சாரு நிவேதிதா's Blog, page 46
February 22, 2025
பெட்டியோ வாசிப்பு அனுபவம்: வளன் அரசு
சாருவின் பெட்டியோ நாவலை மிகத் தாமதமாக வாசித்தேன். இப்படி ஒரு நாவல் வெளிவந்த பிறகு எப்படி பேசுபொருள் ஆகாமல் போனது என்று வியப்பாக இருந்தது. ஆனால் அப்படி பேசுபொருள் ஆகியிருந்தால் தமிழர்கள் வாழ்வியலில் அடுத்தகட்ட நகர்வு வந்துவிட்டார்கள் என்றாகிவிடும். ஆகவே பெட்டியோ இப்படி தண்ணீரில் கிடக்கும் கல்லாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பெட்டியோ வாசித்தபோது சாருவின் நாவல்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. ஸீரோ டிகிரி படித்த போது ஏற்பட்ட பரவசம் அப்படியே இந்த நாவல் வாசிக்கும் ... Read more
Published on February 22, 2025 21:06
Scent of a Woman… (மேலும் சில விளக்கங்கள்) – ஸ்ரீ
நேற்று எழுதியதன் தொடர்ச்சியாக இன்னும் சில விஷயங்கள். கர்னலுக்கும் எனக்குமான இணைத்தன்மைகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் இன்னொன்று. சார்லியை கர்னலின் உதவிக்கு அனுப்பும்போது கர்னலின் மகள் சார்லியிடம் ஒரே ஒரு விஷயத்தை வலியுறுத்துவாள். ”அவரை சார் என்று அழைக்காதே, கெட்ட கோபம் வந்து விடும்.” ஆனாலும் சார்லி ஒரு மாணவன் என்பதால் எடுத்த எடுப்பிலேயே கர்னலை சார் என்று அழைத்து கெட்ட வார்த்தையில் திட்டு வாங்குவான். அவனுக்கு அதை மாற்றிக் கொள்ள மேலும் சில வசவுகளை வாங்க ... Read more
Published on February 22, 2025 00:18
February 21, 2025
ஶ்ரீயின் கேள்வியும் என் பதிலும்…
படத்தைப் பற்றிய என் குறிப்பு வெளிவந்த பத்தே நிமிடங்களில் ஶ்ரீயின் ஒரு கேள்வி வந்து விழுந்தது. அதில் எக்ஸைல் பற்றிய ஒரு நிராகரிப்பும் இருந்தது. ஶ்ரீ அப்படித்தான் சொல்ல வேண்டும். அதுதான் நியாயமும் கூட. அதனால் அவளை மன்னித்து விட்டேன். மற்றபடி எக்ஸைல் பிரபஞ்ச அன்பு குறித்த ஒரு சாசனம். என் எழுத்துக்களிலேயே என்னைப் பற்றி அதிகம் வெளிப்படுத்திக்கொண்டது அந்த நாவலில்தான். ஒரு தமிழ் எழுத்தாளனின் வாழ்வியல் ஆவணம் அது. இனி ஶ்ரீ: Put your exile ... Read more
Published on February 21, 2025 07:45
Scent of a woman
இந்தப் படத்தை எப்படி இத்தனைக் காலமாகத் தவற விட்டேன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இதில் வரும் த்தாங்கோ நடனக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். அல் பச்சீனோவின் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தும் படம். இந்தப் படத்தில் நடிப்புக்காக அவர் ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார். நேற்று நாள் முழுதும் எழுதி விட்டு ஸில்வியா ப்ளாத்தின் தெ பெல் ஜார் நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு எட்டரை மணி வாக்கில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று தோன்றியபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. ... Read more
Published on February 21, 2025 06:48
February 20, 2025
வர்ஜீனியா வுல்ஃபும் ஸில்வியா ப்ளாத்தும்…
உல்லாசம் நாவல் வெளிவரும் வரை அது பற்றி ஒரு வார்த்தை எழுதக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாவலின் தலைப்பு மாறி மாறி உருண்டுகொண்டே இருக்கிறது. Ullasa: The Erotics of Being என்று ஒரு தலைப்பு சரியாக வரும் என்று தோன்றுகிறது. நாவலின் நாயகி ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளில் நானே ஒரு பெண்ணாக உருமாறிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீ பெருமளவுக்கு உதவி செய்கிறாள். ஸஞ்ஜனாவை எழுதிக்கொண்டிருக்கும்போது தவிர்க்கவே முடியாமல் ஸில்வியா ப்ளாத் மற்றும் வர்ஜீனியா வுல்ஃபின் ஞாபகம் ... Read more
