சாரு நிவேதிதா's Blog, page 48
January 26, 2025
திறவாய்! திறவாய்! நின் தயவாலே… – செல்வா (செல்வகுமார் கணேசன்)
(செல்வா என்று அழைப்பதே சகஜமாக இருக்கிறது என்பதால் செல்வா என்றே குறிப்பிடுகிறேன். இந்தக் குறிப்பு ஒரு சிறுகதை போலவே இருக்கிறது. செல்வாவுக்கு உரைநடை வெகு லாவகமாகக் கைகூடுகிறது. அவர் எழுதப் போகும் தொடரின் முதல் அத்தியாயமாக இதைக் கொள்க. ஓரிரண்டு இடங்களில் க், ச் சேர்த்திருக்கிறேன் செல்வா. உதாரணமாக, பள்ளிகூடம் என்பதை பள்ளிக்கூடம் என்று ஆக்கினேன். ஆனால் ஒன்றிரண்டு இடங்கள்தான் என்பது ஆசுவாசமாக இருந்தது. எனவே இந்தப் பிரதியையே இறுதிப் பிரதியாக வைத்துக்கொள்ளுங்கள்.தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள். ... Read more
Published on January 26, 2025 18:45
தரமான தாம்பத்திய வாழ்வுக்கான ஒரு கையேடு குறித்து மேலும் ஓர் எதிர்வினை: ஷ்ருதி
Hey Charu! I wanted to take a moment to share my thoughts on the advice we’ve been discussing about the welfare of marital relationships, particularly from the perspective of men. At the core of any healthy relationship or partnership, whether it’s a marriage or a committed bond, lies the fundamental principles of trust and honesty ... Read more
Published on January 26, 2025 07:48
January 25, 2025
நீங்கள் ஏன் குடிப்பதில்லை? செல்வா
செல்வா ஒரு பன்னிரண்டு சிறுகதைகள் எழுதியிருப்பார். ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் அனுப்பினார். எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல அவை என்ன ஆயின என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன். கதைகளின் மொழி பிரமாதமாக இருந்ததாக நினைவு. அப்புறம் அவரைப் பார்க்கும்போதெல்லாம் திரும்பவும் அந்தக் கதைகளை அனுப்பி வைக்கும்படி சொல்வேன். அவரும் எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல இதோ என்பார். கதை வராது. நானும் அப்படியே மறந்து விடுவேன். இன்று காலை ஒரு பதினைந்து இருபது பக்கத்துக்கு ... Read more
Published on January 25, 2025 07:12
Unveiling the Illusion: The Complex Dance of Men and Women in Love: Shree
சீனி அளவுக்கு நான் மதிக்கும் தோழி ஸ்ரீ. ஸ்ரீயின் ஏழெட்டு ஆங்கிலக் கவிதைகளை இங்கே நம் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். சிறந்த தாம்பத்திய வாழ்வுக்கான கையேடு என்ற என் கட்டுரைக்கு ரூபாஸ்ரீ எழுதிய எதிர்வினையை முன்வைத்து ஒரு விவாதத்தைத் தொடங்குவதற்கான குறிப்புகள் இவை. இதை ஒரு ஐந்து பேராவது படிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்தக் கட்டுரையை யாரேனும் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் அதையும் வெளியிடலாம். ரூபாஸ்ரீயின் எதிர்வினையைப் படித்து விட்டு இதை வாசித்தால் நலம். ஓர் எதிர்வினை: ரூபா ... Read more
Published on January 25, 2025 04:42
சுயக்கட்டுப்பாடு
நேற்றோடு இந்தக் குடிப் பஞ்சாயத்து முடிவுகு வந்து விட்டது என்றே நினைத்தேன். ஆனால் செல்வாவின் கட்டுரை கிடைத்து மீண்டும் அது பற்றிய விவாதம் தொடர்வதற்குக் காரணமாகி விட்டது. இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைக்கு அடுத்து செல்வாவின் கட்டுரையை சில தினங்களில் பதிவேற்றம் செய்கிறேன். அரூ பத்திரிகையில் அராத்து எழுதிய கட்டுரைதான் என்னைப் பற்றிய கட்டுரைகளில் ஆகச் சிறந்ததாகச் சொல்கிறார்கள். என் கருத்தும் அதுவே. அந்தக் கட்டுரை அளவுக்கு முக்கியமானதும் சுவாரசியமானதுமாகும் செல்வாவின் கட்டுரை. எனக்கு என்னைப் ... Read more
