சாரு நிவேதிதா's Blog, page 33

May 30, 2025

காலைச் சிற்றுண்டி: ஜாக் ப்ரேவர்

ஜாக் ப்ரேவர் (Jacques Prévert, 1900-1977) ஃப்ரெஞ்ச் மொழியின் முக்கியமான கவிஞர். அவரது முதல் கவிதைத் தொகுப்பு Paroles (1946) பெரும் வரவேற்பைப் பெற்றது, அவரது தனித்தன்மை – அவரது மொழி எளிமையாகத் தோன்றும். ஆனால் ஆழமான அர்த்தங்களைக் கொண்டதாக இருக்கும். பேச்சு வழக்கில் இருக்கும், ஆனால் இசைத்தன்மை கூடியிருக்கும். திரைப்படத்துறையில், Les Enfants du Paradis (1945) போன்ற படைப்புகளுக்காக அவர் புகழ்பெற்றார், இது பிரெஞ்சு சினிமாவின் மாஸ்டர் பீஸாகக் கருதப்படுகிறது. அவருடைய ப்ரேக்ஃபாஸ்ட் என்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 04:56

Ripped jeans

ஏன் இப்படிக்கிழிந்த கால்சராய் அணிகிறாய்?’என்று கேட்கிறாள் ஒருத்தி நீ பிறந்தாய்படித்தாய்வேலை செய்தாய்காதலித்தாய்மணந்தாய்தாயானாய்மகனைப் பள்ளிக்கு அனுப்பினாய்வீட்டுக்கு அழைத்து வந்தாய்மகன் வேலைக்குப் போனான்காதலித்து மணந்தான்பேத்தி பிறந்தாள்கொஞ்சி மகிழ்ந்தாய்பள்ளிக்கு அனுப்பினாய்வீட்டுக்கு அழைத்து வந்தாய்எல்லாம் முடிந்துஉன் நினைவு மறையும் உங்கள் விதிகள்மீதுமூத்திரம் அடிக்க விரும்புகிறேன் விரும்புவதெல்லாம் செய்ய இயலாதுஅதற்குப் பதிலாகதொடை தெரியக்கால்சராய் அணிகிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2025 03:51

May 29, 2025

ஆகப் பிடித்தவைகளின் பட்டியல்

ஆகப் பிடித்த புத்தகம்—பழைய காகிதத்தில்பழுப்பு நிற மணம் மறையாவார்த்தைகள் ஆகப் பிடித்த எழுத்தாளர்—காற்றில் கவிதைகளைச் சுருட்டி வீசுபவர். ஆகப் பிடித்த உணவு—என் அம்மை ஆண்டாளுக்குப் பிடித்தது ஆகப் பிடித்த மது—இரவை மறந்து சிரிக்க வைக்கும் திராட்சை ரசம் ஆகப் பிடித்த பொழுதுபோக்கு—மேகங்கள் தீட்டும் சித்திரங்களில்என்னை இழப்பது ஆகப் பிடித்த சினிமா—என்னை எனக்கே நினைவூட்டும்பாத்திரங்களின் சலனம் எல்லாம் சொன்னேன். ‘ஆகப் பிடித்த தருணம்?’என்றார் கடவுள், ‘ஒரு மலைவாசஸ்தலத்தில்,முன்னிரவு நேரத்தில்,நெருப்புக் கம்பளம் பரவி எரிய,பைன் தேவதாரு மரங்கள் மெல்லிய பாடல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2025 23:23

மலர்கள் கொண்டு வந்த செய்தி

அன்பே, நான் மலர்களைப் பறிக்க ஒருபோதும் விரும்பியதில்லைசெடியின் மௌன உயிரைத் தொடுவது பாவமெனத் தோன்றும்ஆனால் இன்று, வாழ்விலே முதல்முறையாய்ஒரு மலர்க்கொத்து என் கைகளில் தவழ்ந்தபோதுஉன் புன்னகையின் நிழல் அதில் மின்னியதுநெஞ்சம் வண்ணத்துப் பூச்சியாய் மாறியதுஅதன் றெக்கைகள் நட்சத்திரங்களின் மொழியில்முணுமுணுத்தனவானம் ஒரு கணம் தன் முகத்தைத் திறந்து சிரித்ததுகாற்று, புல்லாங்குழலின் மென் சுருதியாய் மாறி,காலத்தின் மடிப்புகளில் மெதுவாய் மறைந்ததுஎப்படி இது நிகழ்ந்தது அன்பே?ஒரு மலரின் மொழிஎன் இதயத்தை விண்மீன்களின் பாதையில்பறக்கச் செய்தது அந்தக் கணத்தில் நான் நானாக இல்லைஉலகின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2025 09:40

