சாரு நிவேதிதா's Blog, page 209
May 20, 2021
அ-காலம்
bynge.in என்ற செயலியில் அ-காலம் என்ற ஒரு தொடர் எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. சமகால அரபி இலக்கியம் பற்றிய தொடர். இதற்காக நான் படித்த புத்தகங்கள் ஏராளம். செய்த பயணங்களும் நிறைய. லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எழுதப்படும் அரபி இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர். இதை ஒன்றிரண்டு முஸ்லீம் நண்பர்களே வாசிப்பதை பின்னூட்டத்திலிருந்து அறிந்தேன். இதைப் பெருவாரியான முஸ்லீம் நண்பர்கள் படிக்க வேண்டாமா? அரபி பேசும் நாடுகளில் இலக்கியமும் ... Read more
Published on May 20, 2021 00:10
May 17, 2021
முதல் அலை : சிறுகதை : அராத்து
கீழே உள்ள அராத்துவின் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுதான் இன்றைய வாழ்க்கை. இதுதான் இன்றைய ஆண் பெண் உறவு. இதுதான் இன்றைய ஆண்களின் பெண்களின் நிலை. எல்லோருக்குமான பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை இப்படித்தான். நான் சொல்வதன் நியாயம் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் புரியாது. இளைஞர்களுக்குப் புரியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும். படித்துப் பாருங்கள். சாரு *** முதல் அலை: சிறுகதை: அராத்து “மட்டமான மருத்துவமனை. பணம் புடுங்குவது ஒன்றே குறிக்கோள். உயிர்களையும் உடைமைகளையும் பறிக்கும் ... Read more
Published on May 17, 2021 07:11
May 12, 2021
இசை குறித்த இரண்டு கட்டுரைகள்
என் எழுத்தை எப்போதும் விரும்பிப் படிக்கும் இளைஞர்கள் அதே ஆர்வத்துடன் நான் அவ்வப்போது இசை குறித்து எழுதும் கட்டுரைகளையும் படிக்கிறார்கள் என்று அறியும் போது மகிழ்ச்சி அடைகிறேன். படிப்பதோடு மட்டும் அல்லாமல் நான் குறிப்பிடும் இசைக் கலைஞர்களையும் கேட்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி அதிகரிக்கிறது. இதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. Despacito பாடலை இளைஞர்கள் கேட்பதில் ஆச்சரியம் இல்லை. நான் கங்குபாய் ஹங்கலையும் கிஷோரி அமோங்கரையும் பற்றி எழுதுவதைப் படித்து விட்டு அவர்களையும் கேட்கிறார்கள் என்பதே என் ... Read more
Published on May 12, 2021 07:18
May 11, 2021
ஒன்பதாவது மாடியிலிருந்து…
அன்பிற்குரிய சாரு, அரூ சிறுகதைப் போட்டி குறித்து நேற்று நீங்கள் எழுதியுள்ள பதிவை வாசிக்க நேர்ந்தது. தற்கால இளைஞர்களின் புனைவெழுத்து என்கிற அந்தக் கட்டுரையின் வாயிலாக இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிற என்னைப் போன்ற இளைஞர்களின் கண்களை நீங்கள் திறந்துவிட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். எல்லா கதைகளும் ஜெயமோகன் எழுதியது போலவே இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஜெ.மோ. போல ஒரு கதையாவது எழுதிவிட முடியுமா என கனவு காணும் எண்ணற்றவர்களின் மொழியிலும் அவர் பாதிப்பு தென்படவே செய்யும். யாரும் பிறந்ததும் சுவாசிக்க சொல்லிக் கொடுப்பதில்லை தான். ஆனால் ... Read more
Published on May 11, 2021 05:21
May 10, 2021
தற்கால இளைஞர்களின் புனைவெழுத்து
தொடர்ந்து இக்கால இளைஞர்களின் புனைவெழுத்துகளைப் படிக்கும்போது கசப்புணர்வே எஞ்சுகிறது. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி நான் அவ்வப்போது எழுதி வருகிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இப்போது எழுத வருபவர்களுக்குத் தமிழே எழுதத் தெரியவில்லை. கடுமையான பிழைகள். சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவர்களுடைய 10 சிறுகதைகளை ஒரு பிழையில்லாமல் திருத்தி – என்னென்ன பிழைகள் என்று கோடிட்டுக் காட்டி – பதினோராவது கதை எழுது என்று சொன்னால் முதல் கதையில் என்ன ... Read more
