சாரு நிவேதிதா's Blog, page 200
July 30, 2021
நான்தான் ஔரங்கசீப்…தொடர்ச்சியாக ஐந்து அத்தியாயங்கள்
வாசகர்களின் வேண்டுகோளை முன்னிட்டு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் தொடர்ச்சியாக வெளிவர இருக்கின்றன. இதுவரை இரண்டு வந்து விட்டது. இப்போது (30 ஜூலை) நான்கு மணிக்கு இரண்டு அத்தியாயங்கள் வரும். நாளை (சனிக்கிழமை) மாலை நான்கு மணிக்கு ஐந்தாவது அத்தியாயம் வரும். பிறகு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வாராவாரம் ஞாயிறும் புதனும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வரும். உங்கள் எதிர்வினைக்குக் காத்திருக்கிறேன். bynge.in செயலியை ஆண்ட்ராய்ட் அல்லது ஐஃபோனில் டவுன்லோடு செய்து கொண்டால் நாவலைப் ... Read more
Published on July 30, 2021 03:23
என் பெயர் ரோஸி: சிறுகதை: வாஸ்தோ (ஒரு சிறிய முன்குறிப்புடன்…)
முன்குறிப்பு: சாரு என் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் பல பூனைகள் வசிக்கின்றன. அதில் சில பூனைகள் தனிப் பூனைகள். அப்படியென்றால் recluseஆக வாழ்பவை. என்னை மாதிரி. அதில் ஒன்று Teddy. தியாகராஜா, அசோகா, 1857, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நாவல்களோடு பூனைகள் பற்றி ஒரு நாவலும் முழுமையடையாமல் உட்கார்ந்து கிடக்கிறது. அதில் மற்ற விவரங்கள் வரும். ரெக்லூஸ் பூனைகளில் இன்னொன்று, கால் விந்தி நடக்கும் பூனை. அதற்குக் கொரோனா என்று பெயர் வைத்திருக்கிறார் செக்யூரிட்டி. சாந்தோம் நெடுஞ்சாலையில் சிக்கி கால் ... Read more
Published on July 30, 2021 02:14
July 29, 2021
நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகளும் என் நன்றியும்…
இரண்டாம் அத்தியாயமும் வெளிவந்து விட்டது. படித்து விட்டுப் பலரும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாட்ஸப் மெஸேஜ்களும் மின்னஞ்சல்களும் அனுப்புகின்றனர். எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விட்டேன். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய இந்தக் கருத்துகளை bynge.in பக்கத்திலும் கதைக்குக் கீழே கருத்துகள் என்ற இடத்தில் பதிந்தால் பிஞ்ஜ் குழுவினரும் படிக்க ஏதுவாக இருக்கும். பிஞ்ஜ் டாட் இன் குழுவைச் சேர்ந்த நவீனையும் ஜனாவையும் அவர்களுக்குப் பத்து வயதாக இருக்கும் போதிருந்தே தெரியும். பார்கவை எப்போது பார்த்தேன் ... Read more
Published on July 29, 2021 22:04
நான்தான் ஔரங்கசீப் பற்றி…
நாவல் bynge.in செயலியில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு வெளிவந்தது. அடுத்த அத்தியாயம் இன்று காலை ஏழு மணிக்கு வரும். முதல் அத்தியாயம் வந்ததும் இரண்டாவது வருவதற்குள் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளப் பெரும் ஆவலாக இருந்தேன். நள்ளிரவுக்குள் – அதாவது வெளிவந்து ஐந்து மணி நேரத்தில் 884 பேர் வாசித்திருக்கிறார்கள். இப்போது மணி காலை ஆறு ஆகிறது. அந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. இது சந்தோஷத்துக்குரியதா வருத்தத்துக்குரியதா என்று தெரியவில்லை. மூவாயிரம் பேர் ... Read more
Published on July 29, 2021 17:55
நான்தான் ஔரங்கசீப்… பற்றிக் கொஞ்சம்
இன்று இரவு ஒன்பது மணிக்கு bynge.in செயலியில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்கசீப்… நாவல் எனக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இதேபோல் நான் ஒரு பத்திரிகைக்காக எழுதிய நாவல் ராஸ லீலா. அது பற்றித் தமிழ் வாசகர்கள் யாருக்கும் தெரியாது. காரணம், ஒரு காகிதத்தில் தமிழில் எழுதி அதை நெட் செண்டரில் கொண்டு போய்க் கொடுத்து தட்டச்சு செய்து, தட்டச்சு செய்யும் பெண்ணோடு அமர்ந்து பிழை திருத்தம் செய்து – என் எழுத்துக்கு அது எத்தனை ... Read more
Published on July 29, 2021 04:06
நான்தான் ஔரங்கசீப்…
இன்று (29 ஜூலை 2021) இரவு 9 மணிக்கு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் அத்தியாயம் bynge.in செயலியில் வெளியாகிறது. நாளை காலை ஏழு மணிக்கு இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. அதை அடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதன்கிழமையும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வெளிவரும்.
