சாரு நிவேதிதா's Blog, page 202

July 25, 2021

புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்?

இன்று என் நண்பர் பா. வெங்கடேசனின் புத்தகமான கதையும் புனைவும் தபாலில் வந்தது.  புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்.  வெங்கடேசனோடு த. ராஜன் உரையாடியிருக்கிறார்.  இப்படிப்பட்ட உரையாடல்கள் நூல்கள் தமிழில் வெகு அபூர்வம்.  சுந்தர ராமசாமியோடு சிலர் உரையாடியிருக்கிறார்கள்.  நூலாக வந்துள்ளன.  மௌனியோடு பலரும் உரையாடியிருக்கிறார்கள்.  நூல் வந்ததா எனத் தெரியவில்லை.  படிகள், நிறப்பிரிகை போன்ற பத்திரிகைகள் வந்த காலகட்டத்தில் அப்பத்திரிகைகள் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றன.  புத்தகங்கள் உண்டா எனத் தெரியவில்லை.  வெங்கடேசன் ஒரு புனைவிலக்கியவாதி என்பது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 00:24

July 24, 2021

பொருள்வெளிப் பயணம் – 4

பொருள்வெளிப் பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் தொடரில் இது நான்காவது கட்டுரை. ஓப்பன் பண்ணா’ !!ஒரு திரைப்பட கலைஞனாகவே நிஜத்திலும் வாழ்ந்த ஒருவனை, எழுதி இருக்கிறார்.இப்படி எளிமையாக கடந்துவிடும் சம்பவங்களின் பின்னணியை, அடி ஆழம் வரை அலசி ஆராய்ந்து தனது பாணியில் விமர்ச்சிக்கிறார்,சாரு நிவேதிதா -‘பொருள் வெளிப் பயணம்’ என்னும் தொடரில்.www.bittalk.in
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2021 06:28

July 23, 2021

சார்பட்டா பரம்பரை (தொடர்ச்சி)

(நேற்று எழுதிய சார்பட்டா விமர்சனத்தின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்) சார்பட்டா பரம்பரையை நேற்றும் இன்னொரு முறை பார்த்தேன்.  இப்படி ஒரே படத்தை அடுத்தடுத்த நாளில் பார்த்தது இதுவரை நடந்ததில்லை.  அதுவே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றி.  இரண்டாவது முறையாகப் பார்த்த போதுதான் படத்துக்கு நேற்று நான் எழுதிய சிறிய மதிப்புரை அதன் சிறப்புக்கு நியாயம் செய்ததாகாது எனத் தோன்றியது. சார்பட்டா படத்தைப் பார்க்கும் அத்தனை பேரையும் ஈர்த்த ஒரு பாத்திரம்: டான்சிங் ரோஸ்.  தமிழ் சினிமாவில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 22:17

கிண்டில் டிவைஸ் (சிறுகதை)

பொதுவாக மாணாக்கர்தான் ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவார்.  ஆனால் சீனி சொல்லும் கதைகளைப் பார்த்தால் நானே அவரது வாழ்க்கையை எழுதி விடுவேன் போலிருக்கிறது.  அப்படிப்பட்ட நம்ப முடியாத கதைகள்.  இதையெல்லாம் நீங்கள் நாவலாக எழுதலாமே என்பேன்.  “என் வாழ்க்கையைப் பற்றி நான் எழுதக் கூடாது என்று தீர்மானமான முடிவு எடுத்திருக்கிறேன், அதனால் நீங்கள் வேண்டுமானால் தாராளமாக எழுதிக் கொள்ளலாம்” என்று சொன்னார்.  பலமுறை சொல்லியிருக்கிறார்.  சீனியின் கதையை விட அவர் தந்தையின் கதை இன்னும் பல மடங்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 04:00

July 22, 2021

சார்பட்டா பரம்பரை

நேற்று சார்பட்டா பரம்பரை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விரிவாக எழுத நேரமில்லை. இன்னொரு காரணம், கருந்தேள் ராஜேஷ் போன்ற நண்பர்கள் எழுதுவதே என் அபிப்பிராயத்தை ஒத்திருப்பதால் எதற்கு நேர விரயம் என்று நினைக்கிறேன். காலா, கபாலி என்ற இரண்டு பாவங்களை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் கழுவி விட்டார் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். எனக்குமே அப்படித்தான் தோன்றியது. மெட்ராஸ் என்ற படம் எவ்வளவு சுவாரசியமாக இருந்ததோ அதே சுவாரசியம் சார்பட்டாவிலும். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 22:19

