சாரு நிவேதிதா's Blog, page 43

March 24, 2025

March 19, 2025

ஒரு வேண்டுகோள்

என்னோடு தொடர்பில் இருக்கும், உறவில் இருக்கும், நட்பில் இருக்கும் எல்லா நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.   யாரும் என்னோடு எது பற்றியும் சூடாக விவாதிக்காதீர்கள்.  குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.  தொலைபேசியிலோ, நேரிலோ, குரல் செய்தியிலோ இந்த வேலையைச் செய்ய வேண்டாம்.  உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் என்னை விட்டு விலகி விடுங்கள்.  என்னிடம் அது பற்றி விவாதிக்காதீர்கள்.   விவாதித்தால் எனக்கு நெஞ்சு வலி வருகிறது.  அந்த வலி ஓரிரண்டு நாட்களுக்குத் தொடர்கிறது.  இது எனக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2025 04:59

March 17, 2025

7. உதிர்ந்த நட்சத்திரங்களின் ஒரு குரல் பாடல்

1 நட்சத்திரங்கள் உதிர்ந்து விட்டதாகத் தெரிகிறது இந்த அதிசயத்தைக் கொண்டாட இன்னொரு கோப்பை ஊற்று.” இரவு பகலாகியிருந்தாலும் எலும்பை ஊடுருவுகிறது குளிர்கொழுந்து விட்டெரியும் சுவாலைகளில்கைகளை நீட்டி குளிரை அகற்றிக் கொள். 2 கோப்பையில் வைனை ஊற்றியபடி “உனக்கு என்னை விட வைன்தான் பிடித்திருக்கிறது” என்கிறாய் “உண்மைதான், வைன் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் தனிமையில் நம் சந்திப்பு இதுவே முதல்முறை இனிமேல் எப்போது சந்திப்போம், தெரியாது” உன்னை முத்தமிட்டபடி “இனி உன்னைச் சந்திக்கும்போது வைனைத் தீண்டுவதில்லை” என்கிறேன். 3 ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2025 06:35

March 14, 2025

6. நடனம்

இதுவரை எனக்குத் தெரியாத பெண்களோடுதான் நடனமாடியிருக்கிறேன் அது ஒரு நிழலோடு ஆடுவது போல கனவோடு ஆடுவது போல. சட்டென நிழல் நிஜமாகி வந்ததுபோல் வந்தாய். நடனமாடலாமா என்றதற்கு நடனம் பிடிக்காது என்றாய். மீண்டும் நிழல்கள் என் கரம்பற்றி அழைத்தன. நடனத்தைத் தொடர்கிறேன் நான்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2025 23:56

5. வாக்குமூலம்

இந்த வயதில் இப்படி ஒரு விபரீதம். ஊருக்கொரு காதலியொடு இறுமாந்திருந்தேன் எண்ணினால் ஒரு டஜனுக்கு ஒன்று குறையலாம் கடைசியாய் வந்ததொரு மோகினிக்குட்டி மந்திர தந்திர சூக்ஷுமம் அறியேன் ஒருத்திக்கு ஒருவன் என்றது குட்டி பதினோரு காதலிகளுக்கும் இறுதி வார்த்தைகளை நல்கினேன் குட் பை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2025 23:55

4. வெற்றிடம்

நீ இல்லாமல் போனால் நீ இருந்த இடத்தை என்ன செய்யட்டும் எனக் கேட்கிறாய் தஸ்தயேவ்ஸ்கி அனா இருவரின் கதை சொன்னேன் திரும்பவும் கேட்கிறாய் ”நீ இல்லாத வெற்றிடத்தை என்ன செய்யட்டும் நான்?” என் பெயர் நிகானோர் பார்ரா என்கிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2025 04:34

3. எப்போதாவது எழுதுபவனின் கவிதை

”எழுதாதவன் எழுதியிருக்கும் கவிதை எப்படியிருந்ததென்று சொல்” என்றேன். ”நட்சத்திரங்களின் காலம் கற்பனையில் எட்டாதது புழுக்களின் காலம் கண் சிமிட்டலில் முடிந்து போகும் கண் சிமிட்டும் காலத்தில் நட்சத்திரங்களை வாழ்ந்திருக்கிறாய் ஒரு அதிசயத்தை எப்படியென்று யாரால் விளக்க முடியும் அன்பே?” என்கிறாய்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2025 02:54

கனவு

எனது நிறைவேறாத கனவு ஒன்று உண்டென்றால் அது பியானோ கலைஞனாக வேண்டும் என்பதுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட அது பற்றி மிகவும் யோசித்தேன். சாந்தோமில் என் வீட்டுக்கு எதிரே பியானோ கற்பிக்கும் பள்ளி இருந்தது. அலையவே வேண்டாம். ஆனால் தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சி ஸ்கேல்ஸ், விரல் பயிற்சி மற்றும் டெக்னிக். இரண்டாவதுதான் கடினம், ஸைட் ரீடிங். இது முன்னதாகவே பயிற்சி எடுக்காமல் கண் முன்னே நோட்ஸை வைத்துக்கொண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2025 00:03

March 13, 2025

2. நிழலிலி

1 வாழ்நாள் எல்லாம் எழுதுகிறேன் சிலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை 2 பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகக் குடித்தேன் குடிகாரன் என்றார்கள் தனிமையை விரட்டப் பெண்கள் நாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஆயிரம் நிழல்கள், ஆயிரம் கவலைகள் எனக்கே எனக்கென ஒருத்தி கிடைத்தாளில்லை கிடைத்தவளும் அன்பைக் கையிலெடுத்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி அடித்தாள் படுகாயமுற்றேன். 3 கேட்டதைக் கொடுக்கும் என் கர்த்தாவிடம் ’அதிகாலையின் ஆதவனைப் போல நிலவின் சஞ்சாரத்தைப் போல நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் போல தென்றலின் இனிமையைப் போல குழந்தையின் முதல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2025 07:40

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.