சாரு நிவேதிதா's Blog, page 36
May 12, 2025
புதிய வேடம்
1காதல்களைக் கடந்துவருகிறேன்.“நீயே என் கடைசி”என்பதானபழைய வசனங்கள்என்னையும் பிணைத்திருந்தன—அந்தக் கலைஞனைசந்திக்கும் வரை. ஒரு வேடம் களையும்போதுபழைய மண்ணின் தடம்அறவே அகல வேண்டும்,மணமும் மறைய வேண்டும்,புதிதாய்ப் பிறந்தவனாய்நிற்க வேண்டுமெனஅவன் சொன்னான். 2அவ்வண்ணமேஒருத்தியை செல்லமென,மற்றவளை மலரென,ஒருத்தியை மயிலென,இன்னொருத்தியை முத்தெனவேறு வேறு நிறங்களில்அழைக்கத் தொடங்கினேன். “நீயே கடைசி” என்பதைமனதில் கூட வைக்கவில்லை.3நேற்றின் பாரத்தைநாளையின் பதற்றத்தைகழற்றி வீசி,இந்தக் கணத்தைசுவாசித்துஆழ்கிறேன் ReplyForwardAdd reaction
Published on May 12, 2025 08:10
May 11, 2025
காலம்
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறுஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்றுபன்னிரண்டு பதின்மூன்று ……………………………………………………..அறுபது நொடிகள்ஒரு நிமிடம்ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் மூன்று நிமிடம்நான்கு நிமிடம் ஐந்து நிமிடம் ஆறு நிமிடம்ஏழு நிமிடம் எட்டு நிமிடம் ஒன்பது நிமிடம்பத்து நிமிடம் பதினோரு நிமிடம் பன்னிரண்டுநிமிடம் பதின்மூன்று நிமிடம்…………………………………………………………………..அறுபது நிமிடம் ஒரு மணிஒரு மணி இரண்டு மணி மூன்று மணிநான்கு மணி ஐந்து மணி ஆறு மணிஏழு மணி எட்டு மணி ஒன்பது மணிபத்து மணி பதினோரு ... Read more
Published on May 11, 2025 04:31
May 10, 2025
எக்கோலம் கொண்டாலும் ஏற்கும் திருமேனி
(இந்தக் கவிதையை நான் எழுதவில்லை. எனக்குள் ஒரு பேய் புகுந்து எழுதியது. அப்படித்தான் பேய் வேகத்தில் இதைத் தட்டச்சு செய்தேன். ) Cast Away திரைப்படத்தின் நாயகன் விமான விபத்தில் நடுக்கடலில் விழுந்து ரப்பர் மிதவையின் உதவியினால் ஆளில்லாத் தீவில் கரை சேர்கிறான். மரத்துண்டை மரத்துண்டோடு உரசி தீயைப் பெறுகிறான். மீன்களை சுட்டுத் தின்றே ஐந்து ஆண்டுகள் உயிர் பிழைத்துக் கடைசியில் பாய்மரப் படகு ஒன்றைக் கட்டி அங்கிருந்து தப்பித் தன் இடம் வருகிறான். ஐந்து ஆண்டுகளும் ... Read more
Published on May 10, 2025 23:37
பாஷோவுக்கு ஒரு பதில்
குளம் அமைதியாயிருந்ததுதவளை குதிக்கவில்லைநீரில் சலனமில்லைகாற்றில் அசைவில்லைநிச்சலனம்இதயம் துடித்ததா?
