சாரு நிவேதிதா's Blog, page 51

December 31, 2024

புத்தாண்டு வாழ்த்து

எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான். ஆனாலும் நீங்கள் அனைவரும் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுவதால் நானும் உங்கள் கொண்டாட்டத்தில் இணைகிறேன். இப்போது கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குச் செல்கிறேன். என் வீட்டுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2024 08:13

December 30, 2024

Anecdote

கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்ஜுனின் குறிப்பில் anecdote என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியது.  இதை என் தோழி எக்ஸிடம் (எக்ஸ் தோழி அல்ல; தோழி எக்ஸ்.  பெயர் சொல்லக் கூடாது அல்லவா, அதனால் இந்த ஏற்பாடு!) கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அர்ஜுனின் குறிப்பு வந்த ஃபேஸ்புக் பக்கத்தின் இணைப்பை அனுப்பினேன்.  ஏற்கனவே என் வீட்டுக்கு எதிரே இருக்கும் காந்தி நகர் க்ளப்புக்கு அருகில் உள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் சூடம் கொளுத்தி சத்தியம் செய்திருக்கிறேன், இனிமேல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2024 23:28

தியாகராஜா

பெரும் சங்கீத ரசிகனான என் இளம் நண்பன் அவனுடைய வழக்கமான ‘சினிக்கல்’ தன்மையுடன் என்னிடம் இன்று மாலை சொன்னான்: “நீங்கள் தியாகராஜா நாவலை இத்தனைக் காலம் இழுத்துக்கொண்டிருப்பதன் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.” ”என்ன காரணம்?” ”ஔரங்ஸேப் பற்றி எக்கச்சக்கமான நூல்கள் உள்ளன.  ஆனால் தியாகராஜாவின் வாழ்க்கை பற்றி ஒரு குறிப்பும் இல்லை.  அதனால்தான் உங்களால் எழுத முடியவில்லை.” ”எழுத்தில் என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மட்டுமல்லாமல் தியாகராஜாவும் என்னைப் போல் ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் எழுத்தாளர்தான்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2024 08:40

December 29, 2024

புத்தகத் திருவிழா – 2

இன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரி அரங்கு எண் 540- 541 இல் இருப்பேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2024 00:04

December 28, 2024

இன்று மாலை சந்திக்கலாமா? – சிறுகதை

கடந்த பத்து ஆண்டுகளில் வீட்டு நிலைமை வெகுவாக மாறி விட்டது.  தலைகீழாய் மாறி விட்டது என்று சொன்னால்தான் கச்சிதமாக இருக்கும்.   பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் இரண்டு முறை மதியம் பன்னிரண்டு மணி அளவில் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாரில் நண்பர் மணியை சந்திப்பேன்.  கூட நண்பர்களும் இருப்பார்கள்.  பிறகு அந்த இடத்தை டென். டௌனிங் என மாற்றினோம். ஒரு காலத்தில் என் வீட்டைப் போல் இருந்த வெஸ்ட்மின்ஸ்டர் பார் என்ற புனித ஸ்தலத்தைக் கொண்டிருந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2024 00:16

December 27, 2024

புத்தகத் திருவிழா – 1

இன்று மாலை (28 டிசம்பர்) நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் 540 – 541. என்னுடைய எழுபது நூல்கள் ஸீரோ டிகிரி அரங்கிலும் ஒரு நூல் ஆட்டோ நேரட்டிவ் அரங்கிலும் கிடைக்கும். ஒரு நூல் 300 பிரதி விற்றால் 71 x 300 = 21300 ஆகிறது. ஒரு நூலுக்கு இருபது ரூபாய் ராயல்டி என்றாலும் சில லட்சங்கள் கைக்கு வரும். அப்படி விற்காமல் பத்து இருபது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2024 22:20

2024இல் மனதைக் கவர்ந்த புத்தகங்கள்

அர்ஜுன் ராஜேந்திரன் ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஆங்கில இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  இப்போது சில பத்திரிகைகளின் ஆலோசகராக இருக்கிறார்.  2024-இல் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிய ஒரு குறிப்பை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.  அதில் Conversations with Aurangzeb நாவல் பற்றிக் குறிப்பிடப்பட்டு ஒரு பத்தி உள்ளது.  மற்ற புத்தகங்களில் ஹங்கேரிய எழுத்தாளர் László Krasznahorkai எழுதிய Satantango நாவலும் இடம் பெறுகிறது.  இந்த நாவல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2024 21:45

தி டெலிக்ராஃப் இதழில் ஒளரங்ஸேப்

தி டெலிக்ராஃப் நாளிதழ் 2024-இன் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்றாக Conversations with Aurangzeb நாவலைத் தேர்ந்தெடுத்து உள்ளது. “The author challenges historical politics through ‘magic real’ conversations with Mughal emperors, primarily Aurangzeb, who wishes to correct the prevailing prejudicial historiographies of his character.” The Telegraph, டிசம்பர் 27, 2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2024 03:08

December 23, 2024

புத்தகத் திருவிழா

வரும் இருபத்தேழாம் தேதியிலிருந்து சென்னை புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை அரசியல்வாதிகளின் நாள் என்பதால் அன்று செல்வதில் அர்த்தமில்லை. அரங்குகளிலும் கூட்டம் இருக்காது. எனவே இருபத்தெட்டாம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் இருப்பேன். அரங்கு எண்: 540 & 541. சென்ற ஆண்டைப் போல கழிப்பறை அருகில் இருக்கிறதா அல்லது நல்ல இடமா என்று எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. நான்கு மணியிலிருந்து அரங்குகள் மூடும் வரை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2024 05:20

December 19, 2024

கோவா பேருரையைக் கேட்க வருவோருக்கான ஓர் விண்ணப்பம்…

இந்தப் பேருரைக்கான விஷயங்களை நான் என்னுடைய இருபத்தேழாவது வயதிலிருந்து பயின்று கொண்டிருக்கிறேன். இதுவரை இது பற்றி நான் ஒரு வார்த்தை எழுதியதில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மாதம் ஒருமுறை என் நண்பர்களிடம் இவற்றை வழங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது முதல் முதலாக ஒரு பேருரையாகத் தர இருக்கிறேன். இதையெல்லாம் ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் பாடமாக எடுத்தால் பல நூறு யூரோக்கள் கிடைக்கும். பணம் எனக்கு வேண்டாம். ஒரு முறை கேட்டால் புரியாது என்பதால் ஒரு குறிப்பேடும் எழுதுகோலும் எடுத்து வாருங்கள் என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2024 06:47

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.