சாரு நிவேதிதா's Blog, page 198

August 3, 2021

டியர் ரமேஷ்…

சென்ற பதிவில் ஒரே ஒரு விஷயம் எழுத மறந்து போனேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போகிற வருகிற நாதாரிக் கும்பலெல்லாம் நீங்களும் உங்கள் பழைய சகாவும் கொடுத்த காலச்சுவடு பேட்டியைக் குறிப்பிட்டு என் மீது காறி உமிழ்ந்து விட்டுப் போனார்கள். அவுங்க எழுதிக் குடுத்த நாவல்தானேயா ஸீரோ டிகிரி? என்று. முறைத்தால், நீ மறுத்தியா என்பார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பிரபலம் அப்படி என்னை முகநூலில் அவமதித்தது. இப்படியாகத்தான் நான் எழுதிய நாவலை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:53

அவதூறுக்கு எதிர்வினை (11)

லட்சுமி சரவணகுமார்: (அபிலாஷின் ‘மன்னிப்பு’க்கு எதிர்வினை) அந்த நபருக்காக நீங்க இவ்ளோ வக்காலத்து வேண்டியதில்லை நண்பா. அவர் பதிவுல இருந்த தொனி விமர்சனம் இல்ல சாருவின் மீதான வன்மம். அதை வெளிப்படுத்த உங்களப் பயன்படுத்திக்கிட்டார் அவ்ளோதான். அவர் நல்லவர் வல்லவர்னு நீங்க சர்டிஃபிகேட் குடுக்கறதெல்லாம் நகைச்சுவை. குனிந்து திருடும்போது பின்னால் குத்தப்படுவார்னு எழுதறாரு அந்த வரிகள அந்தப் பதிவுல கமெண்ட் போட்ற மூத்த எழுத்தாளர்கள் லாம் இதுக்குத்தான் குனிஞ்சு திருடக் கூடாதுன்னு சொல்றதுன்னு எழுதறாங்க. எவ்ளோ அயோக்கியத்தனம். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:39

வரமும் வேண்டாம், சாபமும் வேண்டாம். மன்னிப்பும் வேண்டாம், வாழ்த்தும் வேண்டாம்…

எல்லோருமே உச்சக்கட்ட படைப்பாளுமையின் வெறிக்கூச்சலோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பித்தநிலையின் உச்சம் என்றே சொல்லலாம். எவரைக் கேட்டாலும் அதேதான் சொல்லுவார். அந்த நிலையை அடையாதவன் எழுத்தாளனே இல்லை. அந்த நிலையில் எழுதுகிறேன் என்பவர் சகாயம் லஞ்சம் வாங்காமல் வாழ்கிறேன் என்று சொல்வது மாதிரிதான். யார் மீதும் எனக்கு வருத்தமோ கோபமோ இல்லை. இன்று எனக்கு 68 வயது முடியப் போகிறது. இனிமேலான நாட்கள் எனக்கு போனஸ். யார் தயவிலும் வாழாமல் போய் விட வேண்டும் என்பதே என் ஆசை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:34

அவதூறுக்கு எதிர்வினை (10): வாஸ்தோ

விளம்பரப் பிரியை அல்லது பிரபல்ய பிம்பம் கொடுக்கும் போதை அல்லது நான் மிகவும் மேம்பட்டவனெனக் ‘காட்டி’க் கொள்ள முற்படுதல் அல்லது நான் மிகவும் தைரியமானவன் என நிறுவ நினைத்தல் எனப் பல காரணிகள் ஒன்றினைகையில் அல்லது இதில் ஏதேனுமொன்றுத் தலைத் தூக்கிப் பார்க்கையில் தன் எதிரில் இருப்பவர் யார்..? அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் பார்க்கத் தோன்றாது. உடனடியாக அவர்களைத் தாக்கி எழுத வைத்துவிடும். ஜெமோவைப் புளிச்ச மாவு என்று நக்கலடிப்பதில் துவங்கி இன்று சாருவைத் திருடனென்றும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:19

