சாரு நிவேதிதா's Blog, page 32
June 8, 2025
Transgressive artஉம் காமா சோமா கத்துக்குட்டிகளும்…
தக் லைஃப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் பற்றி நான் எழுதியதை ஏதோ ஒழுக்கக் கேடு என்று நான் எழுதி விட்டதாக சில எழுத்தாளக் குஞ்சுகள் ஃபேஸ்புக்கில் நூல் விட்டுக்கொண்டு கிடக்கிறார்கள். சினிமாக்காரர்களுக்கு ப்ளோஜாப் செய்து விட வரிசையில் நிற்கும் அந்த எழுத்தாளக் குஞ்சுகளுக்கு நான் சொன்னது எதுவுமே புரியவில்லை. ஒழுக்கம் அல்ல நான் குறிப்பிட்டது. ஒரு கதாபாத்திரம் அப்பனுக்கும் ஆசைப்படுகிறது, மகன் மீதும் ஆசைப்படுகிறது என்றால் அதற்கான characterization இருக்க வேண்டும் என்பது மட்டுமே நான் சொன்னது. ... Read more
Published on June 08, 2025 08:11
ஒரே ஒரு மொளகா பஜ்ஜி
1. எழுத்தைக் கற்பித்தவன்அறுபத்தைந்து ஆண்டுகள் எழுதியவன்.சிறுகதை, நாவல், கட்டுரை—ஆங்கிலம் சரளமாய்த் தெரிந்தாலும்தமிழில் மட்டுமே எழுதினான்.ஐநூறு பேர் படித்தால் அதிகம்.அந்த ஐநூறில் நானொருவன்.இருபத்தைந்து ஆண்டுகள்சினிமா தயாரிப்பில் மேலாளர் ஒருநாள் முதலாளிகார் துடைக்கச் சொன்னபோது,’நானொரு எழுத்தாளன்!’ என்று முணுமுணுத்தான்’எழுத்தாளனென்றால் நீ இங்கேயா இருப்பாய்?’என்று சிரித்தார் முதலாளிஅக்கணமே வேலையை உதறினான் ஐநூறு பேருக்கு எழுதும் வேலைசோறு போடாதுஇவன் பேரும் தியாகராஜன்ஆனால் உஞ்சவிருத்தி செய்யவில்லைஇக்காலத்தில் அது பழக்கமில்லைபழக்கத்தில் இருந்தாலும் கேட்டிருக்க மாட்டான்தன்மானம் மிகுந்தவன்யாசகம் கேட்க அடையாளம் துறக்க வேண்டும்அரிசியில்லாத நாட்கள்ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க ... Read more
Published on June 08, 2025 07:51
June 7, 2025
சுஜாதையின் கரங்கள்
நதியாய் ஓடும் கண்ணீரில்உலகம் மூழ்கஅரச குமாரன்துயரின் நிழலைத் தொட்டான்.மனைவியின் மென்மைசிசுவின் புன்னகைகாற்றில் கரைந்தன.குதிரையின் உயிர்பாதையில் உறைந்தது. ஞானம் ஒரு தீப்பொறிபிரேதங்களின் மீது நடந்துஎங்கெங்கோ அலைந்துதவத்தின் எலும்புகளை அணிந்துஒளியின் மொழியைத் தேடினான்.வழி மறைந்திருந்தது. நாற்பத்தெட்டு நாட்கள்அன்ன ஆகாரமின்றிஎலும்பும் தோலுமாய்மரத்தடியில் நிலைத்தான்நதியின் மௌனம் தவழ்ந்ததுசுஜாதையின் கரங்கள்தங்கத்தில் பால் அன்னம் தந்தன.உயிர் மீண்டதுஞானம் இன்னும் மறைந்திருந்தது. உயிர் மீண்ட தருணத்தில்அவன் கண்டான்:உடல் துயரின் பாதையல்ல.நிழலும் ஒளியும் ஒன்றே,மரமும் மனமும் ஒன்றே.ஞானம் மௌனத்தின் மொழியென்ற ஞானம்அவனுள்ளே பிறந்தது.
