சாரு நிவேதிதா's Blog, page 210
May 3, 2021
வரும் சனிக்கிழமை ஒரு கலந்துரையாடல்
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் கழக எழுத்துப் பட்டறையில் மே 8 சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 7.30 அமெரிக்க நேரம் காலை 10 மணி EST அளவில் பேச இருக்கிறேன். இரண்டு மணி நேரப் பட்டறை. முதலில் அரை மணி நேரம் சிறுகதைகளைப் பற்றிய உரை. பின்னர் அரை மணி நேரம் உரையாடல். பிறகு ஒரு மணி நேரம் கலந்துரையாடல். இதை யூட்யூபில் அதே சமயத்தில் பார்க்கலாம். ஆனால் கலந்துரையாடலில் கலந்து கொள்ள இயலாது. மிச்சிகன் ... Read more
Published on May 03, 2021 23:24
May 2, 2021
ஒரு சாமியாரும் ஓப்ரா வின்ஃப்ரேயும்… (சிறுகதை)
இது 18.11.2020 அன்று குமுதத்தில் வெளிவந்தது. போலிச் சாமியார் என்ற வார்த்தையை நாம் இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். நானே கூட முன்பு ஒரு கட்டுரையில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஆனால் உண்மையில் பார்த்தால் போலிச் சாமியார் என்று யாருமே இருக்க முடியாது. அப்படியானால் இருக்கின்ற சாமியார்களெல்லாம் நிஜ சாமியாரா என்றால் கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேளுங்கள் என்பேன். மற்ற தொழில்களில் நிஜம் போலி என்று இருக்கலாம். திருடன், போலீஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு வந்து திருடலாம், ஏமாற்றலாம். ... Read more
Published on May 02, 2021 09:20
April 30, 2021
அ-காலம் தொடர் பற்றி…
இன்று அ-காலம் தொடர் பற்றி ப்ரியதர்ஷினி செல்வராஜ் எழுதிய எதிர்வினையைப் படித்தேன். இதை உங்களோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. பிஞ்ஜ் டாட் இன்னில் வரும் அந்தத் தொடரை வாசித்துப் பாருங்கள்…
Published on April 30, 2021 01:55
கர்ஜனையும் அழுகையும்…
எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் மதிப்பு இல்லை என்று தெரிகின்றதல்லவா, பின் எதுக்காக தொடர்ந்தும் இந்த வகையான தாழ்வுச் சிக்கல் கட்டுரைகள். எழுத்தாளரை மதிக்க வேண்டும் என்று நீங்கள் அடிக்கடி எழுதுவது சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது சாரு. சீலேயில் மதித்தார்கள் என்பதற்காக, கேரளத்தில் மதித்தார்கள் என்பதற்காக எல்லா இடத்திலும் அப்படியே இருக்குமா என்ன. நான் இலங்கையைச் சேர்ந்தவன். எங்களது நாட்டிலும் எழுத்தாளர்களுக்கு ஆஹா ஓஹோ என்ற வரவேற்பு இல்லை. சிங்கள திரைப்பட நடிகர்களையும் இங்கே தலைமேல் வைத்துக் கொண்டாடுவதில்லை. கிரிக்கெட் விளையாடுபவர்களை நாங்கள் ... Read more
Published on April 30, 2021 00:48
April 29, 2021
கேள்வி பதில்
https://www.facebook.com/Byngetamil மேற்கண்ட பிஞ்ஜ் தமிழ் முகநூல் பக்கத்துக்குச் சென்று என்னிடம் நீங்கள் கேட்கும் கேள்விகளில் சிறந்த ஐந்துக்கு நான் பதில் சொல்ல இருக்கிறேன். அதிலும் சிறந்த ஒரு கேள்விக்கு பிஞ்ஜ் குழுவினர் ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர். இன்று மாலை ஆறு மணிக்குள் கேள்விகள் வர வேண்டும்…
Published on April 29, 2021 23:20
சினிமாவும் எழுத்தும்…
