சாரு நிவேதிதா's Blog, page 204

July 5, 2021

July 2, 2021

அக்கறையின்மை

நான் இப்போது எழுதுவதைப் படித்துக் கோபம் அடையாதீர். கோபம் கொண்டால் நஷ்டம் எனக்கு இல்லை. உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே என் நேரத்தை செலவழித்து இதை எழுதுகிறேன். இது பற்றி முன்பே எழுதியிருந்தேன். இந்த விவரம் கிடைக்கும் லிங்க்கும் கொடுத்திருந்தேன். ஆனால் யாருமே – ஆம், யாருமே – இது பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் பாட்டுக்கு உங்கள் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் நான் என்ன வேலையற்றவனா? ஏற்கனவே லிங்க் கொடுத்தும், வழி என்ன என்று சொல்லியும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 02, 2021 06:00

July 1, 2021

மறக்க முடியாத கதை

வளன் அரசு என் எழுத்தில் வளர்ந்தவன்.  என்னை அப்பா என அழைப்பவர்களில் முதன்மையானவன்.  அவனுடைய பள்ளிப் பருவத்திலிருந்து அவனை நான் அறிவேன்.  இப்போது ஒரு நல்ல படைப்பாளியாக வளர்ந்து வருகிறான்.  பின்வரும் சிறுகதை என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.  எந்த இலக்கியப் பாசாங்குகளும் இல்லாத கதை.  மறக்கவே முடியாத கதை.  இதில் வரும் ரெனியையும் மறக்க முடியாது.  ஜெரோமையும் மறக்க முடியாது.  ஜெரோம் சைத்தானின் குறியீடு எனவும் ரெனீ உன்னதங்களின் குறியீடு எனவும் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 10:12

பொருள்வெளிப் பயணம் – 1

ஒரு புதிய தொடர், ஒரு புதிய பத்திரிகையில்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 01, 2021 08:53

June 28, 2021

இளைய தலைமுறை

இளைய தலைமுறைதான் என்னை அதிகம் படிக்கிறது. சந்தோஷம். ஆனால் படிக்கிறார்களோ இல்லையோ, பொதுவாகவே இளைய தலைமுறையிடம் ஒரு மனோபாவத்தைக் காண்கிறேன். அது, பொறுமையின்மையும் பதற்றமும் சுயநலமும். சுயநலத்தைத்தான் முதலில் போட்டிருக்க வேண்டும். அதுதான் அவர்களிடம் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு நிற்கிறது. நான் நான் என்ற அகந்தை. இன்று முகநூலில் காயத்ரி எழுதியிருந்த இந்தப் பதிவு நாம் எல்லோரும் படித்து மிகவும் கவலை கொள்ள வேண்டிய விஷயம். இது ஏதோ ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. பதிப்புத் துறை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2021 23:46

June 26, 2021

இலக்கியத்தில் நல்லவர்கள்

”உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆனால் தமிழவன் அப்படி யாருக்கு எதிராவும் அரசியல் பண்ணக் கூடியவர் அல்லதானே? அவர் ஒரு பாவம், நேர்மையானவர் என்பதே என் நம்பிக்கை. அவர் என் நண்பர், என் சொந்த ஊர்க்காரர் என்பதால் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, நிஜமாகவே கவனித்ததை வைத்தே சொல்கிறேன். ஒருமுறை கூட சக எழுத்தாளர்களை உரையாடலின் போது அவர் தூஷணை செய்து நான் பார்த்ததில்லை. வெளிப்படையான மனிதர். அதனாலே நல்லவர். அத்தகையோர் தமிழில் அரிது. நான் பார்த்துள்ள ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2021 08:37

எக்ஸைல் பற்றிய ஒரு குறிப்பும், பா. ராகவனின் மதிப்புரையும்…

இந்திய அளவில் பதிப்பகங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன.  கொரோனா பாதி, யாரும் புத்தகம் படிப்பதில்லை என்ற காரணம் பாதி.  என்னைக் கேட்டால், கொரோனா இல்லாதிருந்தால் கூட இப்படித்தான் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  குடிசைத் தொழில் மாதிரி நடத்தினாலே மாதம் ஒரு லட்சம் ரூபாய் தேவை.  ஆனால் புத்தக விற்பனை அத்தனை இல்லை.  பதிப்பாளருக்கு வேறு வருமானம் இருந்தால் இதை ஒரு ‘பேருக்காக’ நடத்தலாம்.  இது என் சொந்தக் கருத்து.  இதற்காகப் பதிப்பாளர்கள் என் மீது பாய்ந்தால் எனக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2021 07:58

காஃப்காவை அங்கீகரியுங்கள், அவன் உங்கள் அண்டை வீட்டுக்காரனாக இருந்தாலும் கூட…

ஒருநாள் ஒரு நண்பனோடு பேசிக் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு இலக்கிய வாசகர் வந்தார்.  அவர் எப்போதுமே என் முகத்தைப் பார்க்கக் கூட மாட்டார்.  முகமன் கூறியதும் இல்லை.  இத்தனைக்கும் நான் அவர் பற்றி எழுதியதோ பேசியதோ இல்லை.  சொல்லப் போனால் அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதனால் அவருக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு நானும் அவர் பக்கம் திரும்புவது இல்லை.  நேரில் எங்காவது தெருவிலோ இலக்கியக் கூட்டத்திலோ பார்த்தாலும் யாரோ மாதிரி போய் விடுவேன்.  என்னோடு பகைமை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2021 02:00

June 25, 2021

சோற்று ஜாதி: இன்னும் ஒரு குறிப்பு

ஷாலின் கதையைப் படித்து ஸ்ரீமீனாக்ஷி முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். சக மனிதரின் பசி பற்றி நான் கவலையுற்றது பற்றி. பசி என்று இல்லை. பொதுவாகவே சக மனிதர்கள் மீது ஏன் எல்லோருக்கும் அக்கறை இருப்பதில்லை என்றே எனக்கு ஆச்சரியமாக இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு ரோஸ் என் வீட்டுக்கு வந்தார். அவர் யு.எஸ்.ஸிலிருந்து சென்னை வந்த புதிது. அப்போது அவர் பிரபலம் இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து அவர் கிளம்பும்போது “என் வீட்டு ரெஸ்ட் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2021 23:20

சோற்று ஜாதி: ஷாலின் மரியா லாரன்ஸ்

இது ஒரு கதையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஷாலின் இதை ஒரு கட்டுரை என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் கட்டுரையா என்று தோன்றியது. ஏன் ஷாலின், இது ஒரு அருமையான சிறுகதை அல்லவா? ஏன் கட்டுரை என்று சொன்னாய்?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 25, 2021 22:02

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.