அவதூறுக்கு எதிர்வினை (9): மதுரை அருணாச்சலம்

ஆன்லைன் பத்திரிக்கை எடிட்டர் என்ற திமிரில்…. கூகுளில் கட் காப்பி பேஸ்ட் செய்து கட்டுரைகள் தயாரிக்கும் நாயெல்லாம்… தமிழில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக, நவீன இலக்கியத்தில் Transgressive Writer என்ற தனிச்சிறப்புடன், சுமார் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள ஒரு மூத்த இலக்கியவாதியை தரக்குறைவாக தொடர்ந்து முகநூலில் எழுதி வரும் தமிழினி கோகுல் பிரசாத் என்பவனை வன்மையாக கண்டிக்கிறேன்.. விளக்குமாத்துக்கு எடிட்டர் என்ற பட்டுக்குஞ்சம் வேறு… இந்த பொழப்பிற்கு.. நாலு தெருவில் நீ பிச்சை எடுக்கலாம்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:16

அவதூறுக்கு எதிர்வினை (8): பிரபு கங்காதரன்

தமிழிலக்கிய உலகில் சாருவிற்கு இடமில்லை என்கிற வகையில் ஒரு மின்னிதழின் ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டை வைக்கிறார். அதற்கு இதுவரை ஒரு சரியான எதிர்வினை வரவே இல்லை. அந்த மின்னிதழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் எல்லாருமே ஆமாம் அவருக்கு இடமில்லை, சாரு ஒரு எழுத்தாளரே இல்லை, அல்லது சாரு ஒரு மோசமான எழுத்தாளர் என்று ஒரு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்தேன். என் சிற்றறிவுக்கும் குறுகலானப் பார்வைக்கும் எட்டியவரை எதுவுமே காணக்கிடைக்கவில்லை. சாருவினுடைய எழுத்து தமிழிலக்கிய உலகில் என்ன பங்களிப்பை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:14

அவதூறுக்கு எதிர்வினை (7): அய்யனார் விஸ்வநாத்

ஓர் எழுத்தாளன் தன் படைப்புகளுக்காக விமர்சிக்கப்படுவது என்பது வேறு – ஒருவகையில் அது ஆரோக்கியமானதும் கூட. ஆனால் எழுத்தாளனின் இருப்பே சிலருக்கு ஒவ்வாததாக இருப்பதும், அவன் வாழ்நாள் முழுக்க ‘இலக்கியவாதி இல்லை’ என்கிற புறந்தள்ளல்களை எதிர்கொள்ள நேரிடுவதும் நாம் இயங்கும் இந்த சூழலுக்கு எதிரானதும் அவமானகரமானதுமாகும். சாருவின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இந்த வன்முறைக்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். சக மனிதனை இழிவு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 03:12

August 2, 2021

’பையா’ பற்றிய ஒரு குட்டிக் கதை

…இதற்கிடையில் ‘பையா’ அழைத்தார். “May I help you?” என்று கேட்டார். ”கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன் பையா” என்றேன். “சுபஹானல்லாஹ், நீங்க மாறவே இல்ல பையா” என்றார். ’பையா’ யாரா? ராஸ லீலாவில் வருவார்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2021 04:44

ரிஷியின் எதிர்வினை…

எனக்கு இது வரைக்கும் புரியாத புதிர் என்னான்னா, இலக்கியம் படிச்சும் எரும மாடு மாதிரி எப்டி திரிய முடியும்ங்கிறதுதான்!! இப்டி கூச்ச நாச்சமே இல்லாம போஸ்ட் போட்றது, அந்த பக்கம் இணைய இதழ் நடத்திக்கிட்டு எலக்கியம் வேற!! இன்னும் எத்தன காலத்துக்குதா இப்டி அதர பழைய குற்றச்சாட்டப் போடுவீங்க சாருவுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னு!? இத கேட்டுக் கேட்டு புளிச்சு போச்சு. யார்ரா நீங்கலாம்!!!! எனக்கு ஒரு கேள்வி. சினிமாவுல நடக்காத தில்லாலங்கடி வேலையா? என்னோட நண்பர்களாம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2021 02:17

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.