சாரு நிவேதிதா's Blog, page 208
May 28, 2021
அவர் நல்ல பாடலாசிரியரும் இல்லை…
மதிப்பிற்குரிய திரு. சாருநிவேதிதா, /அவர் பாடலாசிரியர். மிக நல்ல பாடலாசிரியர் (Lyricist). இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான்./சினிமாக்காரர்களுக்கு மிகையான இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும்போது அதை கண்டிக்கும் இலக்கியவாதிகள், இப்படி ஒரு வரியை சொல்லிவிடுவது வழக்காமாக இருக்கிறது.ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை? அவர் நல்ல பாடலாசிரியரா? இலக்கியக் களத்தில் செயல்படும் எழுத்தாளர்களை எத்தனைக் கறாராக தரமதிப்பீடு செய்வீர்களோ அப்படி நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டதா மேற்படி கருத்து?இரண்டாம் தர கலையான சினிமாப்பாடல் வரிகளை, உங்களுக்கு அத்தனை ஈடுபாடு இல்லாத துறையை, ஆழ்ந்து அலசி கருத்து ... Read more
Published on May 28, 2021 03:19
May 27, 2021
அ-காலம் தொடர் பற்றி…
Dear Charu Sir,Good Morning! As I keep reading a-kaalam, I find each piece of them to be worthy of more than a Ph.D. degree as it involves mammoth data gathered extensively placed appropriately with an in-depth discussionof the concerned matter. It gives a lot of references to be gone through after reading your articles. Every ... Read more
Published on May 27, 2021 20:47
Pleasure of the Text
இடம் சார்ந்து எனக்கு எவ்வித நாஸ்டால்ஜிக் உணர்வுகளும் இல்லை. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று காலை அருண்மொழி நங்கையின் சின்னச் சின்னப் புரட்சிகள் என்ற படைப்பைப் படித்து விட்டு என்னைப் பற்றி நான் அப்படி நினைத்துக் கொண்டிருந்தது தவறு எனத் தோன்றியது. அல்லது, இதுவரை எந்த எழுத்தும் இப்படி எனக்குள் கீழத்தஞ்சை மண் பற்றிய உணர்வுகளைக் கிளர்த்தியது இல்லை. இப்படியெல்லாம் சொன்னால், இது ஏதோ ஊர் பற்றிய நினைவுக் குறிப்பாகக் குறுகி விடும் அபாயம் இருக்கிறது. அப்படியும் ... Read more
Published on May 27, 2021 20:18
திரும்பத் திரும்ப சினிமா…
வெட்கக்கேடு. மலையாளத்தின் ஓ.என்.வி. விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருப்பது. தமிழில் வேறு கவிஞர்கள் யாரும் இல்லையா? வைரமுத்துவை யார் கவிஞர் என்று சொன்னது? அவர் பாடலாசிரியர். மிக நல்ல பாடலாசிரியர் (Lyricist). இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான். அதற்குத்தான் அவர் இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வருடாவருடம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே? அது போதாதா? தமிழில் இப்போது தேவதேவன், தேவதச்சன் போன்று உலகத் தரத்தில் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே? அவர்களையெல்லாம் மலையாளிகள் அறியவில்லையா? ... Read more
Published on May 27, 2021 04:31
May 26, 2021
ஏழு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பேட்டி
சாருநிவேதிதா பேட்டி, தி இந்து வில் (24-05-2014) உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன? காமம் என்றால் பிணம்கூட எழுந்து கொள்ளும் என்கிறார் பர்த்ருஹரி. காமத்தை விடவும் தீவிரமானது பசி. ஆக, பிற உயிர்களின் பசி ஆற்றுவதே எல்லையற்ற மகிழ்ச்சி. மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது? அச்சம் அறிந்ததில்லை. ஆனாலும் சிறை அச்சம் தருகிறது; காரணம், அங்கே ஏர் கண்டிஷனர் இருக்காதாம். நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?பிரெஞ்சு எழுத்தாளர் மார்க்கி தெ ... Read more
Published on May 26, 2021 20:18