நாவலில் மூழ்கியிருக்கிறேன்…

நேற்று சார்பட்டா பரம்பரை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் விரிவாக எழுத நேரமில்லை. அதனால்தான் இதன் தலைப்பு கூட சார்பட்டா என்று வைக்கவில்லை. அப்படி ஒரு தலைப்பு வைத்தால் நண்பர்கள் விமர்சனம் எதிர்பார்ப்பார்கள். இன்னொரு காரணம், கருந்தேள் ராஜேஷ் போன்ற நண்பர்கள் எழுதுவதே என் அபிப்பிராயத்தை ஒத்திருப்பதால் எதற்கு நேர விரயம் என்று நினைக்கிறேன். காலா, கபாலி என்ற இரண்டு பாவங்களை ரஞ்சித் இந்தப் படத்தின் மூலம் கழுவி விட்டார் என்று ஒரு நண்பர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 22:19

பொருள்வெளிப் பயணம் – 3

www.bittalk.in மேற்கண்ட இணையப் பத்திரிகையில் நான் எழுதி வரும் பொருள்வெளிப் பயணம் தொடரின் மூன்றாவது கட்டுரை வந்துள்ளது. மற்ற இரண்டையும் கூட வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் bynge.in செயலியை மொபைல் போனில் டவுன்லோட் செய்து அதில் வெளிவந்த அ-காலம் தொடரின் 27 அத்தியாயங்களையும் படித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். அதே bynge.in இல் வரும் 29 முதல் என்னுடைய புதிய நாவலான நான்தான் ஔரங்கசீப்… -இன் அத்தியாயங்கள் வெளிவர உள்ளன.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 05:04

ஓப்பன் பண்ணா… பற்றி அராத்து

அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியில் நம்பிள் ஓப்பன் பண்ணா நாவல் முதல் பரிசு பெற்றிருக்கிறது. முதல் 5 இடங்களுக்குள் வருவது முதல் மற்றும் பெரும் சவால். ஏனென்றால் அமேசான் அல்காரிதம் நமக்குத் தெரியாது. இப்போது கூட பாருங்கள் ஒரு நாவல் 15 ரிவ்யூக்கள் மட்டுமே பெற்று முதல் 5 இடங்களுக்குள் வந்திருக்கிறது. வழக்கமான பழக்கமான என் வாசகர்களைத் தாண்டி பொது வாசகர்களையும் ஈர்க்கும்படி இருக்க வேண்டும் என்பது சவால். ஆனால் நான் அப்படி ஏதும் மெனக்கெடவில்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 04:51

கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்

https://www.amazon.in/pen-to-publish-... கிண்டில் பென் டு பப்ளிஷ் போட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெற்ற நாவல் ஓப்பன் பண்ணா. எழுதியவர் அராத்து. ஒரு மனிதனின் உளவியல் சிக்கலை இந்த அளவு நுணுக்கமாக அணுகிய ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் நான் கண்டதில்லை. அது மட்டும் அல்லாமல் புகழின் வெளிச்சத்துக்கு உள்ளே ஒரு மனிதன் எந்த அளவு அந்தகாரத்தில் வாழ்கிறான் என்பதற்கான ஒரு நேரடி ஆவணம் ஓப்பன் பண்ணா. தமிழில் எனக்கு இப்படி ஒரு நாவல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2021 04:44

July 20, 2021

கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…

அன்புள்ள சாரு sirவணக்கம். நீங்கள் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் என்ற நூலை சென்ற வாரம் முழுக்கப் படித்தேன். வேண்டுமென்றே தான் மெதுவாக படித்தேன். அற்புதமான அனுபவம். . உங்களுடன் நேரில் சந்தித்துப் பேசியது போல எளிமையான சுவாரஸ்யமான எழுத்து. படித்த ஒவ்வொரு பகுதியும் ஒரு தகவல் சுரங்கம்.  It was quite an experience Charu sir. There were instances I could relate to so much. I did smile, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2021 18:03

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.