சாரு நிவேதிதா's Blog, page 35
May 27, 2025
ஆறு குறுங்கவிதைகளும் மற்றொரு கவிதையும்
1. முதல் முத்தம் முதல் முத்தம் தந்தபோதுஅச்சம் பரவசம் கொன்றதுமுதல் முத்தம் கிடைத்தபோதுஉணர்வு மரத்து நின்றது 2. பயணம் நீ, நான், நட்சத்திரம், மரம், மலை, கடல், பூமி, கருந்துளை, புழு, பூச்சி, நாய், பூனை, சிங்கம், புலி, கரடி, அரசியல்வாதி, கோடீஸ்வரன், பிச்சைக்காரன், ரேப்பிஸ்ட், ஞானி, அஞ்ஞானி – எல்லோரும் பூஜ்யத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம் 3. சுழற்சி சாலை நடுவே பெருச்சாளிகொத்தித் தின்னும் காகம்பார்த்துச் செல்லும் மனிதர்கள் 4. இரு பூனைகள் ஒரு பூனை புறாவிடம்பேசிக்கொண்டிருக்கிறதுஒரு ... Read more
Published on May 27, 2025 04:52
May 26, 2025
குறையொன்றுமில்லை (ஹைக்கூ)
மரம்:உனக்கு எல்லாம் கொடுத்தேன்உயிர் உட்பட இலை:நிழல் மட்டும் கிடைக்கவில்லை
Published on May 26, 2025 21:43
நவீன ராம காதை
1.கடவுள் வாழ்த்து ஒருநாளும் ஒருபோதும்சுய இரக்கப் பிரதிகள்பாடியதில்லைஇன்றும் அப்படியே ஆகசீதையின் நாயகனேசிவதனுவை வளைத்தவனேஅயோத்தியின் அருள் வடிவேநீயே எனக்குத் துணை நிற்பாய்! 2. கழிப்பறை சுத்திகரிப்புப் பணி இருபத்தைந்து ஆண்டுகள்அரசனாய் மிதந்தேன்பின்னே புரிந்ததுபெண்ணின் வியர்வையில்உயிர் திளைக்கக் கூடாது பிரித்தேன் உழைப்பைஉனக்கு இருபத்தைந்துஎனக்கு எழுபத்தைந்துஆயினும்எழுபத்தைந்தில்கழிப்பறை சுத்தம் சேரவில்லைஉழைப்பில் ஏற்றத்தாழ்வாஎன ஆவேசம் கொள்ளாதீர் வறுமையின் நாட்களில்நாப்கினுக்குக் காசில்லாமல்மனையாளின் தூரத்துணியும்துவைத்திருக்கிறேன் ஒருநாள் மனையாள் ஊரிலில்லைகழிப்பறை வேலைதலையில் வீழ்ந்ததுஇவ்வூரில்இரட்டிப்பு ஊதியத்திலும்கழிப்பறை வேலைக்குஆட்கள் கிடையாது மோகினிக்குட்டி சொன்னாள்ஹார்ப்பிக் கொட்டு, ஊற விடு,தேய், கழுவு…முடிந்தது. ப்பூ, இவ்வளவுதானா? ... Read more
Published on May 26, 2025 09:13
May 25, 2025
நான், நிலா மற்றும் ஒரு பின்நவீனத்துவக் காதல் நாடகம்
எதேச்சையாய் சந்தித்த தோழி, என்ன செய்கிறாய் என்றாள். காதல் செய்கிறேன், காதல் கவிதைகள் எழுதுகிறேன் என்றேன் சற்றே நாடகத்தனமாக கண்களில் பளபளப்புடன். எப்போதும் நீ இப்படித்தான் இத்தனை வயதிலும், இன்னும் க்ளிஷேக்களில் விளையாடுகிறாய். ’எப்போதும் இப்படித்தான் நான் என்ன சொன்னாலும் நீ மட்டுமல்ல, யாரும் நம்புவதில்லை அதனாலே இப்போது சற்று தயக்கத்தோடே சொல்கிறேன்… கொஞ்ச காலம் நான் நிலவுடன் டேட்டிங் செய்தேன்.’ அவள் கண்கள் விரிந்தன ’நிலவு! இது என்ன உன் புதிய hipster கவிதையா?’ ’இல்லை, ... Read more
Published on May 25, 2025 07:43
May 23, 2025
சிப்கலி
