சாரு நிவேதிதா's Blog, page 203
July 19, 2021
தொலைந்து போன புத்தகம்…
அப்போது இலக்கியம் ஒரு கண், குடி இன்னொரு கண். அப்படி ஒரு குடி. ஆனால் குடியைக் குடிக்காகக் குடிப்பதில்லை. அதுவும் ஒரு தோது. தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் வெற்றிலை பாக்கும் புகையிலுமாக இரவு பூராவும் இலக்கியம் பேசுவார்களாம். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு அய்ட்டம். அப்போது வெற்றிலை பாக்கு புகையிலை. இப்போது குடி. பாரிஸிலிருந்து வாசன் வந்திருந்தான். நெருங்கிய நண்பன். சென்னை வந்தால் சின்மயா நகரில் ராமானுஜம் வீட்டில்தான் தங்குவான். இங்கே ராமானுஜத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெயருக்கேற்ற புத்திசாலி. ... Read more
Published on July 19, 2021 10:38
புனைவின் பல வாயில்கள் – ஆர். அபிலாஷ்
இலக்கியத்தின் உள் இயக்கங்களை அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு இந்தக் கட்டுரையைப் பரிந்துரை செய்கிறேன்.
Published on July 19, 2021 06:42
பூஜா ஹெக்டே
வணக்கம் சாரு.. ரொம்ப நாளைக்கு அப்புறம் இடுப்புக்குத் திரும்பி வந்துருக்கீங்க. வாழ்த்துக்கள். மட்டற்ற மகிழ்ச்சி.. கொஞ்சம் சைடு விட்டீர்கள் என்றால் அந்த குன்றில் நானும் ஏறி உங்கள் குரலுக்கு வலு சேர்ப்பேன். ஜெய் பூஜா ஹெக்டே!! நாள் மஜாவா ஆரம்பிச்சிருக்கு. உங்க ரசிகனா இருந்தா மட்டும் தான் கீழ வர பாட்டெல்லாம் யூடூப்பில் பரிந்துரையா வரும். https://en.wikipedia.org/wiki/WAP_(song) எமினெம் எல்லாம் தூர ஓடணும். Cardi B ரகள பண்ணிருக்கு. Exile ஒரு நாலு பக்கம் படிச்சா மாறி ... Read more
Published on July 19, 2021 00:22
July 18, 2021
பூஜா ஹெக்டேயும் கலாச்சார மேட்டிமை வாதமும் (கட்டுரை வடிவிலான சிறுகதை)
Madras Elite Club என்று ஒரு க்ளப் உள்ளது. பணக்காரராகவோ அதிகாரம் உள்ளவராகவோ சினிமா துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பதால் மட்டும் இதில் உறுப்பினராகி விடலாம் என்று நினைத்தால் முடியாது. ஒரு வருட காலம் எலீட் க்ளப் பக்கம் போய்க் கொண்டிருந்தால் உங்கள் நடையுடை பாவனைகளை அவதானித்து, பிறகு உறுப்பினருக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பார்கள். முக்கியமான விஷயம், மத அடையாளங்களை அணிந்திருக்கக் கூடாது. சீக்கியர்களின் தலைப்பாகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அது கூட ரொம்பப் பெரிதாக இருக்கக் கூடாது. ... Read more
Published on July 18, 2021 22:18
July 17, 2021
மெதூஸாவின் மதுக்கோப்பை: மதிப்புரை: சிவசங்கரன்
மெதூஸாவின் மதுக்கோப்பை சாரு நிவேதிதா எழுத்து பிரசுரம் இந்த நூலைப் பற்றி எங்கு தொடங்கி, எங்கு முடிக்க என்று நினைக்கையில் மனம் பதறி போகிறது. இது குறைவான பக்கங்கள் கொண்ட புத்தமானாலும், இது, பேசுகிற எழுத்தாளர்கள், நிகழ்வுகள், சம்பவங்களின் பட்டியல் மிக நீளமானது. சற்று, நிதானித்து மெதுவாக படித்தால் நன்றாய் சுவைக்கலாம்.சாரு நிவேதிதா என்ற மனிதன், எழுத்தாளனாக சக எழுத்தாளர்களைப் போல் அல்லாமல் புறக்கணிக்கப்படுவதை ஏன்? என்ற கேள்விக்கு உட்படுத்தியதற்கு ஒரு மூட்டை நிறைய பதில்களாக எனக்கு ... Read more
Published on July 17, 2021 16:57
பொருள்வெளிப் பயணம் – 3
என் மொழியில் எழுதும் என் சக எழுத்தாளர்கள் என்னைக் குப்பை என்று என்னையே நம்பச் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த போது மேற்கத்திய எழுத்தாளர்களின் மேற்கண்ட பாராட்டுகளைக் கண்டுதான் நான் தன்னம்பிக்கை கொள்கிறேன். என்னை நானே புகழ்ந்து கொள்வதன் மூலம்தான் நான் என்னை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடிகிறது… மேலும் படிக்க: https://www.bittalk.in/chapter/porul-...