Published on June 07, 2025 09:56
June 6, 2025
கடவுளின் கனா
உலகம் அழியப் போகிறதுதேதி குறித்தான் ஒருவன்கொரோனாவை முன்னறிவித்தவன்என்றபடியால் அவன் வார்த்தைகள்மதிக்கப்பட்டன ஒரு மாதம் இருக்கிறதுஊடகங்கள் கூச்சலிட்டனபங்குச் சந்தை புழுதியில் உருண்டதுநிலங்களும் வீடுகளும் மதிப்பிழந்தனசிலர் பணத்தைப் புதைத்தனர்வந்தால் லாபம்,இல்லையெனில் நஷ்டமில்லைஅப்படித்தான் அவர்கள் கணக்குஆனால் அது மணல் மேட்டில் எழுதப்பட்டது விஞ்ஞானிகள் மறுத்தார்கள்அழிவு இல்லை என்றார்கள்நான் ஒரு காலத்தில் அவர்களைகடவுளராய் மதித்தேன்கொரோனா அந்த நம்பிக்கையைமண்ணில் தூசாக்கியது எனக்கு ஒரு கவலைஷேக்ஸ்பியரின் சொற்களும்பீத்தோவனின் இசையும்ஒரு புழுதிப் புயலில்அர்த்தமின்றிக் கரையலாமா? எப்படி அழியும் இந்த உலகம்?கடவுளின் ஆயிரம் கோடி நாமங்கள்கதையில் வருவது போலவா?அல்லதுபாவங்களுக்கானஇறைவனின் ... Read more
Published on June 06, 2025 17:40
நான் கொல்லுதல்
நிலவு ஒரு மௌனக் கண்ணாடி,நட்சத்திரங்கள் மறந்து போன கடவுச்சொற்கள்என்னைப் பார்க்க மறுக்கின்றன.குழந்தைப் பருவத்தில்பெரியோரின் முகம் பார்க்கஅண்ணாந்தவன்வானத்தைப்பார்க்க வாய்த்தவன்அதே வானம்தான்என் மீது புழுதியைக் கொட்டுகிறது. சத்தியம் ஒரு தொலைந்த நதிஅறம் வதந்திகளின் எதிரொலி பிறரின் கண்ணீரை வண்ணமாக்கிகதைகளை வரைகின்றேன்ஜீவன்களின் தோழனெனமுகமூடி அணிகின்றேன்.கேள்விகளுக்கு பதிலில்லைஆனாலும்ஒரு மூட்டை பதில்களுடன்ஆங்காங்கே அலைகின்றேன்அஞ்ஞானியாய் இருந்துகொண்டுஞானத் தோரணையில் திரிகின்றேன் கொசு, கம்பளிப்பூச்சி, கரப்பான் பூச்சி, அட்டை,மரவட்டை, எறும்பு, பூரான், பாம்பு, கோழி, ஆடு, ஈசல், கொக்கு, மடையான், தவளை, உடும்பு, மண்புழு,வண்ணத்துப்பூச்சியென்று நான் கொன்ற ஜீவன்கள்ஏராளம். நான் ஒரு பயணி,கரங்களில் மரணத்தின் முத்திரைபெண்களின் கண்ணீர்மனதின் கறைகளாகத்திரள்கிகின்றனஅன்பை உறுதியளித்து,துரோகத்தை மட்டுமே தருகிறேன். கருணை ஒரு மறந்த மொழிநேசம் ஒரு உடைந்த பாலம் அன்புக்குத் துரோகம்பரிவுக்கு வன்மம்கருணைக்குக் குரோதம்கனிவுக்கு மூர்க்கம்அருளுக்கு ஆணவம்நேசத்துக்கு முரட்டுத்தனம்தயவுக்குத் திமிர்என் வாழ்க்கை இதுதான் மனையாளிடம்நான் உச்சரிப்பது பொய்யின் மூச்சு மட்டுமே. ஒரு பெண்ணுக்கு சுகம் தருவதாய் வாக்களித்துஉடலின் தோல்வியில் மூழ்கியிருந்திருக்கிறேன் வழிபாட்டுத் தலங்களில்மனம் ஆடைகளை உரிக்கிறது குடியில் மூழ்கி,கீறல் விழுந்த இசைத்தகடாய்ஒரே புலம்பலைஒன்பது முறை எதிரொலிக்கிறேன். மனிதவுருக் கொண்டுவாழ்ந்தாலும்நானென்பவன்ஒரு நிழல்ஒரு கவிஞன்மேலும்கைவிடப் பட்டசொற்களின் குவியல்.