வணக்கம். எனது முந்தைய மின்னஞ்சலில் நீவிர் அதிகம் நேரம் செலவிடக் கூடாது என்பதனாலேயே அதில் சுருக்கமாக அறிமுகத்துடன் கர்ணன் திரைப்படத்தைப் பற்றி உங்களது எண்ணங்களை கேட்டபடி அதனை அமைத்திருந்தேன். அதனாலேயே நீங்கள் அவ்வாறு பதில் அளித்து இருப்பீர்களோ என்று தோன்றியது. பின் அதில் நான் சினிமாக்காரன் என்று குறிப்பிட்டு அதனால் கூட அவ்வாறு நீங்கள் பதில் எழுதிஇருப்பீர்கள் என்று தோன்றியது. பிறகு அம்மின்னஞ்சலில் நான் உங்களைப் பிடிக்கும் என்று நான் பதிவிட்டதை உங்கள் ப்ளாகில் உங்கள் எழுத்துப் பிடிக்கும் என்று தவறாக பதிவிட்டு விட்டீர்கள். ... Read more
Published on April 29, 2021 22:38
அ-காலம்
அநேகமாக என் எழுத்து வாழ்வில் ஏப்ரல் 2021 என்ற இந்த மாதம்தான் அதிகம் எழுதியிருப்பேன், அதிகம் படித்திருப்பேன். பக்கங்களில் கணக்கில் கம்மியாகத்தான் வரும். Bynge.in இல் எழுதி வரும் அ-காலம் தொடருக்காகத்தான் அப்படிப் படித்தேன், எழுதினேன். ஒரு கட்டுரை 1200 வார்த்தை. ஐந்து பக்கம். இதை எழுத எனக்கு இரண்டு நாட்கள் எடுக்கும். நிறைய படிக்க வேண்டும். சில சமயங்களில் முழு நாவலையே படிக்க வேண்டும். பிறகு அதைப் பற்றி அஞ்சு பக்கம் எழுத வேண்டும். இப்படி ... Read more
Published on April 29, 2021 06:07
April 28, 2021
எழுத்து, படிப்பு…
என் நண்பர்களில் ஓரிருவரைத் தவிர அத்தனை பேருக்கும் கொரோனா வந்து விட்டது. அதுவாக வரவில்லை. கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கினார்கள். இப்போது சிகிச்சையில் இருப்பதால் அவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலேயே எழுதுகிறேன். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது கூட திட்டுகிறார் என்று காண்டாவார்கள். நான் சென்ற ஃபெப்ருவரியிலிருந்து தனிமையில் வாழ்கிறேன். 14 மாதங்கள் முடிந்து விட்டன. கிடந்த கொலைப் பட்டினியில் பத்து கிலோ குறைந்து விட்டது. எப்போதாவது பேண்ட் போட்டால் முழங்காலுக்கு இறங்கி விடுகிறது. பெல்ட் ... Read more
Published on April 28, 2021 22:05
புதிய தஞ்சை எழுத்தாளருக்கு வாழ்த்துகள்…
எனக்கு ஜாதி மதம் இனம் தேசம் என்று எந்த அடையாளமும் இல்லை என்பதை நீங்கள் நம்பினால்தான் மேற்கொண்டு நான் எழுதுவதில் உங்களுக்கு ஈடுபாடு செல்லும். என் தாய்மொழி தமிழ் என்றாலும் இந்த உலகிலேயே அரபியைப் போல் ஒரு அழகான மொழி இல்லை என்பது என் கருத்து. தமிழின் சிறப்பு அதன் புராதனத் தன்மையும், சங்கமும், அகத்தியமும், தொல்காப்பியமும், எல்லாமும். அதே சிறப்புகள் சம்ஸ்கிருதத்துக்கும் உண்டு. ஆனால் கூடுதலாக தமிழ் இன்றும் மக்களின் மொழியாகவும் இருக்கிறது. சம்ஸ்கிருதத்துக்கு ஆதியிலிருந்தே ... Read more
Published on April 28, 2021 20:26
கடவுளைக் காண வேண்டுமா, இதோ…
நான் கிறித்தவம் பற்றி அடிக்கடி வெறுப்போடு எழுதுவதாக சில நண்பர்கள் கடிதம் எழுதுவதுண்டு. நான் மதமாற்றக் கிறித்தவத்துக்கு மட்டுமே எதிர். எந்த மதத்திலிருந்தும் எந்த மதத்துக்கும் மாறுவது எனக்கு உடன்பாடானதல்ல. அது கூட என் தனிப்பட்ட கருத்துதான். மதமாற்றம் என்பது சொந்த விருப்பத்தில் அமையாமல் தூண்டுதலின் காரணமாக அமைந்து விடுகிறது என்பதே காரணம். மற்றபடி நான் யேசு கிறிஸ்துவின் அடிப்படைகளுக்கும் கிறித்தவத்தின் ஆன்மீகத்துக்கும் எப்போதுமே விசுவாசியாக இருப்பவன். மேலே உள்ள இணைப்புகளில் மூன்றாவதாக உள்ளதை முழுமையாகக் கேளுங்கள். ... Read more
Published on April 28, 2021 07:00
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

