சாரு நிவேதிதா's Blog, page 45

March 12, 2025

நாமறுதல் – 1

நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்னவெல்லாம் பிடிக்காது என்று சொல்லி விளையாடும் ஆட்டமொன்றை ஆடினோம் முடிக்கும் தறுவாயில் சொன்னேன் மீண்டுமொருமுறை இதே ஆட்டத்தை ஆடினால் எனக்கு எதுவுமே நினைவிலிருக்காது தெரியுமல்லவா? எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது மட்டுமே ஞாபகங்களை நிறைத்துவிடுகிறது எனைத் தவிர மற்ற யாருக்குமே என்ன விருப்பு வெறுப்பென்பதெதுவும் எனக்குத் தெரியாது நானென்ன செய்யட்டும்? ஆட்டம் முடிந்ததும் ‘உன்னை ஒன்று கேட்டால் எனக்காகத் தருவாயா?’ என்றாய். நிச்சயமாகத் தருகிறேன் என்றதும் எனக்கே எனக்கென்று மட்டுமாய் ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2025 09:31

ஒரு நவீனத்துவ காதல் காவியம்

Mariage d’Amour என்ற தலைப்பில் ஒரு நவீன காலத்துப் பாடல் உள்ளது. இதை சாப்பின் இயற்றியதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். இதை இயற்றியது Paul de Senneville என்ற ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர். இயற்றிய ஆண்டு 1979. இந்தப் பாடல் ஸிம்ஃபனி இல்லை. ஒரே ஒரு பியானோ. இந்தப் பாடலை பிரபலப்படுத்தியவர் பியானிஸ்ட் ரிச்சர்ட் க்ளேடர்மேன். க்ளேடர்மேன் பற்றிப் பல முறை எழுதியிருக்கிறேன். லிங்க்: https://www.youtube.com/watch?v=1ej1S... இதே பாடலை ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இசைத்திருக்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது நீங்கள் யாரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2025 04:32

இசையும் சமூகமும்…

இந்தக் கட்டுரையை நேற்றைய கட்டுரையோடு சேர்த்து வாசிக்கலாம். பல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் ஏதோ ஆர்வக் கோளாறின் காரணமாக அல்லது விதியின் கோர விளையாட்டுகளில் ஒன்றாக திடீரென்று இலக்கியக் கதை எழுதலாம் என்று முடிவெடுப்பது உண்டு. இருநூறு ஜனரஞ்சக நாவல்கள் எழுதியிருப்பார்கள். அல்லது, ராஜேஷ்குமாருக்குப் போட்டியாக ஒரு எண்ணூறு நாவல் எழுதியிருப்பார்கள். ராஜேஷ்குமார் ஆயிரம் என்று நினைக்கிறேன். இளையராஜா அடிக்கடி சொல்லிக் கொள்வது போல ராஜேஷ்குமார் போல ஆயிரம் நாவல்கள் எழுதியோர் உலகில் யாரும் இலர். இளையராஜா பத்தாயிரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2025 03:39

March 11, 2025

ஸிம்ஃபனி

கிரிக்கெட்டில் இன்னமும் ஐந்த நாள் ஆட்டம் இருக்கிறது அல்லவா, அதைப் போலவே ஸிம்ஃபனி என்ற இசை வடிவமும் இன்னமும் உருவாக்கப்பட்டு, ரசிக்கப்பட்டும் வருகிறது. நமக்கு மேற்கத்திய ஜனரஞ்சக இசை வடிவங்களே பரிச்சயமாக இல்லாததால் ஸிம்ஃபனி என்ற சாஸ்த்ரீய இசை வடிவம் இன்னமும் அதிக தூரத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தின் கலாச்சார ரசனை பெருமளவுக்கு மாறி விட்டதும் ஒரு காரணம். இலக்கியத்தில் பார்த்தாலும் இந்த ரசனை மாற்றத்தைத் தெளிவாக உணரலாம். கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2025 06:05