Published on June 06, 2025 17:31
தக் லைஃப் – விமர்சனம்
ஒண்ணும் ரெண்டும் ஏழு, ஏழும் ஒன்பதும் இருபத்தைந்து, இருபத்தைந்தும் முப்பதும் தொண்ணூறு என்று ஒருத்தர் கணக்குப் போட்டு நம்மிடம் சொல்லி, கணிதத்தை வேறு திசையில் செலுத்தியிருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது தக் லைஃப் படம். மணி ரத்னத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எதார்த்த உலகம் பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது. படத்தில் எல்லா காட்சிகளும், எல்லா பாத்திரப் படைப்புகளும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. சில உதாரணங்களைத் தருகிறேன். அமரனை (சிம்பு) சக்திவேல் நாயக்கர் (கமல்) சிறுவயதிலிருந்தே (ஏழு ... Read more
Published on June 06, 2025 08:41
June 5, 2025
ஓர் அற்புத உலகம்
(முன் குறிப்பு: இந்தக் கவிதையை நான் ஆறு மணி நேரத்துக்கு மேல் எழுதினேன். பத்துப் பதினைந்து படிகள் எடுத்தேன். திரும்பத் திரும்ப திருத்தினேன். திரும்பத் திரும்ப மாற்றினேன். மாற்றிய ஒவ்வொரு படியும் என்னிடம் உள்ளன. படித்துப் பாருங்கள்…) 1 அவன் கடவுளின் உலகைப் பார்த்தான்முகம் சுளித்தான் இங்கே எல்லாம் கலைந்து கிடக்கிறதுகாற்று குழப்பத்தை முணுமுணுக்கிறதுமுகங்களில் துக்கத்தின் தடயம்தெருவில் நடந்தால்பெண்களை உரித்துத் தின்கின்றன கண்கள்இரவின் நிழல்கள்குழந்தையின் முகத்திலும்தீயின் கறை படியச் செய்கின்றன மாற்றான் கழுத்தில் கத்தி வைப்பவன்மக்களின் தலைவன்அடுத்தவன் ... Read more
Published on June 05, 2025 08:51
June 3, 2025
பெட்டியோ – ஆங்கிலத்தில்
பெட்டியோ மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆங்கில மொழிபெயர்ப்பு Petiyo என்ற தலைப்பிலேயே கிடைக்கும். இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கு செலவு இரண்டரை லட்சம் ரூபாய். ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன். இன்னும் இரண்டு லட்சம் இந்த மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அடுத்த மாதமே மொழிபெயர்ப்பாளர் அன்பு நாவலை மொழிபெயர்ப்புக்கு எடுக்கிறார். இந்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை. காரணம், என்னிடம் பணம் ... Read more
Published on June 03, 2025 07:38
பிடித்தவற்றின் பன்மை
எனக்கு பெண்களை விட ஆண்கள்ஆண்களை விட பிராணிகளின் தனித்துவம்பிராணிகளை விட ஞானிகளின் மௌனம்ஞானிகளை விட கடலின் பிரம்மாண்டம்கடலை விட மலைகளின் தனிமை,மலையை விட வனங்களின் புதிர்கள்வனத்தில் அமர்ந்து, நிலவொளியில் குடிப்பது நான் அன்பு செலுத்துபவர்களை விட,என் மீது அன்பு கொள்வோர்அன்பின் பெயரால் அறிவுரை வழங்குபவர்களை விட,அமைதியாய் அனுகூலம் செய்பவர்கள்திருமணச் சிறையில் ஒடுங்காத பெண்கள்குடும்ப அடிமைகளாய் ஆகாத ஆண்கள்(அப்படிப்பட்ட ஆணை, இரண்டு முறை மட்டுமே கண்டிருக்கிறேன்.) வெற்றிலைப் பாக்கின் காரம்கருவாட்டுக் குழம்பின் கவுச்சிசாஸ்த்ரீய சங்கீதத்தின் பிரபஞ்ச லயம்ஹார்ட் ராக்கின் ... Read more
Published on June 03, 2025 04:14
June 2, 2025
கவிதைப் பேய்
1 நேற்றைய துப்புரவுத் தொழிலாளிவிதியின் விளையாட்டில்ராக்ஸ்டார் அல்லது சூப்பர் ஸ்டார்ஏதோ ஒன்று ஆனார் புகழ் பந்தைசாப்ளினின் காலால் உதைக்கிறார்பந்து செல்லும் இடம் தெரியவில்லை வெளியே சென்றால்கூட்டம் மொய்க்கிறதுகாவலரின் அரணின்றிதலை காட்ட முடியவில்லை செய்வதறியாமல்குடியை நாடினார்குடி இனிய தோழன்முதலில் நலமாயிருந்ததுபிறகு இரவும் பகலும்குடியை நாடியதுஉடலும் மனமும்.குடி கொஞ்சம் குரூரமானதுஇனிமை தந்தாலும்உயிரை உறிஞ்சி விடும் 2 நானும் ஒரு காலத்தில்துப்புரவுத் தொழிலாளி போலவேயாருக்கும் தெரியாமல்வாழ்ந்திருந்தேன்அவ்வப்போதுமனதில் தோன்றியவைகாகிதத்தில் விழுந்தனஒரு சமயம் –ஒரே ஒரு சமயம் –மன உளைச்சல் போக்கதுக்கம் தீர்க்ககவிதையில் விழுந்தேன். ... Read more
Published on June 02, 2025 23:42
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