May 25, 2021
மாடி வீட்டு ஏழை
நான் வாழ்க்கையில் இதுவரை காய்கறி வாங்கினதில்லை. அதனால் விலை தெரியாது. இன்று காலை தெருவில் காய் விற்பவர் பெருங்குரலில் கூவிக் கொண்டு போனார். எல்லோரும் வாங்கினார்கள். நான் முதல் மாடி. மாடியிலிருந்து கீழே முப்பது அடி இருக்கும் தெரு. இருபது அடியும் இருக்கலாம். முள்ளங்கியும் பீட்ரூட்டும் விலை கேட்டேன். பணம் கொடுத்தால் வாட்ச்மேன் வாங்கிக் கொண்டு வந்து மேலே கொடுத்து விடுவார். ஒவ்வொன்றும் அறுபது ரூபாய் என்றார் காய்கறிக்காரர். ஆ, கிலோ அறுபது ரூபாயா என்று அவரிடம் ... Read more
Published on May 25, 2021 23:42
May 22, 2021
அ-காலம் பற்றி…
டியர் சாரு,அ-காலம் முடிந்த பின்பு எழுதலாம் என்று நினைத்தேன். ஆனாலும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. பயணக் கட்டுரைகள் இப்படித்தான் இருக்கும் என்ற முன்தீர்மானத்துடன் ஆரம்பித்தேன். நான் நினைத்தது அல்லது இதற்கு முன்பு வாசித்த அனுபவக்கட்டுரைகள் இந்த ரகத்தில் இருக்கும்: “நாங்கள் ஏர்போர்ட் சங்கீதாவில் காலை உணவை முடித்த போது இந்த வடையை பதினைந்து நாள் கழித்து தான் பார்க்க முடியும் என்று நண்பர் சொன்னார், அப்பொழுதுதான் எனக்கு நாம் பயணம் செய்யும் தூரம் உரைத்தது…” இப்படி ஆரம்பித்து ... Read more
Published on May 22, 2021 21:13
May 21, 2021
அப்பாம்மை: சிறுகதை: காயத்ரி. ஆர்.
(காயத்ரி சொல்லும் கதைகள் பலவற்றைப் பல ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் ஒன்று விடாமல் எழுது என்றும் ஒவ்வொரு கதையைக் கேட்கும் போதும் சொல்வேன். ஆனாலும் என் மாணவர்கள் யாரும் என் சொல் கேட்காதவர்கள் என்பதால் அவளும் எழுதினதில்லை. நானும் ஒரு சொல்லுக்கு மேல் சொல்வதில்லை. இப்படியே கடந்து விட்டன ஆண்டுகள். இந்த நிலையில் இந்தக் கதை இன்று மின்னஞ்சலில் அனுப்பியிருந்தாள். கதையைப் படித்து விட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும். கி.ரா.வின் கல்யாணச் சாவு ஞாபகம் வந்தது. ... Read more
Published on May 21, 2021 07:01
May 20, 2021
இலக்கியத்தின் அரசியல்: அ-காலம் தொடர் குறித்து…
நேற்று பின்வருமாறு ஒரு பதிவு எழுதியிருந்தேன்: bynge.in என்ற செயலியில் அ-காலம் என்ற ஒரு தொடர் எழுதி வருகிறேன். கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. சமகால அரபி இலக்கியம் பற்றிய தொடர். இதற்காக நான் படித்த புத்தகங்கள் ஏராளம். செய்த பயணங்களும் நிறைய. லெபனான், சிரியா, பாலஸ்தீனம், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எழுதப்படும் அரபி இலக்கியம் பற்றிய அறிமுகத் தொடர். இதை ஒன்றிரண்டு முஸ்லீம் நண்பர்களே வாசிப்பதை பின்னூட்டத்திலிருந்து அறிந்தேன். இதைப் பெருவாரியான முஸ்லீம் நண்பர்கள் படிக்க ... Read more
Published on May 20, 2021 22:10
ஒரு அக்கப்போர்
சமீபமாக ப்ளாகில் எதுவும் எழுதுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். காரணம், ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தியாகராஜாவோடு கூட. நான்கு ஆண்டுகளில் படிக்க வேண்டியதை நான்கு மாதங்களில் படித்தேன். அதனால் இரவு பன்னிரண்டுக்குப் படுப்பது காலையில் ஆறு மணிக்கு எழுந்து கொள்வது, உடனேயே தியானமோ நடைப்பயிற்சியோ செய்யாமல் எழுத ஆரம்பிப்பது என்று வெறி பிடித்தது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு நான் எழுதியதைப் படிக்க bynge.in செயலியில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று கட்டுரைகளைக் கொடுத்து விட்டேன். ... Read more
Published on May 20, 2021 04:21
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

