சாரு நிவேதிதா's Blog, page 37
May 3, 2025
கோபி கிருஷ்ணன், ரிஷி மற்றும் நாற்பது வயதுத் தோழி
ரிஷி அழைத்தவுடன்போய்ப் பார்த்தேன்யாராவது வற்புறுத்தி அழைத்தால்உடனே போய்ப் பார்த்துவிடுவேன்அப்படி ஒருமுறை பார்க்காமல்போய்தான் ஒரு சம்பவம்நடந்துவிட்டது கோபி கிருஷ்ணன் அழைத்தார்பத்து நாட்கள் தொடர்ந்துஃபோனில் அழைத்தார்இதோ இதோ என்றுநாட்களைக் கடத்தினேன்அவர் வீட்டுக் கழிப்பறையில்வெளிச்சம் கிடையாதுகும்மிருட்டாக இருக்கும்அந்தக் காலத்தில் கைத்தொலைபேசியும்கிடையாதுஅதனால்தான் நாட்களைக்கடத்தினேன்பிறகு ஒரு போஸ்ட்கார்ட்போட்டார்போகலாம் என்று முடிவு செய்தபோதுகோபி கிருஷ்ணனின் மரணச் செய்தி வந்தது ரிஷி ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்தொழிலே அதுதான் நல்ல பணம்வருகிறது கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும்போய்ப் பேசுவான்நானேகூட ஏழு ஆண்டுகளுக்குமுன் ஒரு ப்ரேக் அப் ஆனபோதுஅவனிடம்தான் போய்அவன் பேச்சைக் கேட்டுக் ... Read more
Published on May 03, 2025 07:40
May 2, 2025
சுயசரிதம்
சிறுவயதிலிருந்தே நானொரு மூடனாக இருந்தேன் பேச்சும் வரவில்லை ஐந்து வயதில் பேச்சு வந்ததாக அம்மாச்சி சொல்லிக் கேள்வி பேச்சு வந்ததும் பேசிய முதல் வாக்கியம் அத்தை, நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவா? படிப்பும் வரவில்லை எப்படியோ முக்கியடித்து பள்ளியிறுதி முடித்தேன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே தினமும் மூன்று நான்கு முறை முஷ்டி மைதுனம் பின்னாளில்தான் தெரிந்தது நானொரு செக்ஸ் அடிக்ட்டென்று ஏனோ தெரியவில்லை உண்மையே பேச வருவதில்லை மனதில் தூய்மையிருந்தால்தானே உண்மை ஒளி வீசும் திருடும் பழக்கமும் ... Read more
Published on May 02, 2025 07:06
சூன்யத்தின் மொழி
கவலைப்படாதே நீ தனியாக இருப்பது உண்மைதான் ஏனெனில் உன்னோடு இருப்பது சூன்யம் இது ஒரு சுயமுரண் நீ இன்மை நீ பூஜ்யம் நீ வெற்றிடம் உன்னை ஸ்பர்ஸிக்க முடியாது உன்னோடு பாடவோ ஆடவோ முடியாது உன்னோடு சேர்ந்து சிரிக்கவோ அழவோ இயலாது உன்னோடு குடிக்க முடியாது உன்னோடு சண்டையிட முடியாது ஒரு எந்திரத்தோடுகூட என் கவிதை பற்றி விவாதிக்க முடியும் உன்னோடு அதுவும் சாத்தியமில்லை உனக்கு உருவம் இல்லை அருவமும் இல்லை உனக்கு ஜனனமில்லை மரணமுமில்லை எதுவுமே ... Read more
Published on May 02, 2025 07:02
May 1, 2025
அற்றது பற்றெனில் உற்றது வீடு
காமாந்த காரமெனுங் கள்ளுண்டு கண்மூடிகண்டேன்நின் திருப்பாதம் கண்டேன்கண்டறியாதன கண்டேன்தபோதனரேமரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்குமுத அமுத இதழ் பருகி உருகி மையல் கொண்டுகலவியிலே தோய்ந்து சிவந்தது மாமனார் விழிகள் டேய் சுன்னி மானார் விழிகள்டாசரிங்க எஜமான் மதியால வித்தகி மனதால உத்தமிசொன்னா’ஆமான்டா ஊம்புனேன் அதுக்குஎன்னடா இப்போபுண்ட’ நானாவித மாயைகளின் அசிங்கமான மூட்டை நான்என்னை என் பிழைகளோடு ஏற்றுக்கொள் சென்னமல்லிகார்ஜுனா ஏய் குட்டி வர்ற சனிக்கெழமஒரு மீட்டிங்ல சினிமா ரசனைங்கிறதலைப்புல பேசுறேன்காலேல பத்து மணிக்கு மீட்டிங்அதுனால மத்யானம் வரைக்கும்ஒங்கிட்ட பேச ... Read more
