சாரு நிவேதிதா's Blog, page 38

April 27, 2025

விநோதமடைதல்

1 விழிகளடிக் கருவளையம்நீங்க ஒரு பசைதோற்சுருக்கம் போக்கவொரு பசைகறை-மரு-தேமல் போக்குகின்ற தைலங்கள்தோல் மின்ன-மிளிர-மினுமினுக்கப்பல களிம்புகள்எல்லாமும் தேடித் தேடி வாங்கும்எனக்கு அதைப்பயன்படுத்தும் வேகமில்லைஅதனதன் ஆயுட்காலம் முடியமுடியஎல்லாம் குப்பைத் தொட்டியில்போய்ச்சேரும் நூறாண்டுகளைத் தாண்டியும்ஜீவிக்கும் உயிர்களும் ஓரிடத்தில் உண்டு.அதன் பெயர் விநோத நூலகம் கன்னிகளின் பெருமூச்சுபசியின் கதறல்போர்களின் குருதிவாடைகடவுளருகே சென்றோரின்புதிர்மொழிகள்பாணர்களின் பாடல்கள்காதலர்களின் கனவுமொழிஅரச குலத்தோரின் அதிகாரக் கூச்சல்அடிமைகளின் ஓலங்கள்இசைஞர்களின் ராகசஞ்சாரம்துறவிகளின் மௌனம்துரோகிகளின் துர்வாடைகணக்கற்ற யோனிகளின் தாபம்கரமைதுனங்களால் நிரம்பியகழிவறைக் கோப்பைகளின் அபத்தம்கொலைகாரர்களின் ஆசுவாசம்பைத்தியங்களின் சிரிப்பொலிம்அழுகையொலியானைகளின் வாஞ்சைபூனைகளின் மர்மம்நாய்களின் விஸ்வாசம்தாவரங்களின் கருணைஅரசியல்வாதியின் தந்த்ரம்மூடர்களின் கூச்சல்அசடர்களின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2025 00:14

April 26, 2025

முயல்குட்டியின் முகம்

அவன் வயது எழுபத்து நான்குஅவள் வயது இருபத்து நான்குஎதுகை மோனைக்காகச்சொல்லவில்லைநிஜமே அப்படித்தான் இருவரும் வெளியே போனால்எதையும் யாரையும்கண்டுகொள்ளாத அந்தநகரில்‘இவர் யார், உன் தந்தையா?’என்று பலர்கேட்பதுண்டு அவள் தாய் வயதுநாற்பத்தெட்டுதாயின் தந்தைக்குஎழுபத்து நான்கு அதைச்சொன்னால்போடா பாஸ்டர்ட்உன் வயது இருபத்து நான்குஎன்பதுதான் என் நினைப்புஎன்பாள் அவனை அதுவரைஅப்படி யாரும்அழைத்ததில்லைஅடிக்கடி அவள்அப்படி அழைக்கவேண்டுமெனத்தோன்றும்தோன்றியதைச்சொன்னதில்லை அவளுக்குப் பணம்வேண்டும்பணத்துக்கொரு வேலைவேண்டும்வேலை தேடப் படிக்கவேண்டும்அதை முதலில்செய்யென்றான் கூடவேதன் நாவலையும்கொடுத்தான் படிப்பை விட்டுவிட்டுநாவலில் வேலைசெய்தாள்காலை நாலு மணிக்குத்தூங்கிஎட்டுக்கு எழுந்துகொள்வாள் நாவலை விட்டுவிட்டுப்படிப்பைப் பாரென்றான் என் உடல் பொருள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2025 23:52

வேட்கை

1 சாளரத்தின் வழியேதெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் செய்து முடிப்பதற்குஏராளம் வேலைகள் ஆனாலும் ஒருவன்எப்போதும் வேலையிலேயேஇருக்க முடியுமா என்ன? உயிர்மையிலிருந்து விஜயகுமார்ஒரு நேர்காணல் கேட்டார் புனைவிலும் புனைவல்லாதவற்றிலும்நாம் சொல்லாததைநேர்காணலில் சொல்லிவிடமுடியுமென நம்புகிறார்கள்உண்மையாகவும் இருக்கலாம் பாரிஸ் ரெவ்யூவில்செலினின் நேர்காணலைவாசித்துவிட்டு வாருங்கள்,சந்திக்கலாமென்றேன் உலக யுத்தத்தில்மண்டையில் அடிபட்டுஆயுள் முழுவதும்மனப்பிறழ்வு சுமந்துநரகத்தில் உழன்றவனையாபடித்துக்கொண்டிருந்தோம்? சொர்க்கத்தில் ரசம் இல்லைசொர்க்கத்தில் வாழ்க்கை இல்லைசொர்க்கத்தில் வலி இல்லைசொர்க்கத்தில் துரோகம் இல்லைசொர்க்கத்தில் காமம் இல்லைசொர்க்கத்தில் காதல் இல்லைசொர்க்கத்தில் கோபம் இல்லைசொர்க்கத்தில் தாபம் இல்லைசொர்க்கத்தில் குரோதம் இல்லைசொர்க்கத்தில் பழிக்குப் பழி இல்லைசொர்க்கத்தில் தந்திரம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2025 01:18