இரண்டு குறுங்கவிதைகள்

1.சொந்த ஊர்நூறாண்டுப் பழமைஆளரவம் இல்லைஎங்கோ பாங்கு ஒலிக்கிறது_______________________________________________________________ 2. ’கொலைக்குத் தண்டனை இல்லை’அறிவித்தவுடன்தன்னை அழித்துக்கொண்டான்மனிதன் நதிகள் பாடினகுளங்கள் சிரித்தனமலைகள் மூச்சுவிட்டனகடல்கள் நடனமாடினமண்ணும் மிருகங்களும்இன்பமுற்றன.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2025 08:23

கோவா

சென்ற ஆண்டு புருஷன் வெளியீட்டு விழாவுக்காக கோவா சென்ற போது கோவாவை என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது நான் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அது பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் பேசினேன் என்று நினைக்கிறேன். உடனடியாகத் திரும்பி விட்டேன். இப்போது ஜூன் இருபதாம் தேதி கோவா செல்கிறேன். எந்த வேலையும் இல்லாமல் ஓய்வெடுக்கச் செல்கிறேன். அதுவும் ஒரு வாரம். இருபத்தாறாம் தேதி மாலை கோவாவிலிருந்து பெங்களூர் செல்கிறேன். அங்கே முப்பதாம் தேதி வரை இருப்பேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 29, 2025 04:28

May 28, 2025

நட்சத்திர எண்கணிதம்

மோகினிக்குட்டியின் மென் புன்னகையில்எண்களை நெய்துஅவள் பிறந்தநாளைக் கண்டெடுத்தேன். சொற்களைக் கோத்துஅவள் பாதம் பூஜித்தேன். நிலவொளியில் ஓய்ந்த குளத்தின் அமைதியாய்மௌனித்திருந்தாள்.மௌனத்தின் ரகசியம் கேட்டேன். ‘இதுவரை யாரும் வாழ்த்தியதில்லை’என்றாள் ‘நான் விண்மீனாய் மாறினாலும்,ஒளியின் ரூபமாய்உன் பிறந்தநாளில் வாழ்த்துவேன்’என்றேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 22:48

தனியாக…

நான் நடக்கிறேன்காற்றில் என் நிழல் மட்டும் தொடர்கிறது நான் உறங்குகிறேன்இரவின் மௌனம் என்னை மூடுகிறது நான் உண்ணுகிறேன்தட்டில் நிறைகிறது வெறுமையின் சுவை. நான் மைதுனம் செய்கிறேன்என் மனம் மட்டும் என்னோடு புணர்கிறது. நான் எழுதுகிறேன்என் எழுத்து எனக்குள்ளேயே சுழல்கிறது நான் வாசிக்கிறேன்புத்தகத்தின் பக்கங்கள் வாசிப்பின் தனிமைகூட்டுகின்றன நான் இசை கேட்கிறேன்ஒலியில் மூழ்கி மறைகிறேன் நான் தியானத்தில் ஆழ்கிறேன்என் மனம் வெளியாகி என்னை விட்டுநீங்குகிறது நான் சிரிக்கிறேன்என் பிறழ்வு கண்ணாடியில் சிதறுகிறது நான் அழுகிறேன்என் கண்ணீர் அபத்த உலகில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2025 00:07

May 27, 2025

பிறந்த நாளிலிருந்து மூன்றாவது நாள்

3 பிறந்தநாளைச் சொன்னால் என்ன?சொல்லாவிட்டால் என்ன?அது ஒரு வெறுமையான நாள்,ஏன் அதைப் பிடித்துத் தொங்குகிறாய்?நீயும் நானும் ஒரு மதுக்கடையில்வைன் குடித்தபடி இது பற்றிப்பேசலாம்ஆனால் இந்தப் பிறந்தநாள்ஒரு பயனற்ற காகிதத்தில் எழுதப்பட்டமற்றொரு எண்ணிக்கை. 1நான் ஒரு தீர்க்கதரிசி,மதங்களை நம்பாதவன்.அதனால் புது மதத்தைஉருவாக்கவில்லை,என் தரிசனங்கள் சிலரின் பாதையைமாற்றினஅதனால் என் பிறந்தநாள் ஒருசிறிய வெற்றிஒரு குடிகாரனின்கடைசிச் சிரிப்பு மாதிரி. 2உன் பிறந்த நாளைநான் கொண்டாடுவேன்,ஏனென்றால்,எனக்கு நீஒரு பாழடைந்த பட்டணத்தில்எரியும்கடைசி தீபத்தைப் போல.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2025 09:10

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.