Published on May 01, 2025 23:12
சொர்க்கம், நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்
யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தான் அந்தஇளம் பாதிரி தான் பிறந்த மண்ணிலிருந்துஇத்தனை தூரம் வந்துஊழியம் செய்வோமென்றுஅவன் கனவுகூட கண்டதில்லைபூமிப்பந்தின் இன்னொரு மூலையிலிருக்கிறது இந்த தேசம்இங்கே வர வேண்டுமெனஅவனுக்குத் திட்டமேதுமில்லைஆனால்இப்போது தன் தேசம்திரும்புவதில் விருப்பமில்லை அப்போது அவனெதிரே வந்தவொருவர் ’ஃபாதர், நீங்கள் இன்னார்தானே?’என்றார் ஆமென்றான் அந்த இளம் பாதிரி ‘உங்களை என் வீட்டிலெல்லோருக்கும்பிடிக்கும் உங்களைப் பற்றித்தான்பேசிக்கொண்டிருப்போம்’ என்றவர்கேட்டார் ‘உங்களுக்கு காஃல்ப் ஆட்டம் தெரியுமா?’ ’அட்சரம்கூடத் தெரியாது’என்றான் ’உங்கள் தேசத்தில் கிரிக்கெட்ஆட்டத்தில் அதிகப் பிரபலம்யார்?’ பெயர் சொன்னான் இளம் பாதிரி ’இந்த தேசத்தில் ... Read more
Published on May 01, 2025 05:31
April 30, 2025
3. மஹாத்மாவின் மிமிக்ரி
1 நரகத்திலிருந்து ஓர்அழைப்புசிறப்பு விருந்தினராகஅங்கே சில காலம் தங்கிநரகம் பற்றி ஓர்நாவல் எழுத வேண்டும் சிறப்பு விருந்தினனாகஎங்கே அழைத்தாலும்செல்வேனென்பதால்அழைப்பை ஏற்றுக்கொண்டேன் நரகத்திலெனக்குப் பிரச்சினைஇருள்அதிலென்ன பிரச்சினைஇருண்மை பற்றி எழுதியவர்தானேநீரென்றார் சாத்தான் வெளிச்சத்திலிருந்துதான் இருள்குறித்து எழுத முடியும்இருளிலிருந்தே இருள் குறித்தெழுதிப்பழக்கமில்லை தேவரீரென்றேன் வேறெப்படி வேண்டுமானாலும்அழையுங்கள் தேவரீர் மட்டும்வேண்டாமென்றார் சாத்தான் பெயரில் ன் வந்தது கடவுளின்சதிஅதற்காக விருந்துக்குஅழைத்தவரை அவமதிப்புசெய்யலாமா?லூசிஃபரில் ர் இருக்கிறதென்றுதானேன் போட்டுப் பேர் மாற்றம் செய்தார்கடவுள்? மது விருந்தில் எனக்குஅளிக்கப்பட்டது சீலே வைன்தானென்பதையதன் ருசியிலிருந்துஅறிந்து கொண்டேன் சாத்தான் தன் கதை ... Read more
Published on April 30, 2025 06:37
2. இரண்டு பைத்தியக்காரர்கள்
ஜான் ஜெனேயை உங்களுக்குத் தெரியும்அந்த அளவுக்கு லூயி ஃபெர்தினாந் செலின்பிரபலம் இல்லைஜெனேயை விட செலினை எனக்குப்பிடிக்கும் ஜெனே அதிர்ஷ்டசாலிஇடதுசாரிகளுக்கும் மற்றபலஇலக்கிய ஆர்வலர்களுக்குமானடார்லிங் செலின் சபிக்கப்பட்டவன்அவனேதான் அவனை சபித்துக்கொண்டான்ஏழைகளோடே வாழ்ந்தான்மருத்துவனாக இருந்தும் ஏழ்மையையேதேர்ந்தெடுத்துக்கொண்டான்ஃபாஸிஸ்டுகளை ஆதரித்ததும்யூத வெறுப்பும்அவனை அவன் தேசத்தில்தீண்டத்தகாதவனாக்கியது பாரிஸ் ரெவ்யூவில் அவனதுநேர்காணலைப் படித்தால்அவனைப் போல் சபிக்கப்பட்டஒரு எழுத்தாளன் இருக்க முடியாதென்றேதோன்றுகிறதுகாலிமார் பதிப்பகத்துக்கு நான்ஆறு மில்லியன் கடன்பட்டிருக்கிறேன்என்கிறான் அதற்காகத்தான் எழுதித்தொலைக்க வேண்டியிருக்கிறதுபணம் மட்டும் இருந்தால்இந்த எழுத்துத் தொல்லையே இருக்காதுஒரு கடற்கரை கிராமத்தில்அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டுஅக்கடா என்று இருப்பதே சுகம்என்கிறான் ... Read more