Published on July 29, 2021 03:33
July 28, 2021
July 27, 2021
ஞானக்கூத்தன்
வணக்கம் சாரு, நான் பெங்களூரில் இருந்து இலட்சுமி நரசிம்மன் எழுதுகிறேன். நான் உங்களுடைய ஒரு இளம் வாசகன். எனக்கு ஒரு ஐயம். எனக்கு நல்ல இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைத் தொகுப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. எத்தகைய கவிதைத் தொகுப்பு என்றால், நான் மனதளவில் சோர்ந்து போய், இருக்கும்போது எனக்கு நம்பிக்கை அளித்து, உற்சாகம் ஊட்டி, இன்னும் வீரியமாக என் பணிகளைத் தொடர வைக்க வேண்டும் மற்றும் என் தனிமைக்கு மருந்து அளிக்கும் வண்ணம் அக்கவிதைகள் இருக்க ... Read more
Published on July 27, 2021 22:15
ஜாங்கிரி கதைகளும் ஒரு அசத்தல் கதையும்…
அந்தக் காலத்து சினிமாவைப் பார்த்தால் தெரியும், அதில் வரும் அத்தனை கதாபாத்திரமும் பிராமண பாஷைதான் பேசும். மீன்காரர் கூட பிராமண பாஷைதான். இப்போது பார்த்தால் சிரிப்பாக இருக்கும். அப்படித்தான் இப்போதைய பல ஜாங்கிரி கதைகளில் வரும் எல்லா பாத்திரங்களும் ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி, புத்தர் மாதிரி பேசுகிறார்கள். சினிமா தியேட்டரில் ப்ளாக் டிக்கட் விற்பவன் கூட ஜே. கிருஷ்ணமூர்த்தி மாதிரி பேசினால் எப்படி இருக்கும்? இதெல்லாம்தான் நவீன சிறுகதைகள்! ஒரு தப்பு இல்லை. எல்லாம் கனகச்சிதமாக உள்ளது. ... Read more
Published on July 27, 2021 09:23
July 25, 2021
புத்தகம் அனுப்புபவர்கள் ஏன் இப்படி டார்ச்சர் செய்கிறார்கள்? (2)
இந்த விவகாரத்தை இத்தோடு விட மனமில்லாமல் என் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அவர் bubble wrap பேப்பர் போட்டுப் பார்சல் கட்டினால் இந்தப் பிரச்சினை இல்லை என்றார். ஆனால் டபிள் ராப் பேப்பர் சாதா பேப்பர் கட்டை விடப் பல மடங்கு செலவு அதிகம். சரி. ஏற்கனவே பதிப்பகங்கள் லாபம் இல்லாமல் நடக்கின்றன. புத்தகம் வாங்குபவர்களால் அவர்களுக்கு அநாவசிய செலவு வேண்டாம். இப்போது என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், சாதா பேப்பரிலேயே கட்டுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கத்தரிக்கோலால் ... Read more
Published on July 25, 2021 01:13
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

