சாரு நிவேதிதா's Blog, page 47

February 10, 2025

குகை வாழ்க்கை

ஆம், குகை வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும்.  வெளியுலகத் தொடர்பே இல்லை.  யாரோடும் பேசுவதில்லை.  வழக்கமாக சீனியோடு தினமும் பேசுவேன்.  ஆனால் உல்லாசம் நாவலுக்கான ’ஃபீல்ட் வொர்க்’ முடிந்து திரும்பிய பிறகு சீனியோடும் பேசவில்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்து கொள்கிறேன்.  ஒரு மணி நேரம் என்னுடைய காலை வேலைகள், பூனைகளுக்கு உணவிடுதல் போன்றவற்றில் போய் விடும்.  பிறகு ஏழு மணி வரை எழுத்து (தியாகராஜா).  ஏழிலிருந்து எட்டரை வரை நடை.  கோடை வந்தால் இந்த நடை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2025 00:19

February 7, 2025

தங்க பஸ்பம்

ஒரு வார காலம் ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தேன். அதன் விவரங்கள் யாவும் என்னுடைய உல்லாசம் நாவலில் விரிவாக இடம் பெறும். Ullāsa : An Erotic Novel என்ற தலைப்பில் அதை நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்திய ஆங்கில இலக்கிய உலகம் நூறு ஆண்டுகள் பழமையில் வாழ்வதால் அதை ஆங்கிலத்தில் வெளியிடுவார்களா என்று தெரியாது. பிரிட்டனிலோ அமெரிக்காவிலோ வெளியிடுவதற்கான தொடர்புகள் எனக்கு இல்லை. ஆனால் பெண்கள் எழுதினால் உடனடியாக இந்தியாவிலேயே வெளியாகும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 07, 2025 22:26

January 29, 2025

எழுதாத கதையின் கதை (சிறுகதை) : சிரஞ்சீவன்

ச திருப்பதிசாமி என்னிடம் சிறுகதை எழுதச்சொல்லி பணித்தார்.  அன்றுதான் அந்தக் கதை எங்கள் கண்முன் நிகழ்ந்திருந்தது.  ஆனால், என்னால் எழுத முடியவில்லை.  இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன.  கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடலை ஒட்டி இருக்கும் ஒரு விடுதியில் நடந்த சந்திப்பில் பத்து பேர் கலந்து கொண்டோம்.  அங்கே சிறுகதை எழுதுவது ஒரு போட்டியைப் போல அறிவிக்கப்பட்டது.  இலக்கிய வரையறைகளுக்கு உட்பட்டு அந்தக் கதை எழுத்தில் நிகழ மறுத்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2025 03:44

January 28, 2025

Embracing the Margins: A Journey through Charu’s World: Shruti

The book ‘Marginal Man’ by Charu Nivedita stands as a remarkable innovation in his collection! Its non-linear structure created a mind-blowing experience that allowed me to escape reality. Baba and Blackie have carved a special place in my heart, and this book truly evokes a rich tapestry of emotions while navigating through its pages. I ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 23:30

புருஷனும் ஓல்ட் மாங்க்கும்… (அராத்துவின் கேள்வியும் என் பதிலும்)

அராத்துவும் ஓல்ட் மாங்க் ரம்மும் பின்னே சாருவும் ரியூ முராகமியும்… அராத்து ”இப்போது அராத்துவின் புருஷன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்போது அராத்து ரியூ முராகாமியைப் பல மடங்கு அதிகமாகத் தாண்டி விட்டார் என்றே தோன்றியது. நேற்று நான் கொடுத்திருந்த பப் சம்பவம் ஒரு உதாரணம். அப்படியானால் அராத்து என்னையும் தாண்டி விட்டார் என்றே பொருள் கொள்ள வேண்டும். (உடனே என் வாசகர் வட்ட நண்பர்கள் சிலர் வாசகர் வட்ட அறையில் உள்ள என் படத்தை அகற்றி விட்டு அங்கே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 23:21