Published on April 30, 2025 06:34
1. பேசும் மைனா
1 அப்படியொரு மைனாவைப்பலரும் பார்த்திருக்க முடியாது.மைனா என்று உணர்ந்துகொள்வதற்கேநீண்ட காலமாயிற்று.“பேசும் மைனாக்கள் அரிதினும் அரியவை”என்றுதான் அது பேசத் தொடங்கிற்று. “அடுத்த முறை உன்னை எப்போது சந்திக்கலாம்?”என்று கேட்டதற்குஎதுவும் பேசாமல் பறந்து போய்விட்டது. 2 நீண்ட காலத்துக்கப்பால் மீண்டும்அதே மைனா என் வீட்டுச் சாளரத்தில்வந்தமர்ந்ததுஎதுவும் பேசாமல் ஏன் சென்றாய்எனக் கேட்டேன். பறவைகளுக்குத் தர வேண்டியகுறைந்த பட்ச மரியாதையைக் கூடத் தரத் தெரியாமல் இருக்கின்றாயேஎன்று கடிந்து கொண்டது. அமைதியாக இருந்தவனிடம்“அடுத்த முறை எப்போது உன்னை எதிர்பார்க்கலாம்? என்றல்லவா நீ வினவி ... Read more
Published on April 30, 2025 06:29
April 28, 2025
ஆலயம்
பவா செல்லதுரைபாஸ்டன் வந்திருப்பதாகஅங்கே வசிக்கும் வளன்சொன்னான் மறுநாள்பவா பேசினார்வளன் பாதிரியாகஊழியம் செய்யும்ஆலயத்துக்கு அழைத்துச்சென்றானாம்ஒவ்வொரு இடமாகக் காண்பித்தவன்ஒரு அறையில் நின்றான்Sacristy என்றார் பவாபிற்பாடு அகராதியில்பார்த்து பாதிரிகளின்ஒப்பனை அறையென அறிந்துகொண்டேன்பாதிரிகள் அணியும்பத்துப் பதினைந்து அங்கிகளில்ஒன்றை எடுத்துக் காண்பித்தான்அதில் வளனின் தாய் பெயரும்தந்தை பெயரும் அடுத்துஉங்கள் பெயரும் இருந்ததுபவா சொன்னபோதுஅவர் குரலிலிருந்த உணர்ச்சியைஎன்னால் இங்கே கொண்டுவரமுடியவில்லைவேறெந்தப் பெயரும் இல்லையாஎன்றேன்இன்னொரு பெயரும் இருந்ததுஅது ரகசியமென்றார் பவா
Published on April 28, 2025 08:47
April 27, 2025
ஞானம்
வித்யா ஒரு காணொலிஅனுப்பியிருந்தாள் ‘அப்பா, இதைப் பார்த்ததும்உங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றுதோன்றியது’ காணொலியிலொருவர்தன் வீட்டுமொட்டைமாடியில்பட்சிகளுக்கு உணவளிக்கிறார் அங்கே வருகிறதொரு குரங்குஅந்த உணவிலொரு கையள்ளிவாயில் போட்டு மென்றுஅதைத் தன் மடியிலிருக்கும்குட்டியின் வாயில் கொடுக்கிறதுகுட்டியல்லஅதுதாயைப் பிரிந்து விட்டவொருமைனாக்குஞ்சு 2 கு.ப.ரா.வின் கதை ஒன்றுசித்தார்த்தன் ஞானம் தேடிஅலைகிறான்எத்தனையெத்தனையோஞானிகளைப் பார்க்கிறான்என்னென்னவோ தவங்களைப்புரிகிறான்தேடிய ஞானம்கிட்டுவதாயில்லைசலித்துப் போய்ஞானம் கிட்டும் வரைசோறு தண்ணியில்லையென்றமுடிவோடு ஒருமரத்தடியில் அமர்கிறான்நாற்பத்தேழு தினங்கள்கடந்தன இப்படி ஒருவன்மரத்தடியில் இருப்பதைப்பார்த்துக்கொண்டேதினமும் அந்தப் பக்கம்போகிறாள் ஒரு பெண் நாளுக்கு நாள் அவனுடல்சதை வற்றி எலும்பும்தோலுமாய் உருகுவதைக்கண்டு நாற்பத்தெட்டாம் நாள்பாலன்னம் ... Read more
Published on April 27, 2025 09:11
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