Published on May 10, 2021 04:53
வால்மீகிக்கு வந்த சந்தேகம்…
எனக்கு ஒரு தந்தை கடிதம் எழுதினார். ”நானும் என் மனைவியும் எங்கள் ரத்தத்தைச் சிந்தி பிள்ளையைப் படிக்க வைத்தோம். எங்கள் சக்திக்கு மீறி, எங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்து உயர் படிப்பு கொடுத்தோம். இப்போது வேலைக்குப் போய் அவன் எங்களை கவனிக்கவே இல்லை. வயதான காலத்தில் கொடும் மன உளைச்சலாக இருக்கிறது.” அந்த நீண்ட கடிதத்தின் சாரம் இது. நான் கேட்டேன், பிள்ளையைப் படிக்க வைத்ததை ”பிற்காலத்துக்கான சேமிப்பு” என்று நினைத்துச் செய்தீர்களா? அல்லது, பிள்ளையின் மீது ... Read more
Published on May 10, 2021 04:29
May 8, 2021
ஓம் தன்னிலை மயம் ஜகத்…
ஒருவர் எதுவாகவோ இருக்கிறார். எதுவுமே அற்று இருக்க முடியாது. அவர் அப்படியே தன்னை வெளிப்படுத்தினால் அது இயல்பாக இருக்கும். மாறாக அவர் வலிந்து தன்னை ஒரு கலககாரனாக, ஞானியாக, புத்திஜீவியாக காட்ட முயன்றால் அது பொலியான பிம்பம் அல்லவா? நரேஷ் கரினினாவின் மேற்கண்ட பதிவு. இப்போதெல்லாம் முன்பு போல் இல்லை. முன்பு நான் ஜாக் தெரிதா படிக்க வேண்டுமானால் புத்தகம் கிடைக்காது. கிடைத்தாலும் விலை 800 ரூ. இருக்கும். நம் சம்பளம் 500 ரூ. இருக்கும். அதனால் ... Read more
Published on May 08, 2021 04:44
May 7, 2021
மூவர்
இறையன்பு ஐ.ஏ.எஸ். காஞ்சீபுரம் கலெக்டராக இருக்கும் போதிருந்து என் நண்பர். காஞ்சீபுரத்தில் பகல் நேரத்தில் எல்லோரும் தறி நெய்யப் போய் விடுவதால் சிறுவர்களால் பள்ளிக்கூடம் செல்ல முடியவில்லை என்று இரவுப் பள்ளியை ஆரம்பித்து சிறார்களை அந்தப் பள்ளியில் படிக்கச் செய்தார் இறையன்பு. இதை இறையன்பு என்னிடம் சொன்னதில்லை. அந்த இரவுப் பள்ளியில் படித்து பல பெரிய வேலைகளுக்குச் சென்ற நண்பர்கள் மூலம் பல ஆண்டுகள் கழித்து நான் கேள்விப்பட்டு இறையன்புவிடம் கேட்ட போது சிரித்துக் கொண்டே ஆமாம் ... Read more
Published on May 07, 2021 22:11
வாடிய உயிர்கள்…
பூனைகளுக்கான உணவை நான்கு நண்பர்கள் அனுப்பி வைக்கிறார்கள். அதுவும் போதாமல் போகும்போது எங்கள் குடியிருப்பு மேனேஜரை அனுப்பி நானே வாங்கிக் கொள்கிறேன். இதையெல்லாம் ஒருங்கிணைப்பதற்கே சில மணி நேரம் ஆகி விடுகிறது. அதுவும் தவிர, அவந்திகா பூனைகளுக்கு உணவு தருவதற்காகக் கீழே செல்லும் போது பக்கத்து அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி தூஷணை வார்த்தைகளால் அவந்திகாவைத் திட்டுகிறார். காது கூசும் தூஷணை வார்த்தைகள். நம்முடைய குடியிருப்பில் வைத்துக் கொடுப்பதற்கு அவர் ஏன் திட்ட வேண்டும்? பூனைகளால் ஆஸ்துமா ... Read more
Published on May 07, 2021 18:57
May 5, 2021
சைவம் – அசைவம்
அபிலாஷின் ஒரு பதிவைப் பார்த்தேன். கொல்லாமையின் அறம் காரணமாக சைவ உணவுக்கு மாற இருப்பதாக. நல்ல முடிவு. ஆனால் அதற்கு முன் எது சைவ உணவு என்பதற்கு அவர் தொல்காப்பியரின் புல்லும் மரனும் ஓரறிவினவே என்ற சூத்திரத்தைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதன்படி மீனுக்கு இரண்டு அறிவே உண்டு. தாவரத்தை விட ஒரு படி மேலே. மாடு நாய்க்கெல்லாம் அஞ்சு அறிவு. அதெல்லாம் மனிதனைக் கொன்று சாப்பிடுவது போல. ஒரே ஒரு முறை கறிக்கடைக்குப் ... Read more
Published on May 05, 2021 20:02
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

