சாரு நிவேதிதா's Blog, page 196
August 15, 2021
மைக்கேல் ஜாக்ஸனும் தாலிபானும்…
I am a 3rd-year student studying at IIT Bombay. I have been exploring different kinds of music past 2 years in this pandemic and saw your thoughts about Michael Jackson in a very old Neeya Naana episode. Then I searched a bit on the internet whether you have written anything in your blog and I ... Read more
Published on August 15, 2021 19:57
August 14, 2021
நான்தான் ஒளரங்கசீப் – அராத்து
“நான் ஒழுக்கமானவன் என்ற பலத்தின் அஹங்காரமே என் கண்களை மறைத்து விட்டது “- ஔரங்கசீப். சாரு எழுதி வரும் நான் தான் ஔரங்கசீப்பின் வெளிவராத ஒரு அத்தியாயத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். இந்த வரியில் மனம் நின்று விட்டது. இந்த வரியை ஔரங்கசீப் சொல்லியிருப்பாரா , தெரியாது. ஔரங்கசீப் மூலம் சாரு நிவேதிதா சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் சாரு நிவேதிதாவின் ஒட்டு மொத்த எழுத்துக்களின் ஆதார ஸ்ருதியாக இந்த வரியை எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. தான் ஒழுக்கமாக இருப்பதாக ... Read more
Published on August 14, 2021 23:11
நான்தான் ஒளரங்கசீப் – மதுரை அருணாச்சலம்
எனக்கு மொபைல் திரையில் படிப்பதென்பது மிகவும் கடினமான காரியம்.. கணினித்திரையில் படிப்பதும் பிடிக்காது. பலமுறை முயன்றும் தோற்றிருக்கிறேன்.. இத்தனைக்கும் அது 21 இன்ச் மானிட்டர்.. அது சாருவின் புதிய நாவலான ” நான் தான் ஒளரங்கசீப் ” bynge app இல், பல அத்தியாயங்கள் வெளிவந்து பல நாட்கள் ஆகியும், வேறு வழியின்றி இன்று காலை மொபைலில் இருந்து செயலி மூலமாக முதல் பாகத்தை மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி, கணினித்திரையில் வாசித்து அசந்தே விட்டேன். அடுத்தடுத்த ... Read more
Published on August 14, 2021 23:10
என் வாசக நண்பர்களுக்கும், முஸ்லீம் நண்பர்களுக்கும்,
Bynge.in என்ற செயலியில் என்னுடைய நாவல் “நான்தான் ஔரங்கசீப்…” தொடராக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன். ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வாரம் மூன்று முறை வருகிறது. ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை மதிப்புரைகள் வந்துள்ளன என்ற விவரங்களும் தினந்தோறும் எனக்கு வந்து விடுகின்றன. அவற்றை நான் பார்ப்பதில்லை. இன்று பார்த்தேன். இதுவரை 36330 வாசிப்புகள். நேற்று 1678 பேர் வாசித்திருக்கிறார்கள். இதுதான் ஒருநாளில் மொத்தமாக வாசித்தவர்களின் எண்ணிக்கை. என் பெயருக்காக ... Read more
Published on August 14, 2021 02:50
August 13, 2021
ஔரங்கசீப்பை முடித்துக் கொள்ளலாமா?