April 25, 2025

தோக்யோவில் வாங்கிய ஷூ

கோடைமழை பொய்த்து விட்டதுவந்தால் வரும்இல்லாவிட்டால் இல்லைகோடைமழை அப்படித்தான்கோடையோடு நுங்கும்பதநீரும் விதவிதமாய்மாம்பழமும் வந்தாயிற்றுஇளநீர் விற்கும் தள்ளுவண்டி முன்கூட்டம் அதிகம்மரஞ்செடிகொடிகள் கொஞ்சம்வாடித்தான் போயிருக்கின்றன தெருப்பிராணிகளும்பட்சிகளும் குடித்துதாகம் தீர்க்கவென்றுஅபிமானிகள் சிலர்தம் வீட்டு வாசலில்மண்சட்டியில் நீர் வைத்திருக்கிறார்கள் கையில் மொபைல்ஃபோன்காதுகளில் ஏர்பாட்சகிதமாக வழக்கம்போல்மோகினிக்குட்டியுடன் பேசியபடிநடக்கிறேன் ’கையிலுள்ள மொபைல்ஃபோன்கவனம்,இப்போதுதான் ஒரு திருடன்ஒரு நடைப்பயிற்சியாளரின்மொபைல்ஃபோனைப்பறித்துக்கொண்டு பைக்கில் பறந்தான்’என்றார் சாலையைப் பெருக்கிக்கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர் மொபைல்ஃபோனைபாக்கெட்டில் வைத்தேன்கழுத்திலிருந்த சங்கிலியைசட்டைக்குள் போட்டேன் இந்த காந்தி நகரில்மரங்கள் அதிகம்வெய்யில் தெரியவில்லை எதிரே வந்த ஒருவர்என்னைக் கண்டுஹலோ என்றார் நானும் ஹலோ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2025 07:51

ஆதலினால்

யாவருக்கும்அறியப்படுத்துவதுயாதெனில்எனது எண்ணைஅவரவர் அலைபேசிகளில்முடக்கி விடுங்கள்அதுதான் நன்மை பயக்கும் இதுவரைஅதிகாலை ஐந்துக்கு எழுந்துயோகாவும் தியானமும்முடித்துவிட்டுஏழு மணிக்கு நடைப்பயிற்சிஎட்டரைக்கு வீடு திரும்பிபூனை வேலை சிற்றுண்டி வேலைஅதற்குமேல் எடுபிடி வேலைஅதற்குமேல் மதிய உணவுக்கான சமையல் வேலைமூன்றிலிருந்து பத்து வரைஎழுத்தும் வாசிப்பும் மறுநாளும் இப்படியேமறுநாளும் இப்படியேமறுநாளும் இப்படியேஒருநாளும் விலக்கல்ல இப்போது ஒரு மாதசிறை வாச விடுமுறைக் காலம்தொடங்கி விட்டது அதிகாலை அஞ்சு வரைநண்பர்களோடு இலக்கியவிவாதம்மதியம் இரண்டுக்குநித்திரையிலிருந்து எழுச்சிகொண்டு திருநாளைத்தொடங்கலாம்சோற்றுக்கு இருக்கிறதுSWIGGY மாற்றுக் கருத்து கொண்டநண்பர்காள்!நீவிர் நள்ளிரவுக்கு மேல்அழைத்தால்கருத்து முரண்பாடுகளைக்கத்திப் பேசிநாமொரு முடிவுக்கு வரமுடியாதென்கின்றமுடிவுக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2025 07:39

இருள் படிந்த இல்லம்

பக்கத்து வீட்டு பால்கனிக்கும்என் வீட்டு பால்கனிக்கும் இடையேபதினைந்தடி இருக்கும்இங்கே தும்மினால் அங்கேயும்அங்கே தும்மினால் இங்கேயும்கேட்கும்அந்தரங்கமேயில்லை,ஒரு படுதா போடலாமென்றஎன் யோசனை மனையாளால்நிராகரிக்கப்பட்டது.சூரிய ஒளியைப் படுதாமறைத்து விடுமாம். தலைவனுக்கு வயது 55தலைவிக்கு 50மகள் வயது 20எல்லாம் குத்துமதிப்புதான்இது தவிர தலைவனின் தாய் தந்தைஅவர்களின் வயதுநமக்குத் தேவையில்லை காலை ஐந்து மணிக்குபால்கனி சாளரங்கள் திறக்கப்படும்தலைவி யோகா செய்வாள்ஏதோ என் வீட்டுக்குள்ளேயே இருந்துசெய்வதுபோல் இருக்கும்(படுதா கூடாது, சூரிய ஒளியைமறைக்கும்) இப்படியேஎன் வீட்டுக் காரியங்கள்அங்கேயும்அந்த வீட்டுக் காரியங்கள்இங்கேயும்நடப்பதுபோல் தோற்றம்கொள்ளும் மாதமொருமுறை வேதமந்த்ரங்கள்ஒலிக்கும்போது அன்றுஅமாவாசையெனத் தெரிந்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2025 05:25

