சாரு நிவேதிதா's Blog, page 206
June 13, 2021
ஒரு நாவல் – ஒரு லட்சம் பரிசு*
ஜீரோ டிகிரி – தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நாவல் போட்டிக்கு உங்கள் நாவலை அனுப்பக் கடைசித் தேதி செப்டெம்பர் 15, 2021. விதிமுறைகள்: 1) குறைந்த பட்சம் 30000 – அதிக பட்சம் 35000 சொற்களுக்கு மிகாதிருக்க வேண்டும் 2) யுனிகோடில் டைப் செய்து வேர்ட் டாகுமெண்டாக மட்டும் அனுப்ப வேண்டும். 3) ஒருவர், ஒரு நாவலை மட்டுமே அனுப்பலாம் 4) அனுப்பும் முகவரி: zerodegreeaward@gmail.com 5) நாவல், சொந்தக் கற்பனையே, இதற்கு முன் வேறெங்கும் ... Read more
Published on June 13, 2021 23:34
June 9, 2021
அற்புதம்
உங்கள் வாழ்வில் அற்புதங்கள் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களில் தினந்தோறும் நடக்கின்றன என்பேன். எனக்கே சரியாகத் தெரிவதில்லை. ஒரு சித்தர் மற்றவர்களைக் கட்டிப் பிடிக்கும்போது அவர்கள் மயக்கம் போட்டு விழுவதைப் பார்த்தேன். என்னையும் கட்டிப் பிடித்தார். சீ என்று அருவருப்பாகத்தான் இருந்ததே தவிர மயக்கமும் வரவில்லை, மண்ணாங்கட்டியும் வரவில்லை. ஆனாலும் அற்புதங்களை மறுக்க மாட்டேன். ஏனென்றால், தினமும் இல்லாவிட்டாலும் – தினமும் நடந்தால் அது அற்புதம் இல்லையே? – ... Read more
Published on June 09, 2021 17:56
June 7, 2021
அதிகாரமும் விளிம்புநிலையும்…
என்னுடைய பழைய கட்டுரைத் தொகுப்புகளுக்குப் புதிய பதிப்பு கொண்டு வரும்போது அவற்றைப் படித்து, தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது என் வழக்கம். அப்படி நீக்கும் பகுதிகள் அதிகம் இருக்காது. இருநூறு பக்கத்தில் பத்து பக்கம் இருக்கும். அந்தப் பத்து பக்கமும் ஜெயமோகனுக்கு எழுதும் மறுப்பாக இருக்கும். ஒரே ஒரு நூலில் மட்டும் இருநூறுக்கு நூறு பக்கம் இருந்தது. அனைத்தையும் நீக்கி விட்டேன். ஏனென்றால், ஒரு சக எழுத்தாளருக்கு மறுப்பு சொல்லிக் கொண்டிருப்பதும், சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் என் வேலை ... Read more
Published on June 07, 2021 04:19
June 6, 2021
வாசகர் சந்திப்பு பற்றி…
நேற்றைய வாசகர் சந்திப்பு பிரமாதமாக இருந்தது. எல்லோருமே மிகப் பொறுப்பாகப் பேசினார்கள். 40 பேர். இன்னொரு இருபது பேரை அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். முதல் முதலாக ஒரு உள்வட்ட சந்திப்பில் இணைப்பதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதுவரை ஒரு மின்னஞ்சல் கூட இல்லாமல் எந்த அறிமுகமும் இல்லாமல் எப்படி என்ற தயக்கம். அப்படியும் நாலைந்து பேரை இணைத்தேன். அடுத்த சந்திப்பில் இந்த முறை இணைய முடியாதவர்களையும் இணைக்கலாம். நூறு பேர் வரை கொள்ளும். கோவிட் ... Read more
Published on June 06, 2021 22:10
ArtReview பத்திரிகையில் என் கட்டுரை : India is choking
லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ArtReview Asia பத்திரிகையின் இன்னொரு சகோதரப் பத்திரிகை ArtReview. ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்குக் கட்டுரையை அனுப்பிய பிறகு அவர்கள் ஆர்ட்ரெவ்யூவுக்கும் ஒரு கட்டுரை கேட்டார்கள். அதனால் உடனடியாக அதற்கு வேறொரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். ஜெட் வேகத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷுக்கு நன்றி. https://artreview.com/india-is-choking/