இன்று காலை இப்படி ஒரு கடிதம் வந்தது. எழுதியவரின் பெயரை எப்படியோ தொலைத்து விட்டேன். மெஸஞ்ஜரில் வந்தது. ஔரங்கசீப் கீழ்த்தரமான பதிலைச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. தான் செய்த அத்தனை செயல்களும் பாபகரமானவை, ஹராமானவை என்று தன் கடிதங்களில் புலம்பித் தள்ளியிருக்கிறார் ஔரங்கசீப். இது போன்ற கடிதங்கள் ஔரங்கசீப்பின் பெயரை மாற்றி கலாம் பெயரை வைப்பவர்களுக்கும், மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஔரங்கசீப்பை கொடூரமான வில்லனாகக் காண்பிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும்தான் பயன்படும். இதுபோல் இன்னும் கடிதம் வந்தால் தொடரை ... Read more
Published on August 13, 2021 23:03
August 11, 2021
வசந்த் சாய் – பாயசம்
நவரசாவில் இடம் பெற்றிருக்கும் எட்டு படங்களையும் பற்றிய விமர்சனங்களைப் பார்த்து விட்டு அந்த எட்டையும் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். என் நண்பர் வசந்த்தின் பாயசத்தை மட்டும் இன்னும் இரண்டொரு நாள் கழித்துப் பார்க்கலாம் என்று திட்டம். ஔரங்கசீப் நாவலில் மூழ்கிக் கிடப்பதால் அப்படி நினைத்தேன். ஆனால் இடையில் செய்த ஒரு பிழையால் உடனடியாக வசந்த் சாயின் பாயசம் மட்டும் பார்த்தேன். என்ன பிழை என்றால், பிரபு காளிதாஸின் விமர்சனத்தை என் முகநூல் பக்கத்தில் ஷேர் ... Read more
Published on August 11, 2021 08:41
பாலகிருஷ்ணனிடமிருந்து பாரதக் கதைகள்…
விவரங்கள் விளம்பரத்திலேயே இருக்கின்றன. பாலகிருஷ்ணன் ஒரு புகழ் பெற்ற நாடகக் கலைஞர். அதே சமயம் இதிகாசங்களை விளக்குவதில் மாஸ்டர். அவருடைய முந்தைய தொடர் சொற்பொழிவையும் கேட்டிருக்கிறேன். பிரமாதமாக இருந்தது. இணைந்து கொள்ளுங்கள். ஐந்து உரைகளுக்கு 1000 ரூ. தான். விவரம் இதில். நானும் பணம் கட்டி விட்டேன். உரை ஆங்கிலத்தில் இருக்கும். புரியும் விதமான ஆங்கிலம்தான். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலம் அல்ல.
Published on August 11, 2021 07:09
August 10, 2021
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து…
தற்சமயம் என் எதிரிகள் பா. ராகவன், அபிலாஷ், ஜெயமோகன் மூவரும்தான். ஏனென்றால், இந்த மூவரும் எழுதியவைகளுக்குத்தான் உடனுக்குடனே ஆவேசமாக என்னுள் பதில்கள் கிளர்ந்து எழுகின்றன. அது என் ஔரங்கசீப் வேலையைக் கெடுக்கிறது. இப்போது சொல்லுங்கள், மூவரும் என் எதிரிகள்தானே? ஆனால் மூவரும் என் மிக நெருங்கிய நண்பர்கள். மூவருக்கும் ஒரு ஒற்றுமையும் உண்டு. போன். இப்போதெல்லாம் பாரா கொஞ்சம் திருந்தி விட்டார். காலையில் பண்ணினால் மாலையில் திரும்ப அழைத்து விடுகிறார். ஜெயமோகனிடமும் அபிலாஷிடமும் என் தோல்வியை ஒப்புக் ... Read more
Published on August 10, 2021 22:37
ஒரு கோப்பை ஒய்ன்…
சமீபத்தில்தான் கவனித்தேன். நான் இணைய தளத்தில் எழுதினால் காசு வருகிறது. எழுதாவிட்டால் வருவதில்லை. ஆகா, எத்தனை அட்டகாசமான விஷயம். கடந்த ஒரு மாதமாக ஔரங்கசீப் காரணமாக, இணைய தளத்தில் எழுதுவதில்லையா? சந்தா/நன்கொடையும் வருவதில்லை. ரொம்பவும் சந்தோஷமாகி விட்டது. ஆக, எழுதினால் சம்பாதிக்கலாம் என்ற உறுதி இருக்கிறது. சமீபத்தில் என் தோழியிடம் சொன்னேன். பணத்தைக் கிட்டத்தில் வைத்துக் கொண்டு பெண்களை தூரத்தில் வைத்து விட்டேன். ஆகா, நல்ல விஷயம் என்றாள். என்ன ஒரு சேடிஸம். என் பத்து இருபது ... Read more
Published on August 10, 2021 21:43
ஓர் உருவகக் கதை
”தேன், பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை ஹல்வா மூன்றும் இருக்கிறது. எதைச் சாப்பிட?” என்று என்னிடம் கேட்டான் ஒருத்தன். நடந்து பல வருடங்கள் ஓடி விட்டன. ஒவ்வொன்றாகச் சாப்பிடு என்றேன். ஒன்றே ஒன்றுதான் சாப்பிட முடியும், எதைச் சாப்பிட என்றான். உனக்கு எது பிரியமானதோ அதைச் சாப்பிடு என்றேன். அது எனக்குத் தெரியாதா, அனுபவசாலி என்பதால்தானே உங்கள் கருத்தைக் கேட்கிறேன் என்றான். அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுமேப்பா, சரி, மூன்றாவதையே சாப்பிடு என்றேன். சாப்பிட்டவன் செத்து விட்டான். அவனுடைய கடைசி அழைப்பு ... Read more
Published on August 10, 2021 20:48
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