Published on May 10, 2025 05:30
சாகா வரமும் சாகும் வரமும்
பிராமணனொருவனுக்குசாகா வரம் தரும் கனியொன்றுகிடைத்ததுஅதை அவன் நல்லரசனிடம்கொடுத்தான்நல்லரசன் அதைத்தன்ஆசை மனையாளிடம்கொடுத்தான்மனையாள் அதைத்தன்ஆருயிர்க் காதலனுக்குவழங்கினாள்காதலன்சற்றும் யோசியாமல்வெகுநாள் மோகித்தநாட்டியக்காரியிடம்கொடுத்தான்நாட்டியக்காரி அதைநல்லரசனிடம் காணிக்கைசெய்தாள் அந்தக் கணமே அரசன்முடி துறந்துஆடை களைந்துதிகம்பரமாய்க் காடேகிசல்லேகனையில்உடல் துறந்தான் யார் செய்தது தவறென்றான்நண்பன்தெரியவில்லை, சொல்லென்றேன்பிராமணனிடமிருந்துவாங்கியிருக்கவே கூடாதுஅது சாகாவரம் தரும் கனியல்லசாகும் வரம் தரும் கனியென்றான் ReplyForwardAdd reaction
Published on May 10, 2025 05:28
May 6, 2025
எல்லாம் திட்டமிட்டபடி
1 எல்லாமே திட்டமிட்டபடிதான்நடப்பதாகச் சொல்கிறார்கள் யோகானந்த பரமஹம்ஸர்ஒரு குறிப்பிட்ட தேதியில்தன் உடலை விட்டுப் பிரிவதாகஅறிவித்தார்‘என் உடலை இருபது நாட்கள் வைத்திருங்கள், ஒன்றும் ஆகாது’என்றார்உடல் சிதையவில்லைபிணவறை அதிகாரிவியந்து சான்றளித்தார் தியாகராஜரும்ஒரு வாரத்துக்கு முன்பேநாத தனு மனிஷம் பாடிசீடர்களிடம் விடைபெற்றார் ஞானிகளை விடுங்கள்அஞ்ஞானியான என்னிடமேநாலு சோதிடர் நாலுவெவ்வேறு காலத்தில்நாலு வெவ்வேறு இடங்களில்வைத்துஎன் மரண காலத்தைஒன்றே போல் குறித்தனர் 2 நானொரு பேரரசன்எனக்கொருஅந்தப்புரம் இருந்ததுஅரசர்கள் அந்தப்புரத்தில் குடியிருப்பார்களா?நானோ அங்கேயேஅடிமையானேன்மதில்களும் அகழிகளுமில்லாதபின்நவீனத்துவ அந்தப்புரம்அழகிகள் எங்குவேண்டுமானாலும்செல்லலாம்யாருடன் வேண்டுமானாலும்கூடலாம் எந்த வரைமுறையுமில்லை வெளியிலிருந்த சிநேகிதிகள்பயமுறுத்தினார்கள்மீட்டூவில் மாட்டிவிடுவாயென ... Read more
Published on May 06, 2025 23:57
அதிசயம்
காலை நடைப்பயிற்சிக்கு ஆறரை மணிக்குக் கிளம்பி கீழேயிறங்கும் மாடிப்படி க்கட்டுகளில் அமர்ந்து காலணியை மாட்டுவேன் சரியாக அந்த நேரத்தில் மேல்வீட்டுக்காரர் படிக்கட்டு களில் இறங்குவார் வணக்கம் சொல்வார் வணக்கம் சொல்வேன் சமயங்களில் என் நேரம் மாறும் அவரும் அதே நேரத்தில் இறங்குவார் வணக்கம் சொல்வார் வணக்கம் சொல்வேன் ஒருநாளும் தப்பியதில்லை கீழே இறங்கினால் ஒரு நாய் என்னிடம் வாலை ஆட்டியபடி ஓடி வரும் ஒருநாளும் அதற்கு நான் பிஸ்கட் கொடுத்ததில்லை சங்கீதா உணவகத்தின் அருகில் ஒரு பிச்சைக்காரர் ... Read more
Published on May 06, 2025 06:53
May 5, 2025
யகூஸா