April 24, 2025

அமிர்தம் வேண்டி நின்றேன்…

வரம் கேள் என்றால்யாராவது கையில் இருப்பதையேதிரும்பவும் கேட்பார்களா? இருப்பதை இல்லாததாய்க்காண்பவனே கவிஅதுவும் தவிரநீகுரலாக ஒலிக்கிறாய்நினைவாக இருக்கிறாய்தூலமாக இல்லையே தியாகராஜன் தன் கடவுளைத்தூலமாகக் காணவேஉஞ்சவிருத்தி செய்துஉருகியுருகிப் பாடினான்என்பதைஉனக்குநான்நினைவூட்ட வேண்டுமா? க்ஷீரசாகர சாமி மோகினியாய்மாறி அமிர்தத்தைதேவருக்குஊட்டியதாய்க் கதை நீயெனக்கு அமிர்தம்தருவது எப்போது?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 09:46

பரோல்

ஒரு மாத பரோல்என்னவும் பேசலாம்என்னவும் செய்யலாம்என்னவும் குடிக்கலாம்ஆடலாம்பாடலாம்களிப்புண்டு கூடலாம் அடக்குமுறைவிடுதலை –ரெண்டையும் வைத்துஒரு கவிதை செய்தேன்மதுவே விடுதலையின்குறியீடாய் நின்றதுகவிதையில் ரத்து செய்தசிநேகிதன் சொன்னான் ”ரிஷி,பருந்தை கிளியாகக்கண்டு விட்டாய்அது பருந்தென்றுகாண்இல்லையேல் அதுஉன்னைத்தின்று விடும்.” மலைமுகட்டில்கையில் உறையுடன்நின்று கொண்டிருக்கிறேன்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 09:42

கருணை நிறைந்து அகமும் புறமும் தளும்பி வழியும்…

மாரத்தஹள்ளியில்மோகினிக்குட்டியின்அடுக்குமாடிக் குடியிருப்புகீழ்த்தளத்தில் ஒரு கர்ப்பிணிப் பூனைபேர் சொன்னாள்மறந்து போனேன் கடந்த இரண்டு வருடமாகஅதன் வேலைகர்ப்பந்தரித்திருப்பதுஅல்லதுகுட்டிகளுக்குப் பால் தருவதுஒன்றில்லாவிட்டால்இன்னொன்றுஇதைத் தவிர மற்றபடிஅதை இவள் பார்த்ததில்லை அவ்வப்போதுஅந்தக் குட்டிபற்றி இவள்பேசுவாள்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பூனைகளையெனக்குப்பிடிக்கும்பூனை பற்றிப் பேசுவதுபிடிக்காதுஇருந்தாலும்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பேசிப் பேசிஅந்தக் குட்டிக்கும்எனக்குமொருபந்தமுண்டாயிற்று போல அந்தக் குட்டி பற்றியகதைகளில் முக்கியமானதுஅது சிநேகபாவமற்றதுநெருங்கினால் சீறும்உணவு கொடுப்பதற்கேகொஞ்சம் தந்திரம்பண்ண வேண்டும் ஒருநாள் நான்மோகினிக்குட்டியின்இல்லம் சென்றேன் அந்தப் பூனைக்குட்டியின்உணவு நேரம் வந்ததுகீழே இறங்கினோம் அந்தக் குட்டிஎன்னைக் கண்டதும்ஓடி வந்து என்கால்களுக்கிடையேநுழைந்து நுழைந்துஎட்டுப் போட்டுவிளையாடியது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 09:39

April 23, 2025

நம்ப முடியாத கதை

ஆம்நீவிர் இந்தக் கதையைநம்ப மாட்டீர்எத்தனையோ பேரிடம்இயம்பினேன்கருவிகளின் காலம்கவியின் கதைஏற்பார் எவருமில்லை ஒரு ஊரிலே ஒருஅகோரி இருந்தார் அகோரிக்கொரு மனையாளும்ஒரு புதல்வனும்ஒன்பது சீடர்களுமுண்டு அவர் அகோரியெனஉலகமறியாதுஅறிந்தோர் சீடர் மட்டுமே உயர்படிப்பும்ஆய்வும் முடித்துடாக்டர் பட்டம் பெறுவது போலவேஅகோரியாவதும்! அதுவொரு பாடத்திட்டம் மலத்தை மகிழ்ச்சியுடன்தின்ன வேண்டும்கலவியிலேகளிகொள்ளக் கூடாதுஆசை துக்கம்கோபம் பொறாமைகாமமெதுவும் கூடாதுநெருப்பிலெரியும்பிரேதத்தின் மீதமர்ந்துகொஞ்சமாய் தவமிருக்கவேண்டும் அவ்வளவுதான் எல்லாம் செய்தார்அகோரி அப்போது அவர் முன்னேவந்துதித்தமசானக் காளிஎன்ன வரம் வேண்டுமென்றாள் எது வரமும் வேண்டாம்ஆயிரம்கோடி அழகெலாம் திரண்டொன்றாகிநிற்கும் உன் அருட்செல்வம் எனக்குண்டுபொருட்செல்வமும் குறைவில்லைஎனக்கென்ன வேண்டும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2025 01:11

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.