Published on February 20, 2025 02:47
February 19, 2025
அன்பு
தலைப்பில் Empathy என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கில வார்த்தைகளைக் கலப்பது எனக்குப் பிடிக்காது என்பதால் அன்பு எனத் தலைப்பிட்டிருக்கிறேன். அன்பு என்ற பெயரில் என்ன்னென்ன அராஜகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை அன்பு நாவலிலேயே விலாவாரியாகப் பேசியிருக்கிறேன். அன்பு என்பதை இன்றைய சமூகம் மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. புத்திமதிகள் சொல்வதும், போதனை புரிவதும்தான் அன்பு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அன்பு என்ற பெயரில் அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடும் வன்முறையும் நடக்கிறது. உதாரணம், எனக்குத் தேநீர் பிடிக்காது. குடித்தால் ... Read more
Published on February 19, 2025 02:14
February 17, 2025
பற்றிக்கொள்ள ஒரு தோள்…
காலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு உரிய சரியான ஆடைகள் இல்லாததால் நான் வழக்கமாக எடுக்கும் ரேர் ரேபிட் கடை இருக்கும் ஃபீனிக்ஸ் மாலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். யாரோடு செல்வது? சென்னையில் எனக்கு அதற்குத் தோதான நண்பர்களே இல்லை என்பதை முதல் முதலாக உணர்ந்தேன். இந்த வேலைக்கெல்லாம் செல்வா சரிவர மாட்டார். மட்டுமல்லாமல் அவர் ஊருக்குப் போயிருந்தார். சீனி கொலை பிஸி. அவரை இதற்கு இழுத்தடிக்க முடியாது. சுரேஷ் நெடுஞ்சாலைப் பயணம் சென்றிருக்கிறார். எங்கே அழைத்தாலும் வரக்கூடிய ராஜா ... Read more
Published on February 17, 2025 03:29
February 15, 2025
Lumpen Literati – சாரு உரை
பாரிசாகரனின் ‘போதமற்ற குறளிகளின் வினையாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ‘Lumpen Literati’ என்ற தலைப்பில் சாருவின் உரை கீழே. நன்றி: ஷ்ருதி டிவி
Published on February 15, 2025 21:45
February 14, 2025
பாரிசாகரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா
இன்று (15.2.2025) மாலை ஆறு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் பாரிசாகரனின் போதமற்ற குறளிகளின் வினையாடல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். வர முடிந்தவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். விழா அழைப்பிதழில் மற்ற விவரங்கள் உள்ளன.
Published on February 14, 2025 21:44
February 13, 2025
காதலர் தினச் செய்தி
Ullasa: An Erotic Tale நாவலில் சுமார் எண்பது பக்கங்களை எழுதி முடித்தேன். அதில் ஒரு இருபது பக்கங்களை மூன்று நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். நாவல் மொத்தமாக இருநூறு பக்கங்கள் வரலாம். இந்த எண்பது பக்கங்களில் காமம் கொஞ்சம்தான். காதல்தான் நிரம்பி வழிகிறது. கடைசி ஐம்பது பக்கங்கள் காமம் மட்டுமே இருக்கும் என்கிறது நாவலுக்கான வரைபடம். ஒரு வரைபடத்தோடுதான் இந்த நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால் தலைப்புகூட கடைசியில் மாறலாம். பதிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதுவே நடக்கும். நாவலின் ... Read more
Published on February 13, 2025 22:50
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