குட்டிகளை சாகக் கொடுத்துஅழுது கொண்டிருந்ததாய்ப்பூனைக்கு ஆறுதல்தந்து விட்டுப் படியேறிவந்தாள்மோகினிக்குட்டி எதிர்வீட்டு வைணவன்என்றுமில்லாதபடிவாசல் சுவரில்பல்லி போல் ஒட்டிக்கொண்டிருந்தான்அவளைக் கண்டதும்சிப்கலீ என்று கத்தினான் மோகினியின் யோசனைபலவாறு சிதறியது குடியிருப்போர் கூட்டம் ஒன்றில்ஹிந்தியில் பேசாதீர்ஆங்கிலமும் தமிழும் மட்டுமேதெரியுமென்றவன் –இதுவரை அவளிடம் ஒரு வார்த்தைபேசியிராதவன் – அவன் ஒருஇப்போதுசிப்கலி என்கிறானே?ஏனிந்தக் கூச்சல்?தரையைப் பார்த்தாள் ஒரு பல்லிஅசைவை நிறுத்திப்படுத்திருந்தது பல்லியென்றால் அவளுக்குநடுக்கம் அதை மிதித்து விடக்கூடாதென அபயக் குரல்எழுப்பியிருக்கிறான்நாலு பூனைக்குட்டிகளைடெட்டால் ஊற்றிக் கொன்றவன் மோகினிக்கு பாம்பு கூட பயமில்லைபல்லியென்றால்அலறி ஓடி ஊரையே கூட்டி விடுவாள் ... Read more
Published on May 23, 2025 22:25
காமாக்னி
யோகா மாதிரி ஏதாவதுசெய்து காமநோய்மையிலிருந்துவிடுபடேன் என்றாள் மோகினிக்குட்டி துன்பம் தரும் எதுவோஅதைத் தூக்கியெறிவதுஎன் வழக்கம் எனத்தொடர்ந்தாள் பதினைந்து வயதில்தேகத்தின் காமம்ஆடைகளில் அடையாளமானபோதுஅம்மா சொல்வார்கள்உடம்புக்கு நல்லதில்லைதம்பி என்று மோகினிக்குட்டி, சில நேரம் என் தாயாக மாறுவாள் ஒரு காலத்தில்ரத்த அழுத்தம்என்னைப் பிடித்து ஆட்டியதுயோகா அதை அடக்கியதுபக்க விளைவாககோபம் ஓடி ஒளிந்ததுஇப்போது எது நடந்தாலும்கோபம் வருவதில்லை யோகா செய்து காமம்விலக்கினால்பக்க விளைவாகஎழுத்து அகன்று விட்டால்விபரீதமாயிற்றே? காமாக்னிதானேஎன் எழுத்துக்கு உயிரென்றேன்மோகினிக்குட்டியிடம் அக்கினியை அடக்குவதன்வழி தெரிந்தது போல்ஒரு சிரிப்புசிரித்தாள் மோகினிக்குட்டி
Published on May 23, 2025 22:11
May 22, 2025
ஒரு குப்பி வைன்
தாய்ப்பூனையின் கதறல்ஆக்ரோஷமாய் அலையுறுகிறதுஇழந்த குட்டிகளின் நிழல்என்னை இருளில் துரத்துகிறது. மறதியின் மந்திரத்தைத் தேடிஅலைகிறேன்வைனின் மயக்கத்தில்வலியை மறக்கலாம் எனப்பார்த்தால் எனக்கு முன்னேவெறும் காலிக் குப்பிகள் கைகளில் கனவைத் தவிர வேறில்லைஇரு குப்பிகளில் மிச்சமிருந்தசொற்பத் துளிகளைகோப்பையில் ஊற்றினேன்அரைக் கிண்ணமே தேறியது. அப்போதே சொன்னான் கொக்கரக்கோபத்துப் பதினைந்து போத்தல்வாங்கி வை என்று. இந்த விஷயத்தில் நானொருசராசரி இந்தியன் ’இன்று குடிப்போமா?” என்பான் அவன். நண்பன் மறுப்பான்,“என்னை விட்டுவிடு.” ஆனால், இரவின் எட்டாம் மணியில்,போத்தல் திறந்தவுடன்,’எனக்கும் கொஞ்சம்,” என்பான்அதே நண்பன் அன்றைய இரவுநண்பனுக்குக்குடியே ... Read more
Published on May 22, 2025 05:38
கல்லறையிலே உறங்கும் பிரேதம்