Published on June 06, 2021 09:56
June 5, 2021
ராஜேஷ் குமார்
என்னுடைய மலையாள நண்பர்கள் யாரோடும் இப்போது எனக்குத் தொடர்பு இல்லை. மாத்யமம் பத்திரிகையில் கண்ணன் இருந்தார். விஜயகுமார் குனிசேரி ஒரு அற்புதமான மனிதர். கவிஞர். கோவையில் வசித்தார். மாத்ருபூமி பத்திரிகையில் பணி புரிந்தார். நான் எப்போது கோவை சென்றாலும் என் குடி நண்பர் அவர்தான். அவருடைய மகன் என் வாசகர். விஜயகுமாருக்குத் தமிழ் நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரியும் என்பதால் என் எழுத்தும் நன்கு பரிச்சயம். அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் மகன் மாணவர். பிறகு ... Read more
Published on June 05, 2021 21:10
வாசகர் வட்ட சந்திப்பு
நாளை மாலை ஆறரை மணிக்கு வாசகர் வட்ட சந்திப்பு உள்ளது. இது நினைவூட்டல். கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஐடி நம்பர், பாஸ்கோட் அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் எழுதவும். கலந்து கொள்ள விரும்பிய பல நண்பர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. ஒரே காரணம், அவர்களுடைய முதல் கடிதமே அதுவாகத்தான் இருக்கிறது. உங்களோடு எந்தப் பழக்கமும் இல்லாமல் எப்படி சந்திப்பில் இணைத்துக் கொள்வது? அரை மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ஃபோன். எடுத்தேன். வாசகர். முதல் போன். ... Read more
Published on June 05, 2021 05:07
தமிழ்நாடு அரசின் இலக்கிய விருதுகள் பற்றி ஜெயமோகன்
மேற்கண்ட விஷயம் பற்றிய ஜெயமோகன் கட்டுரையைப் படித்தேன். அவர் கூறும் பெரும்பாலான விஷயங்கள் உண்மைதான். யாரும் மறுக்க முடியாதவை. ஆனால் கட்டுரையில் ஒரு அவநம்பிக்கை இழையோடுகிறது. அதற்குமே கடந்த கால அனுபவம்தான் காரணம். இருந்தாலும் இப்போதைய நிலை வேறு. இந்த அறிவிப்புகளுக்குக் காரணமாக அமைந்த முதல்வருக்கு நான் குமுதத்தில் எழுதிய இரண்டு கடிதங்களை என் தளத்தில் வெளியிட்டிருந்ததை ஜெயமோகன் படித்தாரா என்று தெரியவில்லை. படித்திருந்தால் அவருக்கு ஒரு சில விவரங்கள் தெரிந்திருக்கும். முதல் கடிதம் குமுதத்தில் வந்த ... Read more
Published on June 05, 2021 00:35
June 3, 2021
இதுதான் வித்தியாசம்… அராத்து
அராத்து முகநூலில் எழுதியது: மக்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ அடிப்படையிலேயே ஆதி காலம் தொட்டு எழுத்தாளர்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். புலவர்களின் வறுமையில் இருந்து தொடங்குகிறது இந்த இழிவான வரலாறு. என்னை ஏண்டா நாகரீகமா ஆக்க முயற்சி பண்ற ? என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தடுப்பூசி போட வந்த மருத்துவக்குழுவை வட இந்திய கிராமம் ஒன்றில் உருட்டுக்கட்டையால் அடித்துத் துரத்தியதுடன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். இது எங்கே வந்து நிற்கிறது என்றால் இன்றைய இளைய தலைமுறை ... Read more
Published on June 03, 2021 23:37
விட்டு வந்த இடம் : அருண்மொழி நங்கை
வழக்கம் போல் என்னை அசத்திய எழுத்து. ஒரு பிரமாதமான வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார் அருண்மொழி. எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. தொடர்ந்து எழுத வேண்டும். நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள்.
Published on June 03, 2021 20:41
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