Published on July 17, 2021 05:02
July 16, 2021
இருவர் (குறுங்கதை)
காலையில் ஒரு மரண செய்தி. எப்போதுமே மனிதர்களின் மரண செய்திகள் பாதிப்பதில்லை என்பது போல இதுவும் பாதிக்கவில்லை. ஆனால் இறந்து போனவர் என் நண்பரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் கம்மென்று இருந்தேன். மேலும், இறந்து போனவர் இள வயதுக்காரர். இன்னும் எத்தனையோ காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர். ஆனாலும் நான் செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு ஜடப் பொருளைப் போலவே இருந்தேன். என்னையே நினைத்து எனக்குக் கோபமாக இருந்தது. ஏன் இப்படி ... Read more
Published on July 16, 2021 05:41
எழுத்து என்ன செய்யும்?
என் வாழ்வில் கல்லூரி நாட்களின் இறுதியில்தான் சாரு எனக்கு அறிமுகமானார். ஆனால் அவரை யாரும் எனக்குப் பரிந்துரைத்ததில்லை. வாழ்வில் ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தது போல அவருடைய யூடியூப் உரைகளை நான் கேட்க நேர்ந்தது. அப்போது இருந்த என் மனநிலை இது: உலகம் இலுமினாட்டிகளால் ஆளப்படுகிறது; அதன் தாக்கம்தான் ”என்ன, உலகம் இப்படிக் கெட்டுப்போய்க் கிடக்கிறது” என்று தோன்றியதெல்லாம். மனதில் என்னென்னவோ குழப்பங்கள்… ஆனால் அந்தச் சூழ்நிலையில் என்னுடைய நிலை எனக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. நான் படிக்கிறேனா ... Read more
Published on July 16, 2021 02:42
July 13, 2021
ஒரு குட்டி மாய யதார்த்தவாத அல்லது சயன்ஸ் ஃபிக்ஷன் கதை!
ஒரு பேரழகி. இருபத்து மூன்று வயது. என் தீவிர வாசகி. சில மாதங்களுக்குப் பிறகு ஐ லவ் யூ என்று ஆரம்பித்தாள். இந்த முறை நான் சிக்கவில்லை. நானும் எஸ்.ரா., ஜெமோ இருவரையும் எவ்வளவு பார்க்கிறேன்? பதிலுக்கு அவளிடம் “நான் உன்னை என் பேத்தி மாதிரி நினைக்கிறேன் குட்டி, அப்படிப்பட்ட தாத்தா பேத்தி உறவு நமக்குள் எப்போதும் நீடிக்கட்டும், என்ன?” என்று ஒரு போடு போட்டேன். அவளும் “சரி தாத்தா” என்று சொல்லி விட்டாள். தெ எண்ட். ... Read more
Published on July 13, 2021 17:19
July 12, 2021
நான்தான் ஔரங்கசீப்…லஃபீஸ் ஷஹீதின் குறிப்பு
பின்வரும் பதிவு முகநூலில் என் நண்பர் லஃபீஸ் ஷஹீத் எழுதியிருப்பது. நான்தான் ஔரங்கசீப்… இந்த மாதம் முப்பதாம் தேதியிலிருந்து bynge.in இல் தொடர்ந்து வெளிவரும். அதற்கு ஒரு தொடக்க அறிமுகமாக லஃபீஸ் ஷஹீதின் இந்தக் குறிப்பு பயன்படலாம். சூபி ஞானி ஷர்மத் ஷஹீத் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முகலாயர் காலத்தில் வாழ்ந்தவர். ஆனால் திகம்பரமாக திரிந்தவர். இவர் அவுரங்ஸீப் ஆலம்கீர் மற்றும் தாராஷிகோ இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் தாராஷிகோ பக்கம் இருந்ததால் அவுரங்ஸீப் இனால் தூக்கில் ஏற்றப்பட்டார். ... Read more
Published on July 12, 2021 21:12
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