நான் துயரக் கதை சொன்னால்சிரிக்கிறது கூட்டம்கண்ணீரில் கட்டப்பட்டசார்லியின் மௌனக் காமெடி போல ஆனால்பிராணிகளின் கதை கேட்டுரணமாகிறது மனம்மோகினிக்குட்டி என் உயிரின் துடிப்புஅவள் கூறினாலும்அந்தக் கதைகளைக்கேட்க முடியவில்லைதாங்க முடியவில்லை இனிய கதைகளும் வேதனையே…பூனைகளுக்கு மனித மொழி புரிகிறதாம்நாயின் அறிவோடு கேட்கிறதாம்காணொலி அனுப்பியிருந்தாள் மோகினி,பார்க்காமலே நீக்கி விட்டேன்பிராணிக் கதை கேட்டாலேஇதயம் உறைந்து போகிறது குறிப்பாக பெண்பூனைக்கதைகள் வாழ்நாள் பூராவும்கர்ப்பம் சுமந்தே திரிகின்றனகுட்டிகளை ஈன்றதும் அதைப்பாதுகாக்க வேண்டும்மழையிலிருந்தும்மனிதனிடமிருந்தும்பிற மிருகங்களிலிருந்தும்கொசுக்களிடமிருந்துகூடகுட்டிகள் உறங்கும் நேரமெல்லாம்விழித்தபடிஅமர்ந்திருக்கும் தாய்ப்பூனை குட்டிகள், தத்தித் தவழ்ந்து,தத்தக்கா பித்தக்கா நடையில்ஊர் திரியும்.குடியிருப்பின் ... Read more
Published on May 22, 2025 01:13
May 21, 2025
புருஷன் -1 நாவல் மதிப்புரை: நிர்மல்
இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுவதே இதற்கு செய்யும் துரோகம்தான். ஏனென்றால் விமர்சனம் என்பது வாசித்த படைப்பைப் பற்றிக் கருத்து சொல்வதுதானே? இப்படி கருத்து சொல்வதையும், கருத்து சொல்கிறவரின் நோக்கத்தையும், கருத்தைக் கட்டமைக்கும் மொழியின் ஆற்றல்களையும், அதைப் பயன்படுத்துகிறவரின் மொழிப் புலமையையும் புலமையின்மையையும் சந்தேகிக்க வைப்பது இந்த நாவலில் இழையோடும் உணர்வாக நான் கருதுவதால், விமர்சனத்தை அபத்தமாகவே இந்த நாவல் கருதும். கருதினால் கருதிவிட்டுப் போகட்டும், வேறு வழியில்லை. ஆகையால் விமர்சனம் என்கிற பெயரில் எழுதியதே கீழ்க்காணும் கட்டுரை! ... Read more
Published on May 21, 2025 23:33
கவிதை தெரியாத மட்டி மடையர்களுக்கு ஒரு விளக்கம்
இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பார்கள். இதை ஆண்டாளிடமும் மற்ற பக்தி இலக்கியக் கவிகளிடமும் காணலாம். திருப்பாவையில் கிருஷ்ணனின் லீலைகள், கோவர்த்தன கிரி, கம்ஸ வதம் போன்ற புராணக் கதைகள் எல்லாம் பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை. அதை விட முக்கியமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்படும் பக்தி மரபையும் ஆண்டாள் பின்பற்றுகிறாள். திருமால் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்ற ஆழ்வார்களைப் போலவே, தமிழ் பக்தி இலக்கியத்தின் பொதுவான உருவகங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறாள். அதேபோல் ஆண்டாளின் பாசுரங்களில் ... Read more
Published on May 21, 2025 04:25
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

