சாரு நிவேதிதா's Blog, page 39
April 21, 2025
ஆத்மாவிலிருந்து பேசுதல்
எழுத்தே என் பிராணன்அந்த எழுத்துடன் பயணிப்பவளென்மோகினிக்குட்டிஅவளோடுகூடஆத்மாவிலிருந்து பேசுவதில்லைகாரணமொன்றுமில்லைசிறைக்கூடத்திலிருந்து எவரேனும்ஆத்மாவிலிருந்து பேச முடியுமா? இந்தப் பேச்சு எதற்கென்றால்ஒருநாள் என் மனையாள் சொன்னாள்யாருடனோ நீ ஆத்மாவிலிருந்துபேசிக்கொண்டிருந்தாய்.சொல்லும்போதுஏக்கத்தின் கேவல்தெறித்து விழுந்தது யோசித்து யோசித்துக் களைத்தேன் ஒருநாள் எதேச்சையாகத்தெரிந்ததுபிராணனைவிட முக்கியமானதேதேனுமுண்டா?உண்டென்றாலதுகவிதை கவிதை பற்றியேஅந்தக் கவிஞனுடன்பேசுவதுண்டுஆத்மார்த்தமாகத்தான் ஆத்மார்த்தியுடன் ஆத்மார்த்தமாகஅல்லாமல் வேறெப்படிப் பேசமுடியும்?
Published on April 21, 2025 23:20
துயரற்றிரு மனமே!
அதனால்ஒருபோதும் துயருற்றதில்லைமானுடரெவருடனும் தொடர்புமில்லை
Published on April 21, 2025 21:52
புகையும் பால்கனி
நண்பர்களோடுதங்கியிருந்த அறையின்பின்புற பால்கனி அதன்கீழே எப்போதும்சுநாதமெழுப்பியபடிஓடிக்கொண்டிருக்குமோர்ஓடை எட்டிப் பார்த்தால்அச்சமூட்டாதசிநேகமான அருவி அடர் வனத்தில்சூரியனைக் காணமுடிவதில்லை காலை பத்து மணியிருக்கலாம்யாரும் எழுந்துகொள்ளவில்லை பால்கனியில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருக்கிறேன் மரங்களோடும்அருவிகளோடும்நதிகளோடும்பிராணிகளோடும்வாழ்ந்திருந்த மனிதன்இப்படிநகரமயத்தினின்றும் விலகி வந்துதான்இதையெல்லாம்எட்டிப் பார்க்க முடிகிறது அப்போது பெருத்தவுடல்கொண்டவொரு குரங்குபால்கனியின் இரும்புக்கம்பியில்குதித்தமர்ந்து“பசி..பசி” என்றது அறைக்குள் சென்றுபழுத்து முதிருந்திருந்தவொருபப்பாளியைக் கொண்டு வந்துகொடுத்தேன் தட்டிப் பறிப்பது போல்பிடுங்கிக்கொண்டுகிளம்பியது வாய்விட்டு“ஒரு நன்றி சொல்ல வேண்டாமா?”எனத் துணுக்குற்றேன் “ம்ஹும்” நவில்வதும்மறப்பதும்”மானுடத்தின் இயல்பன்றோ?”எனச் சிரித்தவாறேஅகன்றதுஅந்த மந்தி.
Published on April 21, 2025 21:25
கொஞ்சம் மேற்கத்திய இசை
விவால்டியின் The Four Seasons என்ற இசைக் கோர்வையில் 3rd Movement என்ற பகுதி மிகவும் கடினமானது. ஆனால் கேட்பதற்கு ஒரு மகத்தான இசை அனுபவத்தைத் தர வல்லது. கீழே அதன் இணைப்பு https://youtu.be/ZdjeaURnyiE இதுவும் விவால்டிதான் Vivaldi: Violin Concerto in D Major (Grosso Mogul), complete | Augusta McKay Lodge RV 208 8K விவால்டி. இது அத்தனை பிரபலம் ஆகாதது. ஆனாலும் கடினமானது. Violin Concerto in E Minor, ... Read more
Published on April 21, 2025 07:47
தியாகராஜா பற்றி ஒரு கடிதம்
நேற்று வெளியிட்டிருந்த தியாகராஜா நாவலின் ஒரு சிறு பகுதி பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த ஆங்கிலம் பிடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, உங்களுடைய இந்த ஆங்கிலத்தை விட உங்கள் தமிழ் நன்றாக இருக்கும் என்றே சொன்னேன் என்றாள் ஸ்ரீ. நிச்சயமாக. நான் எழுதும் தமிழ் இன்றைய தினம் ஈடு இணை இல்லாதது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அப்படி ஒரு ஆங்கிலத்தை என்னால் எழுத இயலாது. ஆனால் நானும் ஸ்ரீயும் சேர்ந்தால் எழுதலாம். அப்படித்தான் அனாடமியை எழுதினோம். நேற்று ... Read more
Published on April 21, 2025 07:14
படித்ததில் பிடித்தது
தமிழில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது எனக்குள் துயரம் மூளும். இப்படிப்பட்ட கதைகளைத்தானே நியூயார்க்கரில் வெளியிடுகிறார்கள்? அதை உலகம் பூராவும் வாசிக்கிறார்களே? தமிழில் மட்டும் ஏன் ஐநூறு பேரோடு முடிந்து போகிறது? ஜப்பானியர்களைப் போல் கோடிக்கணக்கில் படித்தால் எனக்கு நியூயார்க்கரும் தேவையில்லை, ஒரு மயிரும் தேவையில்லை. இங்கே ஐநூறு ஆயிரம் என்றல்லவா போகிறது? சமீபத்தில் ஆத்மார்த்தியின் கத்தரிப்பூ என்ற சிறுகதையை உயிர்மையில் வாசித்தேன். மறக்க முடியாத கதை. தமிழனின் வாழ்வியல். இப்படித்தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களை ... Read more
