சாரு நிவேதிதா's Blog, page 42

April 2, 2025

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – அரவிந்த் வடசேரி

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் குறித்து அரவிந்த் வடசேரி எழுதிய கட்டுரை ஆவநாழி இதழில் வெளியாகியுள்ளது.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 09:08

தாயே!

இதுவரை இப்படி நின்றதில்லை எப்போதும் என் உடலை பொய்மேகங்களால் மறைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன் சமயங்களில் மேகம் கலைந்து என் மேனியின் சில துளிகள் தெரிந்ததுண்டு அதைக் கண்டு பரிகசித்தோர், அவமதித்தோர் பலருண்டு இப்போது மோகினிக்குட்டீ உன் முன்னே மேகம் கலைத்து நிர்வாணம் கொண்டு நிற்கின்றேன் ஏன் இதுவரை பொய்மேகம் அணிந்தாய் என்கிறாய் தெரியவில்லையே தாயே யோசி யோசி யோசி ’என் நிர்வாணம் கண்டு அவர்கள் பார்வை பறிபோகுமென்று அஞ்சினேன்.’ ’அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் மேகம் கலைத்தாய்?’ ‘நீயும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 08:21

April 1, 2025

நிழல்களின் கூட்டம்

மனைவியின் குடும்ப சுபவிழா ஒன்றிற்கு அவனும் சென்றிருந்தான் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி எல்லோரும் முதல் மாடியிலிருந்த மண்டபத்துக்குச் செல்வதைக் கண்டான் மத்திம வயதுக்காரர்களால்கூட இளைஞர் துணையின்றி ஏற முடியவில்லை எழுபத்து மூன்று வயதான அவனால் அந்தப் படிக்கட்டுகளில் லகுவாகவே ஏற முடிந்தது ஆண்களில் பலர் நெற்றியில் குலச்சின்னம் தரித்து மெல்லிய வேட்டியணிந்து அதனொரு பாகத்தை இடுப்பில் செருகியிருந்தார்கள் மேலே சட்டையில்லை இதைத்தான் அக்காலத்து ஐரோப்பியர் அரைநிர்வாணப் பக்கிரிகளென்றார்கள் போலும் இந்த வெய்யிலுக்கு இதுதான் உகந்த உடை தடையேதுமில்லை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 18:13

March 30, 2025

சும்மா இருந்தவனின் காலம்

முதல் மாடியிலிருந்த என் நண்பனின் வீடு மேஜையோ நாற்காலிகளோ இல்லை தரையில் அமர்ந்தபடி காலை பத்து மணியிலிருந்து வைத்த இடத்தில் வைத்தபடி எழுதிக்கொண்டிருக்கிறாள் மோகினிக்குட்டி தட்டச்சு செய்துகொண்டே இடையிடையே பேசுகிறாள் சும்மா இருக்கும்போது இன்னொன்றில் ஈடுபட இயலாது என்கிறேன் மாலை மங்கி இரவு சூழ்கிறது எட்டு மணி நேரமாக உன் அருகே வைத்த இடத்தில் வைத்தபடி அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்து ஏன் சும்மா இருக்கிறாய் ஏதாவது பேசு என்கிறாய் சும்மா இருக்கும்போது எப்படிப் பேசுவது என்கிறேன் நீ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 03:14

காலன்

காலத்தைக்கால்பந்தாக்கி விளையாடிஇறுமாந்து கிடந்திருந்தேன் இப்போதுஉன் வருகைக்குப் பிறகுஉனக்கும் எனக்குமானகால இடைவெளியின்பூதாகாரம் கண்டு,எந்தக் கவலையுமில்லாமல்காலத்தை அளந்துகொண்டிருந்தமணற்கடிகையைஉடைத்து விட்டேன்இப்போதுஎண்ணிறந்த மணற்துகள்கள்முள்ளில்லாத கடிகாரமென எரிந்துகொண்டிருக்கிறதுசூரியன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2025 00:19

March 29, 2025

மூன்று கவிதைகள்

1.இளம் கவிஞர்களுக்கான ஆலோசனை இளம்கவிஞர்களுக்கான ஆலோசனையில் எதிர்கவிதை எழுதிய நிகானோர் பார்ரா சொன்னது என்ன? கவிதையில் எல்லாமே அனுமதிக்கப்பட்டதுதான் ஒரே நிபந்தனை, பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும். பார்ராவின் ஆலோசனைக்கு ஓர் பின்குறிப்பு: பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும், குருதியினாலும் ஆன்மாவினாலும்; குசுவினால் அல்ல. 2. பால்பிடேஷன் 1பாவமன்னிப்பு வழங்குகின்றபணியில்யாருமே சேர்வதில்லை.எத்தனையோ சலுகைகளைஅள்ளித் தருவதாகஅறிவித்தும்பொருட்படுத்த யாருமில்லைஒரு கட்டத்தில்அந்தப் பணியையும்தானே செய்யத் தொடங்கினார் கடவுள்.துவக்க விழாச் சலுகைகள்எக்கச்சக்கம் எனவிளம்பரங்கள் கண்ணைப் பறித்தனஊரே திரண்டுகடவுள் முன் நின்றது{நீண்டு கிடந்த வரிசையில்கவிஞர்களையும் சிறார்களையும் தவிரமற்றெல்லோரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2025 05:30

March 28, 2025

ஒன்றுமில்லையில் ஒளிர்ந்த ஓராயிரம் நட்சத்திரங்கள்…

1.சொல் ஏன் பிறந்தது மனதைச் சொல்ல உன் மனதை நானும் என் மனதை நீயும் சொல்ல முயன்றோம். காலக் கணக்கு தெரியவில்லை 2ஒரு கட்டத்தில் வேறு? என்றேன் ஒன்றுமில்லை என்றாய் உன் குரல் வேறு பல கதைகள் சொன்னது பால்கனிக்கு தினமும் வந்து நீர் அருந்தி பிஸ்கட் தின்னும் அணில் குஞ்சுகள் பற்றி, வளர்ப்பு முயல்குட்டி அதிக அளவுரொட்டி தின்று வயிற்றுவலியால் அவதியுற்றது பற்றி, ஒரு பெண் உன்னை அவமதித்தது பற்றி, மார்பகங்கள் நெறி கட்டி நீ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2025 09:37

March 27, 2025

அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1

அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 09:51

My Life, My Text: Episode 13

சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மை லைஃப் மை டெக்ஸ்ட் தொடரின் பதின்மூன்றாவது அத்தியாயம் வெளிவருகிறது. தாமதத்துக்கு நானே காரணம். இனி இந்தத் தொடர் சீரான இடைவெளியில் தொடர்ந்து வரும். My Life, My Text by Charu Nivedita: Episode 13 – The Asian Review
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 27, 2025 07:38

March 24, 2025

You are the reason…

So long என்ற பாடலில் ஸ்ரீ பெயரைப் போட்டதும் பல கடிதங்கள். என்ன குட்பை சொல்லி விட்டாரா என்று. அடப் பாவிகளா, நான் சில பாடல்களை அர்த்தம் கேட்டுக் கேட்பதில்லை. கிட்டத்தட்ட டான்ஸ் ஆட வைக்கும் பாடல் ஸோ லாங். இப்போது இந்தக் கடிதங்களைப் பார்த்து ஸ்ரீ பெயரை நீக்கி விட்டேன். இதோ இன்னொரு நல்ல அர்த்தம் தரும் பாடல். ஆனால் பாடல் படு தண்டம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 07:28

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.