கவிஞர்களின் காரியங்களைப்புரிந்துகொள்ள முடிந்ததே இல்லைஒரு இளம்கவி நண்பன்தினமும்காலையிலிருந்து நள்ளிரவு வரைகுடித்துக் கடித்தேசெத்தான்இன்னொரு கவிக்குதூக்க மாத்திரை உதவியதுஒருத்தன் கயிறில்தொங்கினான்சொல்லிக்கொண்டே போகலாம்சலிப்புற வைக்கும் கதைகள்ஒரு கவிஞன்தான் யாரும்எதிர்பார்க்காததைச் செய்தான்உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டுஜப்பானிய மொழி கற்றுக்கொண்டுயகூஸாக்களோடு சேர்ந்தான்ஜப்பானியர்களுக்கு இந்தியர்களைப்பிடிக்காதுஅதிகம் கத்துகிறார்களென்று புகார்சமையலின் மசாலா வாசனையும்கொடுமை என்கிறார்கள்ஆனால் மதுரை பிரியாணிஜப்பானியருக்கு உயிர்மதுரைக்கு வந்து கற்றுக்கொண்டுபோகிறார்கள்அதைப் பார்த்துத்தான் உந்துதல்பெற்றானோ என்னவோ கவிஞன்யகூஸாவில் சேர்ந்து விட்டான்யகூஸா என்றால் சும்மாவாகைகாலை எடுக்க வேண்டும்சமயத்தில் தலையையும்எப்படித்தான் சமாளிக்கிறானோதெரியவில்லைஆனால் மூட்டை மூட்டையாகக்கவிதை எழுதிக் குவிக்கிறான்மூட்டை என்றதும் தப்பாகநினைக்காதீர் கவிதையெல்லாம்சூப்பர்இன்னொரு கவிஞன்கல்யாணம் ... Read more
Published on May 05, 2025 22:29
May 4, 2025
உணவென்னும் காவியம்
1உனக்காக உயிரையும் தருவேனென நீங்கள் யாரிடமாவது சொல்லியிருக்கலாம்சொல்லியிருந்தால் நீங்கள்அதிர்ஷ்டசாலிநான் உணவுக்காக உயிரையும் கொடுப்பவன்உணவு வெறியன்எத்தனையோ காரணங்களால் காதல்முறிந்திருக்கிறதுஆனால் ஃபுல்க்கா சென்னாவுக்காக ஒருகாதல் முறிந்ததை நீங்கள்கேள்விப்பட்டிருக்க முடியாது 2அதிர்ஷ்டவசமாக என் மனையாள்உலகத் தரமாக சமைக்கக் கூடியவள்அதனாலேயே நான் வெளியூர் சென்றால்பாதியாக இளைத்து வருவேன் சைவ உணவுக்காரியென்றாலும்எனக்காக எதையும் சமைப்பாள்எனக்கு மீன் பிடிக்கும்தப்பு மீன் எனக்கு உயிர்கொரோனா காலத்தில் மீன் சந்தையைமூடி விட்டார்கள்என் மனையாள் ஒரு நண்பருக்குஃபோன் போட்டு போரூர் ஏரியிலிருந்துநண்டு வரவழைத்தாள்உயிர் நண்டுஅதை அடித்துக் கொல்வதெனக்குத்தெரியவில்லைமனையாள் கட்டையைக் கையிலெடுத்தாள் ... Read more
Published on May 04, 2025 23:19
May 3, 2025
மோகினிக்குட்டிக்குச் சொல்லவொரு கதை
“என்னவொரே கவிதை மயமாய்க் கொட்டுகிறாய்எனக் கேட்கும் மோகினீ…, “எந்த தேசம் போனாலும்அங்கே பெண்களையும்குழந்தைகளையும் தெருக்களையும்கவனிப்பேன்எங்கே குழந்தைகளும்பெண்களும் மகிழ்ச்சியாய்இருக்கிறார்களோ,எங்கே தெருக்களில் நாய்கள்அலைவதில்லையோ,அதுவே என் கனவு தேசம் அப்படி ஒரு தேசத்தைக் கண்டேன்பத்திரிகையில் செய்திகளே இல்லைபிரதமரின் வெளியுறவுச்செய்திகளும்சீதோஷ்ணநிலை அறிவிப்புகளும்மட்டுமே இருந்தனமருத்துவரும் யாருமில்லைபோலீஸ்கூட இல்லைஇரவுக் காட்சி சினிமாவுக்குப்போனபோது என் முன்னால்நின்றவர்தான் பிரதமர் என்றான்எனக்குப் பக்கவாட்டில் இருந்தவன்சினிமா முடிந்து பிரதமர்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இந்த தேசத்தில் என்னால்எழுதவே முடியாதுநரகத்திலிருந்து மட்டுமேஎழுத முடியும்ஜாரின் ரஷ்யாவில்எத்தனையெத்தனை மேதைகள்எழுதினார்கள் நீ என்னோடு பேசினால்கவிதை நின்றுவிடுமென் மோகினிக் குட்டீ!!”
Published on May 03, 2025 07:46
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

