியான பல வேலைகளைச் செய்து வருபவர். ஒரு ஐந்து ஆள் வேலையை அவர் ஒருவரே செய்கிறார். சரியாகத் தூங்கக் கூட நேரம் இல்லை. ஃபேஸ்புக் பற்றிய பேச்சு வரும்போது கூட “எனக்கெல்லாம் எங்கே சாரு ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்க நேரம் இருக்கிறது? சும்மா எட்டிப் பார்ப்பது கூட ... Read more
Published on December 03, 2024 22:56
மனநோய்…
ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்த போது அவரோடு வேலை பார்த்த சக கண்டக்டர்கள் இருந்திருப்பார்கள். இப்போதும் அவர்கள் கண்டக்டர்கள்தான். என்ன, ரிட்டயர்ட் கண்டக்டர்கள். ரஜினி நல்லவர் இல்லையா? அதனால் ரஜினி அவர்களை மறக்கவில்லை. வருடத்துக்கு ஒரு தபா அவர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து குவாட்டர் ஓல்ட் மாங்க்கும் குவாட்டர் சிக்கன் பிரியாணியும் வாங்கிக் கொடுத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பழைய வாழ்க்கை பற்றி சிரித்துப் பேசி விட்டு அனுப்பி விடுவார். அந்தக் கண்டக்டர்களுக்கு அது ஒரு வாழ்நாள் ... Read more
Published on December 03, 2024 03:52
December 2, 2024
க்ராஸ்வேர்ட் புத்தக விருது – மும்பை விழா அழைப்பு
2011இல் அசோகமித்திரனின் நாவல் மானஸரோவர் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்று அவரும் அவரது மொழிபெயர்ப்பாளரான கல்யாணராமனும் மும்பை சென்றது பற்றி மிக நெகிழ்ச்சியுடன் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். அப்போது முதல் பரிசு பெற்றது Omair Ahmed’s Jimmy, The Terrorist. 2011க்குப் பிறகு தமிழிலிருந்து யார் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நானும் நந்தினியும் செல்கிறோம். Conversations with Aurangzeb க்ராஸ்வேர்ட் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதற்குப் பிறகு வாசகர்களின் வாக்கு எண்ணிக்கையை வைத்து முதல் ... Read more
Published on December 02, 2024 08:23
புருஷன் – மீண்டும்
புருஷன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். பத்தாயிரம் வார்த்தைகள். அரம்யா என்பவளின் கதை. அவளைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட ரகுராம் என்பவனின் பார்வையில் சொல்லப்படும் கதை. இந்த முறை படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் கம்மியான எதிர்பார்ப்புதான் இருந்தது. ”என்னத்தெ எழுதிடப் போறாரு, தம்பி கிட்ட மொழி ஆளுமை கிடையாது, மொழிதான் இலக்கியத்துக்கே ஆணி வேர், கதையைச் சொல்வாரு, அது பயங்கரமாத்தான் இருக்கும், பாத்துக்குவோம்” என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. ரகுராம் ... Read more
Published on December 02, 2024 06:43
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