Published on January 25, 2025 04:21
January 24, 2025
பறவைகளின் ஆன்ம கீதம்
Wim Mertens உருவாக்கிய Struggle for Pleasure என்ற இசைக் கோர்வையைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். விம் மெர்ட்டென்ஸைக் கேட்க முனையும் போதெல்லாம் ஸ்ட்ரக்ள் ஃபர் லைஃபோடு முடிந்து விடும். அதே பாடலை திரும்பத் திரும்ப ஐம்பது முறை கேட்டு அந்த இரவே முடிந்து விடும். இன்று விம் மெர்ட்டன்ஸின் வேறு ஏதாவது கேட்கலாம் என்று தேடியபோது இந்தப் பாடல் கிடைத்தது. Birds for the Mind. இது ஸ்ட்ரகிள் ஃபர் லைஃபை விட என்னைக் கவர்ந்தது. ... Read more
Published on January 24, 2025 06:37
இயல்பும் பிறழ்வும்
என்னுடைய பத்து பிராமண நண்பர்கள் பற்றிச் சொன்னேன். அதில் ஒருவரை என் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி விட்டேன். காரணம், அவர் வினித்திடம் போய் சாரு குடித்துக் குடித்து வீணாய்ப் போகிறார் என்று சொன்னார். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகிய நண்பர். வினித் அந்தத் தகவலை என்னிடம் சொல்ல மாட்டார் என்று எப்படி அவர் நினைத்தார் என்பதுதான் எனக்கு ஆச்சரியம். தகவல் பற்றி அவரிடம் விசாரணை செய்த போது அதற்கு சப்பைக்கட்டாக மேலும் அவமானகரமான விஷயங்களைச் சொன்னார். நீக்கி ... Read more
Published on January 24, 2025 04:48
January 23, 2025
அடிக்ஷன்
என்னை வாசிக்கும் யாரும், என்னோடு பழகும் யாரும் என்னைப் பின்பற்றாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வது வழக்கம். ஏனென்றால், நான் அசாதாரணன். இந்த உலகிலேயே அதிக அடிக்ஷன் குணத்தைக் கொண்டது அந்த இலை. அதை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்து வைத்திருக்கின்றன. ஆனாலும் மலைப்பிரதேச மக்கள் அதைப் புகைக்கிறார்கள். இமாலயத்தில் தெருவோரங்களில்கூட அந்தச் செடி முளைத்துக்கிடக்கும். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான கதை இது. அப்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் அந்த இலையைப் ... Read more
Published on January 23, 2025 22:07
சேவையும் ஆலோசனையும்…(சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!)
அவந்திகாவை அடிப்பீர்களா சாரு என்று கேட்டார் இல்லையா என் மஹாத்மா நண்பர்? அந்தக் கேள்விக்கு இணையான கேள்வி எது என்று நான் சென்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளாக நான் அவந்திகாவை புதுமைப்பித்தன் எழுதிய செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை எப்படித் தன் மனைவி செல்லம்மாளை கவனித்துக்கொள்கிறாரோ அப்படித்தான் நானும் அவந்திகாவை முப்பது ஆண்டுகளாக கவனித்து அவளுக்கு சேவை செய்து வருகிறேன். சிங்கப்பூருக்கு மூன்று மாத வீசாவில் சென்றிருந்தேன். இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். அவந்திகாவுக்கு ... Read more
Published on January 23, 2025 07:06
ஆசிரியனும் சகபயணியும்…
கோவாவில் நடந்த புருஷன் நாவல் வெளியீட்டு விழா உரையில் ஃபாத்திமா பாபு சொல்கிறார்கள் நீங்கள் அராத்துவின் குரு என்று. Grand Narrative பற்றிய ஒரு விடியோ பதிவில் உங்களை குரு, குருநாதர் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள். நான் என்ன சொல்லி உங்களை அழைப்பது? எனக்குப் பெரிய குழப்பமாக இருக்கிறது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு தோழி. அன்பே, நீ என்னை எப்போதும் இறைவரே என்றுதான் அழைக்கிறாய். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் அசோகமித்திரனை என் ... Read more
Published on January 23, 2025 04:11
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