March 7, 2025

உல்லாசம்: கதையும் மொழியும்…

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான இலக்கியப் பத்திரிகை ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது.  கதையோ, கவிதையோ, நாவலிலிருந்து ஒரு பகுதியோ எதுவாகவும் இருக்கலாம்.  ஆனால் இதற்கு முன் வெளிவந்ததாக இருக்கக் கூடாது. உல்லாசம் நாவலிலிருந்து ஒரு அத்தியாயத்தை அனுப்பலாம் என எண்ணினேன்.  அது உயிர்மையில் வெளிவந்த போது அதைப் படித்த போது அடிவயிறு கலங்கியது என்று பலரும் சொன்னார்கள்.  ஆனால் அதை அனுப்ப முடியாது என்றாள் ஸ்ரீ.  காரணம், போட்டி விதிகளில் ஒன்று, போட்டிக்கு அனுப்பப்படும் கதை இதற்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2025 21:29

March 2, 2025

தூத்துக்குடி கொத்தனாரு…

தூத்துக்குடி கொத்தனாரு பாடல் கேட்டேன். இசைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை பாடல் வரிகளுக்குக் கொடுக்கவில்லை. பொதுவாகவே சினிமா பாடல் வரிகள் காலியான இடங்களை வார்த்தைகளால் நிரப்பும் வேலையாகத்தான் இருக்கின்றன என்பதால் இதில் எதுவும் ஆச்சரியம் இல்லை. ஆனால் தூத்துக்குடி கொத்தனாரு பாடல் இசையால் பிரபலம் ஆகவில்லை. அதன் பாடல் வரிகளால் பிரபலம் ஆகியிருக்கிறது. அநேகமாக பெண்ணின் ஜனன உறுப்புக்கான லோக்கல் வார்த்தையைப் போட்டு எழுதப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 02, 2025 05:15

March 1, 2025

தில்லையின் விடாய் மற்றும் தாயைத்தின்னி: இன்றைய விழா

இன்று சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் மாலை ஐந்து மணி அளவில் நடக்க இருக்கும் தில்லையின் நூல்கள் குறித்த விழாவில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன். தாயைத்தின்னி வெளியான அன்றே அதை ஒரு பிரதி வாங்கியிருந்தேன். வாங்கி ஐந்தே நிமிடத்தில் ஜா. தீபாவிடம் கொடுத்து விட்டு நான் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டேன். இந்த நாவலை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று ஜா. தீபாவிடம் கேட்டுக்கொண்டதும் ஞாபகம் இருக்கிறது. இன்றைய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 01, 2025 00:21

February 27, 2025

சிவராத்திரியும் விரால் மீன் குழம்பும்…

சில ஆண்டுகள் நான் சென்னை மௌண்ட் ரோடிலுள்ள தலைமைத் தபால்துறை அதிகாரி (Chief Postmaster General) அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை செய்தேன். அப்போது என்னோடு சக ஸ்டெனோவாகப் பணிபுரிந்தவர் சீனிவாசன். அக்கால கட்டத்தில் எனக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர். அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க இயலாது. அதற்குப் பிரதியாக நான் நல்ல நிலைக்கு வந்ததும் அவருக்கு எதுவும் செய்யவில்லை. செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர் பெயரையே என் கைத்தொலைபேசியில் block பண்ணி வைத்து விட்டேன். காரணம் பின்னால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2025 05:46

February 26, 2025

ஓ, என் உயிரே…

Teri aankon mein dekh ke – I’ll look into your eyes Teri baahon mein jhoom ke main I’ll dance in your arms Tere haathon ko choom ke I’ll kiss your hands Teri zulfon ko chhed ke I’ll tease your tresses Tere roop ki, noor ki, hai kasam tu na ja You have the promise of ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2025 20:20

February 24, 2025

நான் ஒரு ஊழியக்காரன்

சமீபத்தில் ஒரு வாசகர் டியர் ஜிந்தகி என்ற படத்தின் கடைசிக் காட்சியின் காணொலியை அனுப்பி, அது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இன்றைய சமூக எதார்த்தத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், படம் முழுக்கவும் பார்க்காவிட்டாலும் இந்தக் காட்சியை மட்டுமாவது பார்க்குமாறும் எழுதியிருந்தார்.  குறிப்பிட்ட காட்சியைப் பார்த்த போது இரண்டு மனநோயாளிகள் பேசிக் கொள்வது போல் இருந்ததால், படத்தையும் முழுசாகப் பார்த்துத் தொலைத்து விடுவோம் என்று பார்த்தேன்.  வாசக நண்பர் சொன்னது உண்மைதான்.  மற்ற ஹிந்தி ஃபார்முலா கதைகளிலிருந்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2025 02:26

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.