புருஷனில் இதுவரை ரசித்தவை: ஸ்ரீராம் & சாரு

புருஷன் நாவலை மற்றவர்கள் படிக்கும் போது, அவர்களுக்கு வாசிப்பின்பம் குறையாமல் இருப்பதற்காக, சுருக்கமாகச் சொல்கிறேன். * குழந்தைகள் முன் குடிக்கும் நவயுக தம்பதிகள் பற்றிய விமர்சனம். *நேற்று சாரு சொன்ன, பேரிளம் மாதுக்கள், மதுக்கூடங்களில் செய்யும் அக்குறும்புகள் மற்றும் அவர்கள் பள்ளிப்பெண்கள் போல் பாவனை செய்து, உடுத்திக்கொள்ளும் உடைகளின் அபத்தம் பற்றிய நான்கு பக்கங்கள். * ஹொடொரோஸ்கி படங்களில் வரும் shamanism போன்ற ‘ஸ்பெஷல்’ மேகலாவை மீட்கும் கதையில், ‘ஸ்பெஷல்’, மேகலாவின் பிருஷ்டங்கள் பற்றிச் சொல்கிறான், LAS ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 21:42

பதினேழாவது அத்தியாயம் என்ற வெடிகுண்டு – புருஷன் பதிவுகள் – 3

கார்ல் மார்க்ஸின் சிந்தனை, அரசியல், தத்துவம் குறித்த ஒரு புகழ் பெற்ற கேலிச்சித்திரம் உண்டு. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், இம்மானுவல் காண்ட், நீட்ஷே, விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவவாதிகள் எல்லாம் ஒரு வட்ட மேஜையில் அமர்ந்து தத்துவம் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள். அந்த மேஜைக்குக் கீழே தாடி வைத்த ஒரு ஆள் வெடிகுண்டைப் பற்ற வைத்துக்கொண்டிருப்பார். அவர்தான் கார்ல் மார்க்ஸ். அம்மாதிரி புருஷன் நாவலில் ஒரு அத்தியாயம் வருகிறது. பதினேழாவது அத்தியாயம். ழழிழு என்ற கதாபாத்திரம் மானிடர்களிடம் பேசும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 06:15

மரபார்ந்த மொழியின் மரணம் (புருஷன் பதிவுகள் – 2)

1980களிலும் 1990களிலும் இருந்தது போன்ற ஒரு சிந்தனைத் தளம் தமிழ் எழுத்துலகில் இருந்திருந்தால் இந்நேரம் புருஷன் நாவலுக்கு எதிர்வினையாகவும் மதிப்புரையாகவும் இரண்டு மூன்று புத்தகங்களே வந்திருக்கும்.  ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அப்படி வந்தது.  ஸீரோ டிகிரிக்கு வந்தது.  விஷ்ணுபுரத்துக்கு வந்தது.  இன்னும் சில புத்தகங்களுக்கு வந்தது என்றாலும், புத்தகங்களைத் தவிரவும் ஒரு சிந்தனைத் திறப்பாக ஒரு கட்டுரை வந்தால் அதைத் தொடர்ந்து, அதை மறுத்தோ அதன் வழி சென்றோ ஒரு ஐம்பது கட்டுரைகள் வரும்.  அப்படியான ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 04:48

Ryu Murakami, சாரு நிவேதிதா, அராத்து… (புருஷன் பதிவுகள் – 1)

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் ஹருகி முராகாமியை விட பல மடங்கு காத்திரமான எழுத்தாளர் ரியூ முராகாமி.  ஜப்பானில் ஹருகியின் புத்தகங்கள் வெளியானவுடன் இரண்டு கோடி பேர் வாங்குகிறார்கள் என்றால் ரியூ முராகாமியை ஒரு கோடி பேர் வாங்குகிறார்கள்.  ஆனாலும் ரியூ முராகாமி சர்வதேச அளவில் இன்னும் அத்தனை பிரபலம் ஆகவில்லை.  ஆகவும் மாட்டார் என்று தோன்றுகிறது.  ஏனென்றால், அவர் எழுதும் அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் சமாச்சாரங்களை உலகம் தாங்காது.  உலகம் அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2025 01:22

January 27, 2025

புருஷன் நாவல் பற்றி

புருஷன் நாவலை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இத்தனை குறுகிய இடைவெளியில் இத்தனை முறை படித்தது இதுவே முதல் முறை. என்னால் ஒரு நாவலை இரண்டாவது முறை படிக்க இயலாது. மாரியோ பர்கஸ் யோசாவின் நாவல்களை மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து மீண்டும் படிப்பேன். வாசிப்பு இன்பத்துக்கு உதாரணம் மாரியோ பர்கஸ் யோசா. ஆனால் அராத்துவின் புருஷன் மாரியோ யோசாவையும் தூக்கி அடித்து விட்டது. இந்த ஒரு பத்தியைப் படித்துப் பாருங்கள்: என் எதிரே, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2025 04:58

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.