Published on April 21, 2025 06:25
மழைக்குத் தீ மூட்டியவள்
Adele பாடிய‘மழைக்குத் தீ மூட்டியவள்’பாடலைக்கேட்டிருக்கிறாயா? நீயும் மழைக்குத் தீமூட்டுபவள்தான்மழைக்கு மட்டுமல்லதென்றலுக்குத் தீசாற்றுபவள்கடலுக்கும்மலைகளுக்கும்அருவிகளுக்கும்தீ ஏற்றுபவள்என்று நீ என்னைமுத்தமிடும்போதுபுரிந்துகொண்டேன். நீ கொண்டுவரும் தீசுடத்தான் செய்கிறதுஆனால்தேனினுமினிமையும்வலி நீக்கும் ஜாலமும்வசந்தத்தின் குளிர்மையும்கோடைமழையின் மணமும்மலர்வனத்தின் ரம்மியமும்வானவில்லின் அதிசயமும்கொண்டிருக்கிறது பிற்பாடுதான் தெரிந்ததுநீ ஏந்துவது தீயல்ல“நினைந்து நைந்து உள்கரைந்துஉருகி”யோடும்கருணையின் ஸ்தூலமென்று…
Published on April 21, 2025 06:13
April 20, 2025
மழை இப்போதும் வலுத்திருக்கிறது…
1 இந்த நேரம் பார்த்துநான் பார்த்துப் பழகியவொருதெருநாய் அனாதையாய்செத்துப் போயிற்றுசெத்துப் போவது இயல்புதான்மரணமொன்றும் புதிதல்லஅந்த நாயும் வயதானதுதான்சமீபத்திலேதான் அதற்கு நான்உணவிட ஆரம்பித்தேன்அப்படியாகத்தான் அந்த உறவுஆரம்பித்தது நேற்று மாலை காய்கறி வாங்கவெளியே சென்ற போதுஅந்த நாய் சாலையோரத்தில்உயிருக்கு இழுத்தபடிகிடந்ததைக் கண்டு அதனருகேஓடினேன்ஒருதுளி தண்ணீர் வேண்டும்இறுதித்துளி அந்தத் தெருவில் ஒரேயொருசெல்ஃபோன் கடை மட்டுமேஇருந்ததுஓடிப் போய் கொஞ்சம் தண்ணீர்கேட்டேன்அதிர்ச்சியாகப் பார்த்தான் அந்தவடகிழக்குப் பிராந்திய மனிதன்அவனோடு ஓட்டை இந்தியில்மல்லுக்கு நிற்க நேரமில்லை ஓட்டமாய் ஓடிவீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலைஎடுத்து வந்தேன் அதற்குள் நாயின் உயிர்பிரிந்திருந்தது ... Read more
Published on April 20, 2025 07:49
April 19, 2025
நகரசபை ஊழியர்கள் இன்னும் வரவில்லை
உன் இயக்கம் நின்று விட்டதுஉயிரற்ற உடல்சந்தடி மிகுதியில்கேட்பாரற்றுக் கிடக்கிறதுசொறியும் சிரங்குமாய் சீழ்வடியும் புண்களில் ஈக்கள்மொய்க்கின்றன பல தினங்களாக உன்னைநான் கவனித்து வருகிறேன் மரணம் உன்னை நெருங்குவதைஎன்னைப் போலவே நீயும்அறிந்து கொண்டு விட்டாயென்றேநினைக்கிறேன் எதிர்பார்த்த மரணமென்றாலும்மனம் ரணமாகி விட்டது மரணத்தை விடஉயிரற்ற உன் உடல்என்னைக் குதறுகிறது இத்தனைக் காலமோர்அற்புதத்தைத்தாங்கிய உடலுக்குகுறைந்த பட்ச மரியாதையுடன்விடைகொடுக்க வேண்டாமா? நகரசபையைத்தொலைபேசியில் அழைத்துசெய்தியைச் சொன்னேன்முகவரி கேட்டுக்கொண்டு“வருகிறோம்” என்றனர் ஒருமணி நேரம் நின்றேன்மரணத்தைவிட உயிரற்ற உடலின்அனாதிஎன்னை வதைக்கிறதுநடந்தபடியும்,வாகனங்களிலும்மனிதக் கூட்டம்போனபடியும் வந்தபடியும்இருக்கின்றது. ஒருவருமேஉன்னைலட்சியம் செய்யாததுசக உயிராகஎன்னைக் கொல்லுகிறதுஇப்படி ... Read more
Published on April 19, 2025 22:43
தியாகராஜா, எப்போது?
பலரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நேற்று அவந்திகா சற்று சலிப்புடனே கேட்டாள். ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது அது பற்றிய எந்தச் செய்தியையும் வெளியே விடக் கூடாது என்பது விதி. ஆனால் நான் எப்போதுமே விதிகளை மீறுபவன். அதனால் இப்போதும் மீறுகிறேன். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எனக்கு ஒரு பதில் தேவைப்பட்டது. நாவலில் Father Étienne Laurent Dupré என்று ஒருவர் வருகிறார். அவர் தியாகராஜரை கிறித்தவத்துக்கு மாறும்படி அழைக்கிறார். அதன் பொருட்டு ஒரு நீண்ட ... Read more
Published on April 19, 2025 